Tuesday, July 7, 2009
கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 10
பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6
பாகம் 7
பாகம் 8
பாகம் 9
ஸ்டீவ் மிக்னெய்ர்- மைக்கல் ஜாக்சன் மரணத்துக்குப்பிறகு, அமரிக்காவில் அடுத்த பரபரப்பு செய்தி இது தான், இவரை இங்கே இழுத்து வர முக்கிய காரணம் இருக்கிறது!
முதலில் செய்தி: முன்னாள் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் ஸ்டீவ் மிக்னெய்ர்(வயது :36), தன் கள்ளக்காதலி சாஹில் கசிமியால் சுட்டுக்கொல்லப்பட்டார். கசிமியும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். கசிமிக்கு 20 வயது, ஹோட்டல் வெயிட்ரெஸ். க்ரைம் சீனில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி கசிமியினுடையதாம். ஸ்டீவ் ஏற்கெனெவே திருமணமானவர், மனைவியின் பெயர் மிஷல், இவர்களுக்கு 4 ஆண் குழந்தைகள் இருக்கிறதாம், மனைவிக்கு இந்தக்கள்ளக்காதலைப்பற்றி எதுவும் தெரியாதாம்!
என்னுடைய தோழிகள் வீட்டுக்கு வந்திருந்த போது இந்தச்செய்தியை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது, உடனே ஆளாளுக்கு டிஸ்கஷனில் இறங்கி சில தியரிகள் கண்டுபிடித்தனர்- அதில் சிலவற்றை எழுதுகிறேன்.
தியரி 1: ஸ்டீவ், கசிமியை காதலிப்பது போல நடிக்கிறார். கசிமி ஒரு ஈரானியப்பெண், மற்ற பெண்களை மாதிரி அவ்வளவு சுலபமாக மடிய மாட்டார். "மனைவியை விவாகரத்து செய்துவிடுகிறேன்" என்ற வாக்குறுதியுடன் கசிமியுடன் பழக ஆரம்பித்த ஸ்டீவுக்கு நாளாக, நாளாக கசிமி போரடிக்க ஆரம்பித்தார், கசிமியைப்பார்ப்பதை தொடர்ந்து தவிர்த்து வந்தார். காரணம் புரியாத கசிமி, விவாகரத்து செய்ய சொல்லி வற்புறுத்த, ஸ்டீவ் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை பிரிய மறுக்க, ஆத்திரமடைந்த கசிமி, ஸ்டீவை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டார்.
தியரி 2: இதில் கசிமி தான் வில்லி- ஸ்டீவை அடிக்கடி தான் வேலை செய்யும் ரெஸ்டாரண்டில் பார்க்கும் கசிமி, அவர் ஒரு மில்லியனர் என்பதை தெரிந்துக்கொள்கிறார். பிறகு ஸ்டீவை காதலிப்பது போல நடித்து, மயக்கி- அவரிடம் இருந்து பரிசுப்பொருட்கள், கார், வீடு போன்றவற்றை வாங்கிக்கொள்ளுகிறார். ஆசை யாரை விட்டது? கசிமிக்கு ஸ்டீவினுடைய பணம் முழுவதுமாக வேண்டும் என்ற பேராசை தொற்றிக்கொண்டது! எனவே ஸ்டீவை விவாகரத்து செய்யச்சொல்லி வற்புறுத்தினார். ஸ்டீவ் மறுத்ததோடு மட்டுமில்லாமல் கசிமியை மெல்ல கைக்கழுவ முயல, ஒரு நாள் தற்கொலை நாடகமாடி ஸ்டீவை தந்திரமாக தன் வீட்டுக்கு வர வைத்த கசிமி, "தனக்கு கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்க கூடாது" என்ற எண்ணத்தில், தன்னோடு ஸ்டீவையும் சேர்த்து கொன்றுவிட்டார்.
தியரி 3: என்னை தனிப்பட்ட வகையில் ரொம்பவே பாதித்த தியரி இது! ஸ்டீவின் மனைவி மிஷல் இதில் குற்றவாளி. ஸ்டீவும், கசிமியும் உண்மையாகவே காதலிப்பதையும், திருமணம் செய்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதையும் அறிந்த மிஷல், கோபத்தில் ஆள் வைத்து ஸ்டீவையும், அவர் காதலியையும் சுட்டு கொன்றுவிட்டு, வசதியாக பழியை இறந்த காதலி கசிமியின் மேல் திருப்பிவிட்டார்.
