5 வருடப்படிப்பு முடிந்துவிட்டது! அமெரிக்கா போவதற்கு விசாவும் வாங்கியாச்சு! எல்லோருக்கும் நாளை ஒரு பார்ட்டி கொடுத்துவிட்டு பறக்க வேண்டியதுதான் இந்த நாட்டைவிட்டு. இப்படி யோசித்துக்கொண்டே தன் முகத்தை தன் அறையில் இருந்த நிலைக்கண்ணாடியில் பார்த்தாள் சகுந்தலா.
அவளுக்கு தன் முதல் வருடம் இந்த ஐ ஐ டி யில் வந்து சேர்ந்த ஞாபகம் வந்தது. அன்று இவள்தான் புது வரவுகளில் பேரழகி! இவளை வேடிக்கை பார்க்கதாத மாணவர்களோ, இளம் மற்றும் வயதான பேராசிரியர்களோ இல்லை. நீதாண்டி இந்த வருட #1 என்று அவள் தோழிகள் தன் பாய்ஃப்ரெண்ஸிடம் இருந்து கேட்டு வந்து சொன்னார்கள். அவளுக்கு தன் அழகினால் பெருமிதமும் கொஞ்சம் திமிரும்கூட இருந்ததென்றே சொல்லவேண்டும். அடுத்த வருடம் இன்னொரு புது வரவுக்கு அந்தப்பேரழகிப்பட்டம் போய்விட்டது. இவளுடைய ரசிகர்கள் எல்லாம் புதுவரவின் ரசிகர்களாகி விட்டார்கள்! இருந்தாலும் இவளுடைய “லாயல் விசிறிகள்” இரண்டாவது வருடத்திலும் இருக்கத்தான் செய்தார்கள். அப்போதெல்லாம் சகுந்தலா தன் முகத்தை அவளே பார்த்து ரசித்துக்கொள்வாள். கண்னாடி முன் பலமணி நேரம் நின்று தன்னை அழகு பார்ப்பாள். “அழகான பொண்ணு நான், அதற்கேற்றகண்ணுதான்” என்கிற ஆதிகாலத்துப்பாடல் அவளையே நினைத்து எழுதியது போல தோனும் அவளுக்கு. அதெல்லாம் ஒரு காலம்!
ஆனால் இன்று? கண்ணாடியில் தெரிந்த அவள் முகத்தில் இருக்கும் அந்த தழும்புகளைப் பார்த்தாள் சகுந்தலா. இப்போதெல்லாம் கண்ணாடி முன்னால் அவள் நிற்கும் நேரம் மிக மிகக் குறைவு! அவளுக்குப் பார்த்து பார்த்து பழகிவிட்டது. ஆனால் புதிதாக அவளைப் பார்ப்பவர்கள்தான் ஒரு பரிதாபப்பார்வை பார்த்து அவளை கஷ்டப்படுத்துவார்கள். அவள் முகத்தில் உள்ள தழும்புகளை ஞாபகப்படுத்தி, அவள் முகம் விஹாரமாக இருப்பதை அவளுக்கு ஞாபகப்படுத்தி அவளை அழவைப்பார்கள்! தன் மேல் அனுதாபம்தான் படுகிறார்கள் என்று அவளுக்குப்புரிந்தாலும் அவளுக்கு அந்தப் பரிதாபப்பார்வை பிடிக்காது!
இவள் 3 ம் வருடம் படிக்கும்போது அந்த எக்ஸ்பரிமெண்ட் பண்ணும்போதுதான் அந்த விபத்து நடந்தது. “லிக்விட் அம்மோனியா” வை ஒரு கண்ணாடிக்குடுவையில் எடுத்துக்கொண்டு வந்து தன்னுடைய வேலை செய்யும் “ஹூட்” ல வைக்கும்போது, இவள் அந்த “மெட்டல் ஸ்டாண்ட்” ல் சரியாக அந்தக்குடுவையை “க்ளாம்ப்” பண்ணாததால், அது நழுவி, கிழே உள்ள இரும்புப்பகுதியில் பட்டு உடைந்து, அம்மோனியா அவள் மேல் தெறித்தது! தெறித்து அவள் முகத்திலும் உடலிலும்கூட பட்டது. நல்லவேளை “சேஃப்டி கண்ணாடி” போட்டிருந்ததால் கண்கள் மட்டும் தப்பியது! ஆனால் அவள் முகம் மற்றும் உடலெல்லாம் பட்டுவிட்டது. உடலெல்லாம் எரிந்தது! எப்படிக் கதறினாள்!
