Monday, April 27, 2015

படிப்பது அறிவை வளர்த்துக்கொள்ளவா? ஸ்டாக் மார்க்கட் அப்டேட்!

குழந்தைகள், மாணவ மாணவிகள் பள்ளிக்குப் போயி படிப்பது  அறிவை வளர்த்துக்கொள்ளத்தான். ஆனால் தமிழில் ஆர்வம் உள்ள உங்க மகனை, மகளை .எத்தனை பேரு தமிழ் இலக்கியம் படிக்க ஊக்குவித்து இருக்கீங்க?  ஒரு வேளை நீங்க  தமிழ் படிக்க ஊக்குவித்து இருந்தால், அவர் தமிழில் டேன் ப்ரவ்ன் அளவுக்கு ஒரு பெரிய எழுத்தாளராகி இருக்கலாம். இல்லைனா தமிழிலக்கியத்தில் அல்லது ஆங்கில இலக்கியத்தில் அவர் நோபல் பரிசு பெற்றிருக்கலாம்.  அந்த ஒரு வாய்ப்பை நீங்க கொடுப்பதே இல்லை. நீங்க ஒரு மிகவும் சாதாரணமான இந்தியப்பெற்றோகள்தானே? பிளஸ் 2 வில் நெறைய மதிப்பெண்கள் பெற்று என் மகன் டாக்டர் ஆகணும். என் மகள் இஞ்சினியார்கணும். இதே கனவுதான் எல்லாப்பெற்றோருக்கும். அமெரிக்கா வந்தும் இந்தியர்கள் மட்டும் இதே வட்டத்தில்தான் இருக்காங்க. கடைசியில் ஏழைகளுக்கு உதவ டாக்டர் ஆனேன், ஆனால் நான் இப்போ என்ன பண்ணுகிறேன்னு ஒரு குற்ற உணர்வுக்கு குபதில் சொல்ல முடியாமல் யோகா அது இதுனு இறங்கி வாழ்ந்து முடிக்கணும். பொதுவாக உங்க குழந்தையின் தலை எழுத்தை  அழகாக எழுதாமல் கிறுக்கி வைப்பது நீங்கள்தான். ஆமா, உங்க தலை எழுத்தை உங்க அம்மா அப்பா  கிறுக்கி வைத்தார்கள்.

குழந்தையிலிருந்து உங்களுக்குப் பிடிச்ச, நீங்கள் ரசித்துப் படிக்கும் ஒரு பாடத்தில் நீங்கள் சுதந்திரமாக அதிக நேரத்தை செலவழிக்கவும், மேன் மேலும் அதையே படிக்கவும் உங்களுக்கும் வாய்ப்புக் கொடுப்படவில்லை. அதாவது உங்களுக்கும் போதுமான சுதந்திரம் கிடைக்கவில்லை. அதேபோல் நீங்களும் உங்க குழந்தைக்கு சுதந்திரம் கொடுப்பதில்லை. இது ஒரு தொடர்கதை.
 ஆமாம், நான் பெற்ற இன்ப/துன்பம் தான் என் குழந்தையும் பெறணும் என்று தெரிந்தோ தெரியாமலோ நாமே முடிவு செய்கிறோம்.

உங்களை "சரி செய்யச் சொல்ல" நான் மடையன் இல்லை. நாம் செய்யும் செயல்களை நாம் புரிந்து கொள்வோம் என்கிறேன். என்ன பண்ணுறது, உங்களுக்குப்பிடிக்காத பாடங்களையும் நீங்க படித்தால்த்தான் பாஸ் ஆக முடியும், நிறைய மதிப்பெண்கள் பெற முடியும்.அப்போத்தான் டாக்டராக முடியும் இஞ்சினியர் ஆக முடியும். நெறைய சம்பாரிக்க முடியும். இல்லையா? ஆக உங்களுக்கு பிடித்தவற்றில் மட்டும் உங்க அறிவை வளர்த்துக்கொள்ள வாய்ப்பை வழங்குவது இல்லை. அதுதான் நம்முடைய எஜுக்கேஷன் சிஸ்டம். இதுதான் நாம் வாழும் வாழ்க்கை.

ஒரு சில நேரம் ஒரு சில மாணவ மாணவிகளிடம் "நீ இந்த சப்ஜெக்ட்ல இன்னும் அதிக நேரம் செலவழிச்சுப் படிக்கணும். கெமிஸ்ட்ரி ஒரு மாதிரியான சப்ஜெக்ட், எளிதில் எவாப்பரேட் ஆயிடும், அதாவது படிச்சதெல்லாம் மறந்துவிடும்" னு சொன்னால்.. "இல்லை எனக்கு இன்னொரு பாடத்தில் டெஸ்ட் இருக்கு, அதுக்கும்  படிக்கணும்" என்று தன் பிரச்சினைகளை சொல்வார்கள். நியாயமான காரணங்கள்தான் அவைகளும் என்று அதுபோல் அறிவுரை சொல்வதை விட்டுவிட வேண்டிய நிலை வரும். ஆக பொதுவாக நாம் படிக்கும் மாணவ  பருவத்தில் எதையும் உள்ளிறங்கி புரிந்துகொள்ள சரியான அளவு நேரம் கிடைப்பதில்லை. இருந்தாலும் ஒரு சில மாணவருக்கு என்ன படிக்கணும்னு தெரியும், எப்படி மார்க் வாங்கணும்னு தெரியும். எப்படிப் புரிந்துகொண்டால் சரியாக பதில் சொல்ல முடியும் என்றறிந்து பதிலெழுதி நிறைய மதிப்பெண்கள் பெற்றும் மேலே மேல்ப்படிப்புக்குப் போய் விடுவார்கள்.  அதுக்கப்புறம் ஒரு வருடம் கழித்து அவங்க படிச்சு நெறைய மதிப்பெண்கள் பெற்ற அந்த சப்ஜெக்ட் சுத்தமாக மறந்துவிடும். அதைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள் என்பதுதான் கொடுமை.

ஆக நம் எஜுக்கேஷன் சிஸ்டம் (இந்தியா அமெரிக்கா எல்லா இடங்களிலும் தான்) நிச்சயம் குறையில்லாததல்ல! அதனால் நீங்க நல்லாப் படிக்கவில்லைனா நீங்க மக்கு என்றும், நிறைய மதிப்பெண்கள் வாங்கி மேலே சென்றுவிட்டால் நீங்க அறிவாளி என்றெல்லாம் என்னால் ஏற்றுக்க முடியாது.
உங்களிடம் உள்ள திறமையை நீங்க உங்களுக்கு எது நல்லா வருதோ அதில் முழுவதுமாக செலவழிக்கவில்லை. அதனால் உங்க எதிர்காலம் பிரகாசமாக அமையவில்லை. நீங்க திறமையே இல்லாதவராக எல்லாம் பிறக்கவில்லை என்பதே உண்மை.

ஆனால் நீங்க டாக்டராகி, இஞினியராகினால் நெறைய சம்பாரிக்கலாம், உங்க ஸ்டேட்டஸ் உயரும்.

ஆனால்  you need to understand, you have to do the job for 30 years! You should like what you are doing besides making money.

Choose a job you love, and you will never have to work a day in your life.

பள்ளியில் படிக்கும்போது என்னுடைய நண்பன் ஒருவன். மற்ற மாணவர்கள் போல் அவர் போட்டி, பொறாமை, நான் முதலிடம் வரணும் என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனம் பண்ண மாட்டான். பொய் சொல்ல மாட்டான். அவனுடைய அப்பா அம்மா இருவரும் பள்ளி ஆசிரியர்கள். அவர்களும் அவன் மனமறிந்து அவனை அவன் இஷ்டப்படி இஷ்டமிருந்தால் படிக்க ஊக்குவித்தார்கள்னு நினைக்கிறேன். பாடம் படிப்பதைவிட ஏகப்பட்ட புத்தகங்கள் படிப்பான். அவனிடம் ஏதாவது நான் சந்தேகம் கேட்டால், "உனக்கு இதுகூடத் தெரியலையா?" என்று சொல்லி சிரிக்கமாட்டான். அவனைவிட என்னை ஒருபோதும் குறைவாக நினைக்க மாட்டான். பொறுப்பாக அவனுக்கு தெரிந்ததை அவனால் முடிந்த அளவு அதை விளக்குவான்.  அழகாக விவரிப்பான். அவனுக்குப் போட்டி மனப்பாண்மை எல்லாம் கிடையாது.  அவனுடைய வீக்னெஸ்னு பார்த்தால் அவனுக்கு படிக்க "மூட்" வேண்டும் என்பான். "மூட்" இல்லைனா படிக்க மாட்டான். மற்ற நல்லாப் படிக்கும் மாணவர்கள் (ரொம்பச் சாதாரணமானவர்கள்), அவனுடைய ரைவல்ஸ் எல்லாம் அவனைக் கேலி செய்வார்கள் (புறமாகத்தான்).. "ஆமா, நாளைக்கு பரீட்சை இவனுக்கு இருந்தால், படிக்க  மூட் இல்லைனா, ஃபெயிலா யிடுவானா?" என்று.