இதில் எந்த தியரியும் உண்மையாக இருக்கலாம், அல்லது எல்லாமே பொய்யாகவும் இருக்கலாம். நிச்சயமாக தெரிந்தது என்னவென்றால், இறந்த ஸ்டீவ் எத்தனை திறமைசாலியாக இருந்திருந்தாலும், இவரை நினைக்கும் போதே "கள்ளக்காதலியுடன் சுட்டுக்கொல்லப்பட்டார்" என்பதும் கூடவே நினைவுக்கு வரும்! இவருடைய குழந்தைகளின் நிலையை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது. அப்பாவின் இழப்பு, கூடவே அவரின் கள்ளக்காதலால் விளைந்த அவப்பெயர்! எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம், ஸ்டீவ் அன்று காதலி வீட்டில் இல்லாமல் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளோடு இருந்திருந்தால் இன்று உயிரோடு இருந்திருப்பார்!.
முறையற்ற உறவுகள் எந்த அளவுக்கு ஆபத்தாக முடியலாம் என்பதற்கு ஸ்டீவ் ஒரு நல்ல உதாரணம். கசிமி, மிஷல் இவர்களில் யார் கொலைக்காரர் என்பதெல்லாம் தெரியாது, இருந்தாலும் கணவன்/காதலன் என்ன செய்தாலும் அதிகப்பட்சம் சண்டைப்போடுவது அல்லது அழுவது- இதைத்தவிர வேறு எதுவும் செய்யாமல் மெளனமான மனக்குமறல்களோடு தங்கள் வேலையை கவனிக்கும் என் அம்மா, நிம்மி போன்ற சராசரி இந்தியப்பெண்களுக்கு கோவில் கட்டினாலும் தவறில்லை.
- நினைவலைகள் தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
யாருங்க இவரு ? கேள்விப்பட்டதே இல்ல. பிரபல கால்பந்து விளையாட்டு வீரர்ன்னு வேற சொல்றீங்க. உங்க தோழிங்க எல்லாம் போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருக்க வேண்டியவங்க போல.
வாங்க மணிகண்டன். ஸ்டீவ் மிக்னெர் தெரியாதா? டைட்டன்ஸ் குவாட்டர் பேக், டெனிசி? ஃபுட் பால் பார்ப்பீங்க இல்லை?
Kayal: Cheating can lead to all kinds of complications in one's life. It can never be justified. It is best to have some good morals.
However American football players and stars and celebrities hardly have any such morals.
But this is an extreme case, scary as Mcnair is one of greatest QBs.
maNikaNdan:
He is an American football player. Not our or european football :))))
வருண், கூகிள் பண்ணி பார்த்தேன். அமெரிக்கன் புட்பால் பாத்தது இல்லை. இங்க வராது டிவில.
Varun!
Infidelity is more common than we think/hear not just for celebrities, even for normal people. . Most people involved in it, don't even talk about it because it's such a taboo in the society. If the wife/gf both are OK with the "arrangement" then I guess everything goes well, the guy is just lucky. Even if one of them starts to give trouble, it's a disaster, somebody always gets hurt, that too badly!
***மணிகண்டன் said...
வருண், கூகிள் பண்ணி பார்த்தேன். அமெரிக்கன் புட்பால் பாத்தது இல்லை. இங்க வராது டிவில.
8 July, 2009 2:28 PM***
மணிகண்டன்: அதை, கால்பந்துனே சொல்ல முடியாது (கூடாது). ஏன் என்றால், அதை கையிலேயே வச்சுத்தான் விளையாடுவாங்க. ஆனால் இது எனக்கு ரொம்ப பிடிச்ச கேம் இது. நம்ம மக்கள் எல்லாம் இங்கே வந்தும் க்ரிக்கெட்தான் பார்ப்பாங்க. ஒரு சில இந்தியர்கள்தான் க்ரிக்கெட்டை மறந்து இப்படி அமெரிக்கன் ஃபுட்பாலை ரசிப்பது. ரொம்ப நல்லா இருக்கும், மணிகண்டன் கேம் புரிந்தால்:)
***Blogger கயல்விழி said...
Even if one of them starts to give trouble, it's a disaster, somebody always gets hurt, that too badly!***
It can hurt some people pretty badly Kayal. Some women become hysterical and psychological complications and what not. They can never forgive the partner ever. One will live in hell rest of the life! It is not worth it.
BTW, if both party agrees then it is not infidelity anymore, Kayal. We are dealing with a different thing here.
In my observation, African american men dumping their wives is very common. They are so irresponsible and most of them are cheats. Sorry if I sounded like a racisit>
//It can hurt some people pretty badly Kayal. Some women become hysterical and psychological complications and what not. They can never forgive the partner ever. One will live in hell rest of the life! It is not worth it.//
That's exactly what I mean, it's definitely not worth it. 'Hurting' doesn't have to involve guns and knives.