அந்த வலியெல்லாம் சில வாரங்களில் போய்விட்டது. ஆனால் அதனால் ஏற்பட்ட இந்த வடுக்கள்? அதுபோல் ஒரு பயங்கர விபத்து இதுவரை அந்த ஆய்வகத்தில் எந்தப் பெண்ணுக்குமே, ஏன் ஆண்களுக்குக்கூட நடந்ததில்லையாம். அன்றிலிருந்துதான் அவளுக்கு “அழகான பொண்ணு நான்” பாட்டை கேட்டாலே பிடிக்காமல் போனது. தத்துவப்பாடல்கள் எல்லாம் பிடிக்க ஆரம்பித்தது, அதில் உள்ள அர்த்தங்கள் எல்லாம புரிய ஆரம்பித்தது. அழகு நிரந்தரமானதில்லை என்பதை அறிந்து கொள்ள இவ்வளவு பயங்கரமான பாடமா அவள் கற்க வேண்டும்? பிறவியிலேயே அழகில்லாமல் பிறந்தால்கூட பரவாயில்லை. என்னைப்போல் பாதியில் எல்லாவற்றையும் இழப்பதுதான் மிகவும் பரிதாபம் என்று நினைப்பாள் சகுந்தலா.
“எல்லாம் இறைவன் செயல்” என்று சிலர் பேசும்போது எரிச்சலாக வரும் அவளுக்கு. யார் இந்த இறைவன்? மனிதர்களின் வாழ்க்கையில் விளையாட இவருக்கு யார் அனுமதி கொடுத்தது? இறைவன் ஒரு கொடூரப்புத்தி உள்ளவன் போலும்! இல்லையென்றால் என் முகத்தை ஏன் இப்படி சிதைக்க வேண்டும்? உலகத்தில் யார் எதை சாதித்தாலும் அது இந்த இறைவன் சாதனையாம்! யார் எப்படி பாதிக்கப்பட்டாலும் அது அவர் விளையாட்டாம்! இல்லை இல்லை அது அவர்கள் முன்பு செய்த பாவத்தின் விளைவாம்! வேடிக்கையான மனிதர்கள்!
“நான் இந்தப்பிறவியில் யாருக்கு என்ன தப்பு செய்தேன்?” என்று கேட்டால். அது என்னுடைய “கர்மா” வாம்! நான் இந்தப்பிறவியில் அனுபவிப்பது, போன பிறவியில் செய்த பாவமாம்! சரி அப்படியே பார்த்தாலும் “என்னுடைய முதல் பிறவியில் யாருடைய “கர்மா” வால் நன்மை தீமை அனுபவிக்கிறேன்?” என்பதை யாராவது சொல்ல முடியுமா? “கர்மா” என்பதே அர்த்தமில்லாமல் போய்விடும் இப்படி எல்லாம் யோசித்தால்! பக்திமான்களிடம் இப்படியெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது. அவர்களுக்கு பதில் சொல்லத் தெரிந்த கேள்விதான் கேட்கனும்! இல்லை என்றால் என் கேள்வி விதண்டாவாதமாகிவிடும்! மேலும் இப்படியெல்லாம் கேட்டால் கடவுளுக்குப் பிடிக்காது! எனக்கும்தான் இப்படி ஒரு விபத்து நடந்தது பிடிக்கவில்லை! எனக்குப்பிடித்ததை செய்யாத கடவுளுக்கு நான் ஏன் அவருக்கு பிடித்ததெல்லாம் செய்யனும்?
“உனக்கு ஃபோன் கால், சகுந்தலா!” என்றாள் தோழி.
ஹாஸ்டலில் உள்ள “லேண்ட் லைன்” க்கு போய் ரிசீவரை எடுத்தாள்.
“விசா கிடைத்துவிட்டதா, சகுந்தலா! கண்க்ராட்ஸ்” என்றான் அவள் நண்பன் குமார் இன்னொரு அமெரிக்க முனையிலிருந்து!
“ஆமா, குமார்! நாளைக்கு ஒரு பார்ட்டி கொடுத்துவிட்டு, திருச்சிக்குபோய் எல்லோரிடமும் பை சொல்லிவிட்டு பறந்து வரவேண்டியதுதான் உங்களிடம் என்றாள் மகிழ்ச்சியுடன்!
