Tuesday, September 20, 2016

பசி பரமசிவம் சார்!

என்ன சார் உங்க தளம் ரீடர்ஸ் ஒன்லி ஆயிடுச்சு? ஒரு ஆறு ஏழு வருடமாக வலைபதிவில் நீங்க எழுதுறீங்க. கடவுள் மறுப்புக் கொள்கை, சிறு கதை மற்றும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் பதிவுகள் எழுதுறீங்க. உங்க கருத்துக்களை ஆணித்தனமாக சொல்றீங்க. ஆனால்  பல முறை உங்க பதிவுகளுக்கு பின்னூட்டம் இட வழியில்லாமல் செய்துவிடுறீங்க. இப்போ என்னனா பதிவையே வாசிக்க முடியாத அளவு ஆக்கிவிட்டீங்க. எனக்கென்னவோ நீங்க ரொம்பவே உணர்ச்சி வசப்படுறீங்க, பதிவுலகில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பர்சனலாக எடுத்துக்குறீங்கனு தோனுது. நான் உங்களுக்கு அறிவுரை எல்லாம் சொல்லத் தகுதியில்லாதவன். ஆனால், நீங்க எளிதாக எடுத்துக்கொள்வது நல்லது. பதிவுலகில் நல்ல நண்பர்களிடமும் கருத்து வேறுபாடு வரும், அவர்களும் எரிச்சல் தரும் பதிவெழுதுவாங்க! ஒரு சில நேரம் நாம் மட்டும் தனியாக நின்றுதான் நம் கருத்தை சொல்ல வேண்டி வரும். இதையெல்லாம் நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டு நம் கருத்தை சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருக்கணும். நாம் உண்மையை மட்டும் சொல்லும் பட்சத்தில் நம் எழுத்துக் காலத்தால் அழியாது. 100 வருடம் சென்று நம் பதிவை வாசிப்பவர்கள் நம்மை ஞானி என்பார்கள். இன்றைய மக்களுக்காக நீங்க எழுத வேண்டியதில்லை. காலத்தால் அழிக்கமுடியாத உண்மையை எழுதுங்க! ஆணித்தமனமாக்! மற்றவற்றைப் பற்றி நீங்க கவலைப்பட வேண்டியதில்லை! நன்றி சார். :)
6 comments:

'பசி'பரமசிவம் said...

அன்புள்ள வருண்,

‘100 வருடம் சென்று உங்க பதிவை வாசிப்பவர்கள் உங்களை ஞானி என்பார்கள்’ என்று தாங்கள் குறிப்பிட்டிருப்பது என்னை மிகப் பெரும் சங்கடத்தில் ஆழ்த்திவிட்டது. தங்களின் மனம் நோகாத வகையில் இந்தத் தவற்றைச் சுட்டிக்காட்டும் வழியறியாமல்[இந்திய நேரப்படி, காலை 08.00 மணியிலிருந்து] தவித்தேன்; தவிக்கிறேன் என்பது உண்மை.

இருப்பினும், தங்களின் புகழ்ந்துரை என் எழுத்துக்கான அங்கீகாரம் என்று நினைத்து மகிழவும் செய்கிறேன்.

என்னிடமுள்ள பலவீனங்களைச் சுட்டிக்காட்டும் தகுதி தங்களுக்கு உண்டு. அவற்றைக் களைவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன்.

இணக்கிமில்லாத சூழல் உருவாகும்போது, வலைத்தளத்தை இழுத்து மூடுவதும் எனக்குள்ள பலவீனம்தான். வெறுமை அகன்று புத்துணர்ச்சி பெறும்போது மீண்டும் எழுத முயற்சிப்பேன். வலைப்பக்கத்தில் எழுதிச் சுகம் கண்டுவிட்டு அதைப் புறக்கணித்து வெளியேறுவது அத்தனை எளிதல்ல என்பது தாங்களும் அறிந்ததே.

எளியவனான என்னைப் பொருட்படுத்தித் தனிப்பதிவு எழுதிய தங்களின் பெருந்தன்மை மறக்க இயலாதது.

நன்றி வருண். மிக்க நன்றி.

