Thursday, April 16, 2015

கொம்பு முளைத்த சுகாசினியின் கருத்துச் சுதந்திரத்தை மதிப்போம்?

மேதாவி சுகாசினி என்ன சொல்கிறார்? தமிழனுக்கு மட்டும் என்ன கொம்பு முளைத்துள்ளதா? என்று கேட்டவர் இவர்!  இப்போ இவருக்கு மட்டும்தான் கொம்பு முளைத்துள்ளது என்று காட்டுகிறாரா? ஆமா, படம் வெளிவருமுன்னே ஏன் இந்தத் "தற்காப்பு"?

பொதுவாக தமிழ்ப்பட இயக்குனர்கள் 10-20 வருட்ங்கள் பிராகாசமாக இருந்துவிட்டு  பிறகு மங்குவதுதான் காலங்காலமாக நடந்துகொண்டு வருகிறது.  பாலசந்தர், பாரதிராஜா போலவே மிகவும் உச்சத்தில் இருந்த இன்னொரு இயக்குனரான மணிரத்னம் தற்போது மங்க ஆரம்பித்துவிட்டார். சமீபத்தில் வந்த இவர் படங்களை  3 மணி நேரம் அமர்ந்து மக்களால் பார்த்து ரசிக்கமுடியவில்லை! இருந்தபோதிலும் அவர்மேல் கொண்ட நல்ல அபிமானத்தால் இணையதள க்ரிட்டிகள் எல்லாம் அவரைப் புகழ முயன்றும் முடியாமல் தோல்வி யடைகிறார்கள். இதுதான் நிதர்சனம்!

 ஆனால் கொம்பு முளைத்த சுகாசினி  அவர்கள், தன் கணவனின் இன்றைய இயலாமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் உளற ஆரம்பித்துவிட்டார்!

இணையதளப் பொதுமக்கள் எல்லாம்  "என்றும் மேதை" என் கணவரின் உன்னதப் படத்தை விமர்சிக்கத் தகுதியற்றவர்கள் என்றும், பொதுஜனப் பத்திரிக்கை விமர்சகர்கள்தான் அதற்குத் தகுதியுள்ளவர்கள் என்றும் உளறுகிறார். அதாவது அதற்கு அர்த்தமென்னவென்றால் இணையதளத்தில் பிரவேசிக்கும் பொதுஜனங்கள் எல்லாம் அவர் கணவரின் உன்னதப்படைப்பைப் பார்க்கத் தகுதியற்றவர்கள்! "தயவு செய்து என் கணவரின் உன்னதப் படைப்பை நீங்கள் பார்க்கவே வேண்டாம், உங்களுக்கு அத்தகுதி இல்லை!"  என்று சொல்லாமல் சொல்கிறார்.

 ஆக, கொம்பு முளைத்த சுகாசினியின் வேண்டுகோளை மதித்து இணையதளத்தில் பிரவேசிக்கும் அனைத்துப் பாமரர்களும் மணிரத்னத்தின் வரப்போகும் அடுத்த உன்னத குப்பையை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

 Honestly, "his"  latest movies are boring. Thanks, Suhashini, you saved me from seeing another worthless movie! :)


14 comments:

Avargal Unmaigal said...

இணையதளத்தில் எழுதுபவர்கள் அல்லது விமர்சிப்பவர்கள் மனதில் பட்டதை பட்டு என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள் ஆனால் பத்திரிக்கையில் எழுதுபவர்கள் தங்கள் தொழிலுக்காகவும் சில பேர் கட்சி தலைவர்களிடம் இருந்தும் அல்லது சினிமா துறையிடரிடமிருந்து பெறும் சில்லறை காசுகளுக்கு ஆசைப்பட்டு அவர்களுக்கு சாதகமாகவே எழுதுவார்கள் அப்படிபட்டவர்களைதான் இந்தம்மா சுகாசினி படத்தை பார்த்துவிட்டு நல்லவிதமாக எழுத அழைப்பு விடுவித்து இருக்கிறார்கள்

வருண் said...

வாங்க ம த! :)

காசு கொடுத்துப் படம் பார்த்துட்டு வந்து தான் ரசிச்சதையும், தன்னால் சகிக்க முடியாதையும் சொல்லத்தான் செய்வான்..

திண்டுக்கல் தனபாலன் said...

அவங்களை நினைச்சா பாவமா இருக்குங்க...

Kasthuri Rengan said...

ஒரு நல்ல நடிகை என்று பெயர் வாங்கியவர்,
உணர்வு வயப்பட்டு இப்படி பேசியிருக்க வேண்டாம்தான்...
நான் இன்றும் மணியின் ரசிகன்...
பாஸ் நம்ம திரையுலக மைல்கல் அவர்... மணிக்கு முன் மணிக்கு பின் என தெளிவான பெஞ்ச் மார்க் கீது...
எனக்கு தோன்றுவதெல்லாம் எப்படி ஸ்டான்லி குப்ரிக், அகிரா எல்லாம் காலம் கடந்தும் நிற்கிறார்கள்...
நம்ம ஆட்கள் நமது கண்முன்னாலே சரியுறாங்க ...
ச்

என்ன தம பக்கம் போக முடில ?

KILLERGEE Devakottai said...


வணக்கம் நண்பரே...
நான் நினைத்ததை அருமையாக சொல்லி விட்டீர்கள் உண்மையிலேயே தமிழன் ரோஷமானவன் என்றால் இவண் படத்தை எவனுமே பார்க்க கூடாது நான் கண்டிப்பாக பார்க்க மாட்டேன் இது உறுதி.
படத்தைப்பார்த்து காசு கொட்டுவதற்க்கு மட்டும் ரசிகன் வேண்டும் விமர்சித்து எழுத உனக்கு தகுதி இல்லை என்கிறாள் இவள் தமிழச்சிதானா ? 80 ஐயமாக இருக்கிறது இவளும் தமிழனை சரியாகத்தான் கணித்து வைத்திருக்கின்றாள் அதனால்தானே தெலுங்கில் முழுவதும் திறந்து போட்டு நடித்தாள் இல்லையெனில் அங்கு செல்லுபடியாகாதே இதன் மூலம் சர்ச்சையை கிளப்பி விட்டு படத்தைப் பார்க்க வைக்கும் ட்ரண்ட் என்று நினைக்கிறேன். பதிவுக்கு நன்றி நண்பரே...

Unknown said...

Varun,

Mani Rathinam was at the right place at the right time and more than anyone he knows it for sure. If I am not mistaken, he was up there when Bharathi Raja, Bakiyara and even KB were going South. I must add that I did like couple of hos earlier movies,. But he is one director who is over rated and has more flops than otherwise.
May I also add that the Music of ARR isn't helping him either....
Por Suhaasini, shes confused. She got married to him when Mani could do no wrong. But...

Nice blog.. Thanks

வருண் said...

***திண்டுக்கல் தனபாலன் said...

அவங்களை நினைச்சா பாவமா இருக்குங்க...***


ராஜாதி ராஜா னு ஒருபடம் வந்தபோது, விமர்சகர் இவர், "இந்தப் படம் 20 வருடங்கள் முன்னால வந்து இருக்க வேண்டியது" என்றார். தனக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு இன்னொண்ணு.

வருண் said...

***Mathu S said...

ஒரு நல்ல நடிகை என்று பெயர் வாங்கியவர்,
உணர்வு வயப்பட்டு இப்படி பேசியிருக்க வேண்டாம்தான்...
நான் இன்றும் மணியின் ரசிகன்...
பாஸ் நம்ம திரையுலக மைல்கல் அவர்... மணிக்கு முன் மணிக்கு பின் என தெளிவான பெஞ்ச் மார்க் கீது...
எனக்கு தோன்றுவதெல்லாம் எப்படி ஸ்டான்லி குப்ரிக், அகிரா எல்லாம் காலம் கடந்தும் நிற்கிறார்கள்...
நம்ம ஆட்கள் நமது கண்முன்னாலே சரியுறாங்க ...
ச்

என்ன தம பக்கம் போக முடில ***

மது! படம் நல்லாயிருக்குணு விமர்சகர்கள் எழுதுறாங்க! இந்தம்மா ஒளறாமல் இருந்து இருந்தால் அவர் எளிதில் வெற்றி பெற்றிருக்கலாம்..

இது டாட்.காம் தளம் என்பதால், நான் பார்க்கும் வேர்ஷன் வேறு நீங்கள் பார்க்கும் .in வேர்ஷன் வேறு. :)

வருண் said...

***KILLERGEE Devakottai said...


வணக்கம் நண்பரே...
நான் நினைத்ததை அருமையாக சொல்லி விட்டீர்கள் உண்மையிலேயே தமிழன் ரோஷமானவன் என்றால் இவண் படத்தை எவனுமே பார்க்க கூடாது நான் கண்டிப்பாக பார்க்க மாட்டேன் இது உறுதி.
படத்தைப்பார்த்து காசு கொட்டுவதற்க்கு மட்டும் ரசிகன் வேண்டும் விமர்சித்து எழுத உனக்கு தகுதி இல்லை என்கிறாள் இவள் தமிழச்சிதானா ? 80 ஐயமாக இருக்கிறது இவளும் தமிழனை சரியாகத்தான் கணித்து வைத்திருக்கின்றாள் அதனால்தானே தெலுங்கில் முழுவதும் திறந்து போட்டு நடித்தாள் இல்லையெனில் அங்கு செல்லுபடியாகாதே இதன் மூலம் சர்ச்சையை கிளப்பி விட்டு படத்தைப் பார்க்க வைக்கும் ட்ரண்ட் என்று நினைக்கிறேன். பதிவுக்கு நன்றி நண்பரே... ***

கொஞ்சம் கவனித்துப் பார்த்தீங்கனா, "மனுதர்மம்" இதுபோல் பார்ப்பீனிய சிந்தனைகளால்தான் உருவாகியிருக்கணும்.

உங்களை, என்னைப்போல் ரோஷமாக அப்படத்தைப் புறக்கணிப்பவர்கள் மிகவும் குறைந்த விழுக்காடுகளே, நண்பரே!

வருண் said...

***RJ விசுAwesome said...

Varun,

Mani Rathinam was at the right place at the right time and more than anyone he knows it for sure. If I am not mistaken, he was up there when Bharathi Raja, Bakiyara and even KB were going South. I must add that I did like couple of hos earlier movies,. But he is one director who is over rated and has more flops than otherwise.
May I also add that the Music of ARR isn't helping him either....
Por Suhaasini, shes confused. She got married to him when Mani could do no wrong. But...

Nice blog.. Thanks***

Thanks for sharing your thoughts, Visu! :)

G.M Balasubramaniam said...

என்ன படம் மணிர்த்னம் இயக்கி இப்போது வெளியாகி உள்ளது திரையில் படம் பார்த்து ஆண்டுகளாகி விட்டன.

ஆரூர் பாஸ்கர் said...

Due to whatsoever reasons, audience's taste got changed in last 15-20 years.

For example, Even today I like MounaRagam very much. At the same time, I cannot watch a similar movie again.


Any artist who couldn't find the pulse of audience will be rejected. PERIOD.

வருண் said...

***G.M Balasubramaniam said...

என்ன படம் மணிர்த்னம் இயக்கி இப்போது வெளியாகி உள்ளது திரையில் படம் பார்த்து ஆண்டுகளாகி விட்டன.***

சார்: மணிரதனம் படத்தை எல்லாம் தவிர்த்துவிட்டு ஏதாவது பள்ளிக்குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் விழாவுக்குப் போகலாம். He is not going to tell anything new in his movies! :)


வருண் said...

***ஆரூர் பாஸ்கர் said...

Due to whatsoever reasons, audience's taste got changed in last 15-20 years.

For example, Even today I like MounaRagam very much. At the same time, I cannot watch a similar movie again.

Any artist who couldn't find the pulse of audience will be rejected. PERIOD.***

Please come Baskar! :)

Like Madhu mentioned, We hardly see any Clint Eastwood and Martin Scorsese in Tamil Cinema. They ran out of ideas in 15 years or so, and unable to create anything worthy once their testosterone level goes down! I wondered it has anything to do with their "sex drive"! In fact I did write a blog-post on this subject! :)