Thursday, December 10, 2015

குழப்பத்தில் ஒலகநாயகர் ர சி கா மணிகள்!

வெள்ளம் கரை புரண்டு ஓடி மக்கள் எல்லாம் உயிரை இழந்து உடமையை இழந்து நிற்கும்போது நிதானம் தேவை. மற்ற அரசியல்வாதிகள் வெள்ளத்தை வைத்து ஆட்சியை இறக்க முயல்வதும், ஆளுங்கட்சி வெள்ள உதவி வழங்கி தம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயல்வதையும் தவிர்க்க முடியாது. ஏன் னா அவர்கள் தொழில் அரசியல்!

நம்ம உலகநாயகனுக்கும் ஆளும் ராணிக்கும் விஸ்வரூபம் தொடர்ந்து பிரச்சினைகள். தூங்காவனம் பாக்ஸ் ஆபிஸ் பாதிப்புகூட அதோட வெளிவந்த வேதாளம் ஆளுங்கட்சி சினேகிதர்களால் வெளியிட்டப்பட்டதே என்கிற தியரியை நம்புகிற நிலையில் இருக்கிறார் ஒலகநாயகர்.

இப்போ வெள்ளம். அதனால் பாதிப்புனு வரும்போது, பெருந்தலைகள் என்ன செய்யணும்? பண, பொருள் உதவி செய்யணும்!  இல்லைனா சும்மா இருக்கணும். இந்த சமயத்தில் நான் நெறையா வரிகட்டுறேன், அரசாங்கம்தான் ஏழைகளை காப்பாத்தணும். "சிஸ்ட்மே கொல்லாப்ஸ்" ஆயி இருக்குனு சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் அது  தவறாகப் பார்க்கப்படும். ஆளுங்கட்சியால்  மட்டுமல்ல! பாதிக்கப் பட்ட பொதுமக்களாலும்தான் இது தவறாகப் பார்க்கப்படும்.

ஆனால் உலக நாயகர் உதவி எதுவும் செய்யமுடியலையேனு குற்ற உணர்வுடன் வெட்கப்பட்டதோட நின்னு இருக்கலாம். இந்த ஒரு சூழலில் ஆளுங்கட்சியை விமர்சித்தல் மற்றும் நான் வரி கட்டுறேன், நல்ல குடிமகன் என்று சொல்வதெல்லாம் (அப்படி சொல்லியிருந்ந்தால்) அது புத்திசாலித் தனம் அல்ல!

இன்னைக்கு உள்ள சோஷியல் மீடியாவில் சொன்னதையும் உண்மை மாரி கொஞ்சம் சேர்த்துவிட்டு எழுதுவான்! சொல்லாததையும் சொன்னதாக எழுதுவான்!

உலகநாயகன் ஏதோ "அப்படி" மேற்கூறியபடி சொன்னதாக செய்தி வெளிவர. உடனே அவருக்கு முழுநேரமும் (என்ன எழவைச் சொன்னாலும் சரி சரினு ,)  கால்வருடும் அவர் விசிறிகளும்... ஆஹா ஓஹோ, ஒலக நாயகர் வீரத்தை காட்டிப்புட்டாரு, உண்மையைச் சொல்லிப்புட்டாரு னு மார்தட்ட..

உடனே அமைச்சர் பன்னீர் செல்வம் இவருக்கு எதிரா, இவர் சொன்னதாக சொல்லப்பட்டதுக்கு எதிராக  ஒரு பெரிய ஸ்டேட்மெண்ட் விட..

உடனே அரசியல் ஆதாயம் தேட டாக்குட்டரு ராமதாஸ் கமலுக்கு கைகொடுக்க வர..

கமலஹாசன் நான் அப்படி எதுவும் ஆளுங்கட்சியை விமர்சிக்கவில்லை னு மறுத்துச் சொல்ல!

 எல்லாம் நாசமாப்போச்சு!

கமல் என்ன சொன்னாலும் சரி சரினு கால் அமுக்கிவிடுப்வன்  நிலைமை அதோகதியாயிடுச்சு!!

ஒரு பக்கம் கமலஹாசன் குழப்புறார்னா.. இம்முறை குழம்பியது அவர் சொல்வதெல்லாம் புரிந்தமாரி நடிக்கும் "ரசிகாமணிகள்"தான்!

பி ஆர் வோ நிகில் முருகனுக்கு வேலை போய்விட்டதா ஒரு வதந்தி உலவுது!

இந்தப் பாழாப்போன வெள்ளம்தான் எல்லாத்துக்கும் காரணம்!

இந்நிலையிலும் புன்னகைக்கிறார் நம் பகவான்! இந்தாளுக்கு நேரங்காலம் தெரியாது! கொஞ்சம் சோகமாக இருக்கலாமே? கூறுகெட்ட மனுஷன்! :(

5 comments:

பழமைபேசி said...

என் சார்பாக செத்துப் போன குடுகுடு வந்து கர்த்து சொல்வார்.

வருண் said...

****பழமைபேசி said...

என் சார்பாக செத்துப் போன குடுகுடு வந்து கர்த்து சொல்வார்.***

வரட்டும் வரட்டும்!

கமலஹாசன்னு வந்துட்டா அவரு ஐயங்காருனு பார்க்க மாட்டாரு. டோண்டு ராகவன் னு வந்துட்டா அய்யங்காருனு சொல்லுவாரு..

யு எஸ்ல சாதிச் சங்கம் லாம் இருக்குனு சொல்லிக்கிட்டு இருந்தாரு..இப்போ இவரும் அய்யங்காரா மாறி ஒரு சங்கம் அமைத்துவிட்டாரோ என்னவோ! :)

பழமைபேசி said...

https://youtu.be/DiDUMaC7KwA

உங்க கர்த்தை எதிர்நோக்கி சமூகம் காத்திருக்காமே??

வருண் said...

அந்தப் பாட்டை பார்க்க/கேக்க நேரமில்லை! ஒரு ஈர்ப்பு இல்லை! :)

ஆனால் சிம்பு, எஸ் ஜெ சூர்யா எல்லாம் ஒரு மாதிரி மட்டமான பிறவிகள். இவனுக சிந்தனைகள் எல்லாமே கேவலமாத்தான் இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம்னு சொல்லிட்டுப் போயிடுறேன். :)

Yarlpavanan said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்