ஈழத்தமிழர்கள், உயிர், உரிமைகள் பறிக்கப்பட்டு நாடுவிட்டு நாடு போய் என்னவெல்லாமோ துன்பம் அனுபவித்து இருக்கும் இந்த சூழ்நிலையில் இந்த பிரச்சினையைப் பற்றி பேசும்போது நல்ல பக்குவம் வேண்டும். அது என்னிடமில்லை என்பதால் என் எழுத்தில் நிறைய குறைகள் வரலாம். சகித்துக்கொள்ளுங்க, ப்ளீஸ்!
* ஈழத்தமிழர்கள் உயிருக்காக போராடிக்கொண்டு இருக்கும்போது சில பெரிய நாடுகள் அவர்களை வைத்து அரசியல் செய்வது மிக மிகத்தவறு. அது எந்த நாடாக இருந்தாலும் அப்படி செய்வது மிருகத்தனம். அதென்னவோ தெரியவில்லை தனிமனிதனுக்கு உள்ள மனிதாபிமானம், நாடு சம்மந்தப்பட்ட அரசியலில் இருப்பதில்லை! :(
* பொதுவாக, பத்திரிக்கைகள் "பிராமண க்ரிடிக்ஸ்" 95% மேல் ஈழப்பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது.
கவனம்! நான் தமிழ் பிராமண உடன்பிறப்புக்களைப் பற்றி இங்கே சொல்லவில்லை
இது சமீபத்தில் வந்த ஹிந்து ஆர்ட்டிகிள் மற்றும் சோ ராமசாமி, ஹிந்து ராம் போன்றவர்கள் எழுதுவதில் இருந்து வரும் 'குற்றச்சாட்டு".
சரி, இந்த மெத்தப்படித்த அரைகுறை ஞானம் கொண்ட க்ரிடிக்ஸ் ஈழத்தமிழருக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், முழு ஆதரவு கொடுத்தால், இந்த பிரச்சினை முடிவாகிவிடப் போகிறாதா என்பது என் கேள்வி?
இல்லை என்றுதான் நினைக்கிறேன்! அதனால் இவர்களை சும்மா உளறிக்கொண்டு திரியட்டும் என்றுவிட்டுவிடுவது நல்லது! இவர்கள் ஈழத்தமிழர்களை கஷ்டத்துக்கு உண்டாக்கி ஏற்கனவே இவர்கள் மேல் உள்ள "ப்ரிஜடிஸ்" மற்றும் "பயஸ்" போன்றவற்றை இன்னும் பலமடங்காக்கி, தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும் முட்டாள்கள் இந்த க்ரிடிக்ஸ்!
பேசாமல் இவர்கள் வேலையைப்பார்க்க வேண்டியதுதானே?
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சனுமா?
இவர்களுக்கு மட்டும் ஏன் ஈழத்தமிழர்கள் மேல் இரக்கமே இல்லை?
ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கிறார்கள்?
என்பது போன்ற கேள்விகளுக்கு பதில்கள் பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை! ஏன் இவர்களாலேயே புரிந்துகொள்ள முடியயுமா என்றும் தெரியவில்லை! உபகாரம் செய்யவில்லையென்றாலும் உபத்திரவம் செய்யாமல் இவர்கள் மூடிக்கொண்டு இருக்கலாம்!
* இதைவிட கொடுமை, தமிழ்நாட்டில் உள்ள பெரிய அரசியல்வாதிகளும், யார் காங்கிரஸுடன் கூட்டமைப்பது என்கிற போட்டியில், காங்கிரஸ்காரர்களை திருப்திப்படுத்த மனசாட்சியை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, ஈழப்பிரச்சினையில் சில அரசியல் செய்கிறார்கள்! இதுவும் கண்டிக்கதக்க/மிகவும் வருந்தத்தக்க ஒன்று. மனதளவில் அவர்கள் ஆதரவு ஈழத்தமிழருக்கு இருந்தாலும், மேலே உள்ளவர்களை திருப்திப்படுத்த அவர்கள் மனதை கல்லாக்கி அரசியல் செய்வதை பார்க்கலாம்! :(
* ஈழத்தமிழர்களிடம் இந்த பிரச்சினை பற்றிப்பேசும்போது/விவாதிக்கும்போது நான் கண்ட குறை.
அவர்கள் இந்த பிரச்சினையைப்பற்றிப்பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். :( பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் வலி தெரியும் என்பது எனக்குத்தெரியும். இருந்தாலும் கொஞ்சம் உணர்ச்சிவசப்படாமல், தமிழ் உறவுகள் கொஞ்சம் மாறுபட்ட கருத்துகள் வைத்தாலும் அவர்கள் அறியாமையால் வைத்திருந்தால், அந்த அறியாமையை கனிவாக அவர்களிடம் இருந்து போக்க வேண்டும்.
ஈழத்தமிழ் உறவுகள் என்ன செய்ய வேண்டும்?
* ஈழத்தமிழ் பிரச்சினையை வைத்து அரசியல் செய்யும் எந்தத் தமிழ் அரசியல்வாதி யையும் அவர்கள் நம்பக்கூடாது!
* பிராமண பத்திரிக்கையாளர்களை துச்சமாக நினைத்து ஒதுக்க வேண்டும்!
* ஒரு உண்மையை நம்புங்கள்! தமிழ்நாட்டில் மற்றும் உலகில் உள்ள எல்லாத்தமிழ் சகோதர சகோதரிகளுமே நீங்கள் அதிவிரைவில் தனி தமிழ் ஈழம் அமைத்து, மனநிம்மதியுடன் நீங்கள் நீடூழிவாழவேண்டும் என்றுதான் மனதாற எண்ணுகிறார்கள், பிரார்த்திக்கிறார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் எனக்கு இல்லை .
25 comments:
* இதைவிட கொடுமை, தமிழ்நாட்டில் உள்ள பெரிய அரசியல்வாதிகளும், யார் காங்கிரஸுடன் கூட்டமைப்பது என்கிற போட்டியில், காங்கிரஸ்காரர்களை திருப்திப்படுத்த மனசாட்சியை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, ஈழப்பிரச்சினையில் சில அரசியல் செய்கிறார்கள்! இதுவும் கண்டிக்கதக்க/மிகவும் வருந்தத்தக்க ஒன்று. மனதளவில் அவர்கள் ஆதரவு ஈழத்தமிழருக்கு இருந்தாலும், மேலே உள்ளவர்களை திருப்திப்படுத்த அவர்கள் மனதை கல்லாக்கி அரசியல் செய்வதை பார்க்கலாம்! :(
99% உண்மை நண்பரே.நல்ல அலசல்.
You are Great.
Thanks
Kannan.
நல்ல அலசல் வருண்
வருண்....
சுருக்கமா நச்சுன்னு நிலைமையை சொல்லவிட்டீர்கள்.
நல்ல பார்வை.
****வருங்கால முதல்வர் said...
* இதைவிட கொடுமை, தமிழ்நாட்டில் உள்ள பெரிய அரசியல்வாதிகளும், யார் காங்கிரஸுடன் கூட்டமைப்பது என்கிற போட்டியில், காங்கிரஸ்காரர்களை திருப்திப்படுத்த மனசாட்சியை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, ஈழப்பிரச்சினையில் சில அரசியல் செய்கிறார்கள்! இதுவும் கண்டிக்கதக்க/மிகவும் வருந்தத்தக்க ஒன்று. மனதளவில் அவர்கள் ஆதரவு ஈழத்தமிழருக்கு இருந்தாலும், மேலே உள்ளவர்களை திருப்திப்படுத்த அவர்கள் மனதை கல்லாக்கி அரசியல் செய்வதை பார்க்கலாம்! :(
99% உண்மை நண்பரே.நல்ல அலசல்.***
நன்றி, முதல்வர்!
**** You are Great.
Thanks
Kannan. ***
நன்றி, கண்ணன்! :-)
***நசரேயன் said...
நல்ல அலசல் வருண்***
நன்றிங்க நசரேயன்!
