பொதுவாக இதுபோல் பதிவர்களைப் பத்தி பதிவுகள் எழுதுவது தனிநபர் தாக்குதல்ப் பதிவு அல்லது மற்றும் அநாகரிகமான பதிவு என்று வகைப்படுத்தப்படும். இருந்தாலும் உங்களை நீங்களே திட்டிக்கலாம்! அதை யாரு கேக்க முடியும்? என்ன? அப்படியும் சொல்லிவிட முடியாதா? உங்க மேலே கொஞ்சமாவது மதிப்பு, மரியாதை, நட்பு பாராட்டும் ஒரு சிலருக்கு உங்களை நீங்களே விமர்சிக்கிறதும் பிடிக்காது! ஆக, உங்களுக்கு உங்களைத்திட்டுவதற்கான அந்தச் சுதந்திரமும் முழுமையாகக் கெடையாது என்பதே உண்மை.
எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்.விசயத்துக்கு வருவோம்.
பதிவுலகில் நாம் எல்லோருமே புதியவராக வருகிறோம். புதுப்படம் ரிலீஸ் ஆவது போலதான். புதிதாக வந்த காதலிபோலே கொஞ்ச நாள் நல்லாவே ஓடும். கொஞ்ச நாட்கள்தான் அப்படி. நாள் ஆக ஆக உங்கள் பதிவுகளை வைத்து உங்கள் மேல் ஒரு பல முத்திரைகள் குத்தப்படுகிறது. இதைத் தவிர்ப்பது கடினம். அதாவது இவர்னா இப்படித்தான் எழுதுவாரு என்றாகிவிடும். அதாவது உங்களுடைய விருப்பு, வெறுப்பு, ரசிப்புத்தன்மை எல்லாம் உங்கள் பதிவுகள், பின்னூட்டங்கள், விவாதங்கள் மூலமாக வெளியில் வந்தவுடன் நீங்க ஒரு முத்திரை குத்தப் பட்ட பதிவர்!
அதுக்கப்புறம் என்ன ஆகும்?
எனக்குத் தெரிய பலருக்கு ஒரு சில பதிவர்களின் பதிவுகளைப் பார்த்தாலே ஆகாது. இதுதான் இயற்கை! மனித இயல்பு!
சுய அறைதல்...
வேற யாரையும் எதுக்கு இழுக்க? உதாரணத்துக்கு பலருக்கு வருண் என்கிற பதிவரின் பதிவுகளைப் பார்த்தாலே பிடிக்காது! வந்துட்டான்டா நாதாரி! என்னதான்டா இவன் சொல்றான்? னு மறக்காமல், கட்டுப்படுத்த முடியாமல் ஒரு எட்டு வந்து பதிவை வாசிச்சுப்புட்டு, வழக்கம்போல திட்டிட்டுப் போயிடுவாங்க. திட்டுவது பின்னூட்டத்தில் இல்லை! மனசுக் குள்ளேயேதான்!
ஆக ஒருவருக்கு முத்திரைகள் குத்தப்பட்ட பிறகு வருணுக்கு மட்டுமல்ல பொதுவாக உங்களுக்குக்கூட இந்நிலைதான் சாதாரணமாக பதிவுலகில் நடக்கிறது.
என்ன மாதிரி முத்திரைகள்??
* வருண் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்!
ஆத்திகர்கள் அதிகமாக உள்ள இவ்வுலகில் பலருக்கு "வருண்" ரொம்ப ரொம்ப கெட்டவன்"! ஆக, வருணைப் பிடிக்காத, வருணை வெறுக்கும் இந்த அப்பாவிகள் மேல் வருண் கோபங்கொள்ளலாமா? இங்கேதான் கவனமாக இருக்கணும். இதில் ஆத்திகர்களை குறை சொல்லவே முடியாது. அவர்கள் சிந்தனைகளை, நம்பிக்கையை வருண் மதிக்காமல் இருப்பது வருணின் தவறுனுகூட சொல்லலாம்!
* வருண் "அநாகரிகப் பின்னூட்டமிடுபவதில்" பேர் போகாதவன்!
பல தளங்களில் பலருக்கும் அவர்கள் தளங்களில் பலவிதமான தர்ம சங்கடங்களை உருவாக்கி இருக்கிறான்.
"சனியன் பிடிச்சவன் வந்துட்டான்! இவனை என்ன பண்ணுறது?" எதுக்கு இங்கே வர்ரான்னு தெரியலை!" னு துஷ்டனைக் கண்டால் தூர விலகுனு ஒரு சிலர் ஒதுங்கிப்போவதை வருணால் உணரமுடியாமல் இல்லை!
* வருண் பார்ப்பனர்களை இஷ்டத்துக்கு விமர்சிப்பவன்! அதுவும் இந்த நாகரீக உலகில், எந்தவிதமான ஈவு இரக்கமே இல்லாமல், வரம்பு மீறி விமர்சிப்பவன்!
பாதிக்கப் பட்ட, பாதிக்கப் படுகிற அப்பாவிப் பார்ப்பனர்கள் பலர், "பாவி இவன் நாசமாப் போகணும்"னு மனதாறத் திட்டலாம். பகவானிடம போயி், "இந்தச் சனியன் ஒழிய ஏதாவது செய்"னு தட்சணை வைத்து வேண்டிக்கலாம். ஏன் பூஜைகள், யாகங்கள்கூட செய்யலாம். மறுபடியும் அவர்கள் மேல் தப்பில்லை. பாதிக்கப்பட்டவர்கள் அப்படித்தான் தன்னை வறுத்தியவனை சபிப்பார்கள். இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயத்தில் அப்பாவிகளை திருப்திப்படுத்த "இல்லாத ஒரு பகவானை" வருண் வணங்கவோ வழிபடவோ முடியாது!
* வருண் தனிநபர் தாக்குதல் பதிவுகள் எழுதுபவன்!
கூச்சமே இல்லாமல் பல முறை, பல பதிவர்களை பலவாறு விமர்சிச்சுப் பதிவு எழுதி இருக்கான். இதனால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் நட்பு வட்டாரம், அவர்கள் நலம் விரும்பிகள் எல்லாரும் கூடி ஒப்பாரி வைத்துவிட்டு சபித்துவிட்டுத்தான் போவார்கள். இப்படி பாதிக்கப்பட்ட பலருக்கும் வருண் பேரைக் கேட்டாலே வெறுப்பு, பழிவாங்கும் உணர்வு உண்டாவது இயற்கை. அவர்களும் வருணை மதிக்கணும், உயர்வாக நினைக்கணும் என்று வருண் நினைத்தால் வருண், வருணாக இருக்க முடியாது!
இதுபோன்ற முத்திரைகள்!
நமது கருத்தை ஆணித்தனமாக சொல்லும்போது, பலர் வெறுப்புக்கு ஆளாவது இயல்பு என்பதை ஆறறிவு உள்ள வருண் உணர்ந்து வைத்து இருக்கணும்.
ஆக, இப்படி பல குற்றச்சாட்டு முத்திரைகள் குத்தப்பட்ட ஒரு சாதாரண பதிவன் வருண்! ஆனால் நீங்க எல்லாருக்கும் எப்போதுமே நல்லவராக இருந்தால் இந்தப்
பிரிச்சினை இல்லை! அப்படி நீங்க நல்லவராக உங்க வீக்னெஸை, விருப்பு
வெறுப்பை வெளியே காட்டாமல் இருந்தாலும் நீங்கள் ஒரு மாதிரியான "போர்
கேரக்டர்" என்கிற முத்திரை குத்தப்படும்.
நிற்க!
* ஒரு பதிவரை விரும்புவது, வெறுப்பது, சகித்துக் கொள்வதெல்லாம் தனிப்பட்டவாசகர்/பதிவர் தரம், எதிர்பார்ப்பு, நம்பிக்கை இவைகளைப் பொறுத்தது.
* ஒருவரை அல்லது அவர் பதிவுகள ரசிப்பதோ வெறுப்பதோ தனிப்பட்டவர்களின் உரிமை, சுதந்திரம்!
* அவரவர்
மனதுக்கு அவர் அவரே ராஜா/ராணி. அவர்கள் உங்களை வெறுப்பதை நீங்க
என்ன, யாருமே கட்டுப் படுத்த முடியாது. உங்களால் எல்லாரையும் திருப்திப்
படுத்தவும் முடியாது!
ஆக பதிவுலகில் எப்படி குப்பை கொட்டுவது??
பதிவுலகில் நீண்ட நாட்கள் வாழ ஆசைப்பட்டால், பதிவர்கள் மத்தியிலே நாள் ஆக ஆக உங்கள்மேல் நிலவும்
வெறுப்பையும் சகித்துக்கொண்டு, உதறித் தள்ளிவிட்டுத்தான் போகணும். அப்படி
உதறித்தள்ளிவிட்டுப் போக நீங்க கற்றுக்கொள்ளவில்லையென்றால் பதிவுலகம்
உங்களுக்கு நரகமாகிவிடும்!
பதிவுலகில் சஞ்சாரம் செய்யும் ஒருவர் நாட்கள் கடக்கக் கடக்க "புகழ்" சம்பாரிக்கிறாரோ இல்லையோ நெறையவே "இகழ்" சம்பாரிப்பதைத் தவிர்க்க முடியாது! இங்கே நான் சொன்னதெல்லாம் உண்மை! உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை!
Now Relax please!
42 comments:
??????????????????????
உண்மை தான். வலைபதிவிலேயே எனக்கு பிடித்த முக்கியமான விஷயம் நம் கருத்தை யார் தடையும் இன்றி நேராக வாசகர்களிடம் கொண்டு செல்வது தான். இது மற்ற எந்த இடத்திலும் நடக்காத காரியம். சில பதிவுகள் எழுதி முடித்தவுடன் நமக்கு ஒரு முத்திரை குதி விடுவார்கள்.
அய்யா வணக்கம்,
பல நேரங்களில் எதிர்மறையான கருத்துகளை, “நயத்தக்க நாகரிகம் கருதி“ மௌனமயாக் கடந்து போனபின், உங்கள் பின்னூட்டத்தில் அக்குரல் ஒலிக்கக் கேட்டு வியந்திருக்கிறேன். உங்கள் தளம் எனக்கு அறிமுகம் ஆனதே உங்களின் பின்னூட்டம் வழியே தான்!
ஆனாலும் கூட உங்கள் கடுமை கண்டு உங்கள் பிம்பத்தில், எனக்கிருக்கும் அச்ச உணர்ச்சியால், பல பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடத் தயங்கியே கடந்திருந்திருக்கிறேன்.
என் தெளிவும் வாசிப்பின் போதாமையும் அறிந்ததால் நேர்ந்த தயக்கம் தான் அது!
// பதிவுலகில் நீண்ட நாட்கள் வாழ ஆசைப்பட்டால், பதிவர்கள் மத்தியிலே நாள் ஆக ஆக உங்கள்மேல் நிலவும் வெறுப்பையும் சகித்துக்கொண்டு, உதறித் தள்ளிவிட்டுத்தான் போகணும். அப்படி உதறித்தள்ளிவிட்டுப் போக நீங்க கற்றுக்கொள்ளவில்லையென்றால் பதிவுலகம் உங்களுக்கு நரகமாகிவிடும்!
பதிவுலகில் சஞ்சாரம் செய்யும் ஒருவர் நாட்கள் கடக்கக் கடக்க "புகழ்" சம்பாரிக்கிறாரோ இல்லையோ நெறையவே "இகழ்" சம்பாரிப்பதைத் தவிர்க்க முடியாது! //
பதிவுலகம் பற்றிப் போதுமான அனுபவம் எனக்கில்லை.
கூடவே என்னை வெறுக்கும் அந்தச் சூழலிலை உதறிக் கடக்கும் மனதிடமும் எனக்கில்லை.
உங்கள் கருத்துப்படிப்பார்த்தால் பதிவுலகில் என் நாட்கள் எண்ணப்படுவதாகவே தோன்றுகிறது.
புகழ் பற்றிக் கவலைப்பட்டதில்லை.
ஒரு வேளை தவறெதும் செய்தால் அதை ஒத்துக் கொள்வதிலும் எனக்குத் தயக்கமில்லை.
இகழப்படும் சூழலைத் தாங்குவது கஷ்டம் தான்!
மொத்தத்தில் பயமாய்த்தான் இருக்கிறது!
உங்கள் சுயஅறைதலின் உண்மை சுடுகிறது.
நன்றி!!!
நான் அந்த மாதிரி இல்லை..
எல்லாவற்றையும் சமாளிப்பதால்தான் உங்களால்தான் ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து வலையுலகில் இயங்குகிறது. உங்களைப் போன்றவர்கள் இல்லையென்றால் பதிவுலகம் போரடிக்கத் தான் செய்யும்.
பதிவை சட்டுன்னு முடிச்ச மாதிரி இருக்கே ...
//உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை!//
So ....?
என்ன, திடீர் புலம்பல்? பதிவுகள் அவரவர்களுக்குத் திருப்தியளித்தால் போதாதோ?
நிதர்சனமான உண்மைகளை புட்டு வைத்துவிட்டீர்கள்! வளர வளர புகழுக்கு பதில் இகழ்தான் அதிகம்! உண்மைதான்! நன்றி!
பதிவின் கடைசியில் உள்ள படத்திலுள்ள பெண் யாருங்க?
அட கடவுளே என்ன சொல்ல நான் ..... அம்மாடியோ....
**** துளசி கோபால் said...
??????????????????????***
வாங்க டீச்சர்! :-))))
***விசுAWESOME said...
உண்மை தான். வலைபதிவிலேயே எனக்கு பிடித்த முக்கியமான விஷயம் நம் கருத்தை யார் தடையும் இன்றி நேராக வாசகர்களிடம் கொண்டு செல்வது தான். இது மற்ற எந்த இடத்திலும் நடக்காத காரியம். ***
வாங்க விசு! :)
நம் வலைபதிவை யாராவது "ஹாக்" பண்ணினால்தான் நமக்கு நம் வலைதளத்தில் எத்தனை சுதந்திரம் இருந்தது என்பது புரியும்! :)
****ஊமைக்கனவுகள். said...
அய்யா வணக்கம்,
பல நேரங்களில் எதிர்மறையான கருத்துகளை, “நயத்தக்க நாகரிகம் கருதி“ மௌனமயாக் கடந்து போனபின், உங்கள் பின்னூட்டத்தில் அக்குரல் ஒலிக்கக் கேட்டு வியந்திருக்கிறேன். உங்கள் தளம் எனக்கு அறிமுகம் ஆனதே உங்களின் பின்னூட்டம் வழியே தான்!
ஆனாலும் கூட உங்கள் கடுமை கண்டு உங்கள் பிம்பத்தில், எனக்கிருக்கும் அச்ச உணர்ச்சியால், பல பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடத் தயங்கியே கடந்திருந்திருக்கிறேன்.
என் தெளிவும் வாசிப்பின் போதாமையும் அறிந்ததால் நேர்ந்த தயக்கம் தான் அது!
// பதிவுலகில் நீண்ட நாட்கள் வாழ ஆசைப்பட்டால், பதிவர்கள் மத்தியிலே நாள் ஆக ஆக உங்கள்மேல் நிலவும் வெறுப்பையும் சகித்துக்கொண்டு, உதறித் தள்ளிவிட்டுத்தான் போகணும். அப்படி உதறித்தள்ளிவிட்டுப் போக நீங்க கற்றுக்கொள்ளவில்லையென்றால் பதிவுலகம் உங்களுக்கு நரகமாகிவிடும்!
பதிவுலகில் சஞ்சாரம் செய்யும் ஒருவர் நாட்கள் கடக்கக் கடக்க "புகழ்" சம்பாரிக்கிறாரோ இல்லையோ நெறையவே "இகழ்" சம்பாரிப்பதைத் தவிர்க்க முடியாது! //
பதிவுலகம் பற்றிப் போதுமான அனுபவம் எனக்கில்லை.
கூடவே என்னை வெறுக்கும் அந்தச் சூழலிலை உதறிக் கடக்கும் மனதிடமும் எனக்கில்லை.
உங்கள் கருத்துப்படிப்பார்த்தால் பதிவுலகில் என் நாட்கள் எண்ணப்படுவதாகவே தோன்றுகிறது.
புகழ் பற்றிக் கவலைப்பட்டதில்லை.
ஒரு வேளை தவறெதும் செய்தால் அதை ஒத்துக் கொள்வதிலும் எனக்குத் தயக்கமில்லை.
இகழப்படும் சூழலைத் தாங்குவது கஷ்டம் தான்!
மொத்தத்தில் பயமாய்த்தான் இருக்கிறது!
உங்கள் சுயஅறைதலின் உண்மை சுடுகிறது.
நன்றி!!!****
வாங்க விஜு!
உங்களைப் போல் அற்புதமாக தமிழ் தொண்டாற்றுவோருக்கு சங்கடங்கள் வருவதில்லை என்பதே என் கணிப்பு. :)
***வலிப்போக்கன் - said...
நான் அந்த மாதிரி இல்லை..**
நல்லது வலிப் போக்கன்! :)
***டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
எல்லாவற்றையும் சமாளிப்பதால்தான் உங்களால்தான் ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து வலையுலகில் இயங்குகிறது. உங்களைப் போன்றவர்கள் இல்லையென்றால் பதிவுலகம் போரடிக்கத் தான் செய்யும். ***
வாங்க முரளி. :) நான் வந்த புதிதில் பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் எழுதிக்கொண்டு இருந்தாங்க. அவர்கள் எல்லாம் இப்போ முகநூல் ட்விட்டர் கூகிள் பிளஸ் என்கிற சின்ன வட்டத்தில் தங்களை அடைத்து கொண்டார்கள். தருமி சார் சொன்னதுபோல் எனக்கு வலைதளம்தான் மற்றவைகளை விடப் பிடிக்கிறது. அடிக்கடி இடம் விட்டு தாவுவதும் எனக்கு திருப்தி அளிக்காது.
பலர் வலைதளத்தில் இருந்து ஒதுங்கிவிட்டாலும், புதியவர்கள் ஆர்வத்துடன் வந்து அதையெல்லாம் ஈடு செய்துவிடுகிறார்கள் :)
***தருமி said...
பதிவை சட்டுன்னு முடிச்ச மாதிரி இருக்கே ...
***
உண்மையைச் சொல்லணும்னா இதுவே ரொம்ப நீளமாப் போயிடுச்சு, தருமி சார். :)
***//உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை!//
So ....?***
I was trying to reveal what kind of "reputation" I have built in the blog world. Not many have seen my "other side". :-)
*** பழனி. கந்தசாமி said...
என்ன, திடீர் புலம்பல்?***
புலம்பல் இல்லை சார்.
****பதிவுகள் அவரவர்களுக்குத் திருப்தியளித்தால் போதாதோ?***
உங்களுக்கு எப்படினு தெரியலை சார். நான் எழுதுகிற எல்லாப் பதிவுகளும் எனக்கு திருப்தி அளிப்பதில்லை என்பதே உண்மை! :)
***‘தளிர்’ சுரேஷ் said...
நிதர்சனமான உண்மைகளை புட்டு வைத்துவிட்டீர்கள்! வளர வளர புகழுக்கு பதில் இகழ்தான் அதிகம்! உண்மைதான்! நன்றி!***
வாங்க சுரேஷ்! :) உங்க கருத்துரைக்கு நன்றி, சுரேஷ்! :)
***யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பதிவின் கடைசியில் உள்ள படத்திலுள்ள பெண் யாருங்க?***
என்னங்க இப்படி கேட்டுட்டீங்க!! ஷாட்சாத் தீபிகா படுகோனே தாங்க! எத்தனை "ரிலாக்ஸ்டா" இருக்காரு னு பொறாமைப் படுமளவுக்கு இருக்கு இந்தப் படம்! அதான் சும்மா.. :)
***Iniya said...
அட கடவுளே என்ன சொல்ல நான் ..... அம்மாடியோ....****
வாங்க இனியா!! அதான் புள்ளிகளா போட்டு சொல்லீட்டீங்க இல்லை! உங்க கருத்துரையை அழகா புரிந்து கொண்டாகிவிட்டது. உங்க கவிதை என்னனு வந்து பார்க்கிறேன். :)
என் கருத்தை நான் நிறுவுவதற்கு எனக்கிருக்கும் அதே அளவு கருத்துசுதந்திரம் என் கருத்தை எதிர்ப்பவருக்கு உண்டு - விக்டர் ஹூகோ - :-)))
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
என்ன பாஸ் About Me & profile க்கு எழுதி வைச்சதை பதிவா எழுதி இங்கு வெளியிட்டிங்க போல இருக்கே?
பாஸ் இப்படி ஒரு அழகான படத்தை போட்டு Now Relax please! என்றால் எப்படி? நாம ரிலாக்ஸாக இருந்தாலும் மனசு ஆட்டம் போடுதே
யாரு புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் மிரட்டினாலும் உங்கள் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதை சொல்லிச் செல்லுங்கள், ஒவ்வொருத்துவருக்கும் ஒரு தனி தன்மை உண்டு. நீங்கள் இப்படி மாறுபட்ட கருத்து சொல்வதால்தான் பலருக்கும் நீங்கள் தெரியும்படி இருக்கிறீர்கள். உங்களின் பழைய பதிவுகளில் நீங்கள் எழுதிய கதைகள் எல்லாம் நான் படித்தவரை மிக அருமை ஆனால் அந்த கதைகளை படிக்கும் போது மனதிற்குள் நீங்கள் மிகவும் மாறுபட்ட வருணாக இருக்கிறீர்கள் ஆனால் நீங்கள் அப்படி அருமையான கதைகளை மட்டும் எழுதி கொண்டு இருந்தால் இந்த அளவு புகழ் அடைந்து இருக்கமாட்டீர்கள். ஆனால் மாறுப்பட்ட கோணத்தில் நீங்கள் சிந்தித்து கருத்து வெளியிடுவதால் நாலு பேர் அறியும் நிலையில் உள்ளீர்கள். உங்களிடம் நான் கண்ட குறை ஒன்று உண்டு என்றால் தனிப்பட்டவர்களின் கருத்துக்கு பதில் சொல்லும் போது கோபத்தில் வார்த்தைகள் தடித்து விடுகின்றன அந்த வார்த்தைகள் பேச்சில் வரும் போது ஒகே ஆனால் அது எழுத்தில் வரும் போதும் படிக்க கஷ்டமாக இருக்கிறது அதை அவாய்ட் பண்ணலாம்.. அவ்வளவுதான்
பாஸ் Now Relax ஆக ஒரு கேள்வி
இனிமேல் வரும் பதிவுகளில் Relax ஆக இருக்க இங்கு போட்ட படத்தை போல புதிதாக படம் ஏதும் போடுவீங்களா?
எங்க நம்ம டீச்சரம்மாவை காணோம்??
ஹலோ டீச்சரம்மா உங்க கருத்தை ஆவலோட எதிர்பார்க்கும் மதுரைதமிழன் & வருண்
****saamaaniyan saam said...
என் கருத்தை நான் நிறுவுவதற்கு எனக்கிருக்கும் அதே அளவு கருத்துசுதந்திரம் என் கருத்தை எதிர்ப்பவருக்கு உண்டு - விக்டர் ஹூகோ - :-)))***
சாம்: நான் ஒரு காலத்தில் எழுதிய ஒரு பதிவை வெட்டி ஒட்டி பின்னூட்டமாக தந்துள்ளேன்..
/// உங்க கருத்துச்சுதந்திரம் பறிபோகும் அவல நிலையில்!//
என்னைப் பொருத்தவரையில் நம் கருத்துச் சுதந்திரம்தான் பதிவுலகில் நமக்கு முதன்மையானது, முக்கியமானது. மத்ததெல்லாம் ரெண்டாவதுதான்! பதிவுலகில் நீங்க "பெரிய ஆளோ" இல்லை "சின்ன ஆளோ" ஒரு பதிவை வாசிச்சுட்டுட்டு உங்க கருத்தைச் சொல்ல உங்களுக்கு நிச்சயம் உரிமை வேண்டும்! அந்த உரிமை பறிபோகும் நிலை வந்தால் பதிவுலகில் இருப்பதே சுத்தமான வேஸ்ட்!
பதிவுலகில் ஒருவர் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத, சுத்தமாக முரணான ஒரு கருத்துள்ள பதிவை எழுதி வெளியிடுகிறார்னு வச்சுக்குவோம். பதிவுலகம் மிகப் பெரியது, நீங்க அதில் ஒரு துரும்புதான். அதனால அவரைப்போலவே சிந்தனைகள் உள்ளவர்கள் பலர் அந்தப்பதிவை ஆஹா ஓஹோனு சொல்லத்தான் போறாங்க. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாததால் பொதுவா இதுபோல் ஒரு சூழலில் நீங்க இதை கண்டுக்காமப் போயிடலாம். ஆனால் ஒரு சில நேரம் அதை கண்டுக்காமப் போகமுடியாது! அந்தக் கருத்துடன் மாறுபட்ட உங்க கருத்தை சொல்லியே ஆகனும்னு சூழ்நிலை எழுகிறது.
எங்கே சொல்வது? அந்தக் கருத்தை சொன்ன தளத்திலா? ஆமா, வேறெங்கே சொல்வது? அதைத்தான் பின்னூட்டங்களில் வாசகர்களும் சக பதிவர்களும் தெரிவிக்க முயல்றோம். பின்னூட்டத்தில் ஒருவர் நல்லா எழுதியிருந்தால் பாராட்டுறோம். சுத்தமா அதில் சொன்ன கருத்து ஏற்றுக்கொள்ள முடியலைனா திட்டுறோம். இரண்டுக்குமே உங்க பொன்னான நேரம் செலவிடப்படுகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது! ஆனால் உங்க கருத்தை அவ்வளவு ஈஸியா இன்னொரு பதிவர் தளத்தில் சொல்லிட முடியாது!
* சாரு நிவேதிதா, "நான் கடவுளை க் கண்டேன்" னு நித்யானந்தாவைப் பற்றி ஏதோ கேணத்தனமா எழுதுறார்!
* நித்யானந்தாவையும், தந்தை பெரியாரையும் சம்மந்தப்படுத்தி ஒரு சாதிவெறிபிடித்த வம்பர் இஷ்டத்துக்கு லாஜிக் பேசி உளறுகிறார்!
இந்த மாதிரி சூழல்களில் நீங்க உங்க கருத்தை சொல்லியே ஆகனும்! சாரு, தன் தளத்தில் ஜால்ரா இ-மெயில் மட்டும்தான் வெளியிடுவார்! அவர் சொல்றதை கேட்டுக்கிட்டு ஆமா ஆமானு ஜாலரா அடிப்பதுபோல் பின்னூட்டம் இல்லையென்றால் உங்க கருத்தை சொல்ல முடியாதே!
அதேபோல் பெரியாரை சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் இழுக்கும் இந்த வம்பரிடம் போய் என் மாற்றுக் கருத்தை வெளியிடுங்கனு கெஞ்சனுமா? தீண்டாமை சரினு சொல்றவனிடமெல்லாம் நியாயம் பேச முடியுமா? சாதி வெறி இன்னும் அடங்காமல் இருக்கும் ஒருவனிடம்? சாண்ஸே இல்லை!
ஒரு சில இடங்களில் பாராட்டும் பின்னூட்டம்தான் பொதுவா மாடெரேஷன் கடந்து வெளிவரும். பதிவர் கருத்துடன் உங்க கருத்து சுத்தமா ஒத்துப் போகலைனா (யார் சொல்றது சரி, தவறென்பது வேறு விசயம), உங்க பின்னூட்டம் பொதுவா வெளியே வராது. மேலும் உங்க பின்னூட்டம் பதிவருடைய "அகந்தை"யை தொடுவதுபோல இருந்தாலும் பின்னூட்டம் வெளியே வராது. ஒரு சில நேரம் உங்க பின்னூட்டம் உணர்ச்சி பொங்கி வேகத்தில் எழுதி அநாகரிகமாக இருந்தாலும் வெளியே வராது. உங்க பின்னூட்டத்தை போட்டுட்டு "ஐயா" அப்ரூவ் பண்ணூறாரானு நீங்க வெயிட் பண்ணிட்டு நிக்கனும்!
நாலும் நாலும் பத்துனு சொல்லுவான். நாலு அரைவேக்காடுகள் ஆமா ஆமா னு சொல்லும்! அதை நான் ஏத்துக்கனுமா? என் மாற்றுக்கருத்தை நான் சத்தமாகச் சொல்லனும்!
எனக்கு கருத்துச் சுதந்திரம் இல்லையா?
ஒரு பதிவர், அவருடைய தளத்தில் அவர் தன்னை அவமானப்படுத்த அலல்து இறக்க இடம் கொடுக்கனும்னு என்ன இருக்கு? அபப்டியெல்லாம் தியாகம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் ஒரு பதிவை வாசித்துவிட்டு, அதில் உள்ள கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் (உங்க பின்னூட்டம் மட்டுறுத்தப்படுவதால்), நீங்க அதை சொல்லியே ஆகனும்னு நிலை வருவதுண்டு. அதுபோல் நிலையில் மற்றவர்கள் என்ன செய்வாங்கனு தெரியலை, நான் என் பின்னூட்டத்தில் சொல்ல விரும்புவதை ஒரு பதிவாக எழுதுவதுண்டு!
ஏன் இதுக்கெல்லாம் ஒரு பதிவா? னு பலர் இதை கேலி பண்ணலாம்!
என் பார்வையில் உங்க கருத்தை சொல்ல முடியாத, உங்க கருத்து சுதந்திரம் பறிபோகிற ஒரு அவல நிலையை நீங்க ஏன் ஏற்றுக்கனும்? உங்களுடைய பேச்சுரிமையை எவனோ ஒருவன் பறிப்பதை நீங்க ஏத்துக்க கூடவே கூடாது!
இதற்குத்தான் உங்க தளம் இருக்கு, இல்லையா? உங்க கருத்தை எவனையும் கெஞ்சாமல், எவனோட அப்ரூவலும் இல்லாமல் சத்தமாக அடித்துச் சொல்ல!
*****Avargal Unmaigal said...
என்ன பாஸ் About Me & profile க்கு எழுதி வைச்சதை பதிவா எழுதி இங்கு வெளியிட்டிங்க போல இருக்கே?***
:-))))
** Avargal Unmaigal said...
பாஸ் இப்படி ஒரு அழகான படத்தை போட்டு Now Relax please! என்றால் எப்படி? நாம ரிலாக்ஸாக இருந்தாலும் மனசு ஆட்டம் போடுதே!***
You have got to admit, She is beautiful. :) Her smile will certainly take you away from the earlier contents of this post. :)
***Avargal Unmaigal said...
யாரு புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் மிரட்டினாலும் உங்கள் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதை சொல்லிச் செல்லுங்கள், ஒவ்வொருத்துவருக்கும் ஒரு தனி தன்மை உண்டு. நீங்கள் இப்படி மாறுபட்ட கருத்து சொல்வதால்தான் பலருக்கும் நீங்கள் தெரியும்படி இருக்கிறீர்கள். உங்களின் பழைய பதிவுகளில் நீங்கள் எழுதிய கதைகள் எல்லாம் நான் படித்தவரை மிக அருமை ஆனால் அந்த கதைகளை படிக்கும் போது மனதிற்குள் நீங்கள் மிகவும் மாறுபட்ட வருணாக இருக்கிறீர்கள் ஆனால் நீங்கள் அப்படி அருமையான கதைகளை மட்டும் எழுதி கொண்டு இருந்தால் இந்த அளவு புகழ் அடைந்து இருக்கமாட்டீர்கள். ஆனால் மாறுப்பட்ட கோணத்தில் நீங்கள் சிந்தித்து கருத்து வெளியிடுவதால் நாலு பேர் அறியும் நிலையில் உள்ளீர்கள். உங்களிடம் நான் கண்ட குறை ஒன்று உண்டு என்றால் தனிப்பட்டவர்களின் கருத்துக்கு பதில் சொல்லும் போது கோபத்தில் வார்த்தைகள் தடித்து விடுகின்றன அந்த வார்த்தைகள் பேச்சில் வரும் போது ஒகே ஆனால் அது எழுத்தில் வரும் போதும் படிக்க கஷ்டமாக இருக்கிறது அதை அவாய்ட் பண்ணலாம்.. அவ்வளவுதான்****
நல்லவேளை ஒரு சில குறைபாடுகள் நிறைந்தே வருண் இருக்கிறான். இல்லைனா அவனையும் கடவுளாக்கி வணங்க ஆரம்பிச்சுடும் இவ்வுலகம் என்கிற அபாயம் இருக்கேனுதான் இப்படி இருக்கிறேன்னு சொல்லியெல்லாம் சமாளிக்க மாட்டேன் தல! :)))
***பாஸ் Now Relax ஆக ஒரு கேள்வி
இனிமேல் வரும் பதிவுகளில் Relax ஆக இருக்க இங்கு போட்ட படத்தை போல புதிதாக படம் ஏதும் போடுவீங்களா?***
அடுத்த முறை உங்க மனம் "சாந்தி" அடைவதுபோல் இன்னொரு படம் போடுகிறேன். அட் லீஸ்ட் முயற்சிக்கிறேன். :)
****Avargal Unmaigal said...
எங்க நம்ம டீச்சரம்மாவை காணோம்??
ஹலோ டீச்சரம்மா உங்க கருத்தை ஆவலோட எதிர்பார்க்கும் மதுரைதமிழன் & வருண்***
அவர் பதிவுலகில் ஒரு புத்துணர்வுடன் இருக்கிறார். இதுபோல் பதிவுகளை வாசித்தால் பலவிதமான குழப்பங்கள் வரலாம்னு இதையெல்லாம் புறக்கணிக்க கற்று இருக்கிறார்னு நினைக்கிறேன். பாவம், நிம்மதியா இருக்கட்டுமே? விட்டுடுங்க தல! :)
நீங்கள் சொல்வது சரி தான்... இந்த வயது இருக்கே, அதாவது அனுபவம் அனைத்தையும் கற்றுக் கொடுத்து விடும்...
//எங்க நம்ம டீச்சரம்மாவை காணோம்??
ஹலோ டீச்சரம்மா உங்க கருத்தை ஆவலோட எதிர்பார்க்கும் மதுரைதமிழன் & வருண்***
அவர் பதிவுலகில் ஒரு புத்துணர்வுடன் இருக்கிறார். இதுபோல் பதிவுகளை வாசித்தால் பலவிதமான குழப்பங்கள் வரலாம்னு இதையெல்லாம் புறக்கணிக்க கற்று இருக்கிறார்னு நினைக்கிறேன். பாவம், நிம்மதியா இருக்கட்டுமே? விட்டுடுங்க தல! :)//
எந்த டீச்சரம்மாவைத் தேடறீங்க?
present சகாஸ்:))I'm here!
ரெண்டு நாள் மணப்பாறைக்கு எஸ்கேப். இன்னிக்கு evening தான் வந்தேன்.
**எங்க நம்ம டீச்சரம்மாவை காணோம்??**
அக்கறைக்கு thanks தல:)@ mr.லைட்
**அவர் பதிவுலகில் ஒரு புத்துணர்வுடன் இருக்கிறார்.**thanks Vn .
**இதையெல்லாம் புறக்கணிக்க கற்று இருக்கிறார்னு நினைக்கிறேன்**Am not an escapist, you know:)
இந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் கடைசி விஷயத்தை,tats தீபி மேல கொஞ்சம் soft கார்னர்:)என்பது மட்டும் போட்டோ ஆதாரம்...hot ன்ன இந்த பதிவுக்கு cool end கொடுத்திருக்கு:)
year எண்ட்ல இப்படி தில்லா சுயவிமர்சனம் ,,,அதுவும் இவ்ளோ நேர்மையா .....சான்சே இல்ல....என்னால முடியாது:)) அதற்காக வாழ்த்துகள். அப்புறம் நீங்க விமர்சிக்கிறது எல்லாம் ரைட்டு ஆனா words ..டைப் பண்றதுக்கு முன்னால நீங்களே உங்க வார்த்தைகளை கொஞ்சம் மட்டுறுத்தல் செய்துபார்க்கலாமே என்பது என்னோட பணிவான சஜெஷன்:) #புத்தாண்டு தீர்மான பரிந்துரைகளும்,,,அறுவைகளும்
***துளசி கோபால் said...
//எங்க நம்ம டீச்சரம்மாவை காணோம்??
ஹலோ டீச்சரம்மா உங்க கருத்தை ஆவலோட எதிர்பார்க்கும் மதுரைதமிழன் & வருண்***
அவர் பதிவுலகில் ஒரு புத்துணர்வுடன் இருக்கிறார். இதுபோல் பதிவுகளை வாசித்தால் பலவிதமான குழப்பங்கள் வரலாம்னு இதையெல்லாம் புறக்கணிக்க கற்று இருக்கிறார்னு நினைக்கிறேன். பாவம், நிம்மதியா இருக்கட்டுமே? விட்டுடுங்க தல! :)//
எந்த டீச்சரம்மாவைத் தேடறீங்க?***
நீங்க பெரிய டீச்சர்! மைதிலி சின்ன டீச்சர்! :)
***Mythily kasthuri rengan said...
present சகாஸ்:))I'm here!
ரெண்டு நாள் மணப்பாறைக்கு எஸ்கேப். இன்னிக்கு evening தான் வந்தேன்.
**எங்க நம்ம டீச்சரம்மாவை காணோம்??**
அக்கறைக்கு thanks தல:)@ mr.லைட்
**அவர் பதிவுலகில் ஒரு புத்துணர்வுடன் இருக்கிறார்.**thanks Vn .
**இதையெல்லாம் புறக்கணிக்க கற்று இருக்கிறார்னு நினைக்கிறேன்**Am not an escapist, you know:)
இந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் கடைசி விஷயத்தை,tats தீபி மேல கொஞ்சம் soft கார்னர்:)என்பது மட்டும் போட்டோ ஆதாரம்...hot ன்ன இந்த பதிவுக்கு cool end கொடுத்திருக்கு:)
year எண்ட்ல இப்படி தில்லா சுயவிமர்சனம் ,,,அதுவும் இவ்ளோ நேர்மையா .....சான்சே இல்ல....என்னால முடியாது:)) அதற்காக வாழ்த்துகள். அப்புறம் நீங்க விமர்சிக்கிறது எல்லாம் ரைட்டு ஆனா words ..டைப் பண்றதுக்கு முன்னால நீங்களே உங்க வார்த்தைகளை கொஞ்சம் மட்டுறுத்தல் செய்துபார்க்கலாமே என்பது என்னோட பணிவான சஜெஷன்:) #புத்தாண்டு தீர்மான பரிந்துரைகளும்,,,அறுவைகளும்***
உங்களை வம்புக்கு இழுக்காமல் மதுரைத் தமிழனுக்கு பொழுது போகாது போல!
--------
ஒரு நண்பருக்கு கனிவாகவும், கடிந்துகொண்டும் அறிவுரை வழங்கலாம். தப்பே இல்லை, மைதிலி! :)
//தனிப்பட்டவர்களின் கருத்துக்கு பதில் சொல்லும் போது கோபத்தில் வார்த்தைகள் தடித்து விடுகின்றன அந்த வார்த்தைகள் பேச்சில் வரும் போது ஒகே ஆனால் அது எழுத்தில் வரும் போதும் படிக்க கஷ்டமாக இருக்கிறது அதை அவாய்ட் பண்ணலாம்.. அவ்வளவுதான்//
எல்லாம் ரைட்டு ஆனா words ..டைப் பண்றதுக்கு முன்னால நீங்களே உங்க வார்த்தைகளை கொஞ்சம் மட்டுறுத்தல் செய்துபார்க்கலாமே என்பது என்னோட பணிவான சஜெஷன்:)///
பாஸ் பாஸ் இந்த டீச்சரம்மா என்னுடைய கருத்தை காப்பி அடிச்சிருக்காங்க என்ன இடை இடையில் இங்கிலீஷ் வார்த்தையை இன்சர்ட் பண்ணி இருக்காங்க அதனால் அவங்களுக்கு தண்டனை தரனும். என்ன தரலாம்? உம்ம்ம்ம்ம்ம்ம் அவங்க சமைச்சதை அவங்களையே சாப்பிட சொல்லாமா?
துளசிம்மா நீங்க எல்லாம் பெரிய டீச்சர்(ஹெட்மாஸ்டர்) உங்களை எல்லாம் கலாய்க்க மாட்டோம், அப்படி கலாய்ச்சோம் என்றால் நீங்க டிசி கொடுத்து அனுப்பிவிடுங்க
ஆனா பாருங்க இப்ப எல்லாம் தமிழ்மணம் புது பதிவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. I am waiting in their queue for registering my blog for last 3 weeks no response.
http://aarurbass.blogspot.com/ Any ideas ??
பதிவுகள் எழுதுவது வேறு பின்னூட்டங்கள் எழுதுவது வேறு. பதிவுகளில் நீங்கள் நினைத்ததை எழுதி விடலாம். ஆனால் பின்னூட்டத்தில் உங்கள் கருத்தைச் சொல்லாமல் இருப்பதும் தவறு என்றே தோன்றுகிறது. கருத்தில் எழுதியவரைச் சாடாமல் நாகரீகமாக எழுத்தை விமரிசிக்கலாம். ஆனால் நான் கண்டவரை பதிவுலகில் புகழ்ச்சிதான் விரும்ப்பப் படுகிறது. மனதாரப் புகழ விரும்பவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது. டெம்ப்லேட் காமெண்ட்ஸ்.உங்கள் எழுத்துக்கள்மூலம் நீங்கள் அறியப்படுகிறீர்கள். என் எழுத்தை விமரிசிக்க தைரியமில்லாத ஒருவர் இன்னொருவர் தளத்தில் மறை முகமாக என்னைத் தூற்றி எழுதி இருந்ததும் தெரியவந்தது.அது என்னைப் பற்றித்தான் என்று எப்படி தெரிய வந்தது என்று கேட்டால் பதில் சொல்வது கடினம். உள்ளுணர்வு என்ற ஒன்று இருக்கிறதே. பின்னூட்டங்களை கட்டுப்படுத்தும் இந்த மட்டறுத்தல் எனக்கு உடன்பாடானது அல்ல. நிறையவே எழுதலாம்/ எழுத்து என்பது என் எண்ணங்களைக் கடத்த ஒரு உபாயம் என்றே நினைக்கிறேன் மற்றபடி கவலைப் படுவதில்லை.
***Avargal Unmaigal said...
//தனிப்பட்டவர்களின் கருத்துக்கு பதில் சொல்லும் போது கோபத்தில் வார்த்தைகள் தடித்து விடுகின்றன அந்த வார்த்தைகள் பேச்சில் வரும் போது ஒகே ஆனால் அது எழுத்தில் வரும் போதும் படிக்க கஷ்டமாக இருக்கிறது அதை அவாய்ட் பண்ணலாம்.. அவ்வளவுதான்//
எல்லாம் ரைட்டு ஆனா words ..டைப் பண்றதுக்கு முன்னால நீங்களே உங்க வார்த்தைகளை கொஞ்சம் மட்டுறுத்தல் செய்துபார்க்கலாமே என்பது என்னோட பணிவான சஜெஷன்:)///
பாஸ் பாஸ் இந்த டீச்சரம்மா என்னுடைய கருத்தை காப்பி அடிச்சிருக்காங்க என்ன இடை இடையில் இங்கிலீஷ் வார்த்தையை இன்சர்ட் பண்ணி இருக்காங்க அதனால் அவங்களுக்கு தண்டனை தரனும். என்ன தரலாம்? உம்ம்ம்ம்ம்ம்ம் அவங்க சமைச்சதை அவங்களையே சாப்பிட சொல்லாமா?***
தல: உண்மையை சொல்லணும்னா, உங்களைப்போல், மைதிலிபோல் நலம் விரும்பிகள் எல்லோருமே இதே கருத்தைத்தான் தங்கள் வைத்துள்ளார்கள் என்பதே உண்மை. நீங்க முதலாக சொல்லீட்டீங்கனு நினைக்கிறேன். :)
மைதிலி நல்லா சமைப்பாங்க, தல. :)
***Baskaran Siva said...
ஆனா பாருங்க இப்ப எல்லாம் தமிழ்மணம் புது பதிவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. I am waiting in their queue for registering my blog for last 3 weeks no response.
http://aarurbass.blogspot.com/ Any ideas ??**
ஏதாவது காரணம் இருக்கும்னு நினைக்கிறேன். என்னனு எனக்கு தெரியலைங்க. யூகிக்கவும் முடியலை. :) Sorry to know that you have been waiting for a very long time, Baskaran Siva! :(
***G.M Balasubramaniam said...
பதிவுகள் எழுதுவது வேறு பின்னூட்டங்கள் எழுதுவது வேறு. பதிவுகளில் நீங்கள் நினைத்ததை எழுதி விடலாம். ஆனால் பின்னூட்டத்தில் உங்கள் கருத்தைச் சொல்லாமல் இருப்பதும் தவறு என்றே தோன்றுகிறது. கருத்தில் எழுதியவரைச் சாடாமல் நாகரீகமாக எழுத்தை விமரிசிக்கலாம். ஆனால் நான் கண்டவரை பதிவுலகில் புகழ்ச்சிதான் விரும்ப்பப் படுகிறது. மனதாரப் புகழ விரும்பவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது. டெம்ப்லேட் காமெண்ட்ஸ்.***
இதைப்பற்றி நிறைய பேசலாம் சார். ஆனால், பல நண்பர்கள் மனது புண்படும். அதனால் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. :)
***உங்கள் எழுத்துக்கள்மூலம் நீங்கள் அறியப்படுகிறீர்கள். என் எழுத்தை விமரிசிக்க தைரியமில்லாத ஒருவர் இன்னொருவர் தளத்தில் மறை முகமாக என்னைத் தூற்றி எழுதி இருந்ததும் தெரியவந்தது.அது என்னைப் பற்றித்தான் என்று எப்படி தெரிய வந்தது என்று கேட்டால் பதில் சொல்வது கடினம். உள்ளுணர்வு என்ற ஒன்று இருக்கிறதே.***
இதைப்பற்றி அதிகமாக ஆராய்ச்சி பண்ணப் பண்ண பிரச்சினைதான், சார். :)
**பின்னூட்டங்களை கட்டுப்படுத்தும் இந்த மட்டறுத்தல் எனக்கு உடன்பாடானது அல்ல. நிறையவே எழுதலாம்/ எழுத்து என்பது என் எண்ணங்களைக் கடத்த ஒரு உபாயம் என்றே நினைக்கிறேன் மற்றபடி கவலைப் படுவதில்லை. **
உங்கள் ஆழ்ந்த கருத்துக்கு நன்றி, சார். :)
Post a Comment