“சரி, ஃப்ளைட் ஸ்கெட்யுள் எனக்கு இ-மெயில் பண்ணு! உன்னை விஷ் பண்னத்தான் கூப்பிட்டேன், பை” என்றான் குமார்.
“பை, குமார்!” என்று சொல்லிவிட்டு ஹேங் அப் பண்ணினாள்.
இவள் #1 அழகியாக இருக்கும்போது இவளை சட்டை செய்யாத குமார், அந்த விபத்துக்குப்பிறகு, இவள் மேல் எவ்வளவு அன்பு! என்ன பரிவு! மனிதர்களில் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் போலும்! இவர்களை வணங்கலாம், ஏதோ ஒரு தெய்வத்தை வணங்குவதற்கு என்று நினைத்துக்கொண்டு இரவு உணவுக்காக ஹாஸ்டலில் இருந்து மெஸ் க்கு புறப்பட்டு சென்றாள், சகுந்தலா!
28 comments:
'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' பாட்டு இப்ப நினைவுக்கு வந்ததா சகுந்தலாவுக்கு?
***துளசி கோபால் said...
'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' பாட்டு இப்ப நினைவுக்கு வந்ததா சகுந்தலாவுக்கு?***
வாங்க துளசியம்மா!
சகுந்தலாவுக்கு மிகவும் பிடித்த பாடலாம் அது!
அதெப்படி, கதாசிரியர் நினைத்த அதே பாடலை சொல்றீங்க?
உங்கள் வருகைக்கும், விமர்சனத்திற்கும் நன்றிங்க!
கதையின் கருத்து அற்புதம். ஆனால் நடை கொஞ்சம் ஸ்லோவாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
அருமையான கதை! அழகு, இளமையை ஒரு தூண்டிலாக நினைக்கும் பலர் அது தொலையும் போது பெரும்பாலும் ரொம்ப காலத்திற்கு denial தான் its fun to watch such people stumble in the corporate ladder ;)
நன்றி வெண்பூ & சுந்தர்!
அருமையான கதை
ஞாபகங்கள் எப்பவும் தாலாட்டும்
வருண், நீங்க தமிழ் சினிமா மாதிரி படத்தை பாதிலே சுபம் போட்டு முடிக்கற மாதிரி முடிச்சுட்டீங்க.
இதே சகுந்தலா அமெரிக்கா வந்திட்டு, வேற தோழமை கெடைச்ச உடனே குமார பாத்து இவ்ளோ பைத்தியகாரனாட நீ அப்படின்னு சொல்லுறது எல்லாம் விட்டுடீங்க. அது ஒன்னும் இல்லை அந்த பேரோட 'ராசி' அப்படி. உதவின்னு செய்ய பொய் கெட்ட பேரு வாங்கறது இல்லைன்னா 'பன்னு' வாங்கறதுக்கு ரொம்ப தனி சிறப்பு உண்டு.
இந்த காலத்த பொருத்தவரைக்கும் இந்த மொத வருடதுலே பாத்துட்டு ரெண்டாவது வருடம் வந்த உடனே கழட்டி விட்டுட்டு போறாங்க பாருங்க அவிங்க தான் புத்திசாலி. குமார் மாதிரி ஆளுங்க எல்லாம் பொழைக்க தெரியாத விவரம் கெட்டவனுங்க. :( :(
***சுபாஷ் said...
அருமையான கதை
ஞாபகங்கள் எப்பவும் தாலாட்டும்***
நன்றி, சுபாஷ்! :-)
எஸ் கே!!!!
நீங்கள் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்!!!
ஏனோ தெரியவில்லை, உங்களிடம் இருந்து நான் இதை(emotional situation) எதிர்பார்க்க வில்லை. நீங்கள் இதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்னு நான் நினைத்தேன்.
ஆனால், தூரத்தில் இருந்து பார்க்கும் எனக்கு பட்டவர் வலி தெரியாதுதான். நான் ஒத்துக்கொள்கிறேன்.
வாழ்க்கையில் இந்த மாதிரி கறிவேப்பிலை போல் பயன்படுத்திக் கொள்றவங்க இருக்கத்தான் செய்றாங்க.
ஆனால், எல்லோரும் அப்படியில்லை, எஸ் கே.
