Friday, June 1, 2018

கச்சநத்தம்..தமிழன் தமிழன் என்பதே பொய் வேடம்!

ஜல்லிக்கட்டு சம்மந்தமாக ஒரு விவாதம் தோழர் சாம் பதிவில். என்னுடைய வாதம், தமிழன் தமிழன் என்கிற உணர்வே கிடையாது. சாதிதான் தமிழர்களீடம் தலை நிமிர்ந்து நிற்கிது. ஐயர், அய்யங்கார், மறவர், கள்ளர், அகம்படியர், பிள்ள, முதலி, ரெட்டி, நாடார், தலித் என்பதுதான் தமிழர்களீன் முதன்மையான அடையாளம் தமிழ்ன் என்பதே ஏமாத்து என்றூ ஜல்லிக்கட்டுக்கு வக்காலத்து வாங்கும் வீரனிடம் "அடிதடி" நடந்தது.

உடனே உன்னை எச்சரிக்கிறேன், கிழிக்கிறேன் என்றார் வீரர்.

உன்னைமாதிரி எத்தனை சண்டியர் பார்த்து இருக்கேன் தெரியுமா? உண்மையைச் சொல்ல எனக்கென்ன பயம் என்றூ 'அடிதடி"யானது வாதம். நான் வளர்ந்த தமிழ் நாட்டில் ஜாதி அடையாளம்தான் இருந்தது, இன்னும் இருக்கிறது என்றூ நான் விடாமல் சண்டை போட்டேன்.  

இந்த உண்மை எனக்கு  மட்டுமல்ல, தமிழ் தமிழ் தமிழன் தமிழன் என்றூ பேசிக்கொண்டிருக்கும் உங்கள் எல்லாருக்குமே தெரியும். ஆனால் நீங்க அதை வெளீக்காட்டாமல் நடிக்கும் நடிகர்கள் என்பதும் எனக்குத் தெரியும்

இன்றய கச்சநத்தம் நிகழ்வு தமிழன் என்கிற அடையாளம் நாம் போடும் வேடம் மட்டுமே. உண்மையில் நம்முடைய சாதி அடையாளம்தான் தலைதூக்கி நிற்கிறது என்பதை நிரூபிக்கிறது.

அதனாலென்ன? நாங்க தொடர்ந்து தமிழுணர்வு தாலினுதான் சொல்லீட்டு அலைவோம்.

இதில் காமெடி என்னனா.. கச்சநத்தம் பற்றீ விமர்சிக்கிறது நம்ம சாதி வெறீயே இல்லாத தமிழுணர்வு மட்டுமே உள்ள வன்னியர் ராமதாசு! :))

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில், கோயில் திருவிழா தொடர்பான முன்பகை காரணமாக, ஒரு பிரிவினர்மீது அடுத்த கிராமத்தில் வசிக்கும் மற்றொரு தரப்பினர் நடத்திய தாக்குதலில் இறந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்திருக்கிறது. மனிதநேயமின்றி அரங்கேற்றப்பட்டுள்ள இந்தக் கொடூரப் படுகொலைகள், பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன. இவை கண்டிக்கத்தக்கவையாகும்.- வன்னியர் ராமதாசு ஐயா!

இன்னொரு பக்கம், சீமான், பாரதிராஜா, திருமாவளவன் எல்லாம் கட்டி பிடிச்சு நம்ம தமிழ் இனம் இப்படி சாகுதேனு தேம்பித் தேப்பி அழுகிறார்கள்!

4 comments:

P Vinayagam said...

Caste or any other identity has nothing to do with expression of sorrow in human tragedy.

வருண் said...

Well, the caste identity is the THE ONE that caused the TRAGEDY!

P Vinayagam said...

I wrote a general attitude of human life. You've not understood that and responded something irrelevant.

To make you understand, if you have fallen down and writhing in agony out of chest pain - in a public place. People don't care who you are. They pick you up and rush you to an ER. You are saved from a cardiac problem. So, a human tragedy like in the blog post where some ppoor people were killed and many maimed, it is right to respond with feeling of agony and sorrow. That's all I've meant.

வருண் said...

I have grown up in this culture. I have seen them ill-treating some tamils just because they are born in such and community. நாம் தமிழர் என்பதெல்லாம், சும்மா அடுத்த மாநிலத்தவனிடம் இருந்து பிரித்துக் கொள்ள. அதன் பிறகு/ ஜாதி அடிப்படையில் இவர்களீல் ஒதுக்க வேண்டியவர்கள ஒதுக்கி விடுவார்கள்.

சீமான் ஒரு தலித்தை மணம் முடிக்க தில் இருக்குமா? கல்யாணம்னு வரும்போது சாதி பார்த்துதான் செய்வான். பாரதிராஜா, கள்ளர், ஒரு தலித்தை இவர் மகனுக்கு கட்டி வைத்து நாம் தமிழர்னு காட்ட முடியாது. இதெல்லாம் சும்மா ஏமாத்து வேலை. சாதிவெறீ பிடிச்சவனுக. சும்மா நீலிக் கண்ணீர் விடுவானுக.