Monday, January 24, 2011

ஆனந்தவிகடனில் அதிசயம்- சி பி செந்தில்குமாரின் கணிப்பு!

அந்தக்காலத்தில் ஆனந்தவிகடன் விமர்சனமும், அவர்கள் கொடுக்கும் மதிப்பெண்களும்தான் தமிழ் சினிமாவின் தரத்தை நிர்ணயம் செய்தது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக விகடன் விமர்சனக்குழு பெரிய காமெடிக்குழுவாகிவிட்டது. ஏதாவது லூசுத்தனமா மார்க்குப்போட்டு எதையாவது உளறுவார்கள் என்று பேர் எடுத்தவர்கள் விகடன் விமர்சனக்குழு!

சமீபத்தில் "எந்திரன்" மற்றும் "மன்மதன் அம்பு" மதிப்பெண்களை கவனிக்கும்போது, மறுபடியும் இப்போ பரவாயில்லாமல் மாறிக்கொண்டு வர்ற மாதிரி தோன்றியது.

இப்போது பொங்கலுக்கு வெளியான படங்களை விகடன் மதிப்பிட்டு இருக்கும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் உள்ளது என்பது அதிசயம்!

விகடன் கொடுத்த மதிப்பெண்கள்

சிறுத்தை - 39

காவலன் - 42

ஆடுகளம் - 44

நம் பதிவர் செந்திகுமார் அவர்கள், "தில்"லாக அவர் எதிர்பாக்கிற விகடன் மதிப்பெண்களையும் தன் விமர்சனத்தில் கொடுத்தார். யாருக்கு இந்த தைரியம் வரும்?

சி பி செந்தில்குமாரின் எதிர்பார்ப்புகள்!

சிறுத்தை- எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 43

ஆடுகளம்- எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 44

காவலன் -எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 45

செந்திகுமார், சிறுத்தையையும், காவலனையும் ஓவெர் எஸ்டிமேட் பண்ணிவிட்டார். ஆடுகளம் மதிப்பெண்கள் பர்ஃபெக்ட்!

ஆனால் என் பார்வையில் சி பி கணிப்பு கொஞ்சம் ஏற்றுக்கொள்ளமுடியாததுதான். ஏன் என்றால் ரிலேட்டிவாக அவர் கணிப்பு தவறாகிவிட்டது,

காவலன் > ஆடுகளம் > சிறுத்தை என்பதை யாருமே ஏற்றுக்கொள்ளமுடியாது.

விகடன் மற்றும் உலகமே ஏற்றுக்கொண்டது ஆடுகளம்> காவலன் > சிறுத்தை என்பதுதான்!

ஆடுகளம் விகடன் மதிப்பெண்களை சரியாக ப்ரிடிக்ட் செய்ததுக்கும் (44, அட்ரா சக்க!!), இவ்ளோ தைரியமாக ஆனந்தவிகடன் மதிப்பெண்களை எஸ்டிமேட் செய்ததுக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள்!

18 comments:

மதுரை சரவணன் said...

நல்ல ஓப்பிடு. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல ஒப்பீடு சார், நண்பர் சிபியைப் பாராட்டியதற்கு நன்றி. சிபி அனுபவம் மிக்கவர். ஆனந்தவிகடன் குழுவினர் சிலரின் அனுபவத்தை விடவும் சிபிக்கு அதிகமாகவே இருக்கலாம். அந்த வகையில் சிபியின் மார்க்குகளை ஆனந்தவிகடனுக்கு சம அளவிலேயே வைத்துப் பார்க்க விரும்புகிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒருவேளை சிபியும் மூன்று படங்களையும் பார்த்து முடித்துவிட்டு மதிப்பிட்டிருந்தால் அதே வரிசை வந்திருக்குமோ?

குடுகுடுப்பை said...

நாலு வரி பதிவுன்னாலும் நச்சுன்னு இருக்கு

Philosophy Prabhakaran said...

// ஒருவேளை சிபியும் மூன்று படங்களையும் பார்த்து முடித்துவிட்டு மதிப்பிட்டிருந்தால் அதே வரிசை வந்திருக்குமோ? //

சிபி மூன்று படங்களையும் பார்த்துட்டு தானே மதிப்பிட்டிருந்தார்...

வருண் said...

***மதுரை சரவணன் said...

நல்ல ஓப்பிடு. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

24 January 2011 8:31 AM**
நன்றிங்க சரவணன் :)

வருண் said...

***Chitra said...

:-)

24 January 2011 9:29 AM***

வாங்க, சித்ரா :)

வருண் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல ஒப்பீடு சார், நண்பர் சிபியைப் பாராட்டியதற்கு நன்றி. சிபி அனுபவம் மிக்கவர். ஆனந்தவிகடன் குழுவினர் சிலரின் அனுபவத்தை விடவும் சிபிக்கு அதிகமாகவே இருக்கலாம். அந்த வகையில் சிபியின் மார்க்குகளை ஆனந்தவிகடனுக்கு சம அளவிலேயே வைத்துப் பார்க்க விரும்புகிறேன்!

-------------

ஒருவேளை சிபியும் மூன்று படங்களையும் பார்த்து முடித்துவிட்டு மதிப்பிட்டிருந்தால் அதே வரிசை வந்திருக்குமோ?***

திரு. ராம்சாமி அவர்களே!

படம் பார்க்காமல் அதுபோல் விமர்சனம் எழுதுவது கஷ்டம்ங்க. அவரு கொஞ்சம் விஜய் ரசிகர் போல இருக்கு. அதான் காவலனுக்கு அதிகமதிப்பெண்கள் கொடுத்ததுக்குக் காரணம்னு நெனைக்கிறேன் :)

வருண் said...

***குடுகுடுப்பை said...

நாலு வரி பதிவுன்னாலும் நச்சுன்னு இருக்கு***

வாங்க கு கு! :)

வருண் said...

***Philosophy Prabhakaran said...

// ஒருவேளை சிபியும் மூன்று படங்களையும் பார்த்து முடித்துவிட்டு மதிப்பிட்டிருந்தால் அதே வரிசை வந்திருக்குமோ? //

சிபி மூன்று படங்களையும் பார்த்துட்டு தானே மதிப்பிட்டிருந்தார்...

24 January 2011 1:57 PM***

நிச்சயமா பார்த்துட்டுத்தான் எழுதியிருந்தார்னு நம்புறேன். விஜய் ரசிகர் என்பதாலும், விகடன் இப்போ திருந்திவிட்டதை ரியலைஸ் பண்ணாததாலையும் இருக்கலாம் (முன்னால விஜய் படங்களுக்கு விகடன் கொஞ்சம் தாராளமாக மார்க் கொடுப்பதும் உண்டு)அவர் காவலனுக்கு 45 கொடுத்ததுக்கு காரணம். :)

சி.பி.செந்தில்குமார் said...

என்ன அதிசயம்? வழக்கமா என்னை தாக்கித்தானே பதிவு போடுவாங்க.. நீங்க பாராட்டி பதிவு போட்டு இருக்கீங்களே..

சி.பி.செந்தில்குமார் said...

>>>>அவரு கொஞ்சம் விஜய் ரசிகர் போல இருக்கு. அதான் காவலனுக்கு அதிகமதிப்பெண்கள் கொடுத்ததுக்குக் காரணம்னு நெனைக்கிறேன் :)

நான் சினிமாவின் ரசிகன் மட்டுமே.. எந்த நடிகரின் ரசிகனும் இல்லை..நான் அதிக மதிப்பெண் குடுத்ததுக்கு காரணம் காமெடி + காதல் + குடும்பத்துடன் பார்க்கற படம்னா விகடன் மார்க் எப்பவும் கூடும்.ஆடுகள்ம் படம் ஏ செண்ட்டர்களில் நல்லா போகாது என நான் தவறாக கணித்து விட்டேன்.அதே போல் சிறுத்தை ஜனரஞ்சகமாக சூப்பர் ஹிட் ஆனாலும் விகடன் மார்க் விஷயத்தில் நான் கோட்டை விட்டு விட்டேன்

ஆனந்தி.. said...

சிபி சார் ரொம்ப அனுபவ சாலி...அவர் predict பெரும்பாலும் சரியா இருக்கும்...அவர் ஏற்கனவே ஏதோ ஒரு பதிவில் சொல்லி இருந்தார் னு நினைக்கிறேன்...சென்னை மாதிரி இடங்களில் உள்ள தியேடேர் இல் பார்க்கும் ஆடியன்ஸ் ரெஸ்போன்ஸ் க்கும்...அவர் இருக்கும் ஊரில் இருந்து பார்க்கும் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் க்கும் வித்யாசம் வரலாம் னு...அதை வச்சு சிறுத்தை பத்தி சொல்லி இருக்கலாம்..இங்கே மதுரையில் சிறுத்தை கு டிக்கெட் சுத்தமா கிடைகள வருண்...ஆடுகளம் ஈஸி ஆ கிடைக்குது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

@வருண் said...
@Philosophy Prabhakaran said...

நண்பர்களே, நான் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டீர்களோ அல்லது நான் சரியாக சொல்லவில்லையோ.