You need to understand, people talk behind your back. They smile at you and behave wonderfully in front of you. They may not have much to say good about you when they talk about you to another friend.

The one who is talking to you about me today is the one who will be talking to me about you tomorrow.

I agree, not everybody is like that. But people in general are like that. It is better to know such facts. Anyway..

நான் மேலே சொன்ன நண்பன் பெரிதாகப் படித்து ஒண்ணும் சாதிக்கவில்லை என்பது உண்மையே. சாதனை என்று நீங்கள் நினைக்கும் சாதனைகளைச் சொன்னேன். ஆனால் என்னைப்பொருத்தவரையில் இன்றும் அவன் எனக்கு பெரிய அறிவாளியாகத்தான் தோன்றுகிறான். அவனைவிட பல மடங்கு படித்து மேலே வந்தவர்கள் சாதாரணமாக்த்தான் தோனுகிறார்கள். சகமாணவன் ஒருவனுக்கு தனக்குத் தெரிந்ததை சொல்லிக் கொடுத்தால் அவனும் கற்றுக்கொள்வானே? அவன் அதிகமாக மார்க் வாங்கிவிட்டால்? என்கிற சிறு புத்தி அவனுக்கு ஒருபோதும் இருந்தது இல்லை. நம்மையே அறியாமல் இதுபோல் நண்பர்களிடம் இருந்துதான் நமக்கும் இன்றுள்ள நாலு நற்குணங்கள் சிலவும் வந்துவிடுகின்றன.

*********************************
 கொசுறு 1 (giriblog இல்லை இது. :) )

சரி, தங்கம், ப்ளாட்டினம் எல்லாம் விலைஉயர்ந்த உலோகங்களாக இருக்கின்றன. விலை உயர்வுக்குக் காரணம் எப்போவுமே மங்காமல், மாறாமல் இருக்கின்றன. அதனால் அவைகளுக்கு மதிப்பு அதிகம். ஆனால் இரும்பு, அலுமினம் போன்றவை அப்படியல்ல.

இதை வேற மாதிரி யோசிப்போம்.

ஆக்ஸிடேஷன் என்பது ஒரு இயற்கையாக நடக்கும் ரியாக்சன். அதாவது இரும்பு தாதுக்களாக இருக்கும்போது ஆக்ஸைட்ஸ் ஆகக் கிடைக்கும். மனிதன் அதிலுள்ள ஆக்ஸினை கழட்டிவிட்டு, அதை இரும்பாக ஆக்குவான். அதை பலவகையிலும் பயன்படுத்துவான். அதிலிருந்து ஸ்டீல் உருவாக்குவான். பல உலோகக் கலவைகள் தயாரிப்பான். அதை வைத்து தனக்குத் தேவையான திடமான பொருள்களை தயாரிப்பான். ஆனால் வருடங்கள் கடக்கக் கடக்க இரும்பு ஆக்ஸிஜனுடன் உறவாடி மறுபடியும் இரும்பு ஆக்ஸைடாக, ரஸ்ட் ஆக ஆரம்பித்துவிடும். அதாவது திரும்ப தாதுக்களாகவே மாற ஆரம்பிக்கும்.

ஆனால் தங்கம் ப்ளாட்டினம் போன்றவை அவ்வளவு எளிதாக ஆக்ஸினோடு உறவாடி ஆக்ஸைட்களாக மாறுவதில்லை. அதனால் அவைகள் நூற்றுக்கணக்கான  ஆண்டுகளுக்கு மேலே பளபளப்பாகவே இருக்கும் என்றும் விளக்கலாம்.

கொஞ்சம்  கெமிஸ்ட்ரி கத்துக்கிட்டீங்களா?

தங்கத்தின் அணு எண் என்ன?

அதனோட எலக்ட்ரான் கான்ஃபிகுரேஷன் தெரியுமா?

+2 வில் நீங்க அறிவியல் படிக்கவில்லையா?

படிச்சேன்.. ஆனால் ..

எல்லாம் மறந்துடுச்சா?

இல்லை உங்க வாத்தியார் புரிகிறார்போல் சொல்லிக் கொடுக்கவில்லையா?

சரி, விடுங்க! நான் எப்போதுமே என் கெமிஸ்ட்ரி வாத்தியார்களைத்தான் குறை சொல்லுவேன்! 

-----------------
கொசுறு 2:

ஸ்டாக் மார்க்கட் பத்தி எழுதுவோமா?

இது காசு சம்பாரிக்கவோ, உங்களை டெம்ப்ட் பண்ணி, புதை குழியில் தள்ளவோ எழுதவில்லை. சும்மாதான். நான் சொல்வதைக் கேட்டுவிட்டு, நான் சொன்ன ஸ்டாகில் காசை நீங்க விட்டுவிட்டால்  நான் பொறுப்பல்ல.

* ஹாண்டா (HMC) , டொயோட்டா (TM) எல்லாம் கடந்த மூன்று  மாதங்களாக அதில் இன்வெஸ்ட் பண்ணியவர்களை சந்தோஷப்படுத்துகிறது.

* ட்விட்டர் (TWTR) மற்றும் ஃபேஸ் புக் (FB) ஸ்டாக் களும் தான். கடந்த 3-6 மாதங்களில்.

* ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பில் சரியான நேரத்தில் இறங்காத்தால் படுத்து இருந்த சோனி (SNE), கடந்த இரண்டு மாதங்களில் 15% மேலே போய் உள்ளது.

* கடந்த வார இறுதியில் மைக்ரோ சாஃப்ட் 10% அதிகமாகி உள்ளது. இது தொடர்ந்து மேலே போகுமா? இல்லை கீழே வருமா?னு சொல்ல எனக்கு ஜோஸியம் தெரியாது.

* kroger திடீர்னு மேலே போயி (30%?) ஒரு மாதிரி நிதானிச்சு நிக்கிது.

Are you a gambler? I mean do you invest in stocks?

A says: Stock market? What's that?

You are lucky!

B says: I dont have money.

You are lucky too.

C says: I did own all those stocks and made money!

You are a winner today. May be not tomorrow!  Keep gambling!

D says: All my stocks went down! I did not have FB, HMC, TWTR, TM, KR, MSFT  stocks.

I am sure you are going to wait until your stock goes up! Keep gambling. Hold them till it goes up or down!

*************************


23 comments:

முகுந்த்; Amma said...


I have a similar story to share. We went for my husbands cousin marriage in NJ couple of years back. He is an ABCD. His both parents are doctors and came and settled down here in 80s. But they didn't push the kids to study medicine as most of indian parents here do. One became patent attorney snd another became a musician. When we went for the Marriage , Aunty said to us that, in her friends circle they were called as failure parents, because none of her kids are doctors like thrm. But she said, I give deaf ear to those comments because all I want is my kids to be happy. Although they might not earn as much as we do, they enjoy yhe life to the fullest.

That was a great comment and eye opener for us.

So as you said, it doesnt matter what others think of yourself, but what does matter is what you think of yourself and how confident are you in doing the job

Thanks

SathyaPriyan said...

தேவையான பதிவு வருண். உலகில் வெகு சிலருக்கே அவர்களது தொழிலும் பேஷனும் ஒன்றாக இருக்கின்றது. அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இந்தியாவில் இந்த நிலை வர இன்னும் ஒரு தலைமுறையாவது தேவைப்படும்.

SathyaPriyan said...

புதிதாக கமென்ட் மாடரேஷன் வைத்து விட்டீர்களா? என்ன ஆனது? ஏதாவது நாதாரி வந்து இங்கே வாந்தி எடுத்ததா?

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

//அமெரிக்கா வந்தும் இந்தியர்கள் மட்டும் இதே வட்டத்தில்தான் இருக்காங்க// நச்! பிள்ளைகளுக்குப் பிடித்த பாடத்தைப் படிக்க நேரம் போதவில்லை, பள்ளி சென்று வருவதால்..ஹோம்ஸ்கூலிங் போட்டு பிடித்ததை மட்டும் படிக்கச் செய்யலாமா என்று யோசித்து . யோசித்து செயல்படுத்தவில்லை (கொஞ்சம் பயம், கொஞ்சம் எதிர்ப்பு).. :)
பிள்ளைகள் என்ன ஆகிறார்களோ பார்க்கலாம்.
உங்களுக்கு கெமிஸ்ட்ரி ரொம்ப பிடிக்குமோ? :)

Unknown said...

