Friday, September 16, 2016

காவிரியும் தமிழர்களின் உலகமகா ஒற்றுமையும்!

தமிழனுகளுக்குள்ள நூத்தி எட்டு சாதி! பார்ப்பனர்கள், உயர் சாதி தமிழர்கள், ஆண்ட பரம்பரைனு சொல்லிக்கொண்டு அலைபவர்கள், தலித்கள், தலித்களிலே மைனாரிட்டியாக இருக்கும் பரிதாபத்துக்குரியவர்கள்! இவர்களுக்குள் எந்த ஒற்றுமையும் கெடையாது. ஒரு சாதில உள்ள பெண் இன்னொரு சாதியிலே உள்ளவனை காதலிச்சா, அப்பா தற்கொலை பண்ணி சாவான், இல்லைனா மகளை எரிச்சுடுவானுக. அப்போ எல்லாம் தமிழச்சிதான் அந்தப் பெண் நாம் தமிழர் என்கிற உணர்வுமிருக்காது, ஒரு மண்ணாங்கட்டியும் இருக்காது.

இப்போ காவிரி பிரச்சினை என்றவுடன் தமிழனை அடிக்கிறாங்க! கன்னடிகாக் களை திருப்பி அடிக்கணும்னு இவர்களிடம் என்ன ஒரு ஒற்றுமை!! இதே ஒற்றுமை எந்த ஒரு பிரச்சினையும் இல்லாதபோது தமிழர்களிடம் இருந்தால் இவனுகளை மதிக்கலாம்.

இது  போதாதுனு "நாம் தமிழர்" போராட்டத்தில் ஒரு இளைஞன் தீக்குளிச்சு செத்து இருக்கான். பாவம் அவனை பெற்றவர்கள், உறவினர். ஆமா, காவிரித் தண்ணி வந்துவிட்டால் இவன் வீட்டில் தினந்தோரும் தீபாவளியா என்ன?

கன்னடிகா கலவரம் பண்ணினால், அடாவடித்தனம் பண்றவர்களை சட்டம்தான் உள் நுழைந்து தமிழர்களை காப்பத்தணும். மாநில அரசாங்கம், அல்லது மத்திய அரசாங்கம். அதை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் கன்னடிகாவை அடிச்சா, கர்நாடகா பங்களூரில் வாழும் தமிழர்களுக்குத்தான் இன்னும் சிரமம். அதைத்தான் சாதிக்கப் போறீங்க.

தமிழர்கள் ஒற்றுமை என்றாலே செம கமெடிதான்!

நீ என்ன அமெரிக்காவில் இருக்கனு வந்து எதாவது சொல்லிக்கிட்டு இருக்கக் கூடாது! நானும் பங்களூரில் வாழ்ந்து இருக்கேன். இதேபோல் காவிரி பிரச்சினையின்போது தமிழர்களை அவர்களை அடிக்கும்போதும் தான். நம்ம சீமான் மாதிரி தமிழ்நாட்டில் ஒரு மூலையில் உக்காந்து கொண்டு வீரம் பேசுறவன் இல்லை நான். புரியுதா?

9 comments:

SathyaPriyan said...

பெரும்பாலான தமிழர்களோ கன்னடர்களோ அமைதியைதான் விரும்புகிறார்கள். அவர்கள் குடிக்க நீர் கேட்கிறார்கள். நாம் விவசாயம் செய்ய கேட்கிறோம். இதில் எது உயர்வு எது தாழ்வு?

நீர் மேலாண்மை பற்றிய எந்த புரிதலும் இல்லாத ஆட்சியாளர்களும் மக்களும் கொண்ட நாடு இப்படித்தான் நாசமாக போகும். காவிரியில் மணல் எடுத்து குவிக்கிறோம்.

நாம் ஒற்றுமையாக இருப்பது நமது வளத்தை சுரண்டுவதில் தான்.

'பசி'பரமசிவம் said...

அன்புள்ள வருணுக்கு,

இந்தப் பின்னூட்டம் உங்கள் கருத்துக்கு மறுப்புச் சொல்லவோ, உங்கள் பதிலுக்குப் பிறகு உங்களுடன் விவாதிக்கவோ அல்ல; அல்லவே அல்ல. கடந்த காலங்களில். கடவுள் குறித்த என் கருத்துகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டபோதெல்லாம் எனக்குத் துணை நின்றவர் நீங்கள் என்பதை நினைவு கூர்ந்து உறுதிபடச் சொல்கிறேன்.

இங்கு கன்னடர்கள் தாக்கப்பட்டால் அங்கு கர்னாடகத் தமிழனுக்கு இன்னும் சிரமம். மாநில மத்திய அரசுகள்தான் அவனுக்குப் பாதுகாப்புத் தர வேண்டும் என்கிறீர்கள்.

