உலகில் எதுவுமே "ஃப்ரீ" கெடையாது. இந்த விருதும்தான். விருதைக் கொடுத்த கையோடு எனக்கு இப்போ ஒரு வேலையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது நானும் ஒரு நல்ல பத்துப் பதிவர்களுக்கு இந்த விருதைக் கொடுக்கணும் என்று வேண்டப்பட்டுள்ளது. என்ன என்ன? நீயா? அவார்ட் கொடுக்கப் போறியா? சும்மா இருங்கப்பா!னு நீங்க மனதுக்குள்ளேயே பேசுவது புரிகிறது.
சரி, என்னைப்போல் ஆட்களுக்கெல்லாம் விருது கொடுக்கும் தகுதி இல்லைனு வச்சுக்கிட்டு ஒரு சாதாரண பதிவுலக வாசகனாக பத்து நல்ல பதிவர்களை செலக்ட் செய்து இவ்விருது பெற தகுதி பெற்றவர்கள் என்று உலகிற்கு பரிந்துரைக்கலாம்னு வச்சுக்குவோமா?
பரிந்துரை |
ஆயிரக்கணக்கான பதிவர்கள் எழுதும் தமிழ்ப் பதிவுலகில் ஒரு பத்துப் பேரை மட்டும் செலக்ட் செய்வது ரொம்ப கஷ்டம்தான். இருந்தாலும் முயல்கிறேன்.
நல்ல நண்பர்கள், பல ஆண்டுகளாக எழுதுபவர்கள், மிக உயர்தரத்தில் எழுதுவதால் பரிந்துரைக்க வேண்டிய அவசியமே இல்லாதவர்கள், "தகுதியே இல்லாத வருண் என்ன என்னைப் பரிந்துரைப்பது?" னு எண்ணும் சில பதிவர்கள் ..போன்றவர்களைத் தவிர்த்துவிட்டு ஒரு பத்துப் பதிவர்களை பரிந்துரைப்போமா?
நிற்க!
நான் பரித்துரைப்பவர்களுடன் எனக்கு கருத்து வேறுபாடுகளும் நிறையவே உண்டு! அவர்களுக்கு என் எழுத்துப் பிடிக்கணும்னும் அவசியமும் இல்லை! நமக்குப் பிடித்தவர்களுக்கு நம் எழுத்துப் பிடிக்கணும்னும் ஒண்ணும் இல்லையே?! ஒரு சாதாரண பதிவனாக நான் படித்த பதிவுகளில் இருந்து நான் அறிந்த இவர்களை பரிதுரைக்கிறேன். அவ்ளோதான்.
சரி தொடருங்கள்..
* ஜி எம் பாலசுப்பிரமணியன் அவர்கள் தனது 74 வயதில் பதிவுலகில் தன் கருத்துக்களை மிகுந்த ஈடுபாடுடன் பகிர்ந்து கொள்கிறார். என்ன வயதாக இருந்தாலும் ஒருவர் பதிவராக பதிவுலகில் நுழைந்துவிட்டால் அறியாத பலருடன் வாதம், விவாதம், கருத்து வேறுபாடெல்லாம் வராமல் இருக்காது. அப்படி இவர் தளத்திலும் இவர் கருத்துக்கு எதிர் கருத்து, விவாதம்னு வரத்தான் செய்யுது. அதையும் சமாளித்து மிகுந்த ஈடுபாடுடன் தொடர்ந்து அதிக நேரம் செலவழித்து எழுதுகிறார். இவரை இந்த விருதுக்குத் தகுதியானவர் என்று பரிந்துரைக்கிறேன்.
* சமீபத்தில் எழுத ஆரம்பித்த சாமானியன் சாம் அவர்கள்! ஃப்ரான்சில் இருந்து எழுதுகிறார். நல்ல எழுத்து. அனைத்தும் "அரசியல் கலக்காத" இதயத்தில் இருந்து வரும் கருத்துக்கள். நல்ல நடையுடன் அவர் அனுபவங்களை அழகாகப் பகிர்ந்து கொள்ளுகிறார்.