பிள்ளைகளுக்கு வாழ்வில் வெற்றிபெற தேவையான படிப்பை படிக்க சொல்வது எப்படி குற்றம்? ஒருமுடி வெட்டும் தொழிலாளி தன் மக்களை டாக்டர் படிக்கச் சொல்லி கட்டாய படுத்துவது எப்படி தவறாகும். சிறிது சிரமமாக இருக்கலாம் ஆனால்தங்களுக்கு தெரிந்த நல்ல வழி காண்பித்தலில்தவறு இல்லை என்று நினைக்கிறேன். தம் மக்களாவது மேன்மை அடைய நினைப்பதுதவறா?
மேலும் இள வயதில் தவறாக குழந்தைகள் வழி காட்டப்பட வாய்ப்பு உண்டு. பொருளாதாரத்தில் முன்னேறிய பின் எப்படி வேண்டுமானாலும் படித்து கொள்ளலாம் அவரவர் விருப்பம் போல். அதற்கு முன், உள்ளுவதெல்லாம் உயர்வுவுள்ளல் சரி என்று தோன்றுகிறது

வருண் said...

***முகுந்த் அம்மா said...


I have a similar story to share. We went for my husbands cousin marriage in NJ couple of years back. He is an ABCD. His both parents are doctors and came and settled down here in 80s. But they didn't push the kids to study medicine as most of indian parents here do. One became patent attorney snd another became a musician. When we went for the Marriage , Aunty said to us that, in her friends circle they were called as failure parents, because none of her kids are doctors like thrm. But she said, I give deaf ear to those comments because all I want is my kids to be happy. Although they might not earn as much as we do, they enjoy yhe life to the fullest.

That was a great comment and eye opener for us.

So as you said, it doesnt matter what others think of yourself, but what does matter is what you think of yourself and how confident are you in doing the job

Thanks***

Most of the Americans generally think like your "doctor-relatives". Not many Indian-americans fall in this category. It will take a while for Indians to get there. 90% of the Indian kids do "premed" when they are feshmen. If they are not too "bright", they will get to some mediocre school to do the same, or they will go to India to study MBBS using the "NRI" quota. :-)

வருண் said...

****SathyaPriyan said...

தேவையான பதிவு வருண். உலகில் வெகு சிலருக்கே அவர்களது தொழிலும் பேஷனும் ஒன்றாக இருக்கின்றது. அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இந்தியாவில் இந்த நிலை வர இன்னும் ஒரு தலைமுறையாவது தேவைப்படும்.***

நான் பார்க்கிற அமெரிக்கர்களிடம் இந்தமனநிலை இருக்குங்க. அதாவது தன் பையன்/பொண்ணு ஏதோ படித்து ஒரு நிரந்தர வேலையில் சந்தோஷமாக இருந்தால் போதும் என்கிற மனநிலை. பையன் கோடிகோடியா ச்சம்பாரிக்கலைனா அவன் தோல்வியடைந்ததாக நினைப்பதில்ல. படிக்கும்போது ரொம்ப "ப்ரெஸரைஸ்" பண்ணுவதில்லை. ஆனால் சைனீஸ் இந்தியர்கள் எல்லாம் அப்படியல்ல .முகுந்த் அம்மா சொல்வதுபோல் விதிவிலக்கு சில விழுக்காடுகள் இருக்காங்க.

வருண் said...

***SathyaPriyan said...

புதிதாக கமென்ட் மாடரேஷன் வைத்து விட்டீர்களா? என்ன ஆனது? ஏதாவது நாதாரி வந்து இங்கே வாந்தி எடுத்ததா?***

ரொம்பக் காலம் ஆச்சே! நீங்க ரொம்ப லாங்க் ப்ரேக்ல போயிட்டீங்கனு நினைக்கிறேன். "அனானி" தொல்லைகள் எப்போவும் இருக்கும். மாடேரேஷன் இருப்பது நல்லதுனு திடீர்னு (காலம் கடந்த்) ஞானோதயம் வந்துருச்சு. :)

விசு said...

