Thursday, August 2, 2012

மரணம் வந்தால் தெரிந்துவிடும்!

மரணம் வந்தால் தெரிந்துவிடும்
நான் மனிதனென்று புரிந்துவிடும்
ஊர் சுமந்துபோகும்போது உனக்கும்கூட விளங்கிவிடும்!

என்பது ஒரு திரைப்படப்பாடலில் வரும் கண்ணதாசன் வரிகள் (இருவர் உள்ளம்). தன்னை மிருகமாக நினைக்கும் மனைவியிடம் தானும் மனிதந்தான் என்றும், அதை நீயும் நான் இறந்தபிறகு உணர்வாய் என்று ஒருவன் அழுதுகொண்டே சொல்லும் சூழல் அது.

மரணம் என்றாலே பயப்படும் உலகம் இது! நாம் வாழ்வது ஒரு 30,000 நாட்கள்தான். நாம் இறந்த பிறகும் இந்த உலகம் இதே போல் இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.

எனக்கு மரணம் வந்தால் என்னை நினைத்து யார் யார் கவலைப்படுவார்கள்? யார் யார் என்னை மிஸ் பண்ணுவார்கள்? என்பதை நான் ஓரளவு யூகம் செய்யலாம். ஆனால் அதை நம் மரணத்துக்கு அப்புறம் நம் கண்களால் பார்க்க முடியுமா? யாருக்குத்தெரியும்? இறந்த பிறகு என்ன? சொர்க்கமா? நரகமா? வெற்றிடமா? இல்லை ஒண்ணுமே தெரியாதா? இல்லை ஆவியாக வந்து பதிவு செய்து, பின்னூட்டமிடு வோமா? எனக்குத்தெரியாது! சரி, இதை இறந்த பிறகு அறிந்துகொள்வோம்!

ஆனால், இணையதள, கருத்துக்கள, வலையுலக “வாழ்வில்” நாம் “இறந்த” பிறகு என்ன நடக்கிறது என்பதை நம் கண்களாலே காணலாம்!

இந்த வலையுலக கருத்துக்கள உலகத்தில், பலர் உயிருடன் இருக்கும்போதே கருத்துக்கள வாழ்வில் “சாவதும்” உண்டு. நாம் பார்க்கும் ஒவ்வொரு ஐ டி யும் ஒவ்வொரு உணர்ச்சியுள்ள உயிர் போல்தான். ஒரு சிலருக்கு பல உயிர்கள் உண்டு. எதற்கு ஒரே ஆளுக்கு பல ஐடெண்டிட்டி என்கிறீர்களா? அது அவர்கள் இஷ்டம்! அதெல்லாம் நமக்கு எதற்கு? எனக்குத்தெரிய ஒரு சில பழைய நண்பர்கள் தோழிகள் இணையதள கருத்துக்கள வாழ்வில் பெரிய “ஸ்டார்”களாகவும், “சூப்பர் ஸ்டார்”களாகவும் நம்மோடு இருந்துவிட்டு உயிரோடு இருக்கும்போதே “இறந்து” இருக்கிறார்கள். திடீரென இந்த இணையதள வலையுலக வாழ்வில் இருந்து ஒரேயடியாக மறைந்துவிடுவார்கள்! பல ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்கள் அவர்களைப் பார்க்கவே முடியாது! சொந்தப் பிரச்சினையோ, என்ன துயரமோ, இல்லை உண்மையிலேயே மறைந்துவிட்டார்களா என்பது தெரியாது. இல்லை வேறு உலகம் தேடி போய்விடுவார்களோ தெரியவில்லை, திடீரென மறைந்துவிடுவார்கள்! இதுபோல கருத்துக்களங்களில் பார்க்கிற சில உயிர்கள் “இறப்பது” ரொம்ப சாதாரணம்தான்.

நீங்கள் ஆசைப்பட்டால், கொஞ்ச நாள் ஒரு notorious கேரக்டராக இருந்து. பலரிடம் விதண்டாவாதம் செய்து, பலர் மனதில் ஒரு நல்ல/கெட்ட இடம்பிடித்து, பிறகு “இறந்து” பார்க்கலாம்! அதாவது உங்கள் ஐடெண்ட்டியை நீங்கள் கம்ப்ளீட்டாக அழித்துவிட்டு வேடிக்கை பார்க்கலாம். அப்படி நீங்கள் “இறந்த” பிறகு உங்களை மிஸ் பண்ணுகிறவர்களைப் நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்!

* உங்கள் நண்பர்கள், தோழிகள் உங்களை மிஸ் பண்ணுவது பெரிய அதிசயமில்லை.

* அதே சமயத்தில் உங்களோடு அடிக்கடி கருத்து வேறுபாடுகொண்டு உங்களை வெறுத்தவர்களும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவார்கள்.

* இவர்கள் உங்கள் வருகைக்காக ஏங்குவார்கள்.

* உங்களோடு கார சாரமாக வாதம் செய்த விவாதங்கள் மலரும் நினைவுகளாக அவர்களிடம் இருக்கும். நீங்கள் இல்லாமல் எதிர்வாதமில்லாமல் ரொம்பவே அவர்களுக்கு “போர்” அடிக்கும்.

மனிதர்கள் யாருமே கெட்டவர்கள் இல்லை. பலர் சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்மை, நம் கருத்தை வெறுப்பதுபோல தோணும். ஆனால் உண்மையில் அவர்கள் நம் எதிரியோ, நம்மை வெறுப்பவர்களோ அல்ல. உங்கள் “மனிதத்தன்மையை” நீங்கள் இல்லாதபோது மிகவும் உணர்வார்கள், அவர்கள் உள் மனதில் உங்களிடம் உள்ள நல்லவற்றை பாராட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். ஒரு வித்தியாசமான பார்வையில் பெரியமனதுடன் கவனமாகப்பார்த்தால் இந்த உலகம் உண்மையிலேயே நல்ல உலகம்தான். நம் மக்கள் எல்லோருமே நல்லவர்கள்தான்!

------------

இது ஒரு தேவையான மீள்பதிவு!

அன்று  (Sunday 31 August 2008), இதே கருத்துக்கு  பின்னூட்டங்கள் எப்படி இருந்தன என்பதை  இங்கே சொடுக்கி படிக்கவும். இதில் பின்னூட்டங்கள் இட்டவர்களில் ஒரு சிலர் பதிவுலகில் "இறந்துட்டாங்க"னு கூட சொல்லலாம்! :(

மரணம் வந்தால் தெரிந்துவிடும்!

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படித்ததில்லை...

அருமையான கருத்துக்களுடன் சிறப்பான பகிர்வு...

தொடர வாழ்த்துக்கள்...
நன்றி...

Jayadev Das said...

\\ஒரு வித்தியாசமான பார்வையில் பெரியமனதுடன் கவனமாகப்பார்த்தால் இந்த உலகம் உண்மையிலேயே நல்ல உலகம்தான். நம் மக்கள் எல்லோருமே நல்லவர்கள்தான்!\\ What a positive approach you have got!!

Anonymous said...

எதுவும் நிரந்தரமல்ல சகோ. உலக வாழ்வும் இணைய வாழும் கிட்டத்தட்ட ஒன்னு தான். சில பேர் முகத்தோடு வருவாங்க சில பேர் முகத்திரை போட்டு வருவாங்க ( அபாயாவோ, புர்க்கவோ அல்ல ... ) சில இருப்பாங்க. சில பேர் இறப்பாங்க. சில பேர் இறந்து மறு ஜென்மம் எடுப்பாங்க ( நானும் அப்படித்தான் ) .. சில பேர் ஆவியா மட்டும் வந்து பதிவைப் படித்துவிட்டு ஒன்னும் சொல்லாமா போய்விடுவாங்க ... என்ன உலகில் நீங்கள் விட்டுச் செல்லும் தடயம் அடுத்த சந்ததிகளிடம் ஜீன்கள் மட்டுமே.. இணையத்தில் பதிவுகளும் கருத்துக்களும் ... !!!