'பசி'பரமசிவம் said...

'நாம் உண்மையை மட்டும் சொல்லும் பட்சத்தில் நம் எழுத்துக் காலத்தால் அழியாது. 100 வருடம் சென்று நம் பதிவை வாசிப்பவர்கள் நம்மை ஞானி என்பார்கள்’ என்று ‘பொதுவாக’ச் சொல்ல வேண்டியதை.....

‘நாம் உண்மையை மட்டும் சொல்லும் பட்சத்தில் நம் எழுத்துக் காலத்தால் அழியாது. 100 வருடம் சென்று உங்க பதிவை வாசிப்பவர்கள் உங்களை ஞானி என்பார்கள்’ என்றிப்படி நீங்கள் சொல்லிவிட்டதாக நினைக்கிறேன். சரிதானே?

நன்றி வருண்.

'பசி'பரமசிவம் said...

இன்று மாலை 05.30 மணியளவில், எந்தவொரு பிரச்சினைக்கும் இடம் தராத பதிவொன்றை[சிறுகதை]த் தமிழ்மணத்தில் இணைத்தேன். இன்றிரவு 08.00 மணிவரை அது இணைக்கப்படவில்லை.

வருண்,

இப்போதைக்கு எனக்கு ஓய்வு தேவை. எனக்காக நீங்கள் இனியும் சிரமப்பட வேண்டாம்.

மீண்டும் நன்றி சொல்லி விடைபெறுகிறேன்.

நன்றி. வணக்கம் வருண்.

வருண் said...

***இன்று மாலை 05.30 மணியளவில், எந்தவொரு பிரச்சினைக்கும் இடம் தராத பதிவொன்றை[சிறுகதை]த் தமிழ்மணத்தில் இணைத்தேன். இன்றிரவு 08.00 மணிவரை அது இணைக்கப்படவில்லை.**

தமிழ்மணம் தானியங்கியாகத் தான் இயங்குது. உங்க பதிவை செலக்டிவாக வடிகட்டல் எல்லாம் யாரும் செய்வார்கள்னு எனக்குத் தோனவில்லை. ஏன் வெளிவரவில்லைனு எனக்குத் தெரியவில்லை. சரி சார், பிறகு பார்க்கலாம். :)

‘தளிர்’ சுரேஷ் said...

பரமசிவம் சார்! திரட்டிகளை நம்பாதீர்கள்! தமிழ்மணம் என் பதிவுகளை கூட விலக்கி வைத்தது! அதற்காக நான் சோர்ந்து போகவில்லை! இன்று என் பதிவுகளை கூகுள் ப்ளஸ் பேஸ்புக், டிவிட்டரில் மட்டும் பகிர்கிறேன்! நிறைய வாசகர்கள் வருகிறார்கள்! சோர்ந்து போகாதீர்கள். தரமான உங்கள் படைப்புக்களுக்கு தரமான வாசகர்கள் என்றும் உறுதி! தொடர்ந்து எழுதுங்கள்! திரட்டிகள் என்பது ஓர் மாயை! அதிலும் தமிழ்மணம்? அதை இன்னும் நீங்கள் நம்பிக்கொண்டிருப்பது வேஸ்ட்! வருண் சார்! நல்லதொரு படைப்பாளியை மீண்டும் எழுத தூண்டிய உங்கள் பதிவுக்கு நன்றி!

பரிவை சே.குமார் said...

ஆம் நம் மனதில் தோன்றுவதை எழுதுவோம்.... நமக்கான களம் நம் தளம்... யாருக்காகவும் எதற்காகவும் சுயத்தை இழக்க வேண்டியதில்லை...

தமிம்மணத்தில் இணைப்பது இப்போது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது... பசி சார்....

ரொம்ப நேரம் எடுத்துக் கொள்ளும்... சில நேரம் எடுக்காமல் கொல்லும்... அதை விடுங்க...

முகநூலில் நிறைய எழுத்தாளர்களுக்கான குழுக்கள் இருக்கு... அங்கு இணையுங்கள்... வாசிக்க நிறைய... நிறைவான ஆட்கள் இருக்கிறார்கள்...