****வாசகன் said...
வருண்....
சுருக்கமா நச்சுன்னு நிலைமையை சொல்லவிட்டீர்கள்.
நல்ல பார்வை.****
வாங்க வாசகன் சார்!!!
மிக்க நன்றி! :-)
//ஒரு உண்மையை நம்புங்கள்! தமிழ்நாட்டில் மற்றும் உலகில் உள்ள எல்லாத்தமிழ் சகோதர சகோதரிகளுமே நீங்கள் அதிவிரைவில் தனி தமிழ் ஈழம் அமைத்து, மனநிம்மதியுடன் நீங்கள் நீடூழிவாழவேண்டும் என்றுதான் மனதாற எண்ணுகிறார்கள், பிரார்த்திக்கிறார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் எனக்கு இல்லை .//
தலைப்பு தமிழ் ஈழப்பிரச்சினை-எனது பரந்த பார்வையில் ன்னு இருந்திருக்கணுமோ வருண்? அடைப்பான் வார்த்தைகளைப் பார்த்தால் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.
ஈழத்தமிழருக்கு எதிர்ப்பு தெரிவித்த ஹிந்து பத்திரிகை செய்தியின் (or editorial) லிங்க் தரமுடியுமா வருண் ?
I would like to read it as i have stopped reading "The Hindu" except for the sports section for sometime now.
Thanks for your help.
//* ஒரு உண்மையை நம்புங்கள்! தமிழ்நாட்டில் மற்றும் உலகில் உள்ள எல்லாத்தமிழ் சகோதர சகோதரிகளுமே நீங்கள் அதிவிரைவில் தனி தமிழ் ஈழம் அமைத்து, மனநிம்மதியுடன் நீங்கள் நீடூழிவாழவேண்டும் என்றுதான் மனதாற எண்ணுகிறார்கள், பிரார்த்திக்கிறார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் எனக்கு இல்லை .//
முற்றிலும் உண்மையான கூற்று வருன்...!!
தமிழன் உலகின் எந்தமூலையில் இருந்தாலும் ஈழத்தமிழர்கள் வெற்றிபெற்று அமைதியாக வாழ பிரார்த்தனை செய்துகொண்டுதான் இருப்பார்கள்.
***ராஜ நடராஜன் said...
//ஒரு உண்மையை நம்புங்கள்! தமிழ்நாட்டில் மற்றும் உலகில் உள்ள எல்லாத்தமிழ் சகோதர சகோதரிகளுமே நீங்கள் அதிவிரைவில் தனி தமிழ் ஈழம் அமைத்து, மனநிம்மதியுடன் நீங்கள் நீடூழிவாழவேண்டும் என்றுதான் மனதாற எண்ணுகிறார்கள், பிரார்த்திக்கிறார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் எனக்கு இல்லை .//
தலைப்பு தமிழ் ஈழப்பிரச்சினை-எனது பரந்த பார்வையில் ன்னு இருந்திருக்கணுமோ வருண்? அடைப்பான் வார்த்தைகளைப் பார்த்தால் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.***
வாங்க ராஜ நடராஜன்! :-) உங்க அழுத்தமான வரிக்கு நன்றி!
*** மணிகண்டன் said...
ஈழத்தமிழருக்கு எதிர்ப்பு தெரிவித்த ஹிந்து பத்திரிகை செய்தியின் (or editorial) லிங்க் தரமுடியுமா வருண் ?
I would like to read it as i have stopped reading "The Hindu" except for the sports section for sometime now.
Thanks for your help.***
விரைவில் தருகிறேன், மணிகண்டன்! :)
*** கணினி தேசம் said...
//* ஒரு உண்மையை நம்புங்கள்! தமிழ்நாட்டில் மற்றும் உலகில் உள்ள எல்லாத்தமிழ் சகோதர சகோதரிகளுமே நீங்கள் அதிவிரைவில் தனி தமிழ் ஈழம் அமைத்து, மனநிம்மதியுடன் நீங்கள் நீடூழிவாழவேண்டும் என்றுதான் மனதாற எண்ணுகிறார்கள், பிரார்த்திக்கிறார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் எனக்கு இல்லை .//
முற்றிலும் உண்மையான கூற்று வருன்...!!