மத்திய அரசிடம் முறையிடுவதைத் தவிர மாநில அரசால் கர்னாடகத் தமிழனைக் காக்க முடியாது என்பதற்குக் கடந்த கால அசம்பாவிதங்களே சான்று. மத்திய அரசும்[அது எந்தக் கட்சி ஆட்சியாயினும்] அதைச் செய்ததில்லை என்பதும் கசப்பான உண்மை. நல்மனம் படைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தயவால் நல்லவை நடந்திருக்கின்றன என்பதும் உண்மையே.

ஜாதி மத உயர்வு தாழ்வுகளால் பிளவுபட்டுக் கிடக்கும் தமிழரிடம் ஒற்றுமை கிடையாது என்கிறீர்கள். இக்கருத்து, கர்னாடகத் தமிழனைக் காக்க இவனால் ஏதும் செய்ய இயலாது என்பதை உணர்த்துகிறது.

இப்படியொரு அவல நிலைக்கு ஆளாகியிருக்கும் கர்னாடகத் தமிழனை யார்தான் காப்பாற்றுவது?

பிளவுபட்டுக் கிடக்கும் தமிழரெல்லாம் ஜாதிமத இழிவுகளிலிருந்து முற்றிலுமாய் விடுபட்ட பிறகுதான் போராடுவது முறை என்றால், அது சாத்தியப்படுவது எப்போது?

எப்போதும் இல்லை என்றால், இனியும் கர்னாடகத் தமிழனின் நிலை?[கர்னாடக அரசு கடுமையான பாதுகாப்புகளைச் செய்தும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிதைக்கப்பட்டதும், தீயிடப்பட்டதுமான அவலங்கள் நேர்ந்திருக்கின்றன. அவர்களுடைய அடுத்த போராட்டத்திலும் அது நிகழாதென்பதற்கு உத்தரவாதம் இல்லை]

இப்போது மீண்டும் அதே சந்தேகம்தான், நம்மவரை யார்தான் பாதுகாப்பது?

இவையெல்லாம் ஏற்கனவே எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்விகள். உங்களிடம் கேள்வி கேட்க விரும்பாதாதால், அவற்றைக் சந்தேகங்களாக்கி உங்கள் முன் வைக்கிறேன்.

மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட...இனியும் பாதிக்கப்பட வாய்ப்புள்ள என் ஊர்க்காரர்களுக்காகவும் என் உறவுக்காரர்களுக்காகவும், ஏன், என் ஜாதிக்காரர்களுக்காகவும்[உங்கள் பதிவைப் படித்த பிறகு, தமிழனுக்காக என்று சொல்வது தவறு என்பதை உணர்கிறேன்] கன்னடர்களைச் சாடிச் சில பதிவுகளை எழுதியவன் நான் என்பதால் உங்களிடம் இந்தச் சந்தேகத்தை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

சந்தேகம் கேட்கிறேன் என்ற பெயரில் பின்னூட்டம் இட்டது தவறு என்றால் அன்புகொண்டு மன்னியுங்கள்.

நன்றி வருண்.

பரிவை சே.குமார் said...

அந்தப் பையனின் சாவு... வேதனையை விட இதெல்லாம் எதற்காக என்ற வருத்தத்தையே கொடுத்தது.

ஜாதியில் பிளவுபட்டு நின்றாலும் நமக்கு என்று வரும்போது கர்நாடகத் தமிழனை... நம் இனத்தானை காக்க சேர்ந்து போராடாமல் இருக்க முடியுமா என்ன..? இன உணர்வு என்பது ஒவ்வொருவனுக்குள்ளும் உண்டு.

நம்மை சாதியால் பிரித்து வைத்து இருப்பது ஆளும் அரசாங்கம்தான்...

G.M Balasubramaniam said...

இந்தக்காவிரி நீர் பிரச்சனைஎப்போதும் தலைக்கு மேல் இருக்கும் கத்தி போல் 25 ஆண்டுகளாக பெங்களூரில் வாழும் என்போன்றவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாது காப்பு இல்லை. மேலும் மொழி இனம் சாதி மதம் போனறவை மனிதனைப் பிரித்துக் காட்டுவதில்தான் இருக்கிறது நீர் பங்கீடு குறித்த பிரச்சனைகள் நிறைய நீர் இருக்கும்போது வருவதில்லை. இது குறித்த முடிவுகள் நல்ல நிலையில் இருக்கும்போதே சிந்தித்து செயல் படுத்த வேண்டும்

துர்வாசர் said...

காவிரிப் பிரச்சனையை வைத்து நாம் நல்லா காமெடி பண்ணிட்டிருக்கோம். தலைவர்கள் எல்லோரும் தீக்குளித்தவனுக்கு அஞ்சலி செலுத்தினாங்களாம். (வேற வேலைக்கழுதை இல்லை. எந்த அரசியல்வாதியில் அல்லது தலைவனின் உறவினர்கள் தீக்குளிக்கறாங்களா? அவனுகளுக்கு சசி பெருமாள், விக்னேஷ் போன்ற வெட்டி ஆட்கள் தேவை). முதல்ல இருக்கிற ஆறுகளைப் பாலைவனமாக்கும் மணல் கொள்ளை, ஆக்கிரமிப்பு, கழிவு நீரை ஆற்றில் விடுவது, தொழிற்சாலை என்ற பெயரில், தூய்மையைக் கெடச்செய்யும் செயல்களை 'நிறுத்திவிட்டு, கர்னாடகா காவேரிலேர்ந்து தண்ணி கேட்கலாம். மீத்தேன் வாயுவை காவிரி படுகையில் எடுப்பதற்கு கையெழுத்திட்டுவிட்டு, இப்போ காவிரில தண்ணீர் கேட்கறாங்க. எதுக்கு? காவிரிப் பிரச்சனை சட்டத்தின்மூலம் மட்டும்தான் தீர்க்கமுடியும். இதற்கு வேறு வழி கிடையாது. அதை ஆளுகிறவர்கள் பார்த்துக்கொள்வார்கள். மற்றவர்களெல்லாரும், தொலைக்காட்சில சீரியலில் மூழ்கவும். நாடகம் நடத்தவேண்டாம்.

வருண் said...

***SathyaPriyan said...

பெரும்பாலான தமிழர்களோ கன்னடர்களோ அமைதியைதான் விரும்புகிறார்கள். அவர்கள் குடிக்க நீர் கேட்கிறார்கள். நாம் விவசாயம் செய்ய கேட்கிறோம். இதில் எது உயர்வு எது தாழ்வு?

நீர் மேலாண்மை பற்றிய எந்த புரிதலும் இல்லாத ஆட்சியாளர்களும் மக்களும் கொண்ட நாடு இப்படித்தான் நாசமாக போகும். காவிரியில் மணல் எடுத்து குவிக்கிறோம்.

நாம் ஒற்றுமையாக இருப்பது நமது வளத்தை சுரண்டுவதில் தான். ***

வாங்க சத்யப்பிரியன்! நலம்தானே? இந்த நவீன காலத்தில் கலவரத்தில் அடிக்கிறவனை செல் ஃபோனில் வீடியோ எடுத்து யு ட்யூப்ல போடுறானுக. அந்த யுடூபில் உள்ள இனவெறியர்களை போலிஸ் பிடிச்சு ஒரு மாதம் உள்ள போட்டால் அவன் அவன் பிழைப்பைப் பார்ப்பார்கள். சட்டம் ஒழுங்கு இல்லைனா கஷ்டம்தான்..வருண் said...

*** 'பசி'பரமசிவம் said...

அன்புள்ள வருணுக்கு,

இந்தப் பின்னூட்டம் உங்கள் கருத்துக்கு மறுப்புச் சொல்லவோ, உங்கள் பதிலுக்குப் பிறகு உங்களுடன் விவாதிக்கவோ அல்ல; அல்லவே அல்ல. கடந்த காலங்களில். கடவுள் குறித்த என் கருத்துகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டபோதெல்லாம் எனக்குத் துணை நின்றவர் நீங்கள் என்பதை நினைவு கூர்ந்து உறுதிபடச் சொல்கிறேன்.

இங்கு கன்னடர்கள் தாக்கப்பட்டால் அங்கு கர்னாடகத் தமிழனுக்கு இன்னும் சிரமம். மாநில மத்திய அரசுகள்தான் அவனுக்குப் பாதுகாப்புத் தர வேண்டும் என்கிறீர்கள்.

மத்திய அரசிடம் முறையிடுவதைத் தவிர மாநில அரசால் கர்னாடகத் தமிழனைக் காக்க முடியாது என்பதற்குக் கடந்த கால அசம்பாவிதங்களே சான்று. மத்திய அரசும்[அது எந்தக் கட்சி ஆட்சியாயினும்] அதைச் செய்ததில்லை என்பதும் கசப்பான உண்மை. நல்மனம் படைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தயவால் நல்லவை நடந்திருக்கின்றன என்பதும் உண்மையே.

ஜாதி மத உயர்வு தாழ்வுகளால் பிளவுபட்டுக் கிடக்கும் தமிழரிடம் ஒற்றுமை கிடையாது என்கிறீர்கள். இக்கருத்து, கர்னாடகத் தமிழனைக் காக்க இவனால் ஏதும் செய்ய இயலாது என்பதை உணர்த்துகிறது.