* உஷா அன்பரசு! ஏற்கனவே பல பத்திரிக்கைகளில் இவர் கதைகள் வெளிவந்துள்ளன. அதனால் நான் பரித்துரைத்து இவர் தரத்தை இன்னும் மேலே உயர்த்துவது கஷ்டம்தான். ஆறுமாதகாலமாக சொந்த வேலைகள் காரணமாகவோ என்னவோ காணாமல்ப்போன இவரை இப்படி ஒரு பரிந்துரை செய்து பதிவுலகை ஞாபகப்படுத்தலாமே என்று ஒரு சின்ன ஆசை..இவரின் சிறப்பு என்னனா, இவர் ஒரு ஆத்திக நம்பிக்கை உள்ளவர், இவர் கணவர், அப்படி இல்லை என்கிறார். அப்படி ஒரு சூழலில் இவர் இருப்பதால், இவர் கருத்துக்கள் நாத்திக ஆத்திக இருபக்கங்களையும் புரிந்து ஒரு "பாலண்ஸ்டா"க இருப்பது போலிருக்கும். இதெல்லாம் எல்லாராலும் முடியாது!
* சின்ன சின்ன சிதறல்கள் அகிலா! இவரைப் பதிவுலகில் ஒரு தலை சிறந்த பெண்ணியவாதினுகூட சொல்லலாம். ஆண்களை, அவர்களின் அருவருப்பான பகுதியையும் சேர்த்து நல்லாவே புரிந்து வைத்துள்ளார். புரிந்து வைத்தால் மட்டும் போதுமா? போதாது! அப்பப்போ ஆண்களின் முகத்திரையை கிழித்து, "உள்ளே இருக்கது யாருனு பாரு!" னு சொல்வது போலிருக்கும் அகிலாவின் எழுத்து. எத்தனை பேருக்கு வரும் இந்தத் துணிவு ?
* கெளசல்யா ராஜ்: பல ஆண்டுகளாக தன் மனதோடு மட்டும் தளத்தில் தன் கருத்துக்களை தைரியமாகவும், தெளிவாகவும் பகிர்ந்துகொள்ளுவார். பொதுவாக நம் கலாச்சாரத்தில் இருந்து வரும் பெண்கள் தனக்குத் தோன்றும் அருமையான கருத்துக்களை அளவுக்கு அதிகமாகவே "சென்சார்" செய்துவிட்டு, மேலோட்டமாக அக்கருத்தை சொல்லாமல் சொல்வதுதான்னு இயல்பு. இதனால் பெண்களின் உள்ளுணர்வுகள் பெண்களால் சொல்லப்படாமல், பெண்களைப் புரிந்து கொண்டதாக நம்பும், நடிக்கும் ஆண் மேதாவிகள்தான் "பெண் மனம்" "பெண்ணியம்" பற்றியெல்லாம் பேசுகிறார்கள். பல ஆண்கள் பெண்ணியம் பேசுவது "பெரிய மனுஷன்" என்கிற பட்டம் பெறுவதற்காகவும், இவர்கள் தரத்தை "உயர் தரமாக" ஆக்கிக்கொள்ளச் செய்யும் கீழ்த்தரமான அரசியல். இவர்கள் கருத்துக்கள் பல நேரங்களில் உள்ளப்பூர்வமாக வருவதில்லை. பெண்கள், பெண்ணியம் பேசும்போதுதான உள்ளப்பூர்வமான உண்மையான கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன என்பது என் எண்ணம்..ஒரு வேளை ஜீன்ஸ் போட்ட பெண்கள்தான் பெண்ணியம் எல்லாம் பேசவாங்கனு தவறான எண்ணத்தில் நீங்க இருந்தா திருமதி ராஜ் பதிவுகளைப் படிச்சுப் பாருங்க!
* முகுந்த் அம்மா: பொதுவாக அதிகமாகப் படித்தவர்கள் தன் படிப்புக்கு ஒத்தவர்களிடம் தான் தன் கருத்துக்களை முக்கியமாக ஆங்கிலத்தில் பரிமாறிக் கொள்வார்கள். "தமிழ் என் தாய்மொழி" என்று சொல்வதற்கு மட்டும்தான் தமிழ்!! பதிவர் முகுந்த் அம்மா இதில் விதிவிலக்கு. உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர். ஆகையால் இவர் பதிவில் சொல்லும் கருத்துக்கள் "அறிவியல் பூர்வமாக" இருக்கும். தன் அனுபவத்தையும், முக்கியமாக வாழ்க்கையில் நடந்த சில சோகங்களையும், இவர் நேரம் கிடைக்கும்போது பகிர்ந்து கொள்ளுகிறார். இவர் ஒரு தனித்துவமான பதிவர் என்பது என் தாழ்மையான கருத்து.