தமிழன் உலகின் எந்தமூலையில் இருந்தாலும் ஈழத்தமிழர்கள் வெற்றிபெற்று அமைதியாக வாழ பிரார்த்தனை செய்துகொண்டுதான் இருப்பார்கள். ***
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி, கணினி தேசம்! :-)
***I would like to read it as i have stopped reading "The Hindu" except for the sports section for sometime now.
Thanks for your help***
இதைப்படித்துப் பாருங்கள், மணிகண்டன்!
http://www.hindu.com/2008/10/14/stories/2008101454490800.htm
அந்த அம்மாவுக்கு சினிமா விமர்சனமே ஒழுங்கா எழுததெரியாது!
****The dangers of Tamil chauvinism
Malini Parthasarathy
The latest campaign in Tamil Nadu masterminded by a desperate LTTE must not be allowed to undermine the sound policy decision upheld by successive Indian governments since 1991 to stay out of Sri Lanka’s internal affairs. ***
என்னால் அந்த லின்க்கை ஒழுங்கா கொடுக்க முடியவில்லை. :(
You can just google using the title " "The danger of tamil chauvinism" which will take you there, maNi! :-)
நன்றி வருண்.
சிறிலங்காவின் யுத்த சுமையில் பங்குகொள்ளும் இந்தியா!
வழக்கம்போலவே கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது அரசியலை அரங்கேற்றியிருக்கிறார். ஈழத்தமிழ் மக்கள் படும் அவலங்களை அறிகின்றபோது தூங்கக்கூட முடியாமல் துடிக்கின்றேன் என்று கண்ணிர்விட்டழுத கலைஞர், அந்தத் தமிழமக்களின் துயர் துடைக்கமுடியாவிட்டால் ஆட்சியைக் கூட துறக்கலாமா என்று சிந்திப்பதாகத் தெரிவித்திருந்த கலைஞர், இப்போது தமது நடவடிக்கைகள் மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தாத வகையில் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்திருக்கின்றார். கலைஞரை, அவரது அரசியல் வாழக்கையை தெரிந்துகொண்டவர்களுக்கு கலைஞரின் நடவடிக்கை ஒன்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்காது. ஏன், இப்படித்தான் நடக்கும் என்று முன்கூட்டியே அவர்களால் கணித்திருக்கவும் முடியும். இதனை அறிந்துகொள்ளாமல், ஏதோ தமிழகமே புலிகள் பக்கம் திரும்பிவிட்டது போல புலிகளின் ஊதுகுழல்கள் துள்ளிக்குதித்தனர். ஆக, நடந்திருப்பது என்ன? இதுகாலவரை வன்னியிலுள்ள தமிழ்மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம்தான் உணவுப்பொருட்களை அனுப்பிவருகின்றது. அங்குள்ள மக்களுக்கு என்று நாம் குறிப்பிடுவது, புலிகளையும் சேர்த்துத்தான்.எத்தனை அனர்த்தம் நடந்து முடிந்துவிட்டபோதிலும் இதுவரை ஒரு தமிழ்மகன் கூட பட்டினியால் இறந்துவிட்டதாக நாம் எங்கும் அறியவில்லை. அந்தளவிற்கு எப்போதும் அங்கு உணவுப்பொருட்கள் கையிருப்பில் வைக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக சிறிலங்கா அரசாங்கம் செலவிடுகின்ற தொகை மிகப் பெரியது. இப்போது இந்தியா அந்தச் சுமையில் ஒரு மிகச் சிறிய பகுதியைப் பொறுப்பேற்றிருக்கின்றது.ஆக, அந்தத் தொகையை இப்போது யுத்தத்திற்கு செலவிட இந்தியா உதவுகின்றது.