//BTW, if both party agrees then it is not infidelity anymore, Kayal. We are dealing with a different thing here.//
I guess then it becomes a "open marriage". Even in the open marriages, one person may decide to get jealous all of the sudden and the drama will start.
//
In my observation, African american men dumping their wives is very common. They are so irresponsible and most of them are cheats. Sorry if I sounded like a racisit//
Not really, but you sure are generalizing again. I can show you plenty of examples where couples stay happily married and are responsible(like Will and Jada, Beyonce and JC). Irresponsible people and cheaters exist in every race, not just in AA.
வருண், ஜான் க்ரிஷாமோட playing for pizza ன்னு ஒரு புக் படிச்சி இருக்கேன். ஒரு failed quarter back சம்பந்தமான நாவல். உங்களுக்கு கேம் தெரிஞ்சா இன்னுமே நல்லா இருக்கும்ன்னு நினைக்கறேன். படிச்சி பாருங்க.
தேசி பொண்ணுங்க, அப்ரிக்க அமெரிக்க ஆண்கள் - கலக்கல் மூடுல இருக்கீங்க போல. எல்லாரையும் மொத்தமா போட்டு தாக்கறீங்க.
All generalizations are wrong including this one !
***மணிகண்டன் said...
வருண், ஜான் க்ரிஷாமோட playing for pizza ன்னு ஒரு புக் படிச்சி இருக்கேன். ஒரு failed quarter back சம்பந்தமான நாவல். உங்களுக்கு கேம் தெரிஞ்சா இன்னுமே நல்லா இருக்கும்ன்னு நினைக்கறேன். படிச்சி பாருங்க.
தேசி பொண்ணுங்க, அப்ரிக்க அமெரிக்க ஆண்கள் - கலக்கல் மூடுல இருக்கீங்க போல. எல்லாரையும்
மொத்தமா போட்டு தாக்கறீங்க.***
மணிகண்டன்:
அந்த கதையை எடுத்துவிட்டேன். கதைதானே என்று ஒரு மாதிரி வசனங்களை எழுதினேன். இப்போத்தான் தெரியுது அது ரொம்ப அஃபன்ஸிவா இருக்குனு!
கயல் & மணிகண்டன்
எனக்கு நெறைய ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஃபேமிலி தெரியும். நெறையப்பேர் சிங்கிள் மதராக இருப்பாங்க. 90% நான் பார்த்தவர்கள்களில்!
அதான் அப்படி சொன்னேன்.நான் சொன்னது ஓரளவுக்கு உண்மை!
என்னங்க சூடு லேசாக் கம்மியா இருக்குது?
வாங்க லதானந்த் சார்!
இது ஒரு கோல்ட்--ப்ளெடெட் மர்டர்னு சொல்றாங்க.
மெக்நேய்ர், இந்த கேர்ள் ஃப்ரண்டிடம் போர் அடித்து இன்னோர் பெண்ணுக்கு தாவி விட்டதாகவும், அதனால் கோபம் அடைந்த இந்தப்பெண், அவரை 4 குண்டுகளுக்கு பலியாக்கிவிட்டு, பிறகு தன்னையும் சுட்டு இறந்துவிட்டாள் என்கிற முடிவுக்கு வந்து இருக்கிறார்கள்!
murder-suicide!
hey kayal is bac :)
அந்தக் காலத்தில ஒரு படம். சரோஜாதேவி பாட்டிலயே கேள்வி கேப்பார் குழந்தைகளை நோக்கி!
திடீர்னு ஜெமினி பதில் சொல்லுவார் ஒரு கேள்விக்கு. அப்ப லேசான எரிச்சலோட சரோஜாதேவி பாடுவார்.”மலர்களிடம் கேட்டதற்கு மரங்கள் வந்து பதிலைச் சொன்னால் மனதினிலே தோன்றும்பூ என்ன பூ?” அந்த மாதிரி கயலோட போஸ்டுக்குக் கயல் கிட்டக் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்றது........
லதானந்த் சார்!
முந்திரிக்கொட்டை மாதிரி நான் பதில் சொன்னது தப்புதான்.
என்னுடைய பின்னூட்டம் கடைசியா இருந்தது. நீங்க அதிலுள்லதைத்தான் ஏதோ சொல்றீங்கனு நினைத்துவிட்டேன்.
இனிமேல் இந்தத்தவறு நடக்காது :)
தவறு நடக்கதில்லையா? அப்பக் கயலைப் பதில் சொல்லச் சொல்லுங்க
Post a Comment