*விசுAWESOME: இவ்வளவு நாள் எங்கே இருந்தாருனு தெரியலை. நல்ல வேளை பதிவுலகம் பத்தி இவருக்கு யாரோ எடுத்துச் சொல்லி அழச்சுட்டு வந்தாங்க. அதோட தமிழ் மணத்திலும் இவரை சேர்த்துக்கொண்டார்கள்! பதிவெழுதுவது ஒரு கஷ்டமான வேலை! யாருக்கு? என்னைப்போல் சிந்திக்கத் தெரியாதவர்களுக்கு, மற்றும் தன் அனுபவத்தை பகிர்ந்துகொள்ளத் தெரியாதவர்களுக்குத்தான் அந்தப் பிரச்சினை! நிச்சயம் நம்ம விசு போன்ற பதிவர்களுக்கு அப்பிரச்சினை கெடையாது. அமெரிக்காவில் பல ஆண்டுகளாக வாழும் ஒரு சீனியர் தமிழர் இவர். தன்னுடைய எல்லாவிதமான அனுபவங்களையும் அவருடைய பாணியில் என்னமா எழுதுறாரு!!! இவருக்கு மட்டும் ஒரு அஞ்சாறு "versatile blogger award" விருது நானே கொடுக்கலாம்! :) Because he is the real "versatile blogger'! Literally he matches the qualifications too! :)
* நண்பர் கிரி, நான் பதிவுலகம் வருமுன்பே கிரி ப்ளாக் ல எழுதிக்கொண்டு இருக்கிறார். பதிவுலகில் கொடிகட்டிப் பறந்த பழைய பதிவர்கள் பலர் கடையை அடைத்துவிட்டு போயிட்டாங்க! நண்பர்கள் கிரி, கோவி போன்ற பதிவர்கள் இன்னும் பதிவுலகை மறக்காமல், காலவெள்ளத்தில் காணாமல்ப் போகாமல் இன்னும் தம்மால் முடிந்தவரை பதிவெழுதிக்கொண்டு இருக்காங்க. கிரி, தன்னை ஒரு ரஜினி ரசிகர்னு தயங்காமல் சொல்கிற பதிவர்களில் ஒருவர். சினிமா மட்டுமன்றி, கணிணி சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றியும். அதற்கு தீர்வு என்ன? என்றும் எழுதுவார். தன் வாழ்க்கை பற்றிய அனுபவம்னு பல விசயங்களை ஆடம்பரப்படுத்தாமல் தன்மையாகப் பகிர்ந்துகொள்ளுவார். கிரி ப்ளாக் "ப்ளாக்ஸ்பாட்" இருந்து மாறிய பிறகு இவர் தளத்தில் பின்னூட்டமிட சில பிரச்சினைகள் வருவதால் என்னால் பல கருத்துக்களை அவரிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை! இருந்தாலும், தொடர்கிறேன் என்று சொல்லாமல் நான் தொடரும் தளம் இவர் தளம். பதிவுலகில் இன்னும் நெறையா எழுதச் சொல்லி இவரை ஊக்குவிக்க, இவருக்கு இந்த விருதை நான் பரிந்துரைக்கிறேன்.
* காலம் தளத்தில் எழுதும் நண்பர், கோவி கண்ணன் இவரும், நான் எழுத ஆரம்பிப்பதற்கு பல ஆண்டுகள் முன்பே எழுதிக்கொண்டு இருக்கும் ஒரு மூத்த பதிவர். முகநூல் ட்விட்டர் என்று காலம் மாறிக்கொண்டு போனாலும், இவர் காலம் (இவர் தளம்) எப்போதுமே நிகழ்காலம்தான். பதிவுலகை இன்றும் என்றும் மறக்காமல் இன்னும் தொடர்ந்து பதிவுலகில் எழுதிக்கொண்டு இருக்கிறார். நான் எழுத ஆரம்பித்து நெறைய பதிவுகள் எழுதிக்கொண்டு இருந்த காலகட்டத்தில், நான் எழுதிய அதே கருத்தை சில ஆண்டுகளுக்கு முன்பே கோவி சொல்லியிருக்கிறார் என்று அவர் பதிவின் தொடுப்பைப் பின்னூட்டத்தில் கொடுப்பார். இதுபோல் என்னுடைய பல பதிவுகளில் உள்ள சாரம் எனக்கு முன்னாலேயே என் அலை வரிசையில் சிந்தித்து எழுதியவர் அவர் என்பதால் என்னுடைய "முன்னோடி"னு கூட "கோவி"யைச் சொல்லலாம். இருந்தபோதிலும் எங்களுக்குள் கருத்து வேறுபாடு, எதிர்ப் பதிவு தாக்குதல் போன்றவையும் நெறையவே இருந்தும் இருக்கிறது . தமிழ்மணம், சினிமாப் பகுதியை தமிழ்மணத்திலிருந்து தனியாகப் பிரிக்கும்போது, அதற்கு சரியான பெயர் சூட்ட "திரைமணம்" என்கிற பெயரை தேர்ந்தெடுத்து பரிந்துரைத்தவர் கோவி என்பது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. காலம் மாறிக்கொண்டு போனாலும் அவர் "காலம்" எப்பொழுதுமே மாறுவது இல்லை! கோவியையும் பதிவுலகில் இன்னும் நெறையா எழுதச் சொல்லி ஊக்குவிக்க, இவருக்கு இந்த விருதை நான் பரிந்துரைக்கிறேன்.
* கடைசியாக ஈழப் பதிவர் வியாசன், சமீபத்தில் பதிவுலகில் தமிழகத் தமிழர்களையும், இந்தியாவையும் நன்றாகவே விமர்சிக்கிறார் வியாசன். இவருடைய பதிவுகளால் ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத் தமிழர்களுக்கும் உள்ள புரிதல்கள், மற்றும் புரியாமை எந்த ஒரு நிலையில் இருக்கிறது என்பது தெளிவுபடுகிறது. எனக்குத் தெரிய தமிழ்நாட்டுத் தமிழர்களை இவ்வளவு உரிமையுடன் எந்த ஈழத்தமிழரும் தொடர்ந்து விமர்சிச்சதில்லை! அப்பெருமை நம்ம நாம் தமிழர் சீமான் அண்ணனின் உடன்பிறவா சகோதரன் வியாசனுக்கே சேரும். இவர் தொடர்ந்து தமிழகத் தமிழர்களின் கையாலாகாததனத்தை விமர்சிக்கணும்னு சொல்லி இவரை ஊக்குவிக்க, வியாசன் அண்ணாச்சிக்கு நான் இவ்விருதை பரிந்துரைக்கிறேன். :)
****************************
விருது கொடுக்கிறேன்னு கொடுத்துட்டு அதோட சேர்த்து இவ்வளவு வேலைகளையும் கொடுத்து இப்பதிவை எழுதச் செய்த மைதிலிக்கு நன்றி, நன்றி நன்றி! :)))
அப்புறம் இன்னொன்னு, நான் பரிந்துரை செய்த பதிவர்கள் யாரும் தொடர்ந்து இன்னும் பத்துப் பேரை பரிந்துரை செய்ய வேண்டியதில்லை என்கிற மகிழ்ச்சியான செய்தியை சொல்லி முடிக்கிறேன். ஏன் என்றால் ஏற்கனெவே 10 விருது, நூறாகி, நூறு ஆயிரமாகி, ஆயிரம் பத்தாயிரமாகி நிற்கிறது ..அதனால் இந்த விருதை திரும்பத் திரும்ப ஒரே பதிவருக்கு கொடுக்கும் சூழ்நிலையில் வந்து நிற்கிறது. இதை சரி செய்ய ஒரு சின்ன முயற்சிதான் இது. யான் பெற்ற இன்பம் இப்பதிவுலகம் ஏற்கனவே பெற்று விட்டது என்பதால்தான் இந்த பொது நலம்! :)
37 comments:
நன்றி வருண்... நன்றி.
விருதை பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். 48தான் ஆகுது. அதுக்குள்ள சீனியர் ஆக்கிடீங்களே.
இந்தியாவை - தமிழ்நாட்டை விட்டு வெளியேறி வந்த பின்னும், தமிழ் மேல் இருந்த ஒரு தலை காதல் போகவில்லை. பிரிவில் தானே பாசம் அதிகரிக்கும்.
இங்கே அமெரிக்காவில் வந்து, தமிழ் நண்பர்களுடன் என் தமிழ் ஆற்றலை எடுத்து சொல்லி பேசி வருகையில், திடீரென்று பேராசிரியர் பாப்பையாவின் படிமன்றதில் பேச ஒரு அழைப்பு வந்தது. அங்கே பேசிய பின் அந்த காணொளியை அருமை அண்ணன் பரதேசிக்கு (அல்ப்ரெட் - நியூ யார்க்) அனுப்ப அதை கண்ட அவர் நீ உடனடியாகே பதிவுலகம் வந்தே ஆக வேண்டும் என்று ஒரு அன்பு கட்டளை இட்டார். எதை பற்றி எழுதுவது என்று கேட்டேன். எதை பற்றியாவது எழுத்து என்றார்.
எழுத ஆரம்பித்தேன்.
பதிவுலக நண்பர்கள் திண்டுகல் தனபாலன்- பரதேசி - ரூபன்-கரந்தை வாத்தி-மதுரை தமிழன்-ராஜி-ஜெயசீலன்-தளிர் சுரேஷ்- மைதிலி-எழில்-யாழ்பாவணன் - தாங்கள் மற்றும் பலரின் ஆதரவினாலும் ஊக்கத்தினாலும் எழுதி கொண்டு இருக்கின்றேன்.
முதல் சில பதிவுகளை 5-10 பேர் தான் படிப்பார்கள். திடீரென்று ஓர் நாள், 750 பேர் படிக்க என்ன ஆனது என்று பார்க்கையில், நியூசிலாந்தை இமா அவர்கள், வலைசரத்தில் என்னை அறிமுகபடுத்தியது தெரிந்தது. அவர்களுக்கு என் முதல் நன்றி.
என் எழுத்து பிடித்து இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள், பிடிக்காவிடில் பரதேசியை திட்டி தள்ளுங்கள்.
உங்கள் விருதை பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து படியுங்கள்.
வருண் அவர்களே, தகல் எழுத்து தரம் சார்ந்தது. ரசித்து படிப்பேன்.
www.visuawesome.com
விருது பெற்றதுக்கு விருது வாங்கியோருக்கும் வாழ்த்துக்கள்.
****48தான் ஆகுது. அதுக்குள்ள சீனியர் ஆக்கிடீங்களே. ****
இப்போத்தான் பதிவெழுத ஆரம்பிச்சு இருக்கீங்க, அதனால "டீனேஜர்"னு நெனச்சுடக்கூடாது இல்லையா? :))
****இங்கே அமெரிக்காவில் வந்து, தமிழ் நண்பர்களுடன் என் தமிழ் ஆற்றலை எடுத்து சொல்லி பேசி வருகையில், திடீரென்று பேராசிரியர் பாப்பையாவின் படிமன்றதில் பேச ஒரு அழைப்பு வந்தது. அங்கே பேசிய பின் அந்த காணொளியை அருமை அண்ணன் பரதேசிக்கு (அல்ப்ரெட் - நியூ யார்க்) அனுப்ப அதை கண்ட அவர் நீ உடனடியாகே பதிவுலகம் வந்தே ஆக வேண்டும் என்று ஒரு அன்பு கட்டளை இட்டார். எதை பற்றி எழுதுவது என்று கேட்டேன். எதை பற்றியாவது எழுத்து என்றார்.
எழுத ஆரம்பித்தேன்.****
ஆல்பட்தான் உங்களை பிடிச்சு இழுத்து வந்தாரா?
***என் எழுத்து பிடித்து இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள், பிடிக்காவிடில் பரதேசியை திட்டி தள்ளுங்கள்.***
நீங்க "இவ்விடத்தில்" நன்றி மறப்பதில்லைனு தெளிவாக சொல்லீட்டீங்க!! :)))
***தனிமரம் said...
விருது பெற்றதுக்கு விருது வாங்கியோருக்கும் வாழ்த்துக்கள்.***
வாங்க தனிமரம்! நீங்க தமிழ்பதிவர்கள் என்கிற தோப்பில், தனித்துவமான மரம்னு இப்படி "பெயர்" சூட்டிக்கிட்டீங்களா? :)))
விருது பெற்ற உங்களுக்கும், உங்களிடம் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
cute:))) let the rest in evening:)
விருது பெற்றவர்களின் தகுதிகளைப் பட்டியலிட்ட விதம் மனதைக் கவர்ந்தது.
கருத்துகளை வெளிப்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்குரிய பதிவு.
வாழ்த்துக்கள் வருண், விருதைப் பெற்றதற்கும் மற்றவருக்குப் பரிந்துரைத்ததற்கும்!
****கோமதி அரசு said...
விருது பெற்ற உங்களுக்கும், உங்களிடம் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.***
வாங்க, கோமதியம்மா! தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. :)
***Mythily kasthuri rengan said...
cute:))) let the rest in evening:)***
நன்றி, மைதிலி! :)
***உலகளந்த நம்பி said...
விருது பெற்றவர்களின் தகுதிகளைப் பட்டியலிட்ட விதம் மனதைக் கவர்ந்தது.
கருத்துகளை வெளிப்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்குரிய பதிவு.***
நன்றி, நம்பி அவர்களே! :)
*** தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...
வாழ்த்துக்கள் வருண், விருதைப் பெற்றதற்கும் மற்றவருக்குப் பரிந்துரைத்ததற்கும்! ***
வாங்க, கிரேஸ்! நன்றி. :)
"versatile blogger award" பெற்ற தோழி மைதிலி, விருது வாங்குவதைவிட கொடுப்பதில்தான் இன்பம் அதிகம் என்பதை உணர்ந்து,**
தேங்க்ஸ்:)
**என்னைப்போல் ஆட்களுக்கெல்லாம் விருது கொடுக்கும் தகுதி இல்லைனு ** உங்க ப்ளட் க்ரூப் என்ன be நெகடிவ் வா?
* ஜி எம் பாலசுப்பிரமணியன் அவர்கள் தனது 74 வயதில் பதிவுலகில் தன் கருத்துக்களை மிகுந்த ஈடுபாடுடன் பகிர்ந்து கொள்கிறார்.**
எதோ ஒரு தயக்கம் இவரை இதுவரை படித்தத்தில்லை .இனி படிக்கிறேன்:)
* நண்பர் கிரி, நான் பதிவுலகம் வருமுன்பே கிரி ப்ளாக் ல எழுதிக்கொண்டு இருக்கிறார். பதிவுலகில் கொடிகட்டிப் பறந்த பழைய பதிவர்கள் பலர் கடையை அடைத்துவிட்டு போயிட்டாங்க! நண்பர்கள் கிரி, ***
!!!!!!!!!!!!!!!
விருது கொடுக்கிறேன்னு கொடுத்துட்டு அதோட சேர்த்து இவ்வளவு வேலைகளையும் கொடுத்து இப்பதிவை எழுதச் செய்த மைதிலிக்கு நன்றி, நன்றி நன்றி! :)))**
welcome பாஸ்!!
ஏற்கனவே பெற்று விட்டது என்பதால்தான் இந்த பொது நலம்! :)**
வாவ்!!சூப்பர்!!
பொதுவாக அதிகமாகப் படித்தவர்கள் தன் படிப்புக்கு ஒத்தவர்களிடம் தான் தன் கருத்துக்களை முக்கியமாக ஆங்கிலத்தில் பரிமாறிக் கொள்வார்கள்.**
இதில ஏதாவது உள் குத்து இருக்கா பாஸ்!
*** Mythily kasthuri rengan said...
பொதுவாக அதிகமாகப் படித்தவர்கள் தன் படிப்புக்கு ஒத்தவர்களிடம் தான் தன் கருத்துக்களை முக்கியமாக ஆங்கிலத்தில் பரிமாறிக் கொள்வார்கள்.**
இதில ஏதாவது உள் குத்து இருக்கா பாஸ்!***
அப்படி எதுவும் இல்லை, மைதிலி. :)
விருது பெற்ற உங்களுக்கும், உங்களிடம் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் வருண் சார்.
விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் வருண். உங்கள் கையால் விருது பெற்றவர்களில் சிலர் எனக்குப் புதிது. அவர்கள் பதிவுகளைப் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி வருண் சார்.
சிறந்த பதிவருக்கான சிறந்த விருது
வாழ்த்துகள்
விருது பெற்ற தங்களுக்கும் தங்களால் விருது பெற்ற நட்புக்களுக்கும் வாழ்த்துக்கள்....
வருண் மிக்க நன்றி.
எழுதுவதில் ஆர்வம் இருப்பதால் இன்று வரை சலிக்காமல் எழுதுகிறேன்.. எப்பவாது சலிப்பு வரும் ஆனால் அது ஓரிரு வாரத்தில் சரி ஆகிடும்.
தற்போது பலர் கூகுள்+ ஃபேஸ்புக், ட்விட்டர் என்று மாறிட்டாங்க.. இன்னும் கொஞ்ச வருடங்கள் சென்றால் Blog என்பது எதோ பெயரவில் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
எது எப்படியோ எனக்கு இது தான் பிடித்துள்ளது.. அதனால் குறைவாக எழுதினாலும் தொடர்ந்து எழுதுவேன் என்று நினைக்கிறேன்.
***அருணா செல்வம் said...
விருது பெற்ற உங்களுக்கும், உங்களிடம் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் வருண் சார்.***
வாங்க அருணா! நீங்க பெற்ற இன்பம் நானும் பெற்றுவிட்டேன் மைதிலியின் தயவால்! :)
***rajalakshmi paramasivam said...
விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் வருண். உங்கள் கையால் விருது பெற்றவர்களில் சிலர் எனக்குப் புதிது. அவர்கள் பதிவுகளைப் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி வருண் சார்.***
வாங்க ராஜி மேடம்! உங்களுக்கு இவ்விருது ஏற்கனவே கிடைத்துவிட்டதால உங்களுக்கு பதிலாக இன்னொருவரை பரிந்துரை செய்துள்ளேன்!
***உங்கள் கையால் விருது பெற்றவர்களில் சிலர் எனக்குப் புதிது. அவர்கள் பதிவுகளைப் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி வருண் சார்.***
கட்டாயம் படிச்சுப் பாருங்க! :) என்னைவிட பலமடங்கு நல்லாவே தரமாக எழுதுவாங்க நான் விருதுக்காகப் பரிந்துரைத்தவர்கள்! :)
***Yarlpavanan Kasirajalingam said...
சிறந்த பதிவருக்கான சிறந்த விருது
வாழ்த்துகள்**
வாங்க சார். உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. :)
***சே. குமார் said...
விருது பெற்ற தங்களுக்கும் தங்களால் விருது பெற்ற நட்புக்களுக்கும் வாழ்த்துக்கள்....***
வாங்க, குமார். நன்றிங்க, குமார்! :)
***கிரி said...
வருண் மிக்க நன்றி.
எழுதுவதில் ஆர்வம் இருப்பதால் இன்று வரை சலிக்காமல் எழுதுகிறேன்.. எப்பவாது சலிப்பு வரும் ஆனால் அது ஓரிரு வாரத்தில் சரி ஆகிடும்.
தற்போது பலர் கூகுள்+ ஃபேஸ்புக், ட்விட்டர் என்று மாறிட்டாங்க.. இன்னும் கொஞ்ச வருடங்கள் சென்றால் Blog என்பது எதோ பெயரவில் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
எது எப்படியோ எனக்கு இது தான் பிடித்துள்ளது.. அதனால் குறைவாக எழுதினாலும் தொடர்ந்து எழுதுவேன் என்று நினைக்கிறேன்.***
வாங்க கிரி. :) தொடர்ந்து எழுதுங்க கிரி. நான் உங்க ஒவ்வொரு பதிவையும் வாசிக்கிறேன்னு ம்னதில் வைத்து "எனக்காக" எழுதுங்க! :)
வாவ் !!! இவ்ளோ அருமையாக ஒவ்வொரு பதிவரையும் அவர்களின் தனித்துவமான குணங்களோடு விவரிச்சிருக்கீங்க வருண் :)
மிக அருமையான புரிதல் you are a keen observer!!
உங்களுக்கும் உங்களிடம் விருதை பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ..
சௌக்கியமா வருண்
இப்போதுதான் தோழி ஏஞ்சல் விருது பற்றி மெசேஜ் பண்ணாங்க. ஆச்சர்யமாக இருந்தது, என்னை நினைவு வைத்திருப்பதற்கும், விருதுக்கு தேர்ந்தெடுத்தற்கும் !!
வேலைகளின் பின்னே ஓடிக் கொண்டிருந்தாலும் ஒன்னு இரண்டு பதிவு மட்டும் எழுதும் என்னை தொடர்ந்து எழுதவைப்பதை போன்று இருக்கிறது உங்களின் இந்த விருது.
விருது பெற்ற மற்றவர்களின் தளங்களை சென்று பார்த்தேன், மிக அருமையான எழுத்துக்கள்...அவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுகள் + வாழ்த்துகள் !!
உங்களுக்கு என் அன்பான நன்றிகள் வருண் !
//வாங்க ராஜி மேடம்! உங்களுக்கு இவ்விருது ஏற்கனவே கிடைத்துவிட்டதால உங்களுக்கு பதிலாக இன்னொருவரை பரிந்துரை செய்துள்ளேன்!//
படிக்கும் போது மிக்க மகிழ்ச்சியடைந்தேன். உங்களிடமிருந்து விருதை வாங்கியிருந்தால் ஏற்படும் மகிழ்ச்சியை விடவும், உங்களுக்குக் கொடுக்க இருந்தேன் என்று நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது மகிழ்ச்சி இரு மடங்கு அதிகமானது.
நன்றி வருண் சார்.
***Angelin said...
வாவ் !!! இவ்ளோ அருமையாக ஒவ்வொரு பதிவரையும் அவர்களின் தனித்துவமான குணங்களோடு விவரிச்சிருக்கீங்க வருண் :)
மிக அருமையான புரிதல் you are a keen observer!!
உங்களுக்கும் உங்களிடம் விருதை பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ..***
கெளசல்யா ராஜ் அவர்களுக்கு இப்பதிவைப்பற்றி "செய்தி பகிர்ந்ததற்கும்" சேர்த்து பல நன்றிகள் உங்களுக்கு, ஏஞ்சலின்!:)
***Kousalya raj said...
சௌக்கியமா வருண்
இப்போதுதான் தோழி ஏஞ்சல் விருது பற்றி மெசேஜ் பண்ணாங்க. ஆச்சர்யமாக இருந்தது, என்னை நினைவு வைத்திருப்பதற்கும், விருதுக்கு தேர்ந்தெடுத்தற்கும் !!
வேலைகளின் பின்னே ஓடிக் கொண்டிருந்தாலும் ஒன்னு இரண்டு பதிவு மட்டும் எழுதும் என்னை தொடர்ந்து எழுதவைப்பதை போன்று இருக்கிறது உங்களின் இந்த விருது.
விருது பெற்ற மற்றவர்களின் தளங்களை சென்று பார்த்தேன், மிக அருமையான எழுத்துக்கள்...அவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுகள் + வாழ்த்துகள் !!
உங்களுக்கு என் அன்பான நன்றிகள் வருண் !***
Pleasure is mine, Mrs. Raj! :)
***rajalakshmi paramasivam said...
//வாங்க ராஜி மேடம்! உங்களுக்கு இவ்விருது ஏற்கனவே கிடைத்துவிட்டதால உங்களுக்கு பதிலாக இன்னொருவரை பரிந்துரை செய்துள்ளேன்!//
படிக்கும் போது மிக்க மகிழ்ச்சியடைந்தேன். உங்களிடமிருந்து விருதை வாங்கியிருந்தால் ஏற்படும் மகிழ்ச்சியை விடவும், உங்களுக்குக் கொடுக்க இருந்தேன் என்று நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது மகிழ்ச்சி இரு மடங்கு அதிகமானது.
நன்றி வருண் சார்.****
"சொன்னால்த்தானே உங்களுக்குத் தெரியும்?" என்ற சிந்தனையின் விளைவால் இதை பகிர்ந்து கொண்டேன்.
ஒரே புத்தகத்தையே பரிசாக இன்னொரு பிரதி உங்களுக்கு கொடுக்க வேணாம்னுதான்..:)
Hopefully, there will be another time to talk about you!
Take it easy, Raji madam!
ஒவ்வொருவரையும் எதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்பதற்கான காரணங்கள் அத்தனைக் கச்சிதமாக இருக்கின்றன. பொதுவாக உங்கள் தளங்களைப் படிப்பவர்களுக்கும், உங்கள் பின்னூட்டச் சண்டைகளைத் தொடர்பவர்களுக்கும் 'இந்த வருண்' நிச்சயம் ஒரு புதியவராகத்தான் இருப்பார். உண்மையில் சமீப காலமாக உங்கள் பதிவுகள் மூலம் உங்களைப் பற்றிய இமேஜ் கூடிக்கொண்டே போகிறது. மகிழ்ச்சி.
வாங்க அமுதவன் சார். உங்க கருத்துக்கும், கணிப்பிற்கும் நன்றி :)
விருது பெற்றமைக்கும் கொடுத்தமைக்கும் வாழ்த்துக்கள் வருண் மேலும் என் அம்மு மைதிலியின் கையால் பெற்றமைக்கும் மகிழ்கிறேன்.மேலும் பல பல விருதுகள் பெறவும் வாழ்த்துகிறேன். விருது பெற்றவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .....!
விருதிற்கு நன்றி வருண் அவர்களே..இதனை போன்ற ஊக்குவிப்புகள் மேலும் நல்ல பதிவுகளை எழுத தூண்டும் என்பது திண்ணம்.
நன்றி
***Iniya said...
விருது பெற்றமைக்கும் கொடுத்தமைக்கும் வாழ்த்துக்கள் வருண் மேலும் என் அம்மு மைதிலியின் கையால் பெற்றமைக்கும் மகிழ்கிறேன்.மேலும் பல பல விருதுகள் பெறவும் வாழ்த்துகிறேன். விருது பெற்றவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .....!***
உங்க அம்மு மைதிலிதான் ஏதோ பெரியமனசு பண்ணி அத்தகுதியை எனக்கும் வழங்கி இருக்கார்! :) நீங்கதான் என் பேரை உங்க அம்முவிடம் "ரெக்கம்மெண்ட்" பண்ணியதாகக் கேள்வி ! :))) சரிதானே, இனியா? :)))
***முகுந்த் அம்மா said...
விருதிற்கு நன்றி வருண் அவர்களே..இதனை போன்ற ஊக்குவிப்புகள் மேலும் நல்ல பதிவுகளை எழுத தூண்டும் என்பது திண்ணம்.
நன்றி***
வாங்க முகுந்த் அம்மா. :) உங்களைப் பற்றி நாலுவரி எழுதியதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி கிடைத்தது என்பதும் உண்மை. :)
Post a Comment