Tuesday, June 12, 2018

காலாவின் சாதி?!

பாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா பட்டணமா, தேவர் மகன் போன்ற படங்கள் இதில் அடங்கும்.

காலாவில் ரஞ்சித் யாருக்கும் சாதிச் சாயம்  பூசவில்லை.

திருநெல்வேலியிலிருந்து வந்ததால் காலா நாடார் சமூகத்தை சேர்ந்தவர் (திரவியம் நாடாரைக் காட்டி) என்று அவர் மகரு, சவகரு,  சொல்லிக்கொண்டு அலைகிறார். ஆனால் காலாவில் காலா எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்று "வெகு கவனமாக"க் காட்டப்படவே இல்லை!

 பொறம்போக்கு நிலத்தில் வாழ்பவர் எல்லாம் தலித் என்று சொல்வது அபத்தம்.  

எல்லா சாதியச் சேர்ந்தவர்களும்- ஏழைகள், பொறம்போக்கு நிலத்தில் வாழ்றாங்க. 

முக்குலத்தோர், வன்னியர்கள் யாருமே பொறம்போக்கு நிலத்தில் வாழலையா என்ன? 




கள் பனை மரத்தில் இருந்து எடுப்பது, அதனால கள் குடிப்பவர்கள் எல்லாம் நாடார் என்று சொல்வதும் அபத்தம். கள் விற்பவர்கள் வேணா நாடார்னு சொல்லலாம். கள் குடிப்பவர்கள் எல்லா வகுப்பையும் சேர்ந்த ஏழைகள்.

காலாவில் சாதிச்சாயம் இல்லை, அளவுக்கதிகமான வயலண்ஸ் இல்லை, படம் எந்தவித தொய்வும் இல்லாமல் போகிறது. மேலும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் ஒரு காங்ஸ்டர் மூவி தயாரித்து வெற்றி அடைந்துள்ளார் ரஞ்சித்.

எதார்த்தம் என்பதற்காக சி னி மா வில் சாதிச்சாயம் பூசிய ஈனத்தமிழன் பாரதிராஜா, கமலகாசன், மாதவன் போன்றோருக்கு ரஞ்சித் எவ்வளவோ மேல்.

பாக்ஸ் ஆபிஸில் காலா??

 கபாலி அளவுக்கு போகவில்லை என்பது உண்மைதான். தாணு கபாலியை இஷ்டத்துக்கு ப்ரமோட் செய்து, முதல் வார கலக்‌ஷனை தேத்திவிட்டார்.  அதனால் கபாலி ஒரு  unusual box office நிலவரத்தை உருவாக்கியது.

 அது நிச்சயம் காலாவை பாதித்து இருக்கு!

காலா அது போலல்லாமல் வழக்கமான ரஜினி படம்போல் பாக்ஸ் ஆஃபிஸில் போகிறது.

அமெரிக்காவில் (கடனா சேர்க்காமல்) 1.8 மில்லியன் கலக்‌ஷன். இந்த வார முடிவில் நிச்சயம் 2 மில்லியனை கடக்கும். Easily broke Mershal collection

ஆஸ்திரேலியாவில் என்ன காரணம்னு தெரியவில்லை படம் ரெக்காட் கலக்சன் (Broke mershal collection)

ஆந்திராவில் 11 கோடி. Broke lifetime அருநிதி (மெர்சல்) கலக்சன்.

ஆனால் கேரளா UK, France சில விஜய்க்கு மலையாளிகள், ஈழத்தமிழர்கள் ஆதரவு இருப்பதால், அங்கே மெர்ஷலைவிட 40% less கலக்சன் பெற்றுள்ளது.

சென்னையில், இந்த ஒரு சூழலில் செட் ரெக்கார்ட் கலக்‌ஷன். மெர்சல் கலக்சன் உடைக்கப்பட்டது

கர்நாடகா, உஙளுக்கே தெரியும் என்ன நடக்குதுனு.

மையக்கிழக்கு நாடுகளில் மற்றும் மலேசியா சிங்கப்பூரில் எல்லாரும் ரம்ஜான் நோம்பு இருக்கிறார்கள். அடுத்த வாரம் பார்ப்போம்

மற்றபடி தமிழ்நாட்டில் மக்கள் மனநிலை சரியில்லை. முக்கியமா 13 இறந்து போயிருக்கும் சூழல். அதனால் கொஞ்சம் பாதிக்கப் பட்டு இருக்கு.

 However, I think it will hold well in box office for at least a month, unlike kabali.

Moreover, Kaala was not distributed like usual Rajini movie. Most of the theaters screen based on commission. அதனால் சிங்காரவேலன் ஒப்பாரி எல்லாம் இந்த முறை வராது.

எப்படி கூட்டிக் கழிச்சுப் பார்த்தாலும், காலா, க்ரிடிக்ஸ் பார்வையிலும், கமெர்ஷியலாவும் ஒரு வெற்றிப் படமே!

No comments: