Sunday, February 9, 2014

கிறுக்குப் பயபுள்ள!

பதிவர் அமரர் டோண்டு ராகவன் மறைந்து ஒரு ஆண்டாகிவிட்டது. ஓராண்டு நினைவு பதிவெல்லாம் அவர் நண்பர்கள், தோழிகள் மனசுலயே எழுதிக்கொண்டாங்களா என்னனு தெரியவில்லை.

பிராமணர்களை முழுநேரமும் விமர்சித்த தந்தைப் பெரியாரை, அவர் மறைவுக்குப் பிறகும்  பிராமணர்கள் ஒருபோதும் மன்னிக்கவே இல்லை! அதேபோல் ஒரு சின்ன பதிவுலக வட்டத்தில் பதிவர் அமரர் டோண்டு ராகவனுடைய மிகையான சாதிப் பற்றையும், அதை அவர் அபஸ்வரமாக சத்தமாக சொல்லிக்கொண்டு இருந்ததையும், பிராமணர் அல்லாதோர் யாருமே மறக்கவில்லை! இன்றும் அவரை பொதுவாக பிராமணர் அல்லாதவர்கள் யாரும் "நியாயமானவர்"  என்றோ, "மனிதாபிமானி" என்றோ  ஏற்றுக்கொள்ளவே இல்லை. அவருடைய "சாதிப்பற்று" அவருடைய எல்லா நற்பண்புகளையும் பிராமணர் அல்லாதவரிடம்  மறைத்துவிட்டது.

அவர் மறைந்தபிறகு, சாதியைத் தள்ளி வைத்துவிட்டு, அவரை ஒரு நல்ல மனிதாபமுள்ள மனிதராகப் பார்த்து,   அவர் இழப்பை ஒரு பிராமணப் பதிவர் விமர்சிக்க முன்வரும்போதுகூட பின்னூட்டங்களில்  திரு ராகவனைப் பலவாறு மற்றவர்கள் விமர்சித்தது மட்டுமல்லாமல், அந்தப் பதிவருக்கும் அந்தப்பதிவுக்கும் சாதிச்சாயம்தான் பூசினார்கள்!  அப்படிப் பூசப்பட்ட "சாதிச் சாயம்"  எங்கேயிருந்து வந்தது? என்று நீங்கள் யோசித்தால்..அந்த சாதி சாயத்தை டோண்டு ராகவனே மிகுந்த அளவில் கறைத்து வைத்து அவர்பதிவில் "அடித்ததில்" போக எஞ்சிஇருக்கும் மிச்சம்னுதான் சொல்லணும்.

போலி டோண்டு என்று ஒரு இரக்கமில்லாத, தரமற்ற பதிவர் உருவாகியதால்தான், இன்னைக்கு அமரர் டோண்டு ராகவனுக்கு கொஞ்சமாவது நல்ல பெயர் இந்தப் பதிவுலகில் உருவானதுனுகூட பலர் நம்புறாங்க. அப்படி ஒரு "போலி டோண்டு"னு ஒரு கேரக்டர் மட்டும்  உருவாகாமல் இருந்து, பல பதிவர்களை சித்ரவதை செய்யாமல் இருந்து  இருந்தால்? அமரர் ராகவனுக்கு இப்போது உள்ள ஒரு மரியாதைகூட இல்லாமல் போயிருக்கும்னு சில தியரிகள் சொல்லப்படுகிறது.

இந்த போலி டோண்டு விவகாரம்  சமயத்தில் எல்லாம் நான்  தமிழ் பதிவுலகில்  பிறக்கவே இல்லை. பின்னால் வந்த உண்மைத்தமிழன் பதிவிலிருந்துதான் பல, பழங்கதைகளை கிரஹிக்க முடிந்தது. அந்த போலி டோண்டு விவகாரம் நடந்தபோது எனக்கெல்லாம் இப்படி ஒரு உலகம் இருக்குனே தெரியாதுனுதான் சொல்லணும். செவனேனு இருந்த என்னை இங்கே கொண்டு வந்து மாட்டிவிட்டுவிட்டு நம்ம ப்ளாக்  அட்மினிஸ்ட்ரேட்டர் "பை பை" சொல்லிட்டு போயிட்டாரு! :) இப்போ புலிவாலைப் புடிச்சுக்கிட்டு நம்ம இங்கே கிறுக்குபபயப்புள்ளையா என்ன எழவையாவது எழுதிக்கிட்டு அலைய வேண்டியதாப் போச்சு!

அப்புறம் நம்ம அமரர் டோண்டு ராகவனை நான் ஒரு மனிதாபமுள்ள மனிதராகப் பார்த்த ஒரு பதிவு இங்கே!

 கண்ணீர் அஞ்சலி!

 உணர்ச்சி வசப்படுதல் தவறா?

 **********************************

நாம் வாழும் வாழ்க்கையை, இன்னொரு கோள்ல இல்லை துணைக்கோள்ல இருந்து பார்த்தால்? எப்படி இருக்கும்.

It is a small world..

இந்த பூமி ஒரு உருண்டையான பந்துபோல தோன்றும். உலகமே இவ்ளோ சின்னதாக இருந்தால் அதில் வாழும் மனிதர்கள் (நீங்க எல்லாரும்தான்! நாந்தான் இன்னொரு கோளில் இருக்கேனே! :)  வைரஸ்கள் பாக்டீரியாக்கள் போல தோணும். நம்ம கண்ணுக்கே தெரியாத சைஸ்ல இருப்பாங்க. ஆனால் உலகில் மக்கள் வாழ்ந்துகொண்டு இருக்காங்க.

ஒரு நொடியை எடுத்துக்கோங்க. அந்த நொடியில் ஒருத்தன் அப்போத்தான் வாழ்நாளிலேயே சந்தோஷமா இருக்கான். இன்னொருவன் வாழ்நாளிலேயே சோகமா இருக்கான். அந்த ஒரு கணதில் ஒருத்தன் சாகிறான். இன்னொருத்தன் பொறக்கிறான். ஒருத்தி அதே நொடியில் இன்பவெள்ளத்தின் உச்சம் ("ஆர்கசம்")  அடைகிறாள். இதுபோல் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொருவருக்கு வேறமாரி.

இதேபோல் ஒரு 200 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கெடையாது. சூரியன் சந்திரன் எல்லாம் நட்சத்திரம் துணைக்கோள்கள்னு தெரியாமல் அறியாமையில் வாழ்ந்து செத்து இருப்பார்கள். சரியா? கொஞ்சம் இருங்க! இன்னைக்கு உலகம் உருண்டைனு முட்டாள்களுக்குக் கூடத் தெரியும். அன்று? உலகம் உருண்டைனு அன்று வாழ்ந்த மிகப்பெரிய அறிவாளிக்குக் கூட தெரிந்து இருக்காது.

இதிலிருந்து என்ன தெரியுது. அறியாமை என்பது நம்மிடம் எப்போதுமே இருக்கு! இந்த 21ம் நூற்றாண்டில் உள்ள அறியாமை இன்னும் 100 ஆண்டுகளில் வாழ்பவர்களுக்குப் புரியும். நம்ம இன்று செய்கிற ஹை டெக் வேலையையெல்லாம் நக்கலாகப் பார்த்து  என்னமாரி முட்டாளா இருந்து இருக்காணுகனு (நம்மளத்தான் :) சொல்லுவாங்க. சரியா? நாம் அனைவருமே அறியாமையில்தான் வாழ்கிறோம். சரியா?

*****************************

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை!

நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு சிலவை புரியாது. முக்கியமாக கெமிஸ்ட்ரி, ஃபிசிக்ஸ், பயாலஜி. முக்கியக் காரணம் ந்ல்ல தரமான புத்தகங்கள் கெடையாது. அப்போ  என்னோட நண்பன் ஒருவன் இருந்தான், அவர் ரொம்ப புத்திசாலி. புத்திசாலி, ஆனால் அடுத்தவனுக்கு புரியலைனு அவனை தன்னைவிட மட்டமா நெனைக்க மாட்டான். அவனிடம் போயி தைரியமாக சந்தேகம் கேட்பேன். இது எனக்குப் புரியலைடா ரகுமான்? அதென்ன பாஸிடிவ் சார்ச்? அவன் சொல்லுவான் இப்போ ஒரு அணு இருக்கு, அது நியூட்ரல்! அதில் ப்ரோட்டான் பாஸிடிவ். எலக்ட்ரான் நெகடிவ். ரெண்டும் சேர்ந்து இருப்பதால் அது நியூட்ரல். சரியா? சரி. அதிலுள்ள எலெக்ட்ரானை எடுத்துட்டோம்னு வச்சுக்கோ, அது என்ன ஆகும்? பாஸிட்டிவா ஆகும் இல்லையா? ஆமா. அது ஒரு பாஸிடிவ் சார்ஜ் ஐயான் ஆயிடும் இல்லை? ஆமா. அதுமாரித்தான் இது.

அவன் சொல்லிக்கொடுக்கும்போது  புரிஞ்ச மாரி இருக்கும். ஆனால் அப்புறம் மறுபடியும் புரியாது. ஏன்னா அதுக்கப்புறம் உள்ள விசயம் அதைவிட கஷ்டமா இருக்கும். இப்படிப் புரியாமல் படிச்சு எதையோ எழுதி எப்படியோ பாஸாகி இந்த லெவெலுக்கு நான் வந்திருக்கேன். சரி, என் அறிவாளி நண்பன் என்ன ஆனான்னு கேளுங்க? என்னைவிட பலமடங்கு மேலே போயிருக்கணும் இல்லையா? அதுதானே நியாயம்? ஆனால் அவன் மாஸ்டர்ஸ்கூட படிக்கலை. அதோட நிறுத்திவிட்டு, ஏதோ பாங்க் எக்ஸாமோ, டி என் பி எஸியோ எழுதி நம்ம ஊரிலேயே குப்பை கொட்டுறான்னு கேள்வி. நான் பார்த்த வரைக்கும் அறிவாளிகள் எல்லாம் படிக்காமல் நிறுத்திவிடுவதும், என்னைப்போல்  மக்குகள் பின்னால எப்படியோ மேலே படித்து மேலே வருவதும் நடக்கத்தான் செய்யுது. சரியா? ஏன் இப்படி? என் நண்பன் ரகுமான்போல  அறிவாளிகள் என் நிலைமைக்கு வந்து இருந்தால் என்னைவிட பலமடங்கு அவங்களாலே காண்ட்ரிப்யூட் பண்ண முடிந்து இருக்குமே? உண்மைதான். ஆனால், இது யார் தப்பு?  அவன் அவன் தலையெழுத்து? சந்தர்ப்ப சூழ்நிலை. குடும்ப சூழலில் ஏற்படும் மாற்றங்கள். இப்படி பல காரணங்கள் இருக்கலாம். இல்லைனா அவர்களுக்கு "இண்டெரெஸ்ட்" குறைந்துபோய்விடுமா? என்னனு தெரியலை.

So, when I look back.. திறமை மிக்கவர்கள் மேலே வராமல் வீணாயிடுறாங்க. ஒண்ணும் தெரியாதவர்கள் படித்து மேலே வந்துடுறாங்க. இதுதான் வாழ்க்கை! சரியா?

இதேபோல் பதிவுலகிலும் சொல்லலாம். நல்லாப் பதிவு எழுதுறவங்க (பேரெல்லாம் வேணாமே? ) எல்லாம் சில வருடங்களில் ஏனோ காணோமாப் போயிட்டாங்க. நம்மளமாரி எடக்கு மடக்கா என்ன எழவையாவது பதிவுனு  எழுதுறவங்க எல்லாம் பலவருடமாக இன்னும் குப்பை கொட்டிக்கொண்டு இருக்காங்க. நான் உங்களைச் சொல்லலப்பா என்னைத்தான் சொல்றேன்.

So, life is not fair.. இதில் எதுவும் சந்தேகம் இருக்கா? நல்லவன் சாகிறான், கெட்டவன் வாழ்றான். திறமையுள்ளவன் மேலே வராமல் போயிடுறான். திறமை இல்லாதவன் மேலே வந்துடுறான். இது தான் வாழ்க்கைனு சொல்றதைவிட. இதுவும் வாழ்க்கைதான்னு சொல்லாம்.

சரி, அம்புட்டுத்தான்.. :)

1 comment:

'பரிவை' சே.குமார் said...

அமரர் டோண்டு அவர்களின் நினைவு நாளில் அவரை நினைக்கச் செய்தமைக்கு நன்றி...