இப்படியொரு அவல நிலைக்கு ஆளாகியிருக்கும் கர்னாடகத் தமிழனை யார்தான் காப்பாற்றுவது?

பிளவுபட்டுக் கிடக்கும் தமிழரெல்லாம் ஜாதிமத இழிவுகளிலிருந்து முற்றிலுமாய் விடுபட்ட பிறகுதான் போராடுவது முறை என்றால், அது சாத்தியப்படுவது எப்போது?

எப்போதும் இல்லை என்றால், இனியும் கர்னாடகத் தமிழனின் நிலை?[கர்னாடக அரசு கடுமையான பாதுகாப்புகளைச் செய்தும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிதைக்கப்பட்டதும், தீயிடப்பட்டதுமான அவலங்கள் நேர்ந்திருக்கின்றன. அவர்களுடைய அடுத்த போராட்டத்திலும் அது நிகழாதென்பதற்கு உத்தரவாதம் இல்லை]

இப்போது மீண்டும் அதே சந்தேகம்தான், நம்மவரை யார்தான் பாதுகாப்பது?

இவையெல்லாம் ஏற்கனவே எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்விகள். உங்களிடம் கேள்வி கேட்க விரும்பாதாதால், அவற்றைக் சந்தேகங்களாக்கி உங்கள் முன் வைக்கிறேன்.

மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட...இனியும் பாதிக்கப்பட வாய்ப்புள்ள என் ஊர்க்காரர்களுக்காகவும் என் உறவுக்காரர்களுக்காகவும், ஏன், என் ஜாதிக்காரர்களுக்காகவும்[உங்கள் பதிவைப் படித்த பிறகு, தமிழனுக்காக என்று சொல்வது தவறு என்பதை உணர்கிறேன்] கன்னடர்களைச் சாடிச் சில பதிவுகளை எழுதியவன் நான் என்பதால் உங்களிடம் இந்தச் சந்தேகத்தை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

சந்தேகம் கேட்கிறேன் என்ற பெயரில் பின்னூட்டம் இட்டது தவறு என்றால் அன்புகொண்டு மன்னியுங்கள்.

நன்றி வருண்***

அரசாங்கம் காப்பாத்தாது. தமிழனை நம்மதான் காப்பத்தணும் என்கிற நிலை வந்தால் கஷ்டம்தான் சார். நம்ம எப்படி காப்பத்தப் போறோம்? அமைதியாக ஊர்வலம் நடத்திப் போராடியா? இல்லை தமிழ்நாட்டில் உள்ள கன்னடிகாகளை அடித்தா? எனக்கென்னவோ இதெல்லாம் சரியான அனுகுமுறைனு தோனவில்லை சார்.

ஈழத்தில் பாதிக்கப் பட்ட தமிழர்களையும், கர்நாடகாவில் பாதிக்கப்படும் தமிழர்களையும் நீங்க காப்பத்தணும் என்பது சரியே? அதை சட்டம் அரசாங்க உதவி இல்லாமல் "தமிழர்கள்" ஒன்றுகூடியெல்லாம் செய்ய முடியுமென்றால் அது எப்படி என்பது எனக்கு விளங்கவில்லை!

வருண் said...

*** G.M Balasubramaniam said...

இந்தக்காவிரி நீர் பிரச்சனைஎப்போதும் தலைக்கு மேல் இருக்கும் கத்தி போல் 25 ஆண்டுகளாக பெங்களூரில் வாழும் என்போன்றவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாது காப்பு இல்லை. மேலும் மொழி இனம் சாதி மதம் போனறவை மனிதனைப் பிரித்துக் காட்டுவதில்தான் இருக்கிறது நீர் பங்கீடு குறித்த பிரச்சனைகள் நிறைய நீர் இருக்கும்போது வருவதில்லை. இது குறித்த முடிவுகள் நல்ல நிலையில் இருக்கும்போதே சிந்தித்து செயல் படுத்த வேண்டும் ***

நான் உங்களிடம் ஏற்கனவே இதுபத்தி சொல்லியிருக்கேன். கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் கன்னடம் ஓரளவு கற்றுக்கொள்வது நல்லது. நாம் கன்னடத்தில் பேசினால் பாதி பிரச்சினை போய்விடும். பங்களூரில் 50 வருடம் வாழும் பேராசிரியர்கள்கூட தன் கன்னட வேலையாட்களிடம் தமிழில்தான் வேலை சொல்லுவாங்க. இதெல்லாம் அநியாயம் இல்லையா?னு எனக்குத் தோணும். :)

வலிப்போக்கன் said...

நாமெல்லாம் இந்தீயர்கள் என்று ஒரு கோஷம் கேட்டுக் கொண்டே இருக்கே.....