Showing posts with label மீள்பதிவு. Show all posts
Showing posts with label மீள்பதிவு. Show all posts

Tuesday, September 15, 2015

ஒரு காலத்தில் இவ்ளோ மோசமா நான் கதை எழுதி இருக்கேனா!!

சில வருடங்கள் முன்னால போயி (இந்த தள ஆர்கைவ் லதான்) நான் எழுதிய ஒரு கதையின் ஒரு எபிசோடை  எடுத்துப் படிச்சுப் பார்த்தேன். 

என்ன ஆச்சர்யம்!! நானா இப்படியெல்லாம் கதை எழுதினேன்னு எனக்கே ஆச்சர்யமா இருக்குப்பா!

 அப்படி என்னத்தை எழுதிப்புட்டீங்கப்பூ? னு கேட்பீங்களே!

நான் ஒரு மாதிரியா உங்களை "warn" பண்ணிட்டேன்.. இனிமேல் தொடர்ந்தால் உங்க  துணிச்சலை நான் பாராட்டுறேன்.  

மற்றபடி விளைவுகளுக்கு  நான் பொறுப்பில்லை!  உங்க பாடு, அன்றைய வருண் பாடு!

--------------------------

 

ரொம்ப செக்ஸியா இருக்கு! கடலை கார்னர் 62

"இந்த போர்டை தூக்கி வர இவ்ளோ நேரமா, கண்ணன்?"

"கொஞ்சம் கவனமா தூக்கி வந்தேன். ஏதாவது டேபிள் இருக்கா இதை அதுமேலே வச்சு விளையாட?"

"இந்த டீ டேபில் சரியா வருமா?"

"தட் வில் பி பெர்ஃபெக்ட்!"

"சரி கேர்ரம் போர்டை வச்சுட்டு வந்து காஃபியக் குடிங்க, கண்ணன்."

"நெஜம்மாவே உனக்கு விளையாடத் தெரியுமா?"

"நெஜம்மாத்தான். இதோட பத்துத்தர கேட்டுட்டுட்டீங்க, இதே கேள்வியை!!காஃபி நல்லாயிருக்கா?"

"யு டேஸ்ட் பெட்டெர் தான் யுவர் காஃபி!"

"அப்படியா? நான் எல்லா இடத்திலும் ஒரே டேஸ்டா? இல்லைனா வேற வேறயா?"

"அதெப்படி ஒரே டேஸ்டா இருப்ப?"

"காஃபி நல்லாயில்லையா?"

"ரொம்ப நல்லாயிருக்குடா!சரி வெளையாடுவோமா? எந்த ஸ்ட்ரைக்கர் வேணும் உனக்கு? ப்ளாஸ்டிக்கா? இல்லைனா ஐவெரி ஸ்ட்ரைக்கரா? பிக் ஒன்!"

"ப்ளாஸ்டிக்லதான் நான் வெளையாண்டு இருக்கேன். இதென்ன இத்தனை ஹெவியா இருக்கு?'

"இது ஐவெரி ஸ்ட்ரைக்கர்னு சொல்லுவாங்க. உண்மையிலேயே ஐவெரியானு தெரியலை."

"ஆமா, ரெண்டு பேரு வெளையாட ஒரு ஸ்ட்ரைக்கர் போதாதா?"

"டோர்னமெண்ட்ல எல்லாம், யு வில் ஜுஸ்ட் ப்ளே வித் யுவர் ஸ்ட்ரைக்கர். அவன் அவன் ஸ்டரைக்கரை அடுத்தவனை தொடக்கூட விடமாட்டானுக!"

"என்ன டோர்னமெண்ட் அது இதுனு சொல்றீங்க? நீங்க என்ன பெரிய சேம்பியனா?"

"நான் இல்லைடா. ஒரு சிலர் ஆடும்போது பார்த்து இருக்கேன். நான் இந்த ஐவெரி ஸ்ட்ரைக்கர்ல நான் வெளையாடுறேன்."

"சரி, அடுக்குங்க! இதெதுக்கு இவ்ளோ பவ்டெர் போடுறீங்க?"

"அப்போத்தான் ஃப்ரிக்ஷன் இல்லாம ஸ்மூத்தா இருக்கும்."

"சரி அடுத்து எப்போ பெட் ரூம், கண்ணன்? ரொம்ப நாளாச்சு தெரியுமா?"

"ஏன் மறந்தா போயிடப்போது?"

"ஹா ஹா ஹா. நீங்க மறந்தாலும் அதிசயப்பட ஒண்னுமில்லை!"

"எப்போப் பார்த்தாலும் இதானா?"

"எப்போப் பார்த்தாலுமா? ஆமா ஒரு நாளைக்கு அஞ்சுதர என்னை சொர்க்கத்து அழச்சுண்டு போறீங்களாக்கும்? எவ்ளோ நாளாச்சு!!"

"யு ஜஸ்ட் ஹாட் யுவர் பீரியேட்ஸ்?"

"சோ வாட்?"

"வாட்!!!"

"ஹா ஹா ஹா!"

"சரி, கேரம் வெளையாடலாமா?!"

"சரி, ரூல்ஸ் என்னனு சொல்லுங்க?"

"ரெண்டு விதமா ஆடலாம். ஒண்ணு நம்ம பக்கத்தில் உள்ள ஆர்ரோல உள்ளதெல்லாம் டைரெக்ட் டச் பண்ணக்கூடாது. பக்கத்தில் உள்ள பாக்கட்ல உள்ளதை ரிவேர்ஸ்ல வெளையாடி "சிங்க்" பண்ணனும்"

"அதானே யுஸுவல் ரூல்ஸ்?"

"இப்போ எல்லாம் ரூல்ஸ் மாத்தீட்டாங்கடா. ஆர்ரோ ல உள்ளதையும் எல்லாம் அடிக்கலாம். அப்புறம் உன் பக்கத்தில் உள்ள "பாக்கட்"லயும் காயினை உன் தம்ப் வச்சு இப்படி, இங்கே பாரு, இப்படி ஆடி "சிங்க்" பண்ணலாம்!"

"தம்ப் லயா? அதெல்லாம் கெடையாது. பழைய ரூல்ஸ்தான் எனக்குத் தெரியும்!"

"இல்லைடா! இப்போ எல்லாம் தம்ப்ஸ்னு வேற மாதிரி ஆடுவாங்க!'

"அதெல்லாம் எனக்குத் தெரியாது! உங்க பக்கத்தில் உள்ள ஆர்ரோவிலே உள்ளதை டைரெக்ட்டா அடிக்கக்கூடாது! ஆர் யு "ச்சீட்டிங்" மி, கண்ணன்?"

"ஏமாத்தலாம் இல்லடா! போய் ஆண்லைன்ல லேட்டெஸ்ட் ரூல்ஸ் படிச்சுப்பாரு!"

"எனக்கு தம்ப் ல ஆடத்தெரியாது!'

"சரி, ஓல்ட் ஃபேஷன்ட் கேம் ஆடுவோம்!"

"நான் ஸ்டார்ட் பண்ணவா?"

"யாரு மைனஸ் போடுறாங்களோ அவங்கதான் ஆரம்பிக்கனும்."

----

----

"யு மிஸ்ட் இட்..இந்தாங்க "மைனெஸ்" போட்டாச்சு!"

"யு ஹாவ் குட் கண்ட்ரோல்டா! சரி, ஆடு!"

"நீங்களே ஆரம்பிங்க!"

"சரி! எனக்கு வைட் தான் பிடிக்கும்"

---

---

"என்ன இது கண்ணன்!! முதல் அடியிலேயே நாலு வைட் காணோம்?"

"அதான் இந்த ஐவெர்ரி ஸ்ட்ரைக்கர் ஸ்பெஷாலிட்டி! சரி. ஆடு!"

"இருங்க. கொஞ்சம் யோசிக்க வேணாமா?"

"இதென்ன செஸ்ஸா யோசிக்க?"

"ஸ்ஸ்ஸ்! கொஞ்சம் சும்மா இருங்க, கண்ணன்!"

"உதட்டை அப்ப்டிக் குவிக்காதே!"

"ஏன்?"

"ரொம்ப செக்ஸியா இருக்கு. என்னால கேரம் வெளையாட முடியாது"

"ரியல்லி? இப்படி பண்ணினால், கிஸ் பண்ணனும் போல இருக்கா?"

"ஆமா! ரொம்ப செக்ஸியா இருக்கு! சரி வெளையாடுடா!"

"சரி, முகத்தை சிடு சிடுனு வச்சு ஆடுறேன்"

"இப்போவும் அழகாத்தான் இருக்க!"

"சரி, வெளையாட விடுங்க!"

"சரி, ஆடு!"

-----
------

"ஏய் நெஜம்மவே நல்லா ஆடுறடா!"

"சரி யார் வின் பண்ணுறானு பார்ப்போம்!"

---

--

"இதென்ன என் காய்ன் எல்லாம் இப்படி உங்க காய்னை முன்னால வச்சு ப்ளாக் பண்ணுறீங்க?'

"கஷ்டமா இருந்தா, நீ போட்டுத்தா!"

"கொழுப்பா? இருங்க நான் என்ன பண்ணுறேன் பாருங்க!"

"என்ன பண்ணுவ?"

"வெய்ட், வெளையாடுங்க!'

---

---

"வெளையாண்டாச்சு!'

"ரெண்டு வைட் தான் மிச்சமா? எனக்கு இன்னும் 4 காய்ன் இருக்கு"

"திறமையைக் காட்டு!'

---

----

"சரி, ஆடுங்க! இங்கே பாருங்க!"

"ஏய் ஏன் எழுந்துரிக்கிற?! என்ன பண்ணுறடா?"

"தெரியலையா? டாண்ஸ்! உங்கள காண்ஸெண்ட்ரேஷனை டிஸ்ட்ராக்ட் பண்ண!"

"இதெல்லாம் அநியாயம்!'

"இஸ் தட் செக்ஸி?"

"ஓ மை காட்!"

"சரி, ஆடுங்க!"

"ஐ வில் மிஸ், நவ்!'

---

--

"சீ, ஐ மிஸ்ட் இட். இட் இஸ் ஆல் பிகாஸ் ஆப் யுவர் ****! "

"ஹா ஹா ஹா. ஸ்ட்ரைட்டா உள்ள காயின்கூட போக மாட்டேங்கிது!"

"வை டு யு ஷேக் யுவர் பட் லைக் தட்? இட் டேர்ன்ஸ் மி ஆண்!'

"இதுதான் பூட்டி டாண்ஸ்!'

"ஜீசஸ்!'

"லைக்ட் இட்?'

"லவ்ட் இட் டார்லிங்!'

"சரி சரி வெளையாடுங்க!"

-தொடரும்

---------------------

இதில் சோகம் என்னனா, இது மாதிரி ஒரு கதையெல்லாம் இன்னைக்குத் தலைகீழா நின்னாலும் எழுத முடியாது! :(

Wednesday, November 26, 2014

உங்க வள்ளி அத்தைக்கு சாமி வருமாமே?!

 நண்பன் முத்துவுடன் வரும்போது எதிரே நடந்துவந்த வள்ளியையும் வசந்தாவையும் பார்த்த முனியசாமி..

"இங்கே பாரு வேடிக்கையை! நம்ம வசந்தாக்காவும், வள்ளி அத்தையும் ராசியாகி இன்னைக்கு சினிமாவுக்குப் போறாங்க!"

"நீ சும்மா இருக்க மாட்டியா முனி!?" என்றாள் வசந்தா சிரிப்புடன்.

"சரி சரி, ரெண்டு பேரும் ஒழுங்கா படத்தை பார்த்துட்டு வாங்க. சினிமா கொட்டகைல ஒரு சண்டைய ஆரம்பிச்சுடாதீங்க! அப்புறம் ஒரு பயலும் படம் பார்க்க மாட்டான்"

"சும்மா இருடா முனி! நல்லா வாயில வந்துடப்போது!" என்றாள் வள்ளி அத்தை சிரிச்சுக்கிட்டே!

"அத்தை! என்னைப்போட்டு கிழிச்சுடாதே! நான் இனிமேல் வாயைத் திறக்கல!" என்று உண்மையிலேயே பயந்தான் முனி.

******************************

அவர்கள் கடந்து போனப்புறம்..

"அவுங்க உன் அத்தையாடா, முனி?" என்றான் முத்து மெதுவாக.

"இல்லடா தூரத்துச் சொந்தம். சும்மா அத்தைனு கூப்பிடுவேன்."

"எப்படிடா இவங்க ரெண்டு பேரும் திடீர்னு இப்படி ஒண்ணு சேர்ந்துக்கிட்டாங்க?"

"நீ அன்னைக்கு இவங்க போட்ட சண்டையைப் பார்த்தியா, முத்து?"

"டேய்! சத்தியமாச் சொல்லுறேன், அது மாதிரி ஒரு சண்டை  வாழ்நாள்ல பார்த்தது இல்லைடா!"

"ஆமடா ஊரே பார்க்கிறாப்பிலே அசிங்க அசிங்கமா கெட்ட வார்த்தையாச் சொல்லி திட்டி சண்டை போடுவாங்க! கொஞ்ச நாள்ல திடீர்னு ஏதாவது ஒரு கோயில் திருவிழால ஒண்ணு சேர்ந்துடுவாங்க!"

"அம்மாடி! எப்படிடா அதுக்கப்புறம் ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கிறாங்க!!"

"இதென்ன முதல் தடவையா? ஓ நீ ஆறுமாதம் முன்னாலதான் இந்தத் தெருக்கு வந்த?. மறந்தே போச்சு எனக்கு! அதான் உனக்கு இதெல்லாம் அதிசயமா இருக்கு?"

"உலகத்தில் இருக்கிற  எல்லா கெட்டவார்த்தையும் சொல்லி ரெண்டு பொம்பளைங்க சண்டை போடுறதை இந்தத் தெருவிலேதாண்டா முதல் முறை பார்த்தேன்!"

"எங்க தெருல தாய்க்குலம் எல்லாம் அப்படித்தான்! பெரிய பெரிய சண்டியர்களே மூடிக்கிட்டுப் போயிடுவானுக. இவளுககிட்ட எதுக்கு வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டனு."

"அதுக்காக இப்படியா?"

"கெட்டவார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியுதோ இல்லையோ, அதைச் சொல்லி ஒருத்தை ஒருத்தர் திட்டுறதல அவங்களுக்கு ஒரு இன்பம்! அதைவிட  இந்தச் சண்டைய வேடிக்கை பார்க்க எத்தனை பேர் அலையிறானுக தெரியுமா? உன்னையும் சேர்த்துத்தான். சண்டையே அதுக்குத்தான்டா. எல்லாம் அட்டென்ஷன் தேவைப்படுது!"

"ஆமா, உங்க வள்ளி அத்தைக்கு சாமியெல்லாம் வருமாமில்ல? சீனி சொன்னான்! அது உண்மையா?"

"ஆமாடா முளைக்கொட்டு சமயத்திலே எதோ சாமி வந்து ஆடும்!"

"நெஜம்மாவா?"

"ஆமடா! மாரியாத்தா வந்திருக்கேணன்டா னு என்னத்தையாவது செய்யணும் சொல்லும்! அப்புறம் விபூதியைத் தலையில் அடிச்சு அடங்க வைப்பார் பூசாரி. வருசத்துக்கு ரெண்டு முறையாவது இப்படி சாமி வரும்."

"சாமி வருதா? இதெல்லாம் உண்மையாடா? "

"என்னைக்கேட்டால்? நானா சாமி வந்து ஆடினேன்?

"என்னடா இது! ஒரு நாள் திருப்பிச் சொல்ல முடியாத எல்லா கெட்டவார்த்தையும் சொல்லி அசிங்க அசிங்கமா திட்டுறாங்க. இன்னொரு நாள் அதே ஆள் தெய்வமாயிடுறாங்க!"

"முத்து! நான் வேணா வள்ளி அத்தைட்ட உன்னைக் கூட்டிப்போறேன். நீ சாமி வர்ரது பத்தி கேக்கிறயா அதுட்ட?!"னு சிரிச்சுக்கிட்டே கேட்டான் முனி.

"என்ன ஆளவிடுப்பா!"

Friday, November 21, 2014

பொம்மனாட்டிக்கு என்னையா வேணும்? தி ஜானகிராமன்

ஜானகிராமன் எழுத்து பொதுவாகவே ஆண்களுக்குத்தான் பிடிக்கும், பெண்களுக்கு பிடிக்காது என்பது என் நம்பிக்கை. கவனம்! நான் பொதுவாக னு சொல்லியிருக்கேன். விதிவிலக்குகள் நிச்சயம் உண்டு! காலங்காலமாக நமது கலாச்சாரத்தில் ஆண்கள், பெண்கள் உணர்வுகளை புரிந்துகொண்டதாக நம்பி தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு எழுத்தாளர்கள் விதிவிலக்கல்ல! அவர் கதைகளில்  பலவிதமான பெண்களை உருவாக்கி அவர்கள் உள்ளுணர்வுகளை காட்ட முயன்றிருக்கிறார் ஜானகிராமன். "அம்மணி", "ஜமுணா" "மரகதம்" "அலங்காரம்" "ரங்கமணி" "புவனா" எல்லாம் ஜானகிராமன் புரிந்துகொண்டதாக நம்பி அவர் உருவாக்கிய பெண்கள். ஜானகிராமனிடம் எஸ்ட்ரோஜன் இல்லை! அதனால் அவர் என்னதான் பெண்களை தன் கற்பனையில் சித்தரிச்சாலும, அது ஆண்களின் தேவைக்காக அவர் உருவாக்கிய பெண்கள்தான். உண்மையான பெண்கள் கெடையாது என்பதே என் எண்ணம். எஸ்ட்ரோஜன் இல்லாத ஜானகிராமனுக்கு பெண்களின் மென்மையான பகுதி என்றுமே விளங்கியதாக எனக்குத் தோணவில்லை...

கீழே படியுங்கள்..

ஜானகிராமனின் எழுத்துதான்..

“ராமரத்னம் எனக்கு பரம சினேகிதன். ரொம்ப நெருங்கிப் பழகுறேன். அத்தனை சூட்சுமமான ஒரு ஆத்மாவை நான் பார்த்ததில்லை. பரம ரசிகன். நம்ம மனசிலே இருக்கிற கவலை, வியாதி எல்லாம் பறந்துபோயிடும்- என்னமோ பீச்சிலே போயி இல்லே விசாலமா ஒரு இயற்கை காட்சிக்கு முன்னாலே உட்கார்ந்திருக்கிறாப்பிலே அவன் தனக்கு இப்படி ஓர் அதிர்ச்சி ஏற்பட்டிருக்குனு வாயைத்திறந்து சொன்னதில்லை. அதைச்சொல்லி என்னை துன்புறுத்த வேணாம்னு நெனச்சானோ என்னவோ- நிச்சயமாக அப்படித்தான் நினைச்சிருப்பான். யார்கிட்டயும் சொன்னதில்லேனு நினைக்கிறேன்.”

“ஒரு அத்தியாயத்தையே கிழிச்சு எறிஞ்சுட்டார்னு சொல்லுவேன். ரொம்ப பெரிய மனுஷனாகத்தான் இருக்கணும். பெண்டாட்டி விட்டுட்டுப்போறாளே -அந்த ஒரு சர்ட்டி·பிகேட்டே போரும்யா அவர் பெரிய மனுஷன்கிறதுக்கு!”

“என்னையா ஒரேயடியா அப்படிச் சொல்லிவிட்டீர்?”

மது காரை ஓரமாக நிறுத்திவிட்டு கண்ணை மூடிக்கொண்டே சொன்னான்: “பொம்மனாட்டிகளுக்கு என்னப்பா வேணும்? அடுத்தாத்துக்காரியைவிட தான் செளக்கியமா இருக்கணும். நல்ல புடவை. சொந்த வீடு. தான் ரொம்ப நல்லவ. பெரியமனசு உள்ளவ. ஊதாரி- அப்படி இப்படினு காமிச்சுக்கணும். ஆமடையான் தன்கிட்ட எல்லாத்தையும் கலந்து ஆலோசிக்கணும். பத்துபேருக்கு நடுவிலே தங்கிட்ட ரொம்பப் பிரியமா இருக்கிறதா அவன் காமிக்கணும். மற்றவர்களைவிட தன்கிட்ட விஷேசமா, பிரியமா இருக்கிறதா அவன் காமிக்கணும். உலகம் வேற, தன் குடும்பம் வேறனு ஆமடையான் உணர்ந்து பிரிச்சு வச்சுண்டு, முக்கால்வாசி நேரமும் சுவருக்கு இந்தப்பக்கமே பொழுதைப்போக்கணும். அந்தப்பக்கத்தைவிட இந்தப்பக்கம்தான் பெரிசென்று தான் நினைச்சுண்டு இருக்கதாக நிரூபிக்கணும். இப்படியெல்லாம் இருந்தா அவ இல்லத்தரசி, கற்புக்கரசின்னு ராஜ்யம் நடத்த முடியும். இந்தப்பேர் எல்லாம் அவளுக்கு வரதுக்கு ஆமடையான் ஓயாம ஒழியாம ஒத்தாசை பண்ணிண்டே இருக்கணும். நான் சரிதாண்டீம்மான்னு என் ஆமடையாள்ட்ட சப்ஜாடா ஒத்துக்கிண்டு நடத்திண்டு வரேன். உம்ம (சினேகிதன்) ராமரத்னம் அப்படியில்லே போலயிருக்கு. நான் நிம்மதியா இருக்கேன். அவரு இல்லே- அனாதைப் பள்ளிக்கூடம் விமர்சனம் எல்லாம் எனக்கும் ஜாம்ஜாம்னு நடத்தத்தெரியும். ஆனா நானும் ஷட்டகர் கிட்ட பறிகொடுத்துட்டு உக்கார்ந்து இருக்க முடியுமா நிம்மதியை? சரி... "கூலா" ஏதாவது சாப்பிடுவோம்” காரில் இருந்துகொண்டே கடைக்காரனைக் கூப்பிட்டார் “மது”.
தி ஜானகிராமனின் “தேடல்”  என்கிற சிறுகதை படிக்கவில்லை என்றால் கட்டாயம் படியுங்கள்!

ஆமாம், மீள்பதிவுதான்.. வேலை அதிகம்.. அதனாலதான்..

Friday, November 14, 2014

உயிருடன் நம்பள்கி! ஆன்மீக உலா உயிர் பெற்றது!

நம்பள்கினு ஒரு பதிவர் இருந்தார். திடீர்னு காணாமல் போயிட்டார்!  இவர் போனாப் பரவாயில்லை, இவர் தளத்தையும் இழுத்து மூடிவிட்டுப் போயிட்டார். இதனால் பலரும் பலவாறு பேசினார்கள். அதாவது அவர் தளத்தை யாரோ முடக்கி விட்டதாக பரவலாகப் பேசினார்கள். போனவர் ஏதோ இண்டெர்னெட் வசதியில்லாத இன்னொரு யுனிவேர்ஸ்க்கு போயித்தொலைந்ததால் உயிரோட இருக்காரா இல்லைனா செத்துட்டாரா?னு தெரியவில்லை. அவர் போன இடத்தில் இண்டெர்னெட் வசதியில்லாததால் "நான் உயிரோடதான் இருக்கேன்"னுகூட அவரால சொல்ல முடியலை. அதனால் பதிவுலகில் அவருக்கும் அவர் தளத்துக்கும் இறுதிச் சடங்கு கொடுத்தாகி விட்டது.

இப்போ திடீர்னு இவர் தளம், ஆன்மீக உலா உயிர்ப்பித்துவிட்டது! அவரும் உயிரோட வந்து நிக்கிறார்!

இவர் பதிவுலகில் காணாமல்ப்போனபோது பதிவு  ஒண்ணு எழுதினேன். அது இங்கே கீழே கொடுக்கப் பட்டுள்ளது!..2014 மே மாதம் அவரும் அவர் தளமும் காணாமல்ப் போனபோது எழுதிய பதிவு இது!

********************


 நம்பள்கியின் ஆன்மீக உலா முடக்கப்பட்டதா?

இக்பால் செல்வன் என்கிற கோடங்கிச் செல்வன், தமிழ்மணத்தை புதிய தமிழ்தளங்களை திரட்டச் சொல்லி வேண்டிக் கேட்டுக்கொண்ட பதிவில், நம்பள்கியின் தளம் முடக்கப்பட்டு இருக்கலாம் என்பதுபோல் டிஸ்கஸ்ஸன் செய்யப்பட்டுள்ளது.

நாத்திக பதிவு எழுதி வந்த நம்பள்கி வலைப்பக்கம் சில நாட்களாக காணவில்லை.கடைசியாக கடுமையாக கடவுளை மறுத்தும் விமர்சித்தும் எழுதியிருன்(வந்)தார். அந்த பதிவுடன் அவரது வலைப்பக்கமும் காணக்கிடைக்கவில்லை. இது பற்றி ஏதேனும் விபரம் யாருக்காவது தெரியுமா? www.nambalki.com பக்கத்தை யாராவது களவாடி (hack செய்து) விட்டார்களா?

பூபதி துபை



நாத்திக பதிவுகளுக்கு நடக்கும் வழமையான துன்பம் இந்த இணைய களவாணித் தனம் ( Hacking ) . எனது கொடுக்கி என்ற பெயரில் இயங்கிய தளமும் Hack செய்யப்பட்டு நூற்றுக்கும் அதிகமான பதிவுகளை இழந்தேன். தற்சமயம் Backup செய்து பாதுகாப்பை அதிகரித்துள்ளேன். நம்பள்கியின் தளம் இருமுறை சூறையாடப்பட்டுள்ளது. தற்சமயம் அவரது டொமைன் சிக்கலோ என தோன்றுகின்றது. Blogspot முகவரி ஊடாக போய் பாருங்கள். அவரே வந்து பதிலளித்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்.

இது உண்மையா?

உங்கள் தளம் முடக்கப் பட்டால் உங்களுக்கு மட்டுமே அவ்வலி தெரியும். நம்பள்கி, ஆத்திகரோ, நாத்திகரோ, தரமாக எழுதுகிறாரோ இல்லையோ என்பதெல்லாம் வேறு விடயம். ஆனால் திடீரென வாசகர்களை எட்டிப் பார்க்க வைப்பதுபோல் கவர்ச்சியான் தலைப்புகள் கொடுத்து பல வாசகர்களையும் சில வாசக நண்பர்களை சமீபத்தில் பெற்றார்.

அவர் தளம் முடக்கப் பட்டு இருந்தால், அது மிகவும் கண்டிக்கத் தக்க செயல். இன்று நம்பள்கி நாளை நீங்கள்! என்பதை நினைவில் கொள்ளவும்.

இது உண்மையா? என்பதை அவரே வந்து பின்னூட்டத்தில் சொல்ல வேண்டும். அதற்காகவே இப்பதிவு.

நன்றி.

************************

2014 மே மாதம் எழுதிய அந்தப் பதிவில் வந்த பின்னூட்டங்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்!

நம்பள்கியின் ஆன்மீக உலா முடக்கப்பட்டதா?

Thursday, October 30, 2014

காந்திமதியும் ஒரு தர்மபத்தினிதான்!

"என் பேரன்களுக்கு பாட்டிதான் ரொம்ப பிடிக்குது. பாட்டி மட்டும் ரொம்ப நாள் எங்களோடவே இருக்கனும்னு சொல்றாங்க"னு வேலைக்காரி முனியம்மாவிடம்  காந்திமதி பீத்துவது பக்கத்து ரூமில் "பிணமாக"ப்படுத்திருந்த சுப்ரமணி காதுக்கு நன்றாகவே கேட்டது.