இந்து ராம் அவர்களுக்கு அவருடைய ஊடக சாம்ராஜ்யத்தின் பலமாக/பலனாக, மேலும் அவர் குடும்பம் பாரம்பரீயம் கருதியும் அவருக்கு என்று ஒரு செல்வாக்கு உண்டு. இதை அவர் தவறாகப் பயன்படுத்துகின்றார் என்றே கருதுகின்றேன். அவரை மட்டுமோ, அவரைப் போன்ற மற்ற ஊடகங்களை மட்டுமோ படிக்கும் ஒருவருக்கு ஈழம் பற்றிய “உண்மைகள்”, “வரலாறு” தெரிவதில்லை. அவை திரிக்க/திணிக்கப் படுகின்றன. அவர் வெறும் பத்திரிக்கையாளர் அல்ல. அவர் ஒரு அரசியல் தரகரும்தான். He is attempting to be an “opinion maker” and a “power broker”, with a vendetta against Eelam and it’s people.
ஆக, இந்து ராம் அவர்களை “சும்மா உளறிக்கொண்டு திரியட்டும் என்று விட்டுவிடுவது நல்லது!” என்று ஒதுக்கிவிட முடியாது. அவர் உளரவில்லை. விளைவுகள் எதிர்பார்த்தே காய் நகர்த்துகின்றார். அவரது கபட நாடகங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
மேலே கூறியவை, சோ அவர்களுக்கும், சிற்சில மாற்றங்களுடன் பொருந்தும் என்பதே என் தாழ்மையான கருத்து.
****ஆக, இந்து ராம் அவர்களை “சும்மா உளறிக்கொண்டு திரியட்டும் என்று விட்டுவிடுவது நல்லது!” என்று ஒதுக்கிவிட முடியாது. அவர் உளரவில்லை. விளைவுகள் எதிர்பார்த்தே காய் நகர்த்துகின்றார்.****
என்ன விளைவு எதிர் பார்க்கிறார்?
அதை வைத்து என்ன சாதிக்க போகிறார்? னு ஒரு ரெண்டு வரியில் சொல்லுங்க!
-------------------------------
வருண்:
என்ன விளைவு எதிர் பார்க்கிறார்?
அதை வைத்து என்ன சாதிக்க போகிறார்? னு ஒரு ரெண்டு வரியில் சொல்லுங்க!
---------------------------------
நண்பரே:
இரண்டு வரியில் கூறுவது கடினம். குறுகிச் சொல்ல முயல்வேன்:
1) புலிகளுக்கும், ஸ்ரீலங்காவிற்கும், இந்திய அரசாங்கத்திற்கும் இடையிலான தரகராய் இந்து ராம் முன்பு இருந்துள்ளார். இவர் எதிர்பார்ப்பின்படி புலிகள் நடவாதது காழ்ப்புணர்ச்சியாக மாறியுள்ளது. ஆகவே ஈழம் புதைக்கப்பட வேண்டும் என்ற மனநிலை.
2) ஆண்டாண்டு காலமாக தமிழ், தமிழரின் பால் ஒட்ட முடியாத ஒரு மன நிலை அவரிடத்தும் உண்டு என்பது என் கணிப்பு. So under the bogey of “Indian Nationalism” and being “Pan-Indian”, portray even just demands of ALL Tamils as “Tamil Chauvinism” and “Tamil Separatism”.
உங்கள் பார்வைக்காக இரண்டு சுட்டிகள். அவசியம் படிக்க வேண்டுகின்றேன்.
“ஸ்ரீலங்கா ரத்னா” இந்து ராம் பற்றிய செய்திச் சுட்டிகள்:
http://www.lankanewspapers.com/news/2008/10/33675_space.html
http://chiennessansfrontieres.blogspot.com/2006/04/n-ram-pays-back-for-lanka-ratna.html
Thanks, anony bro!
I went thru them!
I also found something!
N Ram: First Indian National to get "Sri Lanka Rathna" Award
http://tamiliana.blogspot.com/2005/12/n-ram-first-indian-national-to-get-sri.html
-----------------------
You are correct! These guys are dangerous! :-(
மிக அருமையான அலசல் பதிவை எழுதியுள்ளீர்கள் வருண், பாராட்டுகள்.