ஒவ்வொரு படத்தையும் பார்த்து விட்டுத்தான் விமர்சனம் எழுதியிருப்பார் சிபி.நான் சொல்ல வந்தது, ஒவ்வொன்றையும் பார்த்த உடனே அதற்கு விமர்சனம் எழுதி விடுவார் அல்லவா? அப்படி அல்லாமல் ’மூன்று படத்தையும்’ பார்த்த பின்பு மூன்றுக்கும் விமர்சனம் எழுதி இருந்தால், அவரது தரவரிசையும், மதிப்பெண்களும் இன்னும் துல்லியமாக இருந்திருக்கும்!
அதாவது காவலன் படத்திற்கு விமர்சனம் எழுதும்போது அவருக்கு ஆடுகளம் படத்தைப் பற்றியும் தெரிந்திருக்கும் அல்லவா?

நன்றி!

வருண் said...

***சி.பி.செந்தில்குமார் said...

என்ன அதிசயம்? வழக்கமா என்னை தாக்கித்தானே பதிவு போடுவாங்க.. நீங்க பாராட்டி பதிவு போட்டு இருக்கீங்களே..
24 January 2011 6:44 PM ***

உங்களை ஏன் தாக்குறாங்க? பொறாமையா இருக்கலாம். பாவம் விட்டுருங்க அவங்களை! :)

வருண் said...

***நான் சினிமாவின் ரசிகன் மட்டுமே.. எந்த நடிகரின் ரசிகனும் இல்லை..நான் அதிக மதிப்பெண் குடுத்ததுக்கு காரணம் காமெடி + காதல் + குடும்பத்துடன் பார்க்கற படம்னா விகடன் மார்க் எப்பவும் கூடும்.***

சரியான விகடன் மார்க்லாம் ப்ரிடிக்ட் செய்றது கஷ்டம்தாங்க. அவங்க அவ்வளவு கண்சிஸ்டண்ட்டா எல்லாம் எழுதுவதில்லை.

வருண் said...

***ஆனந்தி.. said...

சிபி சார் ரொம்ப அனுபவ சாலி...அவர் predict பெரும்பாலும் சரியா இருக்கும்...அவர் ஏற்கனவே ஏதோ ஒரு பதிவில் சொல்லி இருந்தார் னு நினைக்கிறேன்...சென்னை மாதிரி இடங்களில் உள்ள தியேடேர் இல் பார்க்கும் ஆடியன்ஸ் ரெஸ்போன்ஸ் க்கும்...அவர் இருக்கும் ஊரில் இருந்து பார்க்கும் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் க்கும் வித்யாசம் வரலாம் னு...அதை வச்சு சிறுத்தை பத்தி சொல்லி இருக்கலாம்..இங்கே மதுரையில் சிறுத்தை கு டிக்கெட் சுத்தமா கிடைகள வருண்...ஆடுகளம் ஈஸி ஆ கிடைக்குது...

24 January 2011 8:26 PM***

வாங்க ஆனந்தி! நீங்க சொல்றது உண்மைதான் சிறுத்தை மதுரை மற்றும் சி செண்டரில் நல்லாப் போகுதாம்.

விகடன் மதிப்பெண்களுக்கும் பாக்ஸ் ஆஃபிஸ் ரிசல்ட்க்கும் சம்மந்தம் இல்லைங்க.

அந்தக்காலத்தில் சகலகலாவல்லவனும், எங்கேயோ கேட்ட குரலும் மோதிய போதும் விகடன் மதிப்பெண்கள் அதிகமாப் பெற்றது எ கே கு. பாக்ஸ் ஆஃபிஸ் வின்னர் ச க வ!

தங்கள் கருத்துக்கு நன்றிங்க :)

வருண் said...

***பன்னிக்குட்டி ராம்சாமி said...

@வருண் said...
@Philosophy Prabhakaran said...

நண்பர்களே, நான் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டீர்களோ அல்லது நான் சரியாக சொல்லவில்லையோ.

ஒவ்வொரு படத்தையும் பார்த்து விட்டுத்தான் விமர்சனம் எழுதியிருப்பார் சிபி.நான் சொல்ல வந்தது, ஒவ்வொன்றையும் பார்த்த உடனே அதற்கு விமர்சனம் எழுதி விடுவார் அல்லவா? அப்படி அல்லாமல் ’மூன்று படத்தையும்’ பார்த்த பின்பு மூன்றுக்கும் விமர்சனம் எழுதி இருந்தால், அவரது தரவரிசையும், மதிப்பெண்களும் இன்னும் துல்லியமாக இருந்திருக்கும்!
அதாவது காவலன் படத்திற்கு விமர்சனம் எழுதும்போது அவருக்கு ஆடுகளம் படத்தைப் பற்றியும் தெரிந்திருக்கும் அல்லவா?

நன்றி!***

திரு. ராம்சாமி!

உங்களைத் தவறாக புரிந்து கொண்ட்டமைக்கு வருந்துகிறேன்.
விளக்கத்திற்கு நன்றிங்க :)