Friday, July 17, 2009

கடலை கார்னர் (1)

"ஹேய் பிருந்தா! யார் அது?"

"எது?"

"உங்களோட படத்துக்கு வந்திருந்தாளே அந்தப் பொண்ணு?'

"என் ஃப்ரெண்டு!"

"அவ என்ன பண்ணிக்கொண்டு இருக்காள்?"

"வேறென்ன வேணும்? அவ சைஸ் எதுவும் வேணுமா?"

"நீ ரொம்ப மோசம், பிருந்தா! ஏ சும்மாதான் கேக்கிறேன்"

"ச்சும்மா? நீங்க திருந்தவே மாட்டீங்களா, கண்ணன்?"

"நான் எப்போ கெட்டுப்போனேன்? திருந்த?"

"பிறவியிலேயே!"

"அடப் பாவி! ஏன்ப்பா இப்படி?"

"நீங்க ஆம்பளைதானே, கண்ணன்?"

"உனக்குத்தான் நல்லாத்தெரியும்! நீ என்ன நினைக்கிற, பிருந்தா?"

"தெரிந்ததால்தான் சொல்லுறேன். திருந்துங்கனு!"

"உனக்கேன் இப்படி கோபம் வருதுனு தெரிஞ்சுக்கலாமா?"

"இது கோபம் இல்லை!"

"வேறென்ன?"

"லேசா பொறாமைனு சொல்லலாம். அதுவும் இல்லை. உங்க மேலே பரிதாபமாக்கூட இருக்கலாம்"

"ஏன் இப்படி இருக்கீங்க?"

"நாங்களா?"

"ஆமா. ஏன்?"

"உங்க கிட்ட ஒண்ணு சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோங்க. நாங்க எத்தனையோ தேவலை தெரியுமா? இதேபோல் நான் ஒரு ஆளைப்பற்றி உங்கட்ட கேட்டேன் னு வச்சுக்கோங்க. சும்மா பேச்சுக்குத்தான். உங்க இதயமே நொறுங்கிவிடும்! நாங்க பெரிய மனசு பண்ணி உங்க இதயத்தை பாதுகாக்கிறோம்!"

"அப்பா! எவ்வளோ பெரிய மனசு! எப்படி இதெல்லாம் பிருந்தா!"

"ஜோக் கடிச்சு சமாளிக்க வேணாம் மிஸ்டர்! உங்களுக்கே தெரியும், நான் சொல்வது உண்மைனு"

"அது ஏன் நாங்க மட்டும் அப்படி இருக்கோம்?'

"ஏன்னா நீங்க ஆம்பளை!"

"சரி விசயம் தெரியுமா, பிருந்தா?"

"என்ன விசயம்?"

"இனிமேல் எ சி எஸ் ஜேர்னல் எல்லாமே எலக்ட்ரானிக் வேர்ஷன்ல தான் கிடைக்குமாம். ஆன் லைன்ல மட்டும். ப்ரிண்ட் வேர்ஷன் எல்லாமே 2010 ல இருந்து கம்ப்ளீட்டாக நிறுத்தப்படுகிறது!"

"ஏனாம்?"

"யாருமே ப்ரிண்டெட் வேர்ஷன் வாங்கிறது இல்லையாம். ஒரு 100 காப்பிதான் விக்குதாம்"

"நெஜம்மாவா?"

"ஆமா. இனிமேல் எல்லாமே ஆண்-லைன் சயண்ஸ் தான்! எல்லாமே எலக்ட்ரானிக் உலகம்!"

"ஒரு நாள் இதுபோல குமுதம், விகடன் எல்லாம் ஆன் லைன் ல மட்டுமே கிடைக்கும் நிலைமை வருமா, கண்ணன்?"

"That I am not sure. Because in the scientific world everybody owns a computer and more sophisticated environment. It will take much longer for kumudham, vikatan or even magazines like Time to reach that stage, I think!"

"Thanks for the information!

"You are most welcome! Here is the link for related discussion, check this out!

http://depth-first.com/articles/2009/06/17/beginning-of-the-end-for-acs-journal-print-editions"

-தொடரும்

2 comments:

Anonymous said...

hello... hapi blogging... have a nice day! just visiting here....

வருண் said...

Thanks for visiting here, Hapi :-)))