Saturday, July 11, 2009

நான் எப்படி "வயாகரா" வை கண்டுபிடித்தேன்?

அறிவியலில் பல பெரிய கண்டுபிடிப்புகள் ஆக்ஸிடெண்டல் டிஸ்கவரிதான். பெனிசிலின் மற்றும் பல மருந்துகள் அப்படித்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல், வயாகரா என்கிற இந்த உலகப் புகழ்பெற்ற “ஆண்மை வீரியம்” கொடுக்கும் மருந்தை கண்டுபிடித்தது ஒரு எதிர்பாராத கண்டுபிடிப்பு. நான் எப்படி வயாகராவை கண்டு பிடித்தேனென்று அந்த கண்டுபிடிப்பாளர் எழுதிய ஒரு ஆர்ட்டிகிளில் இருந்து முக்கியமான விசயங்களை தமிழாக்கம் செய்துள்ளேன்.

http://www.cosmosmagazine.com/features/print/1463/how-i-discovered-viagra

அதாவது இந்த மருந்தை “ஆண்மையை” வலுப்படுத்த இவர்கள் முயன்று கண்டுபிடிக்கவில்லை.

அப்போ எப்படி கண்டு பிடித்தார்கள்?

”ஆன்ஜினா” என்கிற ஒரு மார்புவலி இருக்கிறது. இது மாரடைப்பு அல்ல! மாரடைப்பு வருவதற்கு அறிகுறி. அதாவாது உங்க இதயத்தில் உள்ள நரம்புகளில் ரத்தம் சரியாக ஓடாமல் லேசாக அடைத்து இருப்பதால் வருவது இந்த வலி. இது மாரடைப்பு பின்னால் வருவதற்கு அறிகுறி.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் பார்க்கவும்.

இது ஆஞ்சினா வரும் மாரடைப்பு அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு உள்ள ரத்தக்குளாயில் ஏற்படும் அடைப்பை காட்டுகிறது.


இந்த ஆஞ்சினா வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இருந்த இந்த வயாகரா கண்டுபிடிப்பாளர்கள், க்ளினிக்கல் ட்ரயல்ஸ் செய்யும்போது ஆஞ்சினா உள்ளஒரு சில வாலண்டீர்களுக்கு, “வயாகரா” மருந்தை கொடுத்து ஆஞ்சினாவை சரி செய்ய முடியுமா? என்று பார்த்தார்கள்.

அப்படிப் பார்க்கும்போது. ஆஞ்சினா உள்ள அந்த நோயாளிகளுக்கு “எரக்ஷன்” அதிக நேரம் இருப்பதாகவும். சிலருக்கு பல மணி நேரங்கள் தொடர்ந்து இருப்பதாகவும் அந்த நோயாளிக ள் “மகிழ்ச்சியுடனும் பயத்துடனும்” வந்து சொல்லி இருக்கிறார்கள்.

உடனே, ஆஞ்சினாவை ப்பற்றி மறந்துவிட்டு, ஆண்மைக்மகுறைவு உள்ளவர்களுக்கு அதே மருந்தை கொடுத்து ப் பார்த்து இருக்கிறார்கள். ஆண்மைக்குறைவு உள்ளவர்களுக்கும “எரெக்ஷன்” வர ஆரம்பித்து சில மணி நேரங்கள் தொடர்ந்து இருப்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

கடைசியில் இது ஆண்மைக்குறைவுக்குநிவர்த்தி செய்யும் மருந்தாக வயாகராவாக மாறி, பல ஆயிரம் கோடி ஃபைசருக்கு கொடுத்து மிகப்பெரிய மார்க்கட்டை பிடித்தது.

What is important for a scientist is that very careful observation. One should not just look ONLY for what you anticipate. You should observe and note the result, which might not be what you anticipated. That is how lots of great discoveries have been made.

No comments: