Tuesday, April 28, 2015

பின்னூட்டங்கள் மட்டுறுத்தல் உதவி, ஆலோசனைகள்!

எந்தப் பின்னூட்டகளை வெளியிடலாம்? எதை வெளியிடக்கூடாது? எப்படி என் தரத்தையும் குறைக்காமல் என் வாசகர்களையும் அவர் பின்னூட்டம் வரம்பு மீறிவிட்டது என்று புரியவைப்பது? இதுபோல் பிரச்சினைகள், தலைவலிகள் பதிவர்களுக்கு வருவதுண்டு. இது பதிவுலகில் நம் அனைவருக்குமே வரும் பிரச்சினைதான். நாம் அனைவருமே என்றுமே கற்றுக்கொள்பவர்கள்தான்.

நீங்க ஆரம்பித்த டாப்பிக்கில் வரும் பின்னூட்டங்கள வரம்பு மீறி போய் விடுகிறதா?

இந்நிலையில் நீங்க உங்கள் தளத்தை சுத்தம் செய்யலாம். எப்படி?

ஒரு பின்னூட்டத்தை வந்த சுவடே தெரியாமல் எடுத்து விடலாம். அதாவது அட்மினிஸ்ட்ரேட்டர் இதை எடுத்துவிட்டார் என்பதையும் காட்டாமல். இதை ஒரு சிலர் செய்வதில்லை. காரணம்? அந்த ஆப்ஸன் இருப்பது தெரியாமல் இருக்கலாம். இல்லைனா நேரம் போதாமையாகவும் இருக்கலாம்.

அல்லது நீங்க ஆரம்பித்த டாப்பிக் திசை மாறியதால், அந்த ஒரு பதிவில் மட்டும் பின்னூட்டங்கள் அனைத்தையும் உலகுக்கு காட்டாமல், இப்பதிவில் பின்னூட்டங்களை வெளி உலகுக்குக் காட்டாதே என்று நீங்க காமெண்ட்ஸ் ஆப்சனை  செட் பண்ணலாம். அப்படி செய்துவிட்டால், உங்க கருத்து மட்டுமே காலப்போக்கில் அதில் நிலைத்து  இருக்கும். சண்டை சச்சரவு, திசை மாறியது எல்லாம் வெளியில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் காணாமல்ப் போய்விடும் (கவனிக்க! உங்க கண்களுக்கு மட்டும் தெரியும்படி வைத்துக் கொள்ளலாம்). பல வருடங்கள் சென்று உங்கள் பதிவை வாசிப்பவர்களுக்கு உங்க கருத்தை மட்டுமே வாசிப்பார்கள். தடம் புரண்ட பின்னூட்டங்கள் இருக்காது. அதுதானே மிகவும் முக்கியம்.

எனக்கும் இதுபோல் பிரச்சினைகள், சிக்கல்கள் வருவதுண்டு. என்னையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன். தள நிர்வாகிக்கு உள்ள ஒரு "ப்ரொவிஷன்" (வசதி) பலருக்கு தெரியாததால், எப்படி குப்பைகளை இல்லாமல் என் கருத்தை உலகுக்குக் காட்டுவது என்று குழம்பி வருந்தி நிற்பார்கள் .

Please explore such options and clean up  your blog if necessary. After all this is your blog. You do not want to let others take over and insult you or give a wrong  impression about yourself. At the same time, if you moderate and clean up properly, the responders will understand their mistakes and will continue sharing his/her thoughts in the future and encourage you to write more and more. You certainly need some sort of feedback from the readers to keep writing. Otherwise blog writing will be boring and you will not have much "drive" to write.

இதெல்லாம் தெரிந்தவர்கள் (தனபாலன் போன்ற  வலையுலக சித்தர்கள்) ஒரு சிலர் இருந்தாலும் அவர்களால் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் தகுந்த ஆலோசனை தர முடியாது.  ஒரு சில வேளைகளில் என்னைப் போல் அரைவேக்காடுகளின் உளறல்களிலிருந்தும் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு நல்ல ஆலோசனை யாரிடமிருந்து வந்தால் என்ன? எடுத்துக் கொள்வதுதானே சாலச் சிறந்தது?

புரிதலுக்கு நன்றி, சகோ!

7 comments:

வருண் said...

If you do not want to ask every silly questions, just google it, trust me, it should have been explained to someone by somebody else in detail-ow to do, what to do and all. You could learn yourself. :)

Mythily kasthuri rengan said...

சில வேளை என் தனிப்பார்வைக்கு என வரும் சில நீண்ட பின்னூடங்களை படிக்கமுடியாமல் திணறுகிறேன். முன்பு publish கொடுத்து படித்துவிட்டு,delete செய்துகொண்டிருந்தேன்.published கமெண்ட்ஸ் விருப்பட்ட சிலருக்கு மெயில் லாக போய்விடுகிறது என்பதே லேட் டாக தான் தெரிந்தது.google பண்ண நேரம் இல்லை வருண். அதை கற்றுக்கொள்ளவேண்டும் முதலில். நேரமிருப்பின், நீங்கள் அதற்கு தீர்வு சொல்லலாம். ஆமா, இந்த பதிவிலே எதாவது உள் குத்து இருக்கா பாஸ்!!??

வருண் said...

Mythily: If you are not sure, you can move the "unsure comments" to "spam box" and publish it after carefully reading it. Also, you need to check your "spam box" once in a while. Some comments will get there. The commenter might think you purposely did not publish it. There are lot of misunderstandings possible in blog world.

Also, you can also save the abusive comments in the spam box, which may be useful in the future. :)
__________________

***இந்த பதிவிலே எதாவது உள் குத்து இருக்கா பாஸ்!!?? ***

சத்தியமா இல்லை, மைதிலி! :)

திண்டுக்கல் தனபாலன் said...

Blogger-ன் பொதுவான அமைப்புகளை (settings) இங்கே "டொய்ங்... டொய்ங்..."(http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Speed-Wisdom-9.html) கூறி உள்ளேன்... இன்னும் பல விதங்களில் இருக்கிறது...

1) முன்பு நமது தளத்தில் இடும் நம் மறுமொழிகளை நீக்கினால், நீக்கினதற்கான அடையாளம் இருக்கும்... இப்போது அவற்றை முழுமையாகவும் நீக்கி விடலாம்... அது போல் நம் தளத்திற்கு வரும் மற்ற கருத்துரைகளும்...

2)...

3)...

இன்னும் விளக்கமாக... ம்... முடிந்தால் ஒரு பதிவு எழுதுகிறேன்... நன்றி...

G.M Balasubramaniam said...


நான் இந்த மட்டறுத்தலே வைத்துக் கொள்ளவில்லை, தனிப்பட்ட முறையில் பதிவரைக் காயப் படுத்தாத எல்லாப் பின்னூட்டங்களும் ஏற்பேன் எனக்கு வரம்பு மீறி போகிறது என்று தோன்றினால் அதை நீக்கி விடுவேன். அந்த சந்தர்ப்பம் இதுவரை நேரவில்லை. பதிவுலகில் கற்பதற்கு நிறையவே விஷயங்கள் இருக்கின்றது

வருண் said...

***
**திண்டுக்கல் தனபாலன் said...

Blogger-ன் பொதுவான அமைப்புகளை (settings) இங்கே "டொய்ங்... டொய்ங்..."(http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Speed-Wisdom-9.html) கூறி உள்ளேன்... இன்னும் பல விதங்களில் இருக்கிறது...

1) முன்பு நமது தளத்தில் இடும் நம் மறுமொழிகளை நீக்கினால், நீக்கினதற்கான அடையாளம் இருக்கும்... இப்போது அவற்றை முழுமையாகவும் நீக்கி விடலாம்... அது போல் நம் தளத்திற்கு வரும் மற்ற கருத்துரைகளும்...

2)...

3)...

இன்னும் விளக்கமாக... ம்... முடிந்தால் ஒரு பதிவு எழுதுகிறேன்... நன்றி...***

நன்றி, தனபாலன். த்ங்கள் தமிழ் வலைப் பணி தொட்டரட்டும் :)

வருண் said...

***G.M Balasubramaniam said...


நான் இந்த மட்டறுத்தலே வைத்துக் கொள்ளவில்லை, தனிப்பட்ட முறையில் பதிவரைக் காயப் படுத்தாத எல்லாப் பின்னூட்டங்களும் ஏற்பேன் எனக்கு வரம்பு மீறி போகிறது என்று தோன்றினால் அதை நீக்கி விடுவேன். அந்த சந்தர்ப்பம் இதுவரை நேரவில்லை. பதிவுலகில் கற்பதற்கு நிறையவே விஷயங்கள் இருக்கின்றது.***

எல்லோரையும் அனுசரித்துப் போய்விட்டால் வம்பு எதுவும் வராது சார். உங்க அனுகுமுறை எல்லோருக்கும் வராது சார். மேலும் பெண் பதிவர்களுக்கு பலவிதமான சிக்ககல்கள் வரலாம்.