"தேவடியா!"னு காந்திமதியை மனதுக்குள்ளேயே சத்தமாகத் திட்டினார், அவளுடைய அன்புக்கணவர் சுப்பிரமணி. எழுபது வயதைத் தொட்டுவிட்ட  தன் "தர்மபத்தினி" காந்திமதியின் வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் சுப்பிரமணிக்குத்தான் தெரியும்! "இந்தக்கிழம் சீக்கிரம் செத்துத் தொலையணும்" "இந்த 75 வயதில் இத்தனை வியாதிகளை வச்சுக்கிட்டு ஏன் இன்னும் உயிரோட இருக்குனு தெரியலை" எனறுதான் சொல்கிறாள் என்று அவளுடன் உடலும் உயிராக இத்தனை காலம் வாழ்ந்த சுப்பிரமணிக்குப் புரியாதா என்ன?

35 வருடங்கள் முன்னால சுப்பிரமணி தன் அண்ணன் தம்பிகளுடன் கூட்டு வியாபாரம் செய்யும்போது கோடிகோடியாக சம்பாரிச்சு, அண்ணன் தம்பிகளுக்குத் தெரியாமல் லட்சலட்சமாக பொதுப்பணத்தைச் சுரண்டி அள்ளிக்கொடுத்த போதும், குறைந்த பட்சம் 400 பவுன்களுக்கு மேலே விதவிதமான நகைகள் செய்துபோட்டு அழகுபார்த்தபோதும், காந்திமதி என்னவோ அவர்மேலே உயிருக்கு உயிராகத்தான் இருந்தாள். அன்பு, பாசம், வாயிக்கு சுவையா சமச்சுப் போடுவதில் இருந்து நெனச்ச நேரம் முந்தானை விரிப்பதிலேயோ எதிலும் எந்தக்குறையும் அப்போதெல்லாம் வைக்கவில்லைதான்! அன்று சுப்பிரமணி தினமும் பால் கொடுக்கும் பசு மாடு! இல்லை பொன் முட்டையிடும் வாத்து! ஆனால் இன்று? ஆமா காந்திமதியும் குஷ்புக்கு தெரியாத கற்புடன் வாழும் ஒரு பெண்தான்! வாழ்நாளில் காந்திமதி, சுப்பிரமணி தவிர யாரோடையும் படுத்ததில்லைனு சுப்பிரமணிக்கு தெரியுதோ இல்லையோ, கடவுளுக்குத் தெரியும்!

வரப்போற சாவை நெனச்சு பயந்து நடுங்கிக்கொண்டு ஒரு அழுக்கு மெத்தையில் படுத்துக்கிடக்கும் சுப்பிரமணிக்கு வாழனும்னு ஆசை எல்லாம் கெடையாது! ஆனால் பாவம் அவருக்கு சாகவும் ஆசையில்லை! சுப்பிரமணி சம்பாரிச்சு உருவாக்கிய,  தினமும் லட்சக்கணக்கில் வருமானம் வரும் ஸ்தாபனத்தில் இருந்து 15 வருடங்கள் முன்பே அவருக்கு "வி ஆர்" கொடுத்து அனுப்பிவிட்டு, தாங்கள் கல்லாவில் உட்கார்ந்துகொண்டு இன்னைக்கு கோடிகோடியா சம்பாரிக்கும் மகன்கள் ரெண்டு பேரும். அப்பா எப்போ "போய் சேருவாரு"னு அந்த "நன்னாளை" எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பணமா இல்லை?  அவர்களிடம் உள்ள பணத்திற்கு சுப்பிரமணியை கவனிக்க ஒரு நர்ஸ், மற்றதுக்கு இன்னும் ரெண்டு அல்லது நாலு வேலையாள்னு, முழுநேர வேலைக்கு வச்சுப் பார்த்தக்கலாம்தான்! ஆனால் "அப்பா இனிமேல் எதுக்கு?" னு லாபக்கணக்குப் போட்டார்கள் அந்த தேவடியாமகன்கள்!

வயதான "குழந்தை" சுப்பிரமணி டெய்லி வேலைக்காரி முனியம்மா போடும் ஊசியில் ஏற்றும் இண்சுலினுடன் மேலும் பி பி கொலெஸ்டெரால், கிட்னி ட்ரபுள்னு எல்லாத்துக்கும் ஒரு 10 மாத்திரைகள் எடுத்துக்கொண்டு  நல்லா வாயிக்கு ருசியா சாப்பிடணும்னு மட்டும் தான் ஆசைப்பட்டார். அப்படி அவர் ஆசைப்படுவதென்ன அவ்வளவு பெரிய தப்பா? னு அவர் உள் மனதில் தோன்றியதை சத்தமாக வெளியே சொல்லமுடியாத ஒரு கோழை அவரு!

சுப்பிரமணிக்கு இப்போலாம் காந்திமதியின் அறிவுரைப்படி இன்சுலின் ஊசிபோடுற "டாக்டர் முனியம்மா" என்னவோ டாக்டர் சொல்லிய, கொடுக்க வேண்டிய அளவுக்கு கம்மியாக கொடுப்பதுபோல தோனுச்சு. அதனால் சரியாக பசிக்கவும் இல்லை போலவும் தோனியது. மேலும் பல நேரங்களில் மாத்திரைகள் அளவுக்கு அதிகமாகக் கொடுப்பது போலவும் தோன்றியது. ஒருவேளை டாக்டருடைய ப்ரிஸ்க்ரிப்ஷ்னை இந்தத் தேவடியா மாற்றிவிட்டாளோ? "ஓவர் டோஸ்" கொடுத்து என்னை சீக்கிரம் அனுப்பி விட வழிபண்ணுகிறாளோ? என்ற பீதியில் செத்து செத்து இன்னும் வாழ்ந்து கொண்டிருந்தது ஏற்கனவே செத்துவிட்ட மாஜி தொழிலதிபரான "கோடீஸ்வரர் சுப்பிரமணியின்" பிணம்!

-முற்றும்

இதுவும் ஒரு காலத்தில் எழுதிய மீள்பதிவே!

Tuesday, October 28, 2014

இந்தக் கதையை சுஜாதா எழுதியிருந்தால்..

நாம் எல்லோருமே "பயஸ்ட்" "ப்ரிஜடீசியஸ்" தான்! நான் அப்படி இல்லைனு சொல்றீங்களா?  இப்போ ஒரு கதையை எடுத்துக்குவோம். அதை யார் எழுதினாங்க என்பதைப் பொறுத்துத்தான் நாம் அதை விமர்சனம் செய்கிறோம். சரியா?

கொஞ்சம் காமம் கலந்து, ஆங்கிலம் கலந்து, தமிங்ளிஸ்ல எதார்த்தமான ஒரு கதை எழுதுதும்போது  "படைப்பாளிக்கு" வரம்பு மீறிவிட்டோமா என்பதே பொதுவாகத் தெரியாது. இல்லையா? என்ன புரியலையா? என்ன வர வர நானும் கமல் மாதிரி, அவர் லெவலுக்குப் பேச ஆரம்பிச்சுட்டேனா? அப்போ அவரைப் புரிந்து கொள்வதுபோல் என்னையும் புரிஞ்சுக்கோங்க!


எனிவே, பொதுவாக ஒரு கதையை, "சுஜாதா" என்கிற பெயர் போட்டு வெளியிட்டால் பலவிதமான பாராட்டுகள் கிடைக்கும். அதே "எழவை". ஜானகிராமன் எழுதியதுனு போட்டு வெளிவிட்டால் அதைவிட பாராட்டுக்கள் கொட்டும். அதே கதையையே நம்ம  சாரு நிவேதிதா எழுதினதா பொய் சொன்னால் உடனே, "போஸ்ட் மாடன் எழுத்துனா இதான்யா!"  னு சொல்லுவாங்க "மேதைகள்".

இதெல்லாம் இல்லாமல், குப்பன், சுப்பன், வருண் னு ஒரு கத்துக்குட்டி எழுதியதாக அதே கதையை வெளியிட்டால்...

மஹா மட்டமான கதைடா இது!! இதெல்லாம் கதைனு சொல்லிக்கிட்டு அலைகிறான், வெத்துவேட்டு! என்றுதான் உலகம் சொல்லும்!

ஆமாம் நீங்களும்தான் வாசகரே!


எச்சரிக்கை!!!

கீழே வரும் இந்தக் கதை, வயதில் முதிர்ந்த , வாழ்க்கையில் பக்குவமடைந்த வாசகர்களுக்கு மட்டுமே. மற்றவர்கள் தயவு செய்து இடத்தைக் காலி செய்யவும். இல்லைனா படிச்சுட்டுப் படிக்காத மாதிரி போயிடவும்! :)


************
ஒருவேளை என்னை கெடுத்துட்டாரா? (18 + மட்டும்)

அஷோக் புறப்பட்டுப் போயி 15 நிமிடங்கள் ஆனபிறகும் வசந்தா படுக்கையில் நிர்வாணமாகக் கிடந்தாள்! ஒரு பக்கம் அவளுக்கு அவள் மேலேயே கோபமாகவும் எரிச்சலாகவும் வந்தது. இன்னொரு பக்கம் இன்பகரமான அனுபவமாக இருந்தது. போயும் போயும் இன்னொருமுறை இந்த ஆளுகூடவா? அவன் தான் மிருகம்! ஆம்பளை! வெக்கங்கெட்ட ஜென்மம்! நான் என்ன மட்டமான ஜென்மமா? ஒருவேளை ரொம்ப நாள் வச்சுக்காதனாலே நானும் "செக்ஸ் ஸ்டார்வ்டா" இருந்தேனா? ஏன் இப்படி சரினு சொன்னேன்? நான் எங்கே சரினு சொன்னேன்? நான்தான் பேசவே இல்லையே? ஒரு வேளை தள்ளிப் போயிருக்கலாமே? விட்டுருப்பானோ? வேணாம்னு முகத்தில் அறைவது போல சொல்லியிருக்கலாமே? என் வாயை ஒண்ணும் அவன் துணியால் பொத்திவைக்க வில்லையே?

ஒருவேளை இந்த ஆளு என்னை கற்பழிச்சுட்டாரா ? கற்பழிச்சா இதுபோல் இரண்டுமுறை எப்படி என்னால் உச்சமடைய முடியும்? அவர் கற்பழிக்கும்போது முண்டமாக.. நான் என்ன ஜடம் மாதிரியா கெடந்தேன்? நல்லாத்தானே என்னை மறந்து அனுபவிச்சேன்! அவனுக்குத்தான் தெரியுமே என் வண்டவாளம் எல்லாம்?ஏன் இணங்களைப் பார்த்து என்னை நெனச்சு  மனசுக்குள்ளேயே சிரிச்ச்சிருப்பானோ? எனக்கு அவனை அறவே பிடிக்கலைனா அவன் தொடுவதை, அவன் முத்தத்தை ஏன் என்னால் நிறுத்தமுடியவில்லை?. ஒருவேளை இன்னும் அவனை எனக்குப் பிடிக்குதா? ஒருவேளை இது வச்சுக்க மட்டும் அவனைப் பிடிக்குதா?

அஷோக் எல்லாம் ப்ளான் பண்ணித்தான் வந்தானா? இதுக்காகத்தான் ரேணுகா இல்லாத நேரம் பார்த்து வந்தானா? ரேணுகா இல்லைனு நல்லாத் தெரிஞ்சுதான் வந்தானா இந்தப் பொறுக்கி? அதுவும் பகல்ல? மெதுவாக எழுந்து பாத்ரூம் உள்ளே போய் ஷவர் ஆண்பண்ணி குளித்தாள் வசந்தா.

அவள் சிந்தனைகள் தொடர்ந்தன..

ஒரு வேளை எனக்கு மட்டும்தான் அவனை சுத்தமாகப் பிடிக்கவில்லையா? அவனை அறவே  பிடிக்கலைனா இப்போ எப்படி? அவன் இழுவைக்கு எப்படி நான் சரினு சொன்னேன்? இன்னும் இந்தாளு என்னைக் காதலிக்கிறானா? காதலா? இல்லை இல்லை "காமலிக்கிறானா"? ஐ மீன் காமுற ஆசைப்படுறானா? நான் என்ன இன்னும் கவர்ச்சியா இருக்கேனா? என்னை பிடிக்கலைனா அவன் எப்படி உடனே ரெடி ஆவான்? காண்டம் யூஸ் பண்ணினானா? ஒரு வேளை அதுவும் கொண்டுவந்திருந்தானா? எனக்கும் அவனை இன்னும்  பிடிக்குதா? இல்லை அவன் கொடுக்கிற செக்ஸ் மட்டும்தான் பிடிக்கிதா? எப்படி அவனை இந்தளவுக்கு அனுமதிச்சேன்? நான் என்ன இந்த வயதில் செக்ஸ்க்கு இவ்ளோ அடிமையா? ஒருவேளை அவனுக்கும் என்னை எப்படி சரிக்கட்டுறதுனு சரியாத் தெரிந்து இருக்குமோ? நான் ஹார்னியா இருக்கேன்னு நல்லாத் தெரிந்துதான் என்னைத் தொட்டானா? 17 வருட அனுபவமாச்சே? அதனால்தான் ஈஸியா கவுத்திட்டானா? பொறுக்கி!

குளிச்சுட்டு ட்ரஸ் பண்ணிட்டு வெளியே வந்தாள் வசந்தா. ஃபோன் அடிச்சது. அவன்ந்தான்!

“என்ன வேணும், அஷோக்?” என்று எரிந்து விழுந்தாள்.

“ஒண்ணுமில்ல..”

“Then why the fuck are you calling me?” ஆங்கிலத்தில்தான் அவள் அதிகமாக அவனைத் திட்டுவாள்.