இந்த பர்ட்டிகுலர் கதையில் வந்த குமார் மற்றும் சகுந்தலா இருவரும் கல்யாணம் செய்து 2 குழந்தைகளும் பெற்றுக்கொண்டார்கள்!
BTW, SK, If one ends a relationship with me like that (after using me)I can certainly live with it. There is only one way we can succeed in this relationship thing, which is both should be in love with each other and care for each other ALWAYS. After a year or two or more,if one feels that it is not her/his right choice, then noway we can end up with win-win situation. The other one just have to forget the past and move on like a gentleman. I know it is not easy but it is not impossible either. Say good luck to the other one and move on in his/her life and look for a fresh start. It is a very big world, sk. When one relationship ends, it is certainly not end of the world for the person. The one who was sincerely in love, will meet the right person for him/her somewhere else, I believe!
உண்மையான அன்பு உள்ளம் பார்த்து வருவது. துளசி மேடம் நினைவூட்டிய பாடல் மிகச் சரி. கடவுள் நேரிலே வருவதில்லை. ஆனால் சக மனிதர்களின் ரூபத்தில் வந்துதான் பெரும்பாலும் அருள் பாலிக்கிறார். நல்ல கதை வருண். வாழ்த்துக்கள்.
ஆகா வருண் நான் ரொம்ப எமொடிஒனால்'எ எடுத்துக்கலை. எனக்கு டக்குனு தோணிச்சு சொன்னேன். இது ஒரு ஆண் பெண்'க்கு மட்டும் இல்லை யாருக்கு உதவி செஞ்சாலும் நிறைய பேரு 'நன்றி' சொல்றது எல்லாம் இல்லை செஞ்சவனை நினைவுகளே வெச்சுகறதே இல்லை. ஒரு மூணு அல்லது நாலு வருடத்துக்கு முன்னாடி நான் இதை எல்லாம் ரொம்ப நம்பிகிட்டு இருந்தேன். இப்போ இதை எல்லாம் நான் எதிர் பாக்காதே இல்லை. எதிர் பாத்தா தானே வலிக்குது சொல்லி.
ரஜினி படையப்பால ஒரு வசனம் வரும். 'Anger is the cause of all the miseries' அதை மாத்தி நான் இப்போ சொல்றது 'Expectation is the cause of all the miseries'
அப்படின்னு தான்.
இதுலையும் நான் எல்லாரையும் சொல்லலை.
Varun said : //BTW, SK, If one ends a relationship with me like that (after using me)I can certainly live with it. //
These days I am practicing it.
Varun said : //There is only one way we can succeed in this relationship thing, which is both should be in love with each other and care for each other ALWAYS. //
100% true.
Varun : //After a year or two or more,if one feels that it is not her/his right choice, then noway we can end up with win-win situation. The other one just have to forget the past and move on like a gentleman. I know it is not easy but it is not impossible either.//
To be like this you must have understood the person very clearly.
Varun Said : //Say good luck to the other one and move on in his/her life and look for a fresh start. It is a very big world, sk. When one relationship ends, it is certainly not end of the world for the person. The one who was sincerely in love, will meet the right person for him/her somewhere else, I believe!//
இந்த நேரத்துலே எனக்கு இதுக்கு பதில் சொல்ல மனசு இல்லை :)
***ராமலக்ஷ்மி said...
உண்மையான அன்பு உள்ளம் பார்த்து வருவது. துளசி மேடம் நினைவூட்டிய பாடல் மிகச் சரி. கடவுள் நேரிலே வருவதில்லை. ஆனால் சக மனிதர்களின் ரூபத்தில் வந்துதான் பெரும்பாலும் அருள் பாலிக்கிறார். நல்ல கதை வருண். வாழ்த்துக்கள்.**
வாங்க ராமலக்ஷ்மி!
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி!
s k : "எல்லாம் நன்மைக்கே!" எனக்கு ரொம்ப பிடித்த "பழமொழி"! :-)
நல்ல கதை வருண். ஆண்கள் அனைவரும் இப்படியே இருந்துவிட்டால் பெண்களுக்கு இந்த உலகம் சொர்கமாகிவிடும். இப்படியும் சிலர் இருக்கிறார்கள், ஆனால் ரொம்ப ரொம்ப அரிது.
*** கயல்விழி said...
நல்ல கதை வருண். ஆண்கள் அனைவரும் இப்படியே இருந்துவிட்டால் பெண்களுக்கு இந்த உலகம் சொர்கமாகிவிடும். இப்படியும் சிலர் இருக்கிறார்கள், ஆனால் ரொம்ப ரொம்ப அரிது.
