Monday, December 14, 2015

டி ராஜேந்தர்! நல்ல அப்பன்டா இந்தாளு!

சிறுவயதில் என்னுடைய மாமா பசங்களோட விளையாடும்போது அடிக்கடி ஏதாவது சண்டை வரும். எனக்குத்தான் கை நீளும். மாமா மகன் போயி அம்மாட்ட பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு "வருண் அடிச்சுட்டான்!" னு  சொல்லிட்டுப் போயிடுவான்.

வீட்டுக்குப் போனால் எங்கம்மா எனக்குப் "பொறந்த நாள்" கொண்டாடுவாங்க!

தெருவில் உள்ள பசங்களோட ஏதாவது பிரச்சினைனாலும் என் மேல் தப்பே இல்லைனாலும் அம்மா எனக்குத்தான் "பொறந்த நாள்" கொண்டாடுவாங்க! எவனாவது என்னைப் பத்தி போட்டுக் கொடுத்தால், எனக்குத்தான் செம அடி விழும்!

அடிக்கிறது வலிக்கிதோ இல்லையோ அழுகை வரும். எல்லாம் கொஞச நேரம்தான். மறுபடியும் விளையாட ஓடிவிடுவேன். அடுத்த பொறந்தாள் கொண்டாட்டத்துக்கு ரெடி ஆகனுமில்லை?

ஆக வருடத்தில் ஒரு 10 நாளாவது எனக்கு பொறந்த நாள் கொண்டாடப்படும்!
எவன் தப்பு செய்தாலும், "அவன் என் பிள்ளை இல்லை, நீதான் ஒழுங்கா நடந்துக்கணும். நீ எதுக்கு அங்கே போற?" இதுதான் அம்மா சொல்வது எனக்கு.

இப்போ சிம்பு பிரச்சினைக்கு வருவோம். தரக்குறைவான பாடல் ஒன்றை இவனும், பொடியன் அநிருத்தும் (இவன் ரஜினியோட மச்சினன் பையனாம்ப்பா!) வெளியிட்டு, தங்கள் தரத்தை பாதாளத்தில் தள்ளிக் கொண்டார்கள்!

அப்பன், ராஜேந்தர் என்ன செய்யணும்?

தறுதலை மகனை, ஊரறிய கண்டிக்கணும்! இப்படி ஒரு மட்டமான பாட்டை அவன் பாடியதற்காக வெட்கப்படுகிறேன்னு சொல்லி எல்லாரிடமும் மன்னிப்புக் கேக்கணும்! அப்படி செய்தால் அவன் உண்மையான ஒரு பொறுப்புள்ள தந்தையார்!

மகன் என்ன பண்ணினாலும் சரி, ஊருப்பய பண்ணியதுதான் தப்புனு சொல்லிக்கிட்டு அலையிறானே? என்ன ஒரு கேவலமான அப்பன் இவன்?!

சிம்புவைச் சொல்லி குற்றமில்லை! அவனோட அப்பன் இப்படி வளத்துவிட்டு இருக்கான்! தப்பை தப்புனு சொன்னால்தானே, சிம்பு திருந்த வழியிருக்கு? என் மகன் எப்போவுமே யோக்கியன்னு சொல்லி வளர்த்தால் பிள்ளை இப்படிதான் ஊருப்பயளுகள்ட்ட அடிபட்டு சாவும்!

10 comments:

விசுAWESOME said...

வருண்.. லாங் டைம் நோ சி..

100% முற்றிலும் என் கருத்து! சிறிய வயதில் இருந்தே ஒரு செயற்கையான பெயரை ஏற்படுத்திவிட்டு, மகன் செய்யும் அட்டூழியத்தை எல்லாம் நியாயபடுத்தி அவனை கொஞ்சம் கூட திருத்தாமல்..

இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால்..சிம்பு ஆன்மிகத்தில் இறங்கிவிட்டார். சிம்பு ஆன்மிகத்தில் இறங்கிவிட்டார் என்ற ஒப்பாரி வேறு.

அனிருத் பற்றி சொல்லவே தேவையில்லை. ரஜினியின் சகலையின் சொந்தம் என்ற ஒரே காரணத்தினால் வாய்ப்புக்கு மேல் வாய்ப்பு.. நடக்கட்டும் நடக்கட்டும்..