“hey..It was an accident” னு மெதுவாகச் சொன்னான்

“What was?”

“Never mind”னு பின் வாங்கினான்

“Tell me, what was an accident?” அவள் விடவில்லை.

“You know what I meant? Whatever happened today..”

“You BASTARD!”

“Why didn't you tell me “No”? அவளையும் குற்றம் சாட்டினான்.

“You blame me for that too! I hate you!”

“So do I. But I must tell you this..you are still fucking hot! I could not resist...”

“You BASTARD! You know what you did? YOU RAPED ME!”

“But you enjoyed every second of it! May be talk to your divorce lawyer about this too.”

“You filthy bastard!”

"Do check your message!"

"Fuck you" என்று கத்தினாள்.

"Sure, I will. Anytime!"

கடந்த ஆறு மாதமாக வசந்தாவும் அஷோக்கும் 'separated". Marital பிரச்சினைகள். கருத்து வேறுபாடு, ego clash, உன் அம்மா நல்லவங்களா என் அம்மாவா?.. அது இதுனு கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சு வளர்ந்து ஒருவரை ஒருவர் வெறுக்க ஆரம்பித்தார்கள்! அஷோக், வசந்தாவை வெறுத்தான்னு சொல்ல முடியாது. கிஸ் பண்ன மட்டும்தான் அவள் வாய் பிடிச்சது, அதே வாயிலிருந்து வரும் வார்த்தைகள் பிடிக்கலை அவனுக்கு! அவன் ஒரு ஆம்பளை! ஆமாம், செய்றதை எல்லாம் செஞ்சுட்டு மன்னிப்புக் கேக்கிற ஜென்மம் அவன்!

வசந்தா, அவனை டைவோர்ஸ் செய்வதற்காக லாயரைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தாள். ரொம்ப ஸ்லோவாகத்தான் அந்த ப்ராசஸ் எல்லாம் மூவ் ஆச்சு..வசந்தாவுக்கு மறு கல்யாணம் எல்லாம் செய்றதா ஒண்ணும் ப்ளான் இல்லை. எல்லா ஆம்பளைகளும் ஒண்ணுதான்! மறுகல்யாணம்னா ஏதாவது ஒரு நல்ல "பொண்ணா" பார்த்துத்தான் செஞ்சிக்கணும். யாரு சொன்னா ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணை செக்ஸுவலாக திருப்திப் படுத்த முடியாதுனு? நினைத்துக்கொள்வாள் வசந்தா.


அவர்களுக்கு ஒரே ஒரு பெண்ணுதான். ரேணுகா என்று பெயர்.  இப்போ ஹைஸ்கூல் sophomore படித்துக்கொண்டிருக்கிறாள். இன்று வீட்டில் இல்லை!  பள்ளி மாணவிகளுடன் ஏதோ ஒரு கேம்ப் போயிருந்தாள். அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு வராத ஒரே விசயம் ரேணுகா சம்மந்தப்பட்டது மட்டும்தான். அஷோக் நிச்சயமாக ஒரு நல்ல அப்பாதான். பிரச்சினைகள் வலுத்தவுடன் அஷோக் ஒரு அப்பார்ட்மெண்ட்க்கு மூவ் அவுட் பண்ணிப்போயி ரொம்ப நாளாச்சு. இருந்தாலும் ரேணுகா சம்மந்தமாக அடிக்கடி வருவான். இந்த முறையும் அது சம்மந்தமாக்த்தான் வந்தான்..இல்லை அதை சாக்குச் சொல்லி வந்தான்..

அஷோக்குக்கு டைவோர்ஸ்ல இஷ்டமில்லையாம்! இவளோட சேர்ந்து வாழவும் இஷ்டமில்லையாம்! மறுகல்யாணம் செய்யவும் இஷ்டமில்லையாம்! "உனக்கு டைவோர்ஸ் வேணும்னா போய் லாயரைப் பார்த்துப் பேசு"னு வசந்தாவிடமே விட்டுவிட்டான். இன்னொரு நாளகவர்களுக்குள் நடந்த சண்டையில், அவள் அழுவதைப் பார்த்துவிட்டு சரி நான் மூவ் அவ்ட் பணணிக்கிறேன் என்னால இங்கே வாழ முடியாது! னு சொல்லி வெளியே போயிட்டான். ரேணுகாவுக்கு எதைப்பத்தியும் கவலையில்லை! டெய்லி சண்டை போடுற அம்மா அப்பாவுக்கு பிரிந்து இருக்கிற அப்பா அம்மா எத்தனையோ பரவாயில்லைனு தோனுச்சு அவளுக்கு.

என்னதான் சொல்லியிருக்கான்னு அவன் அனுப்பிய "வாய்ஸ் மெசேஜை" செக் பண்ணினாள், வசந்தா..

"ஹேய்.. நான் அந்த மாதிரி நெனைப்பில் வரலை.. அந்த ஃபைலை எடுக்கத்தான் வந்தேன். அதை உன் உதவியோட தேடும்போது உன் கண்ணில் எதார்த்தமா என் கை பட்டதும்.. என்னனு பார்க்கத்தான் உன் பக்கத்தில் மிக அருகில் வந்தேன். ஆனால்..அருகில் உன் உதட்டைப் பார்த்ததும் என்னால் உன்னை கிஸ் பண்ணாமல் இருக்க முடியலை.. அப்புறம் என்னால எதையும் கட்டுப்படுத்த முடியலை.. நீ ஒதுங்கி இருந்தால், திட்டி இருந்தால்.. நான் நிறுத்தி இருப்பேன். நீ எதுவும் பேசவும் இல்லையா? அதனால் என்னால நிறுத்த முடியலை.. சொல்றேன்னு கோவிச்சுசுக்காதே, நீ இந்த வயசுலயும் நிர்வாணமா இருக்கும்போது ரொம்ப அழகா இருக்க வசந்தா.. கொஞ்ச நாளா ரெகுலரா வொர்க் அவுட் பண்ணுறியா என்ன? இல்ல.. போனமுறைக்கு இப்போ உடம்பு ரொம்பவே ஃபிட்டா இருந்தது..I must say, I enjoyed more than the first night we had..Just wanted to tell you one more thing. I did not feel sorry for what I did.."

"You son of a bitch!" னு புன்னகைத்தாள் வசந்தா. 

 -முற்றும்

********************

உண்மையச் சொல்லுங்க! இல்லைனா சொல்லாமலே போங்க! எனக்கென்ன?

இதே கதையை சுஜாதா எழுதி வெகுஜன பத்திரிக்கையில் வெளி வந்து இருந்தால் என்ன சொல்லுவீங்க?..

இல்லைனா சாரு எழுதியதாக வெளி வந்து இருந்தால், ரொம்ப எதார்த்தமா இருக்குனு ஆளாளுக்கு  புகழமாட்டீங்களா? :)

நாம சகலகலாவல்லவரு, நல்லவரு, நம்மவரு, கமலு எழுதியிருந்தால்?

"அந்தாளு ஜீனியஸ்டா" னு இன்னொரு முறை சிலாகிக்க மாட்டீங்க?

உங்களை எல்லாம் நெனச்சா எனக்குப் பாவமா இருக்குங்க! :)))

Wednesday, October 22, 2014

நாத்திகர்களும் கடவுளும்!

ஆத்திகர்கள் கவனிக்கவும்! என்னவோ கடவுள்னு ஒருவர் இருந்தால், அவர் ஆத்திகர்களுக்குத்தான் நன்றியோட இருப்பார்னு நினைப்பது முற்றிலும் தவறான ஒரு எண்ணம்! கடவுள் என்பவர் இருந்தால், சாதாரண ஜால்ராவுக்கும், முகஸ்துதிக்கும் மயங்கும் மனிதனைப்போல் உணர்வு உள்ளவர்/ள்ர்தான் கடவுள் என்று கடவுளைப் பற்றி  கற்பனை செய்துகொண்டு மடமையில் வாழ்கிறார்கள் பல ஆத்திகர்கள்!

நாத்திகர்களுக்கு கடவுள் என்றுமே எதிரியல்ல! கடவுள் இல்லாமல் அவர்களால் வாழமுடியுது. கடவுளின் உதவி தேவைப்பட வில்லை! நாத்திகர்களைப் பொறுத்தமட்டில் பொதுவாக  "கடவுள் கடவுள்" னு சொல்லி ஊரை ஏமாற்றும் சில ஆத்திகர்களைத்தான் பிடிக்காது! மற்றபடி நாத்திகர்களுக்கும் கடவுளுக்கும் எந்தப் பிரச்சினையும் கிடையாது! கடவுள் என்பவர் இருந்தால் அவர் ஒரு போதும் நாத்திகர்களுக்கு எதிரி அல்ல!

இப்போ எல்லோருக்கும் உதவி செய்ய ஒருவர் இருக்கார்னு வச்சுக்குவோம். அவன் அவன் அவரிடம் போயி எனக்கு இதைக் கொடு, அதைக் கொடுணு கொல்லுறாணுக. பாவம் எல்லாரும் போட்டு இந்தாளு உயிரை வாங்குறாணுகளே,  எதுக்கு நாமும் தொந்தரவு பண்ணனும்? நம்ம பிரச்சினையை நாமே போராடி வெற்றியடைவோமே என்கிற தன்னம்பிக்கையில் அவரிடம் உதவி கேட்டு சிலர் போகவில்லை, அவர் உதவியை நாடவில்லை என்றால், அவர், இவர்கள்ஏன் தன்னிடம் உதவி கேட்கவில்லைனு கோவிச்சுக்குவாரா என்ன? அப்படி கோபித்துக்கொண்டால் அவரும் சாதாரண மனிதர்தான். இல்லையா?

கடவுளுக்கு நாத்திகர்களைத்தான் ரொம்ப பிடிக்கும், பிடிக்கணும். :) ஏன்? ஏன்னா..கடவுள், நாத்திகர்கள், தன்னை பயன்படுத்தாமலே இவர்களால் தன்னம்பிக்கையுடன் போராடி வாழமுடியுதே!  என்று எண்ணி அவர்களை மனதாறப் பாராட்டுவார். பரவாயில்லையே, என் பேரைச்சொல்லிச் சொல்லி ஊரை ஏமாற்றாமலும்,  தங்களையே ஏமாற்றாமலும் வாழ்கிறார்களே இவர்கள்! னு ரொம்ப சந்தோஷப்படுவார், கடவுள்!  

அதைவிடுத்து, தன்னை வழிபடுவனைத்தான் தனக்கு பிடிக்கும் என்று கடவுள் நினைத்தால், அந்தக் கடவுளுக்கு, கடவுளாக இருக்கும் தகுதி இல்லாமல் போகிறது என்பதை உணருங்கள்!

பொதுவாக மனிதனாகப்பிறந்தவர்கள், ஏமாற்றாமல், திருடாமல், பெண் பொறுக்கியாக இல்லாமல், நம்பிக்கை துரோகம் பண்ணாமல், மேலும் எல்லோரையும் தன்னைப்போல் நினைத்து, மனிதாபிமானத்தோட  நற்பண்புடன் வாழ்ந்தாலே போதும்! அவர்கள்  நாத்திகர்களாகக இருந்தாலும் அவர்களும் உயர்ந்த மனிதர்கள்தாம் என்னும் உண்மையை தன் சுயநலத்திற்காக, இறைவழிபாடு மற்றும் கடவுளை திருப்திப்படுத்த முயலும் ஆத்திகர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

நாத்திகர்கள், கடவுள் இல்லை என்று நம்புவது ஒண்ணும் பெரிய குற்றமல்ல! நம்ப முடியாததால் நம்புவதில்லை! நம்ப முடியாத ஒரு விசயத்தை அவர்களால் நம்புவதுபோல்  நடிக்கத்தெரியவில்லை! தன் மனதில் தோன்றுவதை உண்மையாக சொல்கிறார்கள்! அவ்வளவுதான்!

நற்குணங்களுடன், மனிதாபிமானத்துடன் இருந்து தன்னால் உணரமுடியாத கடவுளை வணங்கவோ வழிபடவோ நாத்திகர்கள் செய்யவில்லையென்றால் அது ஒண்ணும் தவறல்ல! அது எந்த வகையிலும் நாத்திகர்களின் தரத்தைக் குறைக்காது என்பதை ஆத்திகர்கள் உணர்வது நல்லது!

***************************

என்ன பார்க்குறீங்க?

ஆமா, இதுவும் மீள்பதிவுதான்! நீங்கள் எல்லாம் படிக்கலைனுதான் இன்னொரு பதிப்பு இப்போ வெளிவருது! :)

Tuesday, October 7, 2014

புத்தர், ஏசு, காந்தி அப்புறம் நான்!

சிறுவயதில் நான் ஒரு ஹைப்பர் ஆக்டிவ் ச்சைல்ட்! ஒரு முறை பளிங்கு (கோலி) அல்லது பம்பரம் அல்லது கிட்டியோ வெளையாடும்போது என்ன தப்பு செய்தேன்னு தெரியவில்லை.ஒரு பெரியவர் வாயிலே விழுந்தேன்.
இணையத்தில் திருடிய "கோலி" படம்


கண் மண் தெரியாமல் ஓடும்போது தெரியாமல் அவர் மேலே மோதிட்டனோ, அல்லது நான் வெளையாடும் விளையாட்டுப் பொருள் (பந்து அல்லது பம்பரம்) அவர் மேலே பட்டுருச்சோ தெரியலை. ஆனா ஒண்ணும் பெருசா அவருக்கு அடி கிடி எல்லாம்  படவில்லை. ஆனால் பெரியவருக்கு கோபம் வந்து என்னை "உனக்கு எல்லாம் படிப்பே வராது! மாடு மேய்க்கத்தான் போவ!"னு  என்னமோ அடாவடியா திட்டினார். "அந்த முனிவர்" என்ன படிச்சிருந்தார்னு தெரியலை. ஆனால் இதுமாரி நல்லாத் திட்ட கத்துண்டு இருந்தார்! ஒரு பள்ளியில் படிக்கும் அப்பாவிச் சிறுவன் தெரியாமல் செய்த தவறு என்பதைக்கூட சகிச்சுக்க முடியாமல்  இதுபோல் தரித்திரமாக சாபம் விடுறாரே இவரெல்லாம் என்ன பெரிய மனுஷன்? னு எனக்கு அப்பவே தோனுச்சு. (அப்போவே நான் ஞானியாக்கும்)!

 அந்த முனிவர் விட்ட அநியாயமான சாபம் என்னவோ பலிக்கவில்லை! ஆமா நாந்தான்  படிச்சு ஒரேயடியா கிழிச்சுட்டேன் இல்லையா? :)

வாழ்க்கைப் பாதையில் நாம் நடந்து வரும்போது ஒவ்வொரு சமயம் யாராவது யாரு மேலே உள்ள கோபத்திலேயோ தன் தகுதியை தானே உயர்த்திக் கொண்டு "முனிவர் போல்" சாபம் எல்லாம் விடுவார்கள். விட்டுட்டுப் போகட்டும். தயவு செய்து அதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு "முனிவர் சொல்லிட்டாரே, அதுபடி நடந்துடுமே.." னு அழுததழுது வீணாப்போயிடாதீங்கனு சொல்ல வர்றேன். சரியா? :)

************************

அதென்னனு தெரியலை, "வாலிபால்" வெளையாடும்போது. அப்படினா? அதாங்க volleyball. :)  நெறைய நேரம் என்னுடைய "டீம் மேட்" களுக்கே எதிரா செயல்பட வேண்டியது வருது. வெளையாடுறது சும்மா பொழுது போக்குக்கு, கொஞ்சம் "காலரிகள்" எரிக்கலாமே என்பதற்காக அல்லது முக்கியமாக எக்ஸர்சைஸ்க்கு (உடற்பயிற்சி)தான். வேற  ஒண்ணும் பெருசா சாதிக்க இல்லை! மேலும் எங்க டீம்ல யாரும் பெரிய "passer"ரோ "setter"ரோ,"hitter"ரோ "blocker"ரோ கெடையாது.

இப்படியெல்லாம் digging பண்ணி நாங்க ஆடமாட்டோம்.. நாங்க ஆடுவதெல்லாம் சும்மா!

எப்படி ஜம்ப் பண்ணி ப்ளாக் (block) பண்ணுறான் பார்த்தீங்களா? இதுதான் உண்மையான வாலிபால்!


எல்லாரும் எப்படியாவது மூனு தட்டு தட்டி அடுத்த பக்கம் அனுப்பிறதே பெரிய சாதனையா நெனைக்கிறவங்க. ஆனால் ஒன்னு, எப்படியாவது, எப்படியாவது ஜெயிச்சே ஆகனும்னுதான் ஆடுவாங்க விளையாட்டு வீரர்கள் அனைவரும்  பாவம். நெறைய நேரத்தில் எதிர் பக்கம் உள்ளவங்க அடிக்கும் பந்து எங்க பக்கத்தில் "லைன்" ல விழுந்தாலும் (அது இன் தான்) அடிச்சு அது வெளியே போனதாக (அவ்ட்) கேவலமாகப் பொய் சொல்லுவாங்க! சொன்னா நம்பமாட்டீங்க, ரொம்ப பெரிய பெரிய மனிதர்கள் இவங்க எல்லாம்! இவர்கள் படித்த படிப்பு, இன்றைய ஸ்டேட்டஸ் எல்லாம் கேட்டால் பயந்துடுவீங்க. ஆனால்  ஏன் இப்படி சிறுபிள்ளைத்தனம் செய்கிறார்கள்?? காரணம்? அவர்களுக்கு  எப்படியாவது செயிக்கனும் இல்லையா? ஆனால் "நியாயஸ்தன்" நான்  ஒருத்தன் இருக்கேன் இல்ல? அதையும் அவங்க கவனிக்கணும்தானே? அப்படி "இன்" பாலை அவ்ட்னு சொல்லும்போது நான் "அதெல்லாம் இல்லை "இன்"தான் அது னு சொல்லி விடுவேன். ஆக, இந்த சூழலில்  என் டீம் மெம்பர்களிடம் கெட்ட பேர் வாங்கி என் எதிராளிகளிடம் நல்ல பேர் வாங்கவேண்டி வரும். ஒவ்வொரு சமயம் எங்க டீம் மெம்பர்கள் எல்லாரும் ஒரு மாதிரியாப் பார்ப்பாங்க! இவனுக்கு வெளையாடவும் தெரியவில்லை, இப்படியும் நியாயம் பேசி உபத்திரவம் பண்ணுறான் தரித்திரம் இவன்னு! னு சொல்ற மாதிரி இருக்கும். ஒருவேளை எல்லாருமா சேர்ந்து நம்மள அனுப்பிட்டா? என்ன செய்வதுங்கிற பயம் மட்டும் எனக்கு வருவதில்லை! ஆமா அதான்  இருக்கவே இருக்கு டென்னிஸ்! அதுவும் ஒரு செக்ஸி பார்ட்னெர் கெடச்சு இருக்கார்! :-))) ஆனால் என்ன டென்னிஸ் அவுட்டோர் வெளையாட்டு என்பதால் ஒரு 4-5 மாதம்தான் வெளையாடமுடியும்! :(. என்ன பார்க்குறீங்க? வாலிபால் இண்டோர் வெளையாட்டுதாங்க, அமெரிக்காவில் எல்லாம்! உங்க ஊரில் எப்படினு தெரியலை எனக்கு! :)

*********************

சரி, தலைப்புக்கு வரவா,..அதென்ன புத்தர், ஏசு, காந்தினு சொல்லிட்டு , அவர்களோட   உன்னையும் சேர்த்துக்கிட்டேன்னு கேக்கிற/பாக்கிற மாதிரி தெரியுது?

கொஞ்சம் பொறுங்கப்பா! விளக்குறேன்.

புத்தர் தன் பொண்டாட்டி பிள்ளையெல்லாம் விட்டுப்புட்டு வந்து புத்தமதத்தை ஆரம்பிச்சு, எவ்வளவு மக்களைக் கவர்ந்து, இந்தியா சைனானு புத்த மதத்தை வளர்ந்து..எவ்ளோ பெரிய ஆள் அவரு??

இணையத்தில் திருடிய புத்தர் :)


அப்புறம் ஜீஸஸ்.. அவருக்கு எம்மாம்பெரிய மக்களைக் கவரும் சக்தி இருந்துச்சு? நான் யோக்கியன் யோக்கியன்னு சொல்லிக்கொண்டு அலைகிற இவ்வுலகில், நாம் அனைவருமே பாவிகள்னு எவ்வளவு தெளிவான புரிதல்! அவர் போதனைகளை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை எத்தனை மக்கள்..

அப்புறம் நம்ம காந்தி, அஹிம்ஷா முறையில் போராட்டம்னு ஒரு கண்சப்ட்டை உருவாக்கி உலகளவில் மஹாத்மானு பாராட்டுப்பெற்றவர்..

ஆமா எப்படிங்க இவங்க எல்லாம் இது மாதிரி மத்தவங்கள தான் நினைப்பதை, தன் கருத்தை சரி என்று நம்ப வைக்கிறாங்க? நான் சொல்றதையெல்லாம் ஒரு பயகூட கேக்க மாட்டேன்கிறான். :-( ஆனால் இவங்க சொல்றத கோடிக்கணக்கானவர்கள் நம்பினாங்க, நம்புறாங்க!

ஒருவேளை இதுபோல் ஒருவரை நம்புவது, மதிப்பது  ஒரு மாதிரியான தொத்து வியாதியா? அதாவது ஒரு ஆளு நம்பினால், அதைத்தொடர்ந்து எல்லாருக்கும் அந்த "நம்பிக்கை" தொத்திக்குமா?

ஆனாலும் இவர்களுக்கும் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யுது..,

புத்தர் கருத்தை இந்துக்கள் ஏத்துக்க மாட்டாங்க. நம் ஈழத்தமிழர்களை புத்தனை இழிவு படுத்துவதைப் பார்க்கலாம்.. ஏசு கருத்தை, போதனைகளை இந்துக்களும், முஸ்லிம்களும், யூதர்களும் ஏத்துக்க மாட்டாங்க.
காந்தியை இந்து மத வெறியர்களே நெறையப் பேரு ஏத்துக்கலை, அப்புறம் எப்படி கிருத்தவர்களும், இஸ்லாமியர்களும் ஏத்துக்குவாங்க?
என்னதான் இவங்களுக்கு நெறைய பின்பற்றுவர்கள் இருந்து இருந்தாலும்..இவங்க நெறைய சாதிச்சு இருந்தாலும் நம்ம லெவெலுக்கு (என் லெவலுக்கு) இவங்க எப்படிங்க வரமுடியும்?

அதான் நெனச்சதை பேசி, உணர்ச்சிகளை வார்த்தைகளாக்கி அள்ளி எறிய இவங்களுக்கு ஒரு இணையதளம் எல்லாம் அன்று இல்லையே? அந்த வசதி எனக்குத்தானே இருக்கு? அப்புறம் நம்ம ப்ளாக் followers மாதிரி அவங்களுக்கு 354 followers ம் கெடையாது பாருங்க! :) இப்போ சொல்லுங்க! யாரு பெரிய ஆளு? :-)))

கூச்சப்படாமல் சொல்லுங்க, அவர்கள் எல்லாம் ஜுஜுபி, நம்ம வருண் தான் பெரியாளுனு! :)))


*************************

கொசுறு:


இணையத்தில் திருடிய ஜோக்



இணையத்தில் திருடிய ஃபெமினிஸ்ட் க்வோட்!






இது உண்மைதான்னு எல்லா ஆம்பளைகளுக்கும் தெரிந்து இருக்கணும். தெரியலைனா, நீங்க ஆம்பளையே இல்லை! :)

என்ன பார்க்குறீங்க?

ஏற்கனவே படிச்சமாதிரி இருக்கா? :)

ஆமா, இதுவும் ஒரு மீள் பதிவுதான். நெறையா படங்களை இணையத்தில் திருடி இப்போ சேர்த்துவிட்டு இருக்கேன். ஒரிஜினல் பதிவு என்னவோ ரொம்ப ஒரிஜினலாவேதான்  இருந்துச்சு! :)

Tuesday, September 23, 2014

தமிழ்நாட்டில் ஏன் அம்பேத்கார்கள் உருவாகவில்லை?!

காந்தி, என்னதான் நம் தேசத் தந்தையாக இருந்தாலும் அவருக்கு இந்து மதப் பற்று அதிகம். காரணம்? காந்தி ஒரு பார்ப்பணர் இல்லை என்றாலும் ஒரு ஹை க்ளாஸ் இந்து! காந்தியால் நெறைய சாதிக்க முடிந்ததற்கு அது ஒரு முக்கியக் காரணம்!  காந்தி, கீழ் சாதியிலிருந்து வந்தவரில்லை என்பதை நினைவில் கொள்ளுவோம்! சப்போஸ், காந்தியே ஒரு தாழ்த்தப் பட்டவரா பிறந்து இருந்தால் என்ன ஆகியிருக்கும்? அவர் போராடி இவ்வளவு உயரத்திற்கு ஒரு பெரிய தலைவராக வந்திருக்க முடியுமா? என்றால்..,,சாண்ஸே இல்லை!  என்பதே கசப்பான உண்மை!

சில உண்மைகளை ஏற்றுக்கொள்ள திறந்த மனது இருக்கிறதா உங்களிடம்?

தொடருங்கள்!

காந்தி, உயர் சாதியில் பிறந்தது அவர் தப்பில்லை! ஆனால் அவர் தாழ்த்தப்பட்டவரா பிறந்து வளர்ந்து இருந்தால் நிச்சயம் இந்துமதப் போதகரா இருந்து இருக்க மாட்டார்! ஏன்? இருந்து இருக்க முடியாது! ஏன்? சக இந்துக்கள், தாழ்த்தப் பட்டவரான தன்னை இழிவு படுத்துவதை தாங்க முடியாமல், இந்து மதத்தை வெறுத்து புத்தமதம் இல்லைனா இஸ்லாம், இல்லைனா க்ரிஷ்டியனாக ஆகி இருப்பார்!

காந்தி மேலே எனக்கு நெறையவே மரியாதை எல்லாம் உண்டு. அஹிம்சை முறையில் போராட்டம் நடத்தலாம் என்று உலகத்துக்கே கற்றுக் கொடுத்தவர் காந்தி! இருந்தாலும் உயர் சாதியில் பிறந்ததால் அவருக்கு நெறையவே அனுகூலங்கள்  இருந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது. காந்தி பொறந்தது குஜராத்! நம்ம தமிழ்நாடு இல்லை! ஒரு வேளை அவர் தமிழ்நாட்டில் பொறந்து இருந்தால்  காந்தியும் வீணாப்போயி இருப்பார்!

அடுத்து நம்ம ஜீனியஸ் அம்பேத்கார் பற்றி பார்ப்போம்! அம்பேத்கார் பிறந்தது மத்யபிரதேஷ்! ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து இவர் இந்த அளவுக்கு படித்து முன்னேறி மேலே வந்திருக்கார்னா, இது எவ்வளவு பெரிய விசயம்னு சாதி வெறிபிடித்து அலையும் தமிழ்நாட்டில் பிறந்த எனக்கு நல்லாவே தெரியும்! இச்சாதனையை  உலக அதிசயங்களில் முதல் அதிசயமாக வைக்கணும்! என்னைத் தவறா புரிஞ்சுக்காதீங்க! அதாவது ஜீனியஸ்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்தததை நான் பெரிதாகச் சொல்லவில்லை! தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரு ஜீனியஸ், போராடி வளர்ந்து  நாடறிய உலகறிய முன்னேறியதை சொல்லுகிறேன்! அவருக்கு எவ்வளவு தன்னம்பிக்கை இருந்து இருக்கணும்?