வருண்... நல்ல பதிவு ...
பள்ளி நாட்களில் என் கனவே .. ஒரு திரைப்பட ஒளிபதிவு - இயக்குனர் ஆகவேண்டும் என்பதே ...(Thanks to Director Balumahendra). ஒரு வெறி. விடுவார்களா வீட்டில்.. நீ சினிமா பார்ப்பதே தவறு இதில் எடுக்க வேற போறியா என்று என்னை திருத்தி (அப்படி தான் சொல்லுகின்றார்கள்).. படி படி என்று சொல்லி ஏதோ நானும் நாலு வார்த்தை படித்து இப்போது குப்பை கொட்டிக்கொண்டு இருக்கின்றேன். நீங்கள் சொல்லியது போல் பிடிக்காத ஒன்றை 30 வருஷம் தள்ளுவது சிரமம் தான். இருந்தாலும் 21ல் ஆரம்பித்ததை 28 வருடங்கள் தள்ளிவிட்டேன் .இன்னும் ஒரு இரண்டு வருடங்கள் தள்ளிவிட்டு . ரெண்டாவது ராசாத்தி கல்லூரிக்கு சென்றவுடன் .. "ஒன் வே டிக்கட் டு கொடம்பாக்கம்" தான் . ஹாலிவூடில் ஏதாவது செய்ய வேண்டியது தானே என்று அவர்கள் உண்மைகள் சொல்வார். நமக்கு அது ஒத்து வராது.
உங்களின் கெமிஸ்ட்ரி மற்றும் ஸ்டாக் தகவலும் நன்று.

வருண் said...

*** தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

//அமெரிக்கா வந்தும் இந்தியர்கள் மட்டும் இதே வட்டத்தில்தான் இருக்காங்க// நச்! பிள்ளைகளுக்குப் பிடித்த பாடத்தைப் படிக்க நேரம் போதவில்லை, பள்ளி சென்று வருவதால்..ஹோம்ஸ்கூலிங் போட்டு பிடித்ததை மட்டும் படிக்கச் செய்யலாமா என்று யோசித்து . யோசித்து செயல்படுத்தவில்லை (கொஞ்சம் பயம், கொஞ்சம் எதிர்ப்பு).. :)


பிள்ளைகள் என்ன ஆகிறார்களோ பார்க்கலாம்.***


ஹோம் ஸ்கூலிங்ல என்ன பிரச்சினைனா குழந்தைகள் சோஸியலைஸ் பண்ணுவது, ஒரு ரெகுலர் ஸ்கெடுல் ஃபாலோ பண்ணுவது, பள்ளியில் "bullying" போன்றவற்றை சமாளிக்க கற்றுக்கொள்வது, நட்பு வட்டம் அதிகரிப்பது போன்றவை கொஞ்சம் பாசிபில் இல்லைனு நினைக்கிறேன், கிரேஸ்.

-----------

*** உங்களுக்கு கெமிஸ்ட்ரி ரொம்ப பிடிக்குமோ? :)***

ஆமங்க. :) கெமிஸ்ட்ரிக்கும் என்னைப் பிடிக்கும் என்பது கூடுதல் செய்தி. :)

வருண் said...

***வருண்... நல்ல பதிவு ...
பள்ளி நாட்களில் என் கனவே .. ஒரு திரைப்பட ஒளிபதிவு - இயக்குனர் ஆகவேண்டும் என்பதே ...(Thanks to Director Balumahendra). ஒரு வெறி. விடுவார்களா வீட்டில்.. நீ சினிமா பார்ப்பதே தவறு இதில் எடுக்க வேற போறியா என்று என்னை திருத்தி (அப்படி தான் சொல்லுகின்றார்கள்).. படி படி என்று சொல்லி ஏதோ நானும் நாலு வார்த்தை படித்து இப்போது குப்பை கொட்டிக்கொண்டு இருக்கின்றேன். நீங்கள் சொல்லியது போல் பிடிக்காத ஒன்றை 30 வருஷம் தள்ளுவது சிரமம் தான். இருந்தாலும் 21ல் ஆரம்பித்ததை 28 வருடங்கள் தள்ளிவிட்டேன் .இன்னும் ஒரு இரண்டு வருடங்கள் தள்ளிவிட்டு . ரெண்டாவது ராசாத்தி கல்லூரிக்கு சென்றவுடன் .. "ஒன் வே டிக்கட் டு கொடம்பாக்கம்" தான் **

அடடா விசு, நீங்க உள்ளப்பூர்வமா உருக்கமாக ஒரு நடமாடும் உதாரணமா இருக்கேன்னு சொல்றீங்க.

அடுத்த ரஜினி படத்தை, தீபிகா படுகோனே மற்றும் கட்ரியா கயிஃப் னு ரெண்டு ஹீரோயின்களை வைத்து நாலு டூயட்டுடன் ஒரு படம் இயக்குறீங்களா? னு ஒரு ஆஃபர் வந்தால், turn down பண்ணீடாதீங்கோ, விசு! :)))

உங்களுக்காக இல்லைனாலும் எனக்காக தயவு செய்து அந்த ஆஃபரை ஏற்றுக்கொள்ளுங்கள்! :))

வருண் said...