பல பதிவுகள் கருத்துக்கள் ஆள் அரவமற்று மோகினிப் பிசாசுகளால் சூழப்பட்டு இருந்தத்தை பார்த்து வியந்து ( பயந்து ) உள்ளேன் ..

வருண் said...

திண்டுக்கல் தனபாலன் said...
***
படித்ததில்லை...

அருமையான கருத்துக்களுடன் சிறப்பான பகிர்வு...

தொடர வாழ்த்துக்கள்...
நன்றி...

2 August 2012 8:00 PM***

வாங்க, தனபாலன். :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

வருண் said...

*** Jayadev Das said...

\\ஒரு வித்தியாசமான பார்வையில் பெரியமனதுடன் கவனமாகப்பார்த்தால் இந்த உலகம் உண்மையிலேயே நல்ல உலகம்தான். நம் மக்கள் எல்லோருமே நல்லவர்கள்தான்!\\ What a positive approach you have got!!

2 August 2012 10:10 PM***

வாங்க, ஜெயவேல்: உலகைப் பற்றி இப்படி ஒரு பார்வையும் நிச்சயம் என்னிடம் இருக்கத்தான் செய்யுது, ஆனால் சண்டையும், சச்சரவும், விவாதங்களும் தமிழர்களின் பரம்பரை சொத்து இல்லையா? :)))

நாகரிகமாக, எல்லாத்துக்கும் தலையை ஆட்டிக்கிட்டுப் போனால், அடுத்தவ்ர்கள் கருத்தை எங்கே அறியிறது? :)))

வருண் said...

***இக்பால் செல்வன் said...

எதுவும் நிரந்தரமல்ல சகோ. உலக வாழ்வும் இணைய வாழும் கிட்டத்தட்ட ஒன்னு தான். சில பேர் முகத்தோடு வருவாங்க சில பேர் முகத்திரை போட்டு வருவாங்க ( அபாயாவோ, புர்க்கவோ அல்ல ... ) சில இருப்பாங்க. சில பேர் இறப்பாங்க. சில பேர் இறந்து மறு ஜென்மம் எடுப்பாங்க ( நானும் அப்படித்தான் ) .. சில பேர் ஆவியா மட்டும் வந்து பதிவைப் படித்துவிட்டு ஒன்னும் சொல்லாமா போய்விடுவாங்க ... என்ன உலகில் நீங்கள் விட்டுச் செல்லும் தடயம் அடுத்த சந்ததிகளிடம் ஜீன்கள் மட்டுமே.. இணையத்தில் பதிவுகளும் கருத்துக்களும் ... !!!

பல பதிவுகள் கருத்துக்கள் ஆள் அரவமற்று மோகினிப் பிசாசுகளால் சூழப்பட்டு இருந்தத்தை பார்த்து வியந்து ( பயந்து ) உள்ளேன் ..***

வாங்க, இக்பால் செல்வன்! உங்க கருத்துக்கு நன்றிங்க. :)

ஜோதிஜி said...

பட்டாபட்டி விவாதத்தை தவிர்த்து இருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது.

ஜோதிஜி said...

இந்த சமயத்தில் அதை வெளியிட்டுப்பது தேவையில்லாதது.

வருண் said...

Jothiji: நான் இந்தக் கோணத்திலும் யோசித்துப் பார்த்தேன். எனக்கென்னவோ தப்பா தோனலை. பதிவுலகில், ரெண்டுபேரு சண்டை போட்டால் அவங்க ரெண்டு பேரும் கெட்டவங்கனு ஒண்ணும் இல்லை. It is just part of that blog world lif, that's all, imho. இந்த ஒரு தருணத்தில்தான் நான் அவரோட உரையாடி இருக்கிறேன். மற்றபடி இதை மூடி மறைக்குமளவுக்கு எனக்கு எதுவும் தப்பாத் தோனலை. மன்னிச்சுக்கோங்க, if you feel that way.