ஒரு வேளை அம்பேத்கார் தமிழ் நாட்டில் பொறந்து இருந்தால்? 

நெனைக்கவே எனக்கு பயம்மா இருக்கு!  அம்பேத்கார் படித்து மேலே வளரவிடாமல் நம்ம ஊர் உயர்சாதி முட்டாள்களால், சுத்தமாக தடுத்து ஒடுக்கப்பட்டு அழிந்து இருப்பார்! அவர் சிந்தனைகளை, முன்னேற்றத்தை, படிப்பறிவை வளர்க்கவிடாமல் சாதி வெறிபிடித்த தமிழர்களால் அழிக்கப்பட்டு இருப்பார்! தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அந்தக்காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் அடைந்த இன்னல்களுக்கு அளவே இல்லை! அம்பேத்காரை மட்டும் விட்டு வைத்து இருப்பார்களா என்ன? மூளையைக் கசக்கி யோசிக்கவும்!

பார்ப்பணர்கள் பலரிடம் எனக்குப் பிடிக்காத விசயம் ஒண்ணு இருக்கு. எதுக்கெடுத்தாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இன்று கொடுக்கப்படும் ரிசெர்வேஷன் பத்தி மட்டும் வயிறெரியிவார்கள்! நாங்க தீண்டாமையை வளர்த்தோமே ஒழிய, தாழ்த்தப்பட்டவர்களை எந்தவையிலும் "ஃபிசிக்கல் அப்யூஸ்" பண்ணவில்லை என்பார்கள். அதுபோல் "அப்யூஸ்" செய்தவர்களெல்லாம் ஹைக்க்ளாஸ் திராவிட முட்டாள்கள்தான் என்பார்கள். அந்தக் குற்றச்சாட்டு  ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் பார்ப்பணர்கள் என்னைக்காகவது தாழ்த்தப்பட்டவர்களுக்காக, அவர்கள் பட்ட இன்னல்களுக்காக அழுதிருக்காங்களா? அவங்க படுகிற இன்னல்களைப் பத்தி கவலையாவது பட்டு இருக்காங்களா? இல்லை, அவர்களுக்குகாக இரங்கச்சொல்லி இவங்க கடவுளிடம் பூஜை செய்து இருக்காங்களா? அவங்களும் மனிதர்கள்தான், ஏன் அவர்களை நாம் இவ்வளவு கீழ்த்தரமா ட்ரீட் பண்ணுகிறோம்?னு யோசிக்கவாவது செய்தார்களா? அந்த அளவுக்கு பார்ப்பணர்களுக்கு மூளை இருந்ததா? இல்லை திறந்த மனதுதான் இருந்ததா? னு பார்த்தால்... கெடையவே கெடையாது என்றுதான் தோனுது. அதுபோல் நற்சிந்தனை கொண்ட பாரதியையே அக்ரஹாரத்தைவிட்டுத்  தள்ளி வைத்தவர்கள் இவர்கள்! கொஞ்சம்கூட பொது நோக்கில்லாமல் இவங்க முன்னேற்றம், இவங்க கல்வியறிவு, இவங்க மதம், இவங்க கடவுள் நம்பிக்கை இதில்தான் இவர்கள் எப்போதுமே முழு கவனம் செலுத்தினார்கள். தாழ்த்தப் பட்டவர்களையோ, அவர்கள் பட்ட இன்னல்களையோ பற்றி இவங்க ஒருபோதிலும் கவலைப்பட்டதே இல்லை! வடிகட்டின சுயநலம்!

பெரியார்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்காக ரொம்ப வரிந்துகட்டிக்கொண்டு வந்து அவர்களை இழிவுபடுத்திய  "ஹை க்ளாஸ்" திராவிட முட்டாள்களை கண்டித்தாரா என்பது தெரியவில்லை!

அம்பேத்கார்கள் நம் தமிழ்நாட்டில் உருவாகி இருக்க முடியுமா? னு யோசித்தால் ... நிச்சயமாக அந்த காலகட்டத்தில் உருவாக முடியாத ஒரு சூழல்தான் இருந்ததுனுதான் தோனுது. நிச்சயம் அம்பேத்கார் போன்ற ஜீனியஸ்கள் தமிழ் நாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து, உலகறியாமலே வளர்ந்து,  வாழ்ந்து பிறகு நாமறியாமலே மறைந்தும்தான் இருப்பார்கள். அவர்கள் அம்பேத்கார்போல் மேல் வந்து பெரிய ஆளாகததற்கு காரணம்?  தாழ்த்தப்பட்டவர்களை நசுக்கிய நம் உயர்சாதி தமிழர்களந்தான் நிச்சயம் இதில்  பெரிய பங்குபெறுவார்கள்! தீண்டாமையை கண்டுபிடித்து, கடைபிடித்து, வளர்த்த பார்ப்பணர்களும் இவ்விசயத்தில் "இண்ணொசண்ட்" எல்லாம் கெடையாது.

ரொம்ப யோசித்தால், அறியாமைதான் (நம்ம முட்டாள்களா இருந்து இருக்கோம்) எல்லாவற்றிற்கும் காரணம்னு பொத்தாம் பொதுவாக சொல்லிட்டுப் போகலாம்! இல்லைனா இருக்கவே இருக்காரு நம்ம கடவுள். ஆமா, அவர் என்னத்த கிழிச்சாரு தாழ்த்தப்பட்டவர்களை இந்த முட்டாள்கள் சீரழிக்கும்போது?

குறிப்பு: அம்பேத்கார் திரைப்படம் இன்னும் பார்க்கவில்லை! அந்த திரைப்படத்தைப் பத்தி யோசிக்கும்போது வந்த சிந்தனைகளின் தொகுப்புதான் இது!

பின்குறிப்பு: இது ஒரு காலத்தில் எழுதிய பதிவு. ஆமாம் மீள் பதிவு இது! அதனால் காரசாரமாக இருக்கும்! பயந்துடாதீங்க! :)

Friday, September 5, 2014

நல்ல மகனா? இல்லை நல்ல கணவனா?

“என்னப்பா மாணிக்கம் தீபாவளிக்கு நம்ம வீட்டுக்கு வரலையா? மதுரைக்கு உன் மனைவி வித்யா வீட்டுக்கு வந்துவிட்டு அப்படியே பாம்பே போயிடுவியா?” என்றாள் அம்மா சத்யா அழுகையுடன்.

“அப்படியெல்லாம் இல்லைம்மா. காரைக்குடிக்கு வர முயற்சிக்கிறேன்” என்றான் மாணிக்கம் வருத்தத்துடன்.

“என்னவோ நீ நல்லா சந்தோஷமா இருக்கனும்ப்பா. அது போதும் அம்மாவுக்கு. நீ தீபாவளி செலவுக்கு அனுப்பிய பணம் கிடச்சதுப்பா” என்றாள் சத்யா.

“சரிம்மா நான் மதுரை வந்து உங்களைக் கூப்பிடுறேன்” என்று ஃபோனை ஹேங் அப் பண்ணினான்.

மாணிக்கத்துக்கு கல்யாணம் ஆகி 6 வருடமாகிவிட்டது. மும்பையில் ஒரு நல்ல வேலையில் இருக்கிறான். நடுத்தர வர்க்கத்தில் பிறந்த அவனை எப்படி எப்படியோ கஷ்டப்பட்டு படிக்கவைத்தார்கள் அவனுடைய பெற்றோர்கள்.

அவன் அம்மா சத்யாதான் வித்யாவை அவனுக்கு சரியான மணமகள் என்று தேர்ந்தெடுத்தது. வரதட்சணை எல்லாம் மாணிக்கம் வாங்கவில்லை. அதை அசிங்கமாக நினைப்பவன் தான் அவன். ஆனால் வித்யாவின் பெற்றோர்கள் மகளுக்கு நெறைய நகைபோட்டு கல்யாணம் செய்துவைத்தார்கள். மகளுக்கு நகை போட்டு பெருசா செய்யலைனா அவர்களுக்கு அவமானம் என்று அவர்களா செய்தது அது. அவனைப் பொருத்தமட்டில் அவைகள் அவள் நகைகள். அவளுக்கு அவள் பெற்றோர்கள் கொடுத்தது. மாணிக்கம் அதை தொடப்போவதுகூட இல்லை. அது அவனுக்கு தேவையும் இல்லை. அதை அவர்களுக்கு திருப்பிக்கொடுப்பதிலும் எந்த ஆட்சேபனையும் இல்லை.

கல்யாணம் நடக்குமுன் அவன் மனைவி வித்யாவின் அம்மா, சித்திகள் மற்றும் சொந்தக்காரர்கள் எல்லோருமே அவன் அம்மா சத்யாவிடம் மதிப்பும் மரியாதையுடன் இருந்தார்கள். அவர்கள் எல்லோருமே அவனுக்கு கொஞ்சம் தள்ளிய சொந்தம்தான். அவன் அம்மா சத்யா மேல் உயிராக இருப்பதுபோல் நடித்தார்கள். ஆனால் மாணிக்கத்துக்கு அப்போவே தெரியும், அவர்கள் அன்பெல்லாம் வெறும் நாடகம் என்று. அவன் நினைத்ததுபோலவே, கல்யாணம் முடிந்த அடுத்த நாளே, எல்லாம் மாறிவிட்டது. மாணிக்கம் என்னவோ இனிமேல் அவர்களுக்குத்தான் சொந்தம் போலவும், அவன் அம்மா சத்யா வேண்டாதவளாக மாறிவிட்டாள். அதை மாணிக்கமே கண் கூடாகப்பார்த்தான். அவன் அம்மாவிடம் வித்யாவின் அம்மா மற்றும் தங்கைகள் பேசுறவிதம், கொடுக்கிற மரியாதை எல்லாமே ஒரே நாளில் மாறியது. இதேபோல் அவர்கள் அவன் அம்மாவை கல்யாணத்திற்கு முன்பு நடத்தி இருந்தால், நிச்சயம் வித்யாவை கல்யாணம் செய்து இருக்க மாட்டான், மாணிக்கம். அவனுக்கு அவன் அம்மா என்றால் உயிர்.

ஆனால் மாணிக்கத்தின் அம்மா அவனிடம் வித்யாவின் ரிலேட்டிவ்ஸ் பற்றி சொல்லி குறைசொல்லும்போது. என்னம்மா இது? உங்களுக்காகத்தான் நான் இவளையே கல்யாணம் செய்தேன்? நீங்கதானே இவளை கல்யாணம் செய்யனும்னு சொன்னது? இப்போ நீங்களே வந்து அழுதால் என்னம்மா அர்த்தம்? என்றான் எரிச்சலுடன். இருந்தாலும் அவனுக்கு புரிந்தது, வித்யா கழுத்தில் தாலி ஏறியதும் வித்யா வீட்டை சேர்ந்தவர்கள் அவன் அம்மாவிடம் திமிருடன் பேசுவது, அலட்சியமாக நடந்து கொள்வது எல்லாமே. ஏதோ இவனை மட்டும் மஹாராஜன் போல் நடத்திவிட்டு அவன் அம்மாவை மட்டமாக நடத்தினால், இவன் எதையும் கண்டுகொள்ளமாட்டான் என்ற நினைப்பா என்னனு தெரியலை. மாணிக்கத்துக்கு எல்லாமே புரிந்தது. இருந்தும் அவன் பொறுமை யாகத்தான் இருந்தான். அவனால் எதுவும் செய்யவும் முடியவில்லை என்பது உண்மை.

நாலு வருடங்கள் முன்னால் வித்யாவின் தங்கை பிரபா திருமணத்துக்கு கடைசி நிமிடத்தில் தேவையான 6 லட்ச ரூபாய் இவன் அக்கவுண்ட்ல இருந்துதான் போனது. ஆறு லட்ச ரூபாய் வித்யா தங்கை கல்யாணத்திற்கு இவன் கொடுத்தது மாணிக்கத்தின் அம்மா அப்பாவிடம் அவன் சொல்லவில்லை. இதுபோல் பெரிய பணம் கொடுக்கும் விசயத்தை அவன் அம்மாவிடம் இருந்து எப்போதுமே மறைத்ததே இல்லை. ஆனால் இன்று இதைச்சொன்னால் தேவையில்லாத பல குழப்பங்கள் வரும் என்று அவன் அம்மா அப்பாவிடம் சொல்லாமல் விட்டுவிட்டான். கல்யாணம் ஆனபிறகுதான் அவன் இதுபோல் நிறையவே பொய் சொன்னான். உண்மைகளை மறைத்தான். கல்யாணம் ஆன பிறகு அவன் தரம் குறைந்துகொண்டு போவது அவனுக்கே புரிந்தது.

அவன் மனைவி வித்யா ஒண்ணும் பெரிய வேலை எல்லாம் பார்க்கவில்லை. ஆனால் அவளொரு நல்ல மனைவி, மற்றும் நல்ல தாய் என்பதில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இக்கட்டான நிலைமையில் பண உதவி செய்ததால் இவனுக்கு வித்யா அம்மா அப்பா மற்றும் அவர்கள் சொந்தக்காரர்கள் அனைவரிடம் இருந்து தனி மரியாதை எல்லாமே கிடைத்தது. அவன் கொடுத்த அந்தப்பணம் திரும்பி வரப்போவதில்லை என்றும் தெரியும் அவனுக்கு.