***ssk tpj said...

பிள்ளைகளுக்கு வாழ்வில் வெற்றிபெற தேவையான படிப்பை படிக்க சொல்வது எப்படி குற்றம்? ஒருமுடி வெட்டும் தொழிலாளி தன் மக்களை டாக்டர் படிக்கச் சொல்லி கட்டாய படுத்துவது எப்படி தவறாகும். சிறிது சிரமமாக இருக்கலாம் ஆனால்தங்களுக்கு தெரிந்த நல்ல வழி காண்பித்தலில்தவறு இல்லை என்று நினைக்கிறேன். தம் மக்களாவது மேன்மை அடைய நினைப்பதுதவறா?
மேலும் இள வயதில் தவறாக குழந்தைகள் வழி காட்டப்பட வாய்ப்பு உண்டு. பொருளாதாரத்தில் முன்னேறிய பின் எப்படி வேண்டுமானாலும் படித்து கொள்ளலாம் அவரவர் விருப்பம் போல். அதற்கு முன், உள்ளுவதெல்லாம் உயர்வுவுள்ளல் சரி என்று தோன்றுகிறது> ***

வாங்க எஸ் எஸ் கே!

என்னுடைய அம்மா அப்பா என் அளவுக்குப் படிக்கவில்லை. எனக்கு இருந்த வசதியும் அவங்களுக்கு இருந்தது இல்லை. ஆனால் என்னைவிட மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்தார்கள் வாழ்கிறார்கள். நான் உயரத்தில் பறந்துபோயி சந்தோசத்தை எல்லாம் வாங்க முடியலை. பதிவுலகில் நாலு பேருட்ட திட்டு வேணா நெறையா வாங்கியிருக்கேன். :)))

என்னை விடுங்க, உங்க மனசுக்கு எது சரினு தோனுதோ அதை செய்ங்க. நான் உளறுவதை யெல்லாம் சீரியஸா எடுத்துக்கதீங்க. I am honest here, Sir. !

விசு said...

திரை உலகம் என் கனவு என்பது உண்மையே... அது சரி ...
ஏன் வருண்.. நான் உங்களிடம் அன்பா தானே பழகி வருகிறேன். என் மேல் ஏன் இந்த வெறுப்பு? ரஜினியை வைத்து ரெட்டை நாயககிகளோடு 4 டூயட் ..? அப்புறம் விநியோகஸ்தர்கள் எல்லாம் என் வீட்டின் எதிரில் போராட்டம் , இது நமக்கு தேவையா ?

SathyaPriyan said...

Varun, please check this post.

http://swamysmusings.blogspot.com/2015/04/blog-post_28.html

Someone has misrepresented my comments.

I know you know me and care a damn about such cowardly acts. I just want to bring it to your attention. I also notified Professor Kanthasamy Sir about the same.

வருண் said...

***விசுAWESOME said...

திரை உலகம் என் கனவு என்பது உண்மையே... அது சரி ...
ஏன் வருண்.. நான் உங்களிடம் அன்பா தானே பழகி வருகிறேன். என் மேல் ஏன் இந்த வெறுப்பு? ரஜினியை வைத்து ரெட்டை நாயககிகளோடு 4 டூயட் ..? அப்புறம் விநியோகஸ்தர்கள் எல்லாம் என் வீட்டின் எதிரில் போராட்டம் , இது நமக்கு தேவையா ?***

So, you would turn it down? lol

வருண் said...

***SathyaPriyan said...

Varun, please check this post.

http://swamysmusings.blogspot.com/2015/04/blog-post_28.html

Someone has misrepresented my comments.

I know you know me and care a damn about such cowardly acts. I just want to bring it to your attention. I also notified Professor Kanthasamy Sir about the same. ***

Please dont worry about it. These things have been happening for a while. There are so many people come anonymously or with "special ids" to "pay off" an "old score". Some people encourage such attacks too. I just ignore them and move on! Take it easy, Sathyapriyan!

BTW, Dont be surprized if this response were also posted in someone else blog tomorrow! lol

Kasthuri Rengan said...

அருமையான பதிவு தோழர்,
பல்வேறு நினைவுகளைக் கிளறியது
அப்புறம்
இந்தக் கருத்தை வலியுறுத்துகிற மாதிரி படைப்புகள் வர வேண்டும் ...
வந்தால் கொஞ்சம் விழிப்புணர்வு வரலாம் ..
நன்றி தோழர்,
தம +

G.M Balasubramaniam said...


என் பேரனும் ஒரு ப்லாக் ஆங்கிலத்தில் எழுத்கிறான் கல்வி பற்றிய இளைய தலை முறையின் கண்ணோட்டம் தெரிகிறது. பல கருத்துக்களும் உங்களோடு ஒத்துப் போகின்றன நேரம் இருந்தால் படித்துப் பாருங்களேன்
vibhumanohar.blogspot.in

ஸ்டாக் மார்க்கெட் ஸ்பெல்லிங் கூடத் தெரியாது.

வருண் said...

***Mathu S said...

அருமையான பதிவு தோழர்,
பல்வேறு நினைவுகளைக் கிளறியது
அப்புறம்
இந்தக் கருத்தை வலியுறுத்துகிற மாதிரி படைப்புகள் வர வேண்டும் ...
வந்தால் கொஞ்சம் விழிப்புணர்வு வரலாம் ..
நன்றி தோழர்,
தம +***

மது: உங்கள் உள்ளப்பூர்வமான கருத்துக்கு நன்றி. நீங்கள் ஒரு ஆசிரியர் என்பதால் எந்தளவுக்கு உணர்ந்து எழுதியது உங்கள் பின்னூட்டம் என்று என்னால் உணரமுடிகிறது. :)

வருண் said...

*** G.M Balasubramaniam said...


என் பேரனும் ஒரு ப்லாக் ஆங்கிலத்தில் எழுத்கிறான் கல்வி பற்றிய இளைய தலை முறையின் கண்ணோட்டம் தெரிகிறது. பல கருத்துக்களும் உங்களோடு ஒத்துப் போகின்றன நேரம் இருந்தால் படித்துப் பாருங்களேன்.

vibhumanohar.blogspot.in ***

கட்டாயம் நேரம் கிடைக்கையில் உங்க பேரனை ஊக்குவிக்கிறேன் சார். என்னை உரிமையுடன் கேட்டுக்கொண்டதற்கு நன்றி சார்.

*** ஸ்டாக் மார்க்கெட் ஸ்பெல்லிங் கூடத் தெரியாது. ***

நன்று, சார்! :)

மகிழ்நிறை said...

wow!!!இப்போ டெய்லி பதிவு எழுதும் பிஸி ப்லாகராய் வருண் மாறிய விஷயம் தெரியாம போச்சே:)

-------
I am lucky Varun. என்னோட வேலை தான் என் passion:)

-------
நிலவன் அண்ணாவின் முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே பதிவு, அது புத்தகமாகவும் வந்திருக்கிறது. இதே கருத்தை அண்ணாவும் அதில் வலியுறுத்தி இருப்பார்:)

-----
உண்மையில் உங்க CHEMISTRY கிளாஸ் பதிவுகள் எப்பவுமே class ஆ தான் இருக்கு. தமிழகம் ஒரு நல்ல CHEMISTRY டீச்சரை தவறவிட்டிருக்கிறது:)
-----
STOCKS அது கஸ்தூரி ஏரியா .....
full meals பதிவு:)

ஆரூர் பாஸ்கர் said...

Varun,

I too agree that here in US, Indians push their kids to study.

We have to agree the fact that we are minorities. Hence, the best bet for them may be good education and scale academically.

We can not let the kids to stop with High Schools, since they like not to do so ?

-ஆரூர் பாஸ்கர்
http://aarurbass.blogspot.com/

Angel said...

தங்கம்..aurum .79 ..எனக்கு மறக்கலை :) இன்னும் Periodic tables கூட நினைவிருக்கு
ப்ளஸ்டூவோடு கெமிஸ்ட்ரியை விட்டு பயாலஜி பக்கம் போனாலும் இன்னும் நினைவிருக்கு ..கிரெடிட் கோஸ் டு மை CHEM .டீச்சர்
ஸ்டாக் ..!! தெரிஞ்ச ஒண்ணு வெஜிடபிள் ஸ்டாக் ..
நாங்க எங்க மகளுக்கு எது ஆசையோ அதையே படிக்க சொல்லிட்டோம் ..யூகேவில் 6th form ஹை levels எடுக்கும் பல இந்திய பிள்ளைகள் யூனிவெர்சிடியில் முனேராம அரியர்ஸ் வெக்க காரணம் parental ப்ரெஷர் ..அது தவறு ...
there is a very fine line between caring and caring too much
.i've come across many kids saying (especially British born second- and third-generation Asians(BBCD )
//my parents pushed me to achieve//


but me and Dh, would like our daughter to say this ...
My parents loved me and let me decide my future what I was passionate about.