இவர்கள் ஒருவளை 18 வயது என்றால் சிறு பிள்ளைகள் தவறிவிட்டார்கள் என்று மன்னிக்கலாம். ஒருதன்னுக்கு 32 அடுத்தவனுக்கு 26. என்னத்த சொல்வது..
நெஞ்சு பொறுக்குதிலையே..

தவறு said...

வருண்...மிகச்சரியான வார்த்தைகள் வாழ்த்துகள்...அப்பன் தறுதல புள்ளயும் தறுதல போல...

ssk tpj said...

பார்பனர் மேலே தூக்கி வைத்து இருப்பதால் கோடிகளில் புரள்கிறார் அனிருத். இசை துறையில் இடம் கிடைக்குமா என்று ஏங்கி பலர் இருக்கையில் எளிதில் தூக்கி விடப்பட்டு மேலே வந்து விட்டார். இப்படி பாடல் எழுதி இசை அமைப்பதை காசு வேறு கொட்டி கொடுக்க தமிழர்கள் எப்போதும் உண்டே. பார்த்து கொண்டே இருங்கள், அவர்கள் லாபி எப்படி வேலை செய்து அனிருத் இதில் எதுவுமே செய்ய வில்லை என்று சிறு கீறல் கூட இல்லாமல் லாவகமாக வெளியே வருவார்கள். சிம்பு, நன்றாக மாட்டி கொள்வார் மக்களிடம் மற்றும் அரசிடம்.

KILLERGEE Devakottai said...

சவுக்கடியான பதிவு நண்பரே நானும் இதனைக் குறித்து பதிவு இட்டுள்ளேன்

G.M Balasubramaniam said...


பிறந்த நாள் கொண்டாடுவது என்றால் இப்படியா.? நானும் தெரிந்து கொள்கிறேனே.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ஐந்தில் வளைக்காமல் விட்டவரைப் போய்....

Amudhavan said...

யார் யார் perverted என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு அருமையான வாய்ப்பு. எழுதியவர்கள், பாடியவர்கள், இசையமைத்தவர்களைத் தவிர இதை ஆதரிப்பவர்களும் தம்மை வெளிப்படையாகவே வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

கும்மாச்சி said...

சிம்பு சிறுவயதிலிருந்தே அப்படிதான் வளர்க்கப்பட்டார். அவனைப் பெற்றவர்களுக்கு அவன் செய்வது எதுவும் தப்பு கிடையாது. உண்மையில் அவர்களையெல்லாம் புறக்கணிப்பதே நல்லது.

Thamizhmaangani said...

well-said thalae!!! And this parenting practice must be done from young. It is too late. But this is a lesson for all parents who take on a soft approach to educate their child.
In these days, I think only tough parenting works. It is a concern when I see parents don't even want to scold their kids. The kids have no sense of fear towards any authority!

saamaaniyan saam said...

வருண்...

அந்த பாடல் பற்றியே உங்களின் பதிவின் மூலம்தான் தெரிந்துக்கொண்டேன்...

" அப்பன் ராஜேந்தரின் " " ராக்கால வேலையில " பாட்டையெல்லாம் கேட்டால் உங்கள் ஆதங்கம் எவ்வளவு வேஸ்ட்டுன்னு புரியும் வருண்... தகப்பன் ஆராடி பாய்ந்ததை மகன் பதினாறடி பாய்ந்துவிட்டான் !

இந்த " சிம்புவும் " வருங்காலாத்தில் ஒருவேளை அரசியலில் ஜெயித்தால் இதுவே கெள்கை பரப்பு பாடாலாக கூட மாற வாய்புள்ள சமூகம் அய்யா !!!

" சிம்பு சிறுவயதிலிருந்தே அப்படிதான் வளர்க்கப்பட்டார். அவனைப் பெற்றவர்களுக்கு அவன் செய்வது எதுவும் தப்பு கிடையாது. உண்மையில் அவர்களையெல்லாம் புறக்கணிப்பதே நல்லது. "

கும்மாச்சி குறிப்பிட்டது மிகச் சரி !!!

நன்றி
சாமானியன்