வித்யா மற்றும் அவள் குடும்பத்தினருக்கு மாணிக்கத்தின் அம்மா அப்பா மட்டும் எது செய்தாலும் தப்பு. மாணிக்கத்தின் அம்மா அப்பாவுக்கு இப்போது வயதாகிவிட்டது, முன்புபோல் அவர்கள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அப்படிப்பார்த்தால் வித்யா அம்மாவைவிட ஒரு அரைலூசு உலகத்தில் யாரும் இல்லை. மாணிக்கம் தனக்குள் சிரித்துக்கொள்வான். வரதட்சணை பற்றி கவலைப்பட்டு கொண்டிருக்கும் முட்டாள்கள் பலர் இதுபோல் மருமகனிடம் இருந்து பணத்தையெல்லாம் பெற்று சில மனைவிகள் தன் குடும்பத்தை நடத்துவது எங்கே தெரியப்போகிறது? என்று. இதுபோல் இவனுடைய பல நண்பர்களும் உதவி செய்ததாகவும் அவன் கேள்விப்பட்டான்

மதுரை வந்து இறங்கினார்கள் அவனும், மனைவியும், 4 வயது மகள் ராஜியும். வித்யா அப்பா ராமன் வந்து அவர்களை டாக்ஸி பிடித்து அழைத்து சென்றார். வித்யா வீட்டிற்கு வந்தவுடன் வித்யா தங்கை பிரபா அவர் கணவன் ராஜேஷ் எல்லோரும் அவனை அன்புடன் வரவேற்றார்கள். தீபாவளிக்கு என்ன படம் பார்ப்பது, எப்போ கோயிலுக்கு போவது எங்கே ஷாப்பிங் போவது என்று பலவிதமான ப்ளான்கள்.

வித்யாவுடன் தனியாக பேச நேரம் கிடைத்தது அவனுக்கு.

“வித்யா! நான் தீபாவளிக்கு காலையில் இங்கே சாப்பிட்டுவிட்டு பஸ் ஏறி காரைக்குடிக்கு எங்க வீட்டுக்கு போறேன் அம்மா அப்பாவை பார்க்க” என்றான் மாணிக்கம்.

“என்னங்க படத்துக்குப்போக டிக்கெட் எல்லாம் புக் பண்ணியாச்சு” என்றாள் வித்யா.

“அங்கேயும் இதே படம் ரிலீஸ் ஆகுதாம், என் தங்கச்சி மாப்பிள்ளை சொன்னார். நீ இங்கே பாரு நான் அங்கே பார்த்துக்கிறேன், வித்யா”

“இல்லைங்க தீபாவளி அன்று சேர்ந்து படம் பார்க்காம. அடுத்த நாள்வேணா நீங்க போகலாம் இல்லையா?”

“தீபாவளி அன்று என் அம்மா அப்பாவை பார்க்கனும் வித்யா. என்னைப் பெற்றவர்கள் அவர்கள். உனக்காக அவர்கள் உணர்ச்சிகளை மதிக்காமல் இருக்கமுடியாது! அவர்கள் குறையுள்ள சாதாரண மனுஷ ஜென்மம்தான். ஆனா எனக்கு அவங்க அம்மா அப்பா! இதையெல்லாம் சொன்னாத்தான் புரியுமா? உனக்கு அறிவு இல்லையா?” என்றான் சற்றே கோபமாக.

“உங்க வீட்டில் எனக்கு எதுவும் வசதியா இருக்காது” என்றாள் வித்யா.

“உண்மைதான். ஆனா உன்னை கல்யாணம் பண்ணலைனா நான் இதுவரை சம்பாரித்த பணத்தை வைத்து நல்ல வீடுகட்டி அவர்களை ராஜா ராணி போல என்னால் பார்க்க முடிஞ்சிருக்கும். என் சம்பாத்யம் எல்லாம் நம் ஆடம்பர செலவுக்கே போவதால்தான் அவங்க கஷ்டப்படுறாங்க” என்றான் மாணிக்கம்.

“எனக்கு அங்கே வசதியா இல்லை! பாத்ரூம் கூட ஒழுங்கா இல்லை!” வித்யா கண்ணில் வழக்கம்போல கண்ணீர்.

“நம்ம கல்யாணத்திற்கு முன்பும் இதே பாத்ரூம்தான் இருந்தது. உங்க அம்மா அப்பா இந்த பாத்ரூமைப்பற்றி எந்தக்குறையும் அப்போ சொல்லவில்லை! நீயும் எதுவும் சொன்னதில்லை. உன் தங்கை கல்யாணத்திற்கு நாம் கொடுத்த 6 லட்சத்தை வைத்து இதைவிட பலமடங்கு நல்ல வசதியா எல்லாம் என் வீட்டில் கட்டி இருக்கலாம். அதை இன்றுவரை நான் என் அம்மாவிடம் சொன்னதில்லை” என்றான் மாணிக்கம்.

“நான் வரலை அங்கே. ராஜியும் என்னோடதான் இருக்க ஆசைப்படுவாள்” என்றாள் வித்யா.

“இந்தா பாரு! நீ வரலைனா இங்கே யாரும் அழப்போறதில்லை. வேணும்னா இங்கேயே பர்மணண்ட்டா உங்க அம்மா அப்பாவுடன் இருந்துக்கோ. உன் மகளையும் நீயே வைத்துக்கொள்” என்று சொல்லிவிட்டு கோபமாக வெளியே புறப்பட்டான் மாணிக்கம்.

“ஹல்லோ”

“யார்ப்பா மாணிக்கமா? நல்லபடியா மதுரை வந்து சேர்ந்தீங்களா?”

“ஆமாம்மா. எந்த பிரச்சினையும் இல்லை. நான் தீபாவளிக்கு மதியம் வீட்டுக்கு சாப்பிட வர்றேன் ம்மா”

“வித்யாவும், உன் மகள் ராஜியும் கூட வர்றாங்களாப்பா?”

“நான் வர்றேன். அது போதாதா உனக்கு? அவங்க வர்றாங்க இல்லை தொலையுறாங்க. நான் தானே உன் பிள்ளை?” என்றான் மாணிக்கம் எரிச்சலாக

“ஏன்ப்பா இப்படிகோவிச்சுக்கிற?' என்றாள் அம்மா.

“பின்னே என்னம்மா நீங்கதான் இந்த சனியனை என் தலையில் கட்டி வச்சீங்க. இப்போ ஏதோ நான் தப்பு செய்துவிட்டது போல பேசுறீங்க? அவளுக்கும் அறிவே இல்லை. உங்களுக்கும் என் நிலைமை புரியலை. உங்கரெண்டு பேருக்கும் இடையில் மாட்டிக்கிட்டு என் நிம்மதி போச்சு” என்றான்.

“இல்லைப்பா அவங்களும் உன்னோட சேர்ந்து வந்தாத்தானே நல்லா இருக்கும்?”

“ஆமா. ஒண்ணு வேணா பண்ணலாம் அம்மா?”

“என்னப்பா சொல்ற?”

“எனக்கு அவளைவிட நீங்கதான் ரொம்ப முக்கியம். உங்க மேலே ஆணை. ஆனால் அவளோ அவ குடும்பமோ உங்களை என்றுமே மதிக்கப்போவதில்லை. ஏன்னா பொதுவா பெண்களுக்கு அழ மட்டும்தான் தெரியும். தன்னைப்போல் மற்றவர்களை நினைக்கவோ, ஒழுங்கா யோசிக்கவோ தெரியாது! அவளோ, அவ அம்மா அப்பா அப்புறம் அவங்க கூட்டமோ உங்கமேலே உள்ளன்போட இருக்கப்போவதில்லை! நான் அவளை விவாகரத்து பண்ணிடவா? அப்படி பண்ணிட்டா நிச்சயம் எப்போவும் போல் என் இஷ்டப்படி என்ன வேணா செய்யலாம் இல்லையா?”

“ஏன்ப்பா இப்படியெல்லாம் பேசுற? நீ நல்லா சந்தோஷமா இருந்தால்தானே அம்மாவுக்கு சந்தோஷம்?”

“சந்தோஷமாவா? உங்களுக்கோ அவளுக்கோ இது புரியப்போவதில்லை. இதற்கு ஒரு நல்ல முடிவுடன் வருவது கஷ்டம்மா. அவ உங்களை ஒரு போதும் புரிஞ்சுக்கப் போவது இல்லை. உங்களுக்கு அந்த ஏமாற்றப்பட்ட உணர்வு ஒரு போதும் போகப் போவதில்லை”

“அவங்க மாறியதைத்தான் நீயே பார்த்தியேப்பா?'

“நான் இல்லைனு சொல்லம்மா. அவங்க என்னை தாங்கோ தாங்குனு தாங்கிக்கொண்டு உங்களை மதிக்காமல் இருப்பது எனக்கு பிடிக்கும்னு நெனைக்கிறீங்களா? எனக்கு உங்களை மதிக்காத யாரையுமே பிடிக்காது. ஆனால் நான் சொல்வது உங்களுக்கு புரியலை. இதுக்கு நான் சொன்ன ஒரே ஒரு முடிவுதான்”

“நீ உன் மனைவி குழந்தையுடன் சந்தோஷமா இருப்பதுதான் எனக்கு நிம்மதிப்பா. விவாகரத்து செய்தால் நிச்சயம் அம்மா சந்தோஷமா இருக்க மாட்டேன். நான் அவ்வளவு கொடுமைக்காரி இல்லை” அழுகையுடன் வந்தது அவன் அம்மா வார்த்தைகள்.

“நான் சந்தோஷமா இருக்கேனா? ஏதோ இருக்கேன் அம்மா. ஆனால் நீங்க இப்படி அழுதுகொண்டு இருப்பது எனக்கு சந்தோஷமா இல்லை. சரிம்மா தீபாவளிக்கு மதியம் பார்க்கலாம்” என்று முடித்தான் மாணிக்கம்.

இணையத்தில் திருடியது


அங்கே இருந்த பெட்டிக்கடையில் ஒரு சிகரெட் வாங்கி பற்றவைத்தான். அவனுக்கு சிகரெட் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று நல்லாவே தெரியும். அவன் மனைவியும், அவன் அம்மாவும் அவனுக்கு தினமும் ரத்தக்கொதிப்பு கொடுக்கிறார்கள். அவன் தூக்கத்தை தினமும் கெடுக்கிறார்கள். அவன் உடல்நலத்தைக்கெடுக்கும் அவர்களை அவனால் தூக்கி எறியமுடியவில்லையே? பாவம் இந்த சிகரெட் மட்டுமா உடல் நலத்தைக் கெடுக்குது? என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு தன்னை சமாதானப் படுத்திக்கொண்டான் மாணிக்கம்.


பின் குறிப்பு: இந்தக் கதை முதல்ப் பதிப்பு பல வருடங்கள் முன்பு வந்த போது வாசித்த வாசகர்களில் பலர் இது ஒரு கற்பனைக் கதைனு நம்ப மாட்டேன் என்றார்கள்! :) 

Sunday, August 3, 2014

இதயத்துடிப்புடன் வாழும் பிணங்கள்!

ரூபாவா? அவளா இவள்! அவளேதான்! இல்லையே அவள்தான் பிணமாகிவிட்டாளே! ஆமாம், பழைய நண்பன் கார்திக்கும்தான்!  நண்பன் ரவி செத்து ஐந்து வருடமாகிறது! நண்பன் பாலு செத்து சுமார் பத்து வருடங்கள் இருக்கும்.

கீறல்ப்பட்ட கண்ணாடியை என்னதான் சரி செய்தாலும் அது பழைய கண்ணாடி ஆவதில்லை! ராமகிருஷ்ணனுடன் அந்த மனக்கசப்புக்குப் பிறகு, மறுபடியும் என்னதான் அந்த நட்பை ஒட்டவைத்தாலும் அது ஒட்டவே இல்லை! மறுபடியும் கருத்து வேறுபாடு உள்ள அந்த விசயம் இருவருக்கும் இடையில் தோன்றியது. மறுபடியும் அந்த கீறல் பெரிதாகியது. இதே போல் எத்தனை முறை...

அப்போதுதான் ஒரு முடிவுக்கு வந்தான் அஷோக். இனிமேல் இதை ஒட்டவைப்பதில் அர்த்தமில்லை என்று. எதற்கு இப்படி மாய்ந்து மாய்ந்து சரிக்கட்டி வாழவேண்டும்? இது மிகப்பெரிய உலகம். எடுத்த முடிவை மாற்றாமல் ராமகிருஷ்ணனைப் பிணமாக்கி அவனுக்கு கடைசி சடங்குகள் எல்லாம் செய்துவிட்டு அவனைத் தலைமுழுகினான். அஷோக் அவனைக் கொன்று பிணமாக்கிய பிறகும் ராமகிருஷ்ணன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான்! அவன் உலகில்! மிகவும் சந்தோஷமாக!

"நட்பு என்பது உயர்தரமானது. அது காலத்தால் அழியாதது" என்பதெல்லாம் எத்தனை விழுக்காடுகள் உண்மை கலந்தது? ஒவ்வொரு மனிதனும் அரசியல்வாதிதான். ஒவ்வொரு மனிதனும் சுயநலவாதிதான். அதுவும் ஒருவனுக்கு வயது அதிகம் ஆக ஆக சுயநலம்தான் மென்மேலும் தலை தூக்கும்! காலப்போக்கில், அன்று போற்றப்பட்ட நட்பு காணாமல்ப் போவதுதான் இயற்கை! அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது! நிதர்சனம் அதுதான்! அதை இல்லை என்று வாதிடுவது, நட்பு காலத்தால் அழியாதது என்று நிரூபிப்பதாக நடிப்பதெல்லாம் நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் நாடகம். நம்மை நாமே ஏமாற்றி, நம் மனதை நாமே மனச்சலவை செய்து வாழும் போலி வாழ்க்கை!

  அவனைக் கவனிக்காமல் இந்தியா செல்லும் அந்த விமானத்தில் முதல் வகுப்பில், இரண்டாவது வரிசையில் அமர்ந்து இருந்த ரூபாவை இன்னொரு முறை  பின்னால் இருந்து பார்த்தான், அஷோக்.  பக்கத்தில் அவள் குழந்தை விளையாடிக்கொண்டு இருந்தது. அவள்தான் எத்தனை அழகு! அவளைவிட அழகு அந்தக்குழந்தை. ரூபா சந்தோஷமாகத்தான் இருந்தாள். ஹாய் சொல்லலாமா என ஒரு நொடி வந்த நினைப்பை தூக்கி எறிந்தான். அஷோக்கைப் பொறுத்தவரையில் இன்று அவள்  ஒரு நாட்கடந்து போன பயணச்சீட்டு! ஆமாம் ஒரு காலத்தில் அவள் உயிருக்குயிரான தோழிதான்! ஆனால் இன்று?  உயிருடன் வாழும் ஒரு அழகான பிணம்! நட்பு இறந்த பிறகு நண்பி பிணம்தானே? இந்த உண்மையைத்  திரும்பத் திரும்பச் சொல்லணுமா என்ன?

*************************

படிச்சாச்சா? அப்போ இதையும் படிங்க!!!

 மறந்து வாழ வேண்டும்!

---------------------------

இது ஒரு மீள்பதிவே!

 இதயத்துடிப்புடன் வாழும் பிணங்கள்!

Wednesday, May 21, 2014

அறிவியல் சொல்லிக்கொடுப்பது கற்றுக்கொள்ளத்தான்! மூன்று

அறிவியல் என்பது கடல்! அது சரி, எதுதான் கடல் இல்லை? தமிழும் கடல்தான்!  பெண்கள் மனமும் கடல்போல ஆழமானதுதான். உண்மைதான் அறிவியல்போலவே அவைகளும் கடல்போல ஆழமானதுதான். ஆமா, ஏகப்பட்ட கடல்கள் இருக்கு நம்மைச் சுத்தி! :-))

"ஒரு ஆசிரியர்னா அவர்களுக்கு எல்லாம் தெரியும். அவங்க சொல்றதை எல்லாத்தையும் மதிக்கணும்" என்பது  நம்மிடம் உள்ள தவறான புரிதல். அந்த ஆசிரியர்  அந்த சக்ஜெக்ட்ல பி எச் டி வாங்கி இருக்கலாம்..அதனால என்ன இப்போ?

இங்கேதான் அறிவியலாளன் என்பவன் பிரச்சினைக்குரிய ஒரு ஆளாகிறான். எதையும், யாரையும்  ஆராய்வதில தப்பில்லை! அறிவியலாளனுக்கு அடிப்படை என்னவென்றால் உண்மை! வெறும் நம்பிக்கை கெடையாது! அதனால அவன் எதையும் சும்மா நம்ப மாட்டான்! உண்மையைத்தவிர! உண்மையைக் கத்துக்கணும்னா நீ உண்மையானவனா இருக்கணும். அட் லீஸ்ட் புரியாததை புரிஞ்சதுனு சொல்லி நடிக்கக்கூடாது. அப்படி உன்னை நீயே ஏமாற்றிக்கொண்டால் அது நீயே உனக்கு வச்சிக்கிறத் தடைக்கல்!

நான் ஒருமுறை என் வாத்தியாரிடம் போயி வெட்கத்தைவிட்டு "இது எனக்கு புரியலை சார். இதுக்கு என்ன அர்த்தம்? கொஞ்சம் விளக்க முடியுமா?" னு கேட்டேன். அதுக்கு அவர் என்னை அழச்சுண்டு போயி பல புத்தகங்களைப் புரட்டி என் அறியாமையைப் போக்குவார்னு நெனச்சுண்டு இருந்ததால் நான் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தேன். அவர், உடனே இந்தப் புத்தகத்தை எடுத்துப் பாரு, அதில் விளக்கி இருப்பான்னு பதில் சொன்னாரு. இதில் என்ன பிரச்சினைனா இவர் சொல்ற புத்தகம் எனக்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது!  மேற்படிப்புக்கு பாடம் நடத்தும் நம்ம வாத்தியார்கள் வாரத்துக்கு ரெண்டு க்ளாஸ்தான் எடுப்பது வழக்கம். மத்த நேரமெல்லாம் காண்டீன், ஷேர் மார்க்கட்,  மண்ணாங்கட்டினு பொழைப்பை ஓட்டிக்கிட்டு திரிகிறது. ஒருத்தன் தெரியலைனு வந்து கேட்கிறான். நீதான் ரெண்டு மணி நேரத்துக்கு பதிலா இன்னொரு மணி நேரம் செலவழிச்சு விளக்கினால்த்தான் என்ன? என்றெல்லாம் கேள்வி அவர்களைக் கேட்கமுடியாத பருவம் அது. பல வாத்தியார்களுக்கு மாணவர்கள் கேள்வி கேட்பதே பிடிக்காது! அப்படியே கேட்டுப்புட்டான்னா இப்படி எதையாவது சொல்லி பொழைப்பை ஓட்ட வேண்டியது. அப்புறம் எங்கேயாவது அவனைப்போட்டு சுழிக்கிறது! எதுக்குடா வம்புனு முட்டாளாவே இருந்துட்டா நெறைய மதிப்பெண்களுடன் வெளியே போயி "சாதிக்கலாம்"!

எனிவே, பாடம் நடத்துவது எதுக்குனு பார்த்தால், கற்றுக்கொள்வதற்கே என்பேன் நான். அறிவியல் கட்டுரைகள் எழுதுவது அறிவியல் கற்றுக்கொள்ளவே! உங்களுக்கு ஒண்ணு நல்லாப் புரிஞ்ச மாரி இருக்கும். ஆனால் அதை இன்னொருவருக்கு விளக்கும்போதுதான் நமக்கே இன்னும் அது சரியாப் புரியலைனு புரியும். நான் சொல்வது வேறமாரிப் புரிதல். சும்மா விக்கில தோண்டி எடுத்து வந்து, தோண்டி வந்ததெல்லாம் நமக்குப் புரிந்துவிட்டதுபோல நடிப்பதல்ல!

கற்றுக்கொடுக்கணும்னா நமக்குப் புரியாததை ஏற்றுக்கொண்டு, மேலும் அதைப்பத்தி படிச்சு கற்றுக்கொண்டு விளக்கணும். அப்படியெல்லாம் எல்லாரும் செய்வதில்லை!

இது புத்திசாலிகளுக்கான உலகம்! இதுபோல் சிரத்தையுடன் கற்றுக்கொண்டு கற்றுக்கொடுக்கும் முட்டாள்களுக்கானது அல்ல! அப்படிக் கற்றுக்கொள்வதால், கற்றுக்கொடுப்பதால் வேறு யாருக்கும் நன்மையோ இல்லையோ, உங்களுக்குத்தான் நன்மை. அதைப்பற்றி நீங்க இப்போ இன்னும் கொஞ்சம் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

அதனால் பாடம் சொல்லிக்கொடுப்பதே நாம் இன்னும் கற்றுக் கொள்வதற்குத்தான், நாம் இன்னும் நன்றாக புரிந்துகொள்ளத்தான். என்ருமே நாம் அனைவருமே மாணவர்கள்தான்.

சரி, ப்ரோட்டீன்னா என்ன?

அமினோ அசிட்கள் ஒண்ணோட ஒண்ணு சேர்ந்து பெரிய ஒரு பெரிய மாலிக்யூலா எப்படி ஆகும்?



மேலே உள்ளமாரித்தான் ஒண்ணோட ஒண்ணு சேரும். இதுபோல் நூற்றுக்கணக்கான வேற வேற அமினோ ஆசிட்கள் ஒண்ணு சேர்ந்தால் ஒரு ப்ரோட்டீன் உண்டாகும். நான் சொன்னதுபோல் அந்த ப்ரோட்டினுக்கு உயிர் இருக்கு!

சரி, இந்த மாரி யாரு ஒரு ப்ரோட்டினை உருவாக்குவது?


டி என் எ தான் எந்த மாரி ப்ரோட்டீன் உருவாகணும் என்கிற "கோடிங்" எல்லாம் கொடுக்கும், அதை உருவாக்குவது ஆர் என் எ வும்,  என்ஸைம்களும் (ப்ரோட்டின்கள்தான்) சேர்ந்து.

நம்ம ஆய்வகத்தில் வேதிக்குடுவைகளில் செய்வதைவிட இந்த டி என் எ  சொல்லும் "கோடிங்"கை (அதாவது என்ன மாரி ப்ரோட்டீன் அல்லது டி என் எ வேணும்னு சொல்றதை), ஆர் என் எ வும், ப்ரோட்டீன்களும் (என்சைம்களும் ) சேர்ந்து படுவேகமாக உருவாக்கிவிடும்!

அப்படி உருவாக்கும் உயிருள்ள ப்ரோட்டீன் எப்படி இருக்கும்?




என்ன மறுபடியும் கலர் கலரா ரிப்பனா? :)) ஆமா, இது டி என் எ இல்லை! ப்ரோட்டீன் ரிப்பன்கள்! அதாவது பக்கத்துல போயி பார்த்தால்..
 

பக்கத்திலே போயி ரிப்பனைப் பார்த்தால் மேலே இருக்கமாரித்தான் இருக்கும்.

நீங்க மட்டுமில்லை, பெரிய பெரிய பயாலஜிஸ்ட்ஸ்களுக்குக்கூட அதை கீழே கொடுக்கப்பட்டது போல் பார்க்கப் பிடிக்காது. ரிப்பனாகத்தான் பார்க்கப் பிடிக்கும்!

இப்போ ப்ரோட்டின்னா என்னனு புரிஞ்சிருச்சா? :)))

-தொடரும்

******************

ப்ரோட்டீன் என்றால் என்னவென்று மறுபடியும் ஒரு முறை சொல்லி யிருக்கிறேன்.

இது ஒரு மீள் பதிவே!

This is for reminding myself to start writing about this science articles. Because of lack of time I could not write more. Trust me, writing this kind of article in "taminglish" takes much more time than writing a "hot topic post" and get easy attention!

Tuesday, May 20, 2014

கதை எழுதுறாராம் கதை!

புதுசா ஏதாவது கதை எழுதணும்னு உக்காந்து தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்தான், மோஹன். அவன் என்ன யோசித்தாலும் அவனுக்கு வரும் சிந்தனைகள் எல்லாமே ஏற்கனவே எங்கேயோ படித்ததாவோ அல்லது யாரோ எழுதியதாகவே இருந்தது. காதல், கல்யாணம், உறவுகள், உணர்ச்சிகள் எல்லாமே அந்தக்காலத்தில் இருந்து  இன்றைய எந்திர வாழ்விலும் இருக்கும் பழமையானவைதானே? இதிலே என்னத்த  புதுமையை புகுத்துவது? பொறாமை, வெறுப்பு, ஏமாற்றம், துவேஷம், நன்றிமறத்தல், பழிவாங்குதல் போன்றவை எல்லாம் காலங்காலமாக மனிதர்கள் அனுபவித்துக் கொண்டுவரும் உணர்வுகள்தானே? காதல் தோல்வி, நண்பன் துரோகியாவது, தகாத உறவு, திடீர் விபத்தில் சாவது இதெல்லாம் காலங்காலமா பல கதைகளில் பலர் எழுதிட்டாங்ளே. இதிலே என்னத்த புதுசா நம்ம எழுதிக் கிழிக்கிறது? மோஹன் எதை எடுத்து ஒரு புதிய கோணத்தில் யோசிச்சாலும் புதுசா எதுவும் அதிலே தெரியவில்லை! எல்லாமே ஏற்கனவே பலர் இவனைவிட நல்லாவே அனுபவித்து எழுதியதாகத்தான் இருந்தது. எல்லோரும் ஏற்கனவே சொன்னதை நம்மளும் புதுசா கதை எழுதுறோம்னு எதுக்கு திருப்பிச்சொல்லணும்?.

அப்படி ஏதாவது எழுதினால் ஏதாவது புதுசா ஒரு ப்ளாட் வச்சுக் கதை எழுதணும்! எதையாவது புதுமையாகச் சொல்லணும்! இதுவரை யாருமே சொல்லாதது. இதுவரை யாருமே எழுதாதது. இப்ப விகடன் குமுததில் வருகிற எல்லாமே பழசாத்தான் தோனுது. அதி வரும் கதைகள் பலவருடங்கள் முன்னால எங்கேயோ எப்போவோ படித்ததுபோல இருக்கு.

ஏதாவது ஆங்கிலக் கதை படிச்சு அதை இங்கே தமிழ்ல சொல்லலாமா? அதுபோல திருட்டுத்தனம் செய்வதில் எதுவும் பெரிதாக திருப்தி கெடைக்கமாட்டேன்கிதே?  என்ன பண்றது?

சாமியார்களைப் பத்தி இல்லைனா பிச்சைக்காரர்களைப் பத்தி எழுதலாமா? அதுவும் பலர் எழுதிட்டாங்களே!

அப்போ ஹோமோ செக்ஸுவல் காதல் பற்றி எழுதினால் புதுமையாக இருக்குமா? அவங்களுடைய காதல் மற்றும் காமவாழ்க்கை பத்தி எழுதினால்? மட்டமான எண்ணங்கள்னு மக்கள் கண்டபடி திட்டுவானுகளோ? ஆனால் புதுமையாக இருக்குமே? ஒரு சில வாசகர்களாவது புரிந்துகொள்வார்களே?

இல்லை வில்லனை ஹீரோவாக்கி கதை எழுதிவிடலாமா? அதவாது நம்ம ஃபேர்ரி டேல்களில் உள்ளது போலல்லாமல் கெட்டவன்  நல்லா வாழ்வதாகவும், நல்லவர்கள் ஒரு பாவமும் செய்யாதவங்க எல்லாக் கஷ்டமும் அனுபவிச்சு பரிதாபமாக சாவது போல எழுதினால் என்ன?  அதாவது ஹிட்லர் உலகை வென