8 September, 2008 3:28 PM ***
உண்மைதான், கயல், பொதுவாக மனிதர்கள் ரொம்பச் சாதாரணமானவர்-கள்தான், கயல்!
ஆனால், ஒரு சிலர் பல அனுபவங்களால் தங்களை பக்குவப்படுத்திக் கொள்கிறார்கள், வாழ்க்கையை/மனிதர்களை கொஞ்சம் வேறு மாதிரி பார்க்கப்பழகிக் கொள்கிறார்கள் னு நினைக்கிறேன் :)
இது தொடரும்மா?? இல்ல அவ்ளோ தான் கதையா??
அவ்ளோ தான் கதை என்றால்..,
சகுந்தலா மற்றும் குமார் அவர்களின் உறவு விரிவாக சொல்ல பட வில்லையே.. ஏன் அது..???
எப்படி குமாருக்கு சகுந்தலா மீது பரிவு ஏற்பட்டது ??? ( அந்த விபத்து மட்டும் தான் காரணமா??? ))
வாங்க அணிமா!
ஒரு தொடர்கதை போதாதா? LOL!
இதில் சொல்ல வேண்டிய ஒரு சின்ன விசயத்தை சொல்லியாச்சு அணிமா! :-)
***எப்படி குமாருக்கு சகுந்தலா மீது பரிவு ஏற்பட்டது ??? ***
ஒரு சில ஆண்கள் அப்படித்தான். அழகான பெண்களிடம் வழிவதைவிட, இந்த மாதிரி மனமுடைந்த பெண்களிடம் கனிவாகவும் ஆறுதலாகவும் அன்பாகவும் நடந்துகொள்வார்கள்!
///////***எப்படி குமாருக்கு சகுந்தலா மீது பரிவு ஏற்பட்டது ??? ***
ஒரு சில ஆண்கள் அப்படித்தான். அழகான பெண்களிடம் வழிவதைவிட, இந்த மாதிரி மனமுடைந்த பெண்களிடம் கனிவாகவும் ஆறுதலாகவும் அன்பாகவும் நடந்துகொள்வார்கள்!//////
சகுந்தலா இந்த ஆதரவை எப்படி எடுத்து கொண்டார்கள் என்பது தான் என் கேள்வி..
அப்படி அந்த பரிவும் பாசமும் இருந்தால், எல்லா பெண்களுமே இப்படி பட்ட மனப்பான்மை உடையர்வ்கள் தானா?? இது ஒரு பச்சாதாபம் என்பது என் கருத்து..
**** 1) சகுந்தலா இந்த ஆதரவை எப்படி எடுத்து கொண்டார்கள் என்பது தான் என் கேள்வி..
2) அப்படி அந்த பரிவும் பாசமும் இருந்தால், எல்லா பெண்களுமே இப்படி பட்ட மனப்பான்மை உடையர்வ்கள் தானா??
3) இது ஒரு பச்சாதாபம் என்பது என் கருத்து..
10 September, 2008 8:34 AM ****
1) ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்கள்? தன் மேல் உண்மையிலே பிரியமாக இருப்பவர்கள் அன்பை எந்தப்பெண்னுமே எற்றுக்கொள்வார்கள்! அதுவும் இந்த சூழ்நிலையில் சகுந்தலாவுக்கு இதுபோல் பரிவு மிகவும் அவசியம்னு நினைக்கிறேன்.
2) பாவைகள் பலவிதம் அணிமா. சகுந்தலா அந்தமாதிரி டைப். எல்லாப்பெண்களும் அப்படியா என்று தெரியவில்லை
3) பச்சாதாபம்தான். இருந்தாலும் அதை பச்சாதாபம்போல் குமார் காட்டிக்கொள்ளாமல் இருந்தால் சகுந்தலாவால் அந்த அன்பை மறுக்க முடியாது.
அடைகிற வரைக்கும்தான் எல்லோரும் ரொம்ப அழகா இருப்பாங்க, தனக்கு என்று கிடைத்துவிட்ட பிறகு அதெல்லாம் போயிடும். அழகு ஒரு உறவை நெடுநாளைக்கு பாதுகாப்பதில்லை!