உங்கள் பதிவுக்கு இன்னும் ஆநொந்த சங்கரியும், ஸ்டோன் ஜோ என்கிற கோத்தபய ரஜபக்க்ஷேவும் வந்து பின்னூட்டமிடாமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
****ஜோசப் பால்ராஜ் said...
மிக அருமையான அலசல் பதிவை எழுதியுள்ளீர்கள் வருண், பாராட்டுகள்.****
நன்றி, திரு. ஜோசப் பால்ராஜ்! :-)
"Army to Open a Land Route to Jaffna Soon" - Commander Tells Gajaba Regiment Silver Jubilee
ON reaching the Jaffna's Kilaly lagoon, about 7 km away from the troop positions as of now, the entire western part of Kilinochchi district would be sans terrorists, enabling the troops to re-open a main supply route to Jaffna shortly, said Commander of the Army Lieutenant General Sarath Fonseka at the Gajaba Regiment Silver Jubilee commemorations," held at Saliyapura Regimental Headquarters Monday morning (3).
The Silver Jubilee commemoration of the elite Gajaba Regiment (GR), one of the most prominent and reputed Regiments in the Sri Lanka Army got underway, giving pride of place to the military ceremonials and traditions.
The ceremonies of the day commenced at 8.30 a.m. when the Chief Guest Lieutenant General Sarath Fonseka, Commander of the Army arrived at the premises of the Keterians who in turn was accorded a Guard of Honour plus the military Guard Turn-out. He was then received by senior officers of the GR who were awaiting their Chief's arrival there.
Marking the commencement of the ceremonies on the day, the Chief Guest, accompanied by Colonel of the Regiment Major General Jagath Dias and Senior GR Officers, paid floral tributes to the huge and magnificent War Hero monument at the Regimental Headquarters premises, erected in memory of all fallen GR War Heroes.
Major General Wijaya Wiamalaratne, founder of the Gajaba Regiment, now a legendary War Hero in contemporary times, exactly twenty five years ago was fondly recalled to the memory along with all other War Heroes after observing two-minute silence.
To this date about 3500 GR warriors, popularly known as Keterians, the name deriving from their unit badge, have paid the supreme sacrifice, in accomplishing their noble mission of eradicating terrorism from the soil. Giving further weight to their dedication and commitment to the cause, the GR was conferred President's Colours recently.
During the Commander's address to the occasion, he appreciated the GR contributions and summed up the gains so far made by the Army in its quest for peace and where he said that the opening of a land route between Colombo and Jaffna is going to be a reality very soon. "As the troops are now closing in on the Kilaly lagoon, depriving the terrorists of their western Pooneryn bastion, the troops have so far managed to eliminate 80% of the LTTE fighting ability after suppressing them. Thus the western sector of the A-9 highway would remain completely clear," said the Commander.
During a subsequent Press briefing, Commander further assured that capture of Mullaittivu simultaneously mobilizing many more battalions under four Divisions would form a 50 km-long frontage to the east of the A-9 road, providing full security to the area afterwards.
Major General Jagath Dias, Colonel of the Regiment, as a token of memory and recognition presented the visiting Commander with a special plaque on the occasion on behalf of all War Heroes. Lieutenant General Sarath Fonseka also spoke to a cross section of GR soldiers who have turned disable during offensives, launched in the fight against terrorism and did not forget to exchange a couple of views with them.
A record 3500 GR War Heroes in their fight against division of the country have made the supreme sacrifice so far, the highest number to have laid their lives from a single wing in the Army. The GR came into being in 1983 after Rajarata Rifles was disbanded. The present Secretary Defence Mr. Gotabhaya Rajapaksa also served in this elite Regiment some time back before his retirement.
Towards the end of the ceremony, all troops present on the occasion, with their senior officers, Officers and Other Ranks posed for a group photograph with the Chief Guest
Post a Comment