கனிமொழி 2 ஜி ஸ்கேமில் அரெஸ்ட் ஆகி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட போது பார்க்க கஷ்டமாகத்த்தான் இருந்தது. இன்று சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயாவுக்கு நாலு வருடம் சிறை தண்டனை என்று நீதி வழங்கப்பட்டபோதும் பாவமாகத்தான் இருக்கிறது. அதென்னவென்று தெரியவில்லை ஒருவர் வீழ்ச்சியை என்றுமே ரசிக்க முடியவில்லை! ஆனால் சட்டம் பெண் என்றுகூட பார்க்காமல் பாயத்தான் செய்கிறது!
|
சொத்துக்குவிப்பு வழக்கு மற்றும் 2 ஜி ரெண்டுக்கும் பிள்ளையார்சுழி போட்டவர் ஐயாதான்!
காமெடியனா? வில்லனா??? இல்லைனா ஹீரோவா நம்ம சாமி?? |
|
அன்று கனிமொழி |
|
இன்று ஜெயலலிதா |
|
நீதி வழங்கிய john michael cunha |
9 comments:
சட்டம் தன் வேலையைச் செய்கிறது - அதற்கு
நாம் என்ன செய்ய முடியும்
தொடருங்கள்
எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.
வழக்கம் போல இதையும் வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருக்கீங்க.
சுப்ரமணிய சாமி , வர்ணாசிரம காலத்தின் தற்போதைய விசநீட்சி. இன்று ஈழமக்கள் படும் இன்னலுக்கெல்லாம் காரணகர்த்தா. என்னாலும் ஒருவரை இவ்வளவு வெறுக்கமுடியும் என எனக்கே புரிய வைத்தது இவரின் மற்றொரு அசாத்திய சாதனை. 2 ஜி, நிலக்கரி தீர்ப்புவரும் வரை இந்த தீருப்புக்கு கொண்டாடிக்கொள்ளவேண்டியது தானே சில சத்தியசீலர்கள்!!
\\\அதென்னவென்று தெரியவில்லை ஒருவர் வீழ்ச்சியை என்றுமே ரசிக்க முடியவில்லை! ஆனால் சட்டம் பெண் என்றுகூட பார்க்காமல் பாயத்தான் செய்கிறது!/// எவ்வளவு இளகிய உள்ளம் வருண் உங்களுக்கு u r really great வருண். நாம் கையில் எதுவும் இல்லியே.ம்..ம்..ம்
என்ன செய்வது.
வருண்,
வீழ்ச்சிக்கும், தவறு மற்றும் குற்றமிழைப்பதற்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளன !
மாட்டுத்தீவன வழக்கில் மாட்டிய லாலூ பெண் அல்ல !!! பெண் என்ற ஒரே காரணத்துக்காகவே பாவம் என்ற பெயரில் இவர்களை விமர்சனத்துக்கு அப்பால் நிறுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை !
தவறு செய்யாதவர்களுக்கு கூட அவர்கள் சார்ந்த துறையில் வீழ்ச்சி ஏற்படலாம். மக்கள் ஆட்சி செய்த காமராஜர் அடுத்துவந்த தேர்தலில் தோற்றதை வீழ்ச்சி என குறிப்பிடலாம். பாவப்படலாம் !
ஆனால் இவர்களின் நிலை வேறு. சட்டம் அனுமதிக்காத முறைகளை பின்பற்றியதால் நீதியின்முன் நிறுத்தபட்டவர்கள். இவர்களின் இந்த நிலைக்கு எதிர்கட்சி அரசியல் தந்திரம் போன்ற பல காரணங்கள் இருந்தாலும், இவர்களாலோ அல்லது இவர்கள் சார்ந்தவர்களாலோ ஏதோ தவறிழைக்கப்பட்டது உண்மைதானே ?