ஒரு ஸ்லிம் காதலி பல ஆண்டுகளுக்குப்பிறகு, ஒரு சுமாரான குண்டான மனைவியாக ஆவார்கள், அந்த காதிலியிடம் இருந்த அழகு இந்த மனைவியிடம் பொதுவாக இருக்காது.
அதனால் கமல் மாதிரி, புதுசு புதுசா ஸ்லிம் கேர்ள் க்கு எல்லாரும் ஜம்ப் பண்ணுவதில்லை பாருங்க!
பச்சாதாபம், அன்பு, பரிவு ஒரு உறவை நெடுநாளைக்கு பாதுகாக்கும் என்பதும் சகுந்தலாவுக்கு தெரியும்!
//பச்சாதாபம், அன்பு, பரிவு ஒரு உறவை நெடுநாளைக்கு பாதுகாக்கும் என்பதும் சகுந்தலாவுக்கு தெரியும்!////
அதாகப்பட்டது, நான் கேக்க விரும்புவது என்னவென்றால், நீங்கள் சகுந்தலாவின் கதையை விரிவாக சொன்னதை போல, குமாரின் எண்ணத்தை, அவரின் குணாதிசயங்களை விரிவாக சொல்ல வில்லை.. அதனால் மட்டுமே நான் இப்படி கேள்வி கேக்க காரணங்கள் என்று வெய்து கொள்ளுங்கள்..
பெண்ணின் வலியை முழுமையாக சொல்ல முடிந்த உங்களால், ஏன் ஒரு ஆணின் குணத்தை விரிவாக சொல்ல முடியவில்லை?? அப்படி இருந்தால் என்ன தவறு ??
ஆணின் குணத்தை பெரிதாக தான் இந்த கதையில் இருக்கிறது என்பதை நான் ஒத்துகொள்கிறேன்..
இருந்தாலும், சம்டைம்ஸ், குற்றம் கண்டு பிடிக்க என்று ஒரு கூட்டம் இருக்கும் இல்ல( நான் என்னை தான் சொன்னேன்..)
அணிமா!!!
நீங்கள் குற்றம் கண்டு பிடிப்பதாக நான் நினைக்கவில்லை. :) :) :)
ஏன் என்றால் குமார் மனநிலைபற்றி என்னால் அழகாக எழுத முடியும்.
ஆனால் ரொம்ப நீளமாகப்போகுமே, சிறுகதையாக முடித்துவிடலாம் என்றுதான் அதில் ரொம்ப நேரம் செலவழிக்கவில்லை!
///நீங்கள் குற்றம் கண்டு பிடிப்பதாக நான் நினைக்கவில்லை. :) :) :)///
நினைகாததிற்க்கு மிக்க நன்றி ...
//ஏன் என்றால் குமார் மனநிலைபற்றி என்னால் அழகாக எழுத முடியும். ///
அதையும் இன்னொரு சிறுகதை வடிவில் எழுதலாமே..??
///ஆனால் ரொம்ப நீளமாகப்போகுமே, சிறுகதையாக முடித்துவிடலாம் என்றுதான் அதில் ரொம்ப நேரம் செலவழிக்கவில்லை!///
அதாவது, குறைகளை பற்றி நீளமாக எழுதிவிட்டு, நிறைகளை சுருக்கமாக முடித்து கொண்டீர்களே என்று நான் நினைக்கிறேன்..
***உருப்புடாதது_அணிமா
அதாவது, குறைகளை பற்றி நீளமாக எழுதிவிட்டு, நிறைகளை சுருக்கமாக முடித்து கொண்டீர்களே என்று நான் நினைக்கிறேன்..
10 September, 2008 10:00 AM***
நான் அப்படி நினைத்தேனா என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள், நான் அப்படி நினைத்ததாக விமர்சிப்பது ரொம்ப நல்லாயிருக்கு! நன்றி :-)
நீங்கள் சொல்வதுபோல், குமார்போல் மனநிலையில் உள்ள ஹீரோக்களையும் அவர்கள மனநிலையையும் சற்றே ஆழமாக இன்னொரு இடத்தில் (கதையில்) சந்திப்போம், அணிமா!
விமர்சனம் எழுத வேண்டும் என்று நான் எழுதவில்லை..
என்னுடைய கருத்துக்களை மட்டும் தான் சொன்னேன்..
என்னுடைய கருத்துக்களை ஏற்று கொண்டதற்கு மகிழ்ச்சி நண்பரே..
Post a Comment