இவர்கள்மீது சாட்டப்பட்ட, நிருபிக்கப்பட்ட குற்றங்களில் இவர்களுக்கு நேரடி தொடர்பு இல்லாமலிருந்திருக்கலாம் அல்லது நெருங்கியவர்களை நம்பியதால் இந்த சூழலுக்குள் இழுக்கப்பட்டிருக்கலாம். அப்படி விவாதித்தாலும், ஒரு நாட்டின் உயர்ந்த பதவிகளை அடையும்போது தன்னை சுற்றியிருப்பவர்களை கண்காணிக்கும் தார்மீக பொறுப்பும் இவர்களையே சேரும் அல்லவா ? யார் என்ன திட்டம் தீட்டினாலும் இறுதி கையொப்பம் இவர்களுடையது அல்லவா ?
அதே நேரத்தில் இவர்களின் நிலையை கொண்டாடும் மற்றவர்களும் யோக்கியம் கிடையாது !!!இவர்களின் தவறுகள் சிலபல காரணங்களுக்காக நிருபிக்கப்பட்டுவிட்டன அதே சிலபல காரணங்களினால் அவர்கள் இன்னும் கோலோச்சுகிரார்கள் !
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !
சுப்ரமணிய சுவாமி...
" வர்ணாசிரம காலத்தின் தற்போதைய விசநீட்சி... " சகோதரி மைதிலி கஸ்த்தூரி ரெங்கனின் வரிகள் முற்ரிலும் உண்மை ! அரசியல் கோமாளி என்ற முகமூடிக்குள், அரசியல் சாசணத்தின் அத்தனை ஓட்டைகளையும் அறிந்துக்கொண்டு, மக்களை குழப்பி, சொந்த ஆதாயம் தேடும் ஆபத்தான அரசியல்வாதி !
நன்றி
சாமானியன்
@ யாழ்பாவணன்,
@ மைதிலி,
@ இனியா
@ சாம்
தங்கள் கருத்துரைகளுக்கு நன்றி!
இந்த விஷ்யத்தில் நமது இருவரின் மனம் ஒன்றாகவே சிந்திக்கிறது ஏனோ தெரியவில்லை எனக்கும் மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது
Hypocritical post. Why not shed tears for Poovazhagi who killed a small boy and packed the body inside a suit case? Why not shed tears for the Kolapur sisters who have been given death sentence for serial killings of children? Such examples abound. There, criminal offences like murder. Here, amassing wealth swindling people's money through intimation, coercion and abuse of power.
Jayalalitha can't be absolved on the grounds of being misled by evil people around here. She is a CM and an old day with a lot of experiences of cunning people. Remember she came from cine field notorious for such people. She did all consciously assuming the role of Queen who wont be questioned and who can keep other under control. Kanimozhi's case is similar. She has escaped now. She should be taught a lesson just like J. Don't talk about other similar corrupt rascals i.e males. Comparison cannot exonerate anyone.
//அதென்னவென்று தெரியவில்லை ஒருவர் வீழ்ச்சியை என்றுமே ரசிக்க முடியவில்லை//
அதேதான் வருண் ..முதலில் விஷயம் கேள்வி பட்டதும் ஹாஹா என்றிருந்தது அப்புறம் நேரம் போகப்போக பாவமாக இருக்கு .ஒருவேளை இதுதான் ஹியூமன் நேச்சர் போல !! யாருக்கும் கஷ்டம் வரக்கூடாது யாருக்கும் பிரச்சினை வரகூடாதின்னு யோசிக்கற குணம் நம் எல்லாருக்குமே அடிப்படையில் இருக்கு என்பதே மறுக்க முடியாத உண்மை .
....
காமெடியன் சாமி ..விஷ விருட்சம் ..பார்த்தீனியம் செடி :(
எதிரியை கூட மன்னிக்கலாம் ஆனால் துரோகிகள் .......
நல்ல பார்வை...
உப்பைத் தின்றவன்/ள் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும்...
இருப்பினும் ஒரு அசாதாரண துணிச்சல் மிக்க ஒரு அரசியல்வாதியை தமிழகம் இழந்திருக்கிறது என்பது வருத்தமான உண்மை...
மீண்டு வருவாரோ... இல்லையோ... தாங்கள் சொல்லியிருப்பது போல் அடுத்தவர் வீழ்ச்சியில் சந்தோஷம் கொள்ளும் மனநிலை இல்லாமல் இருப்பதே நன்று.... அது எனக்கும் உண்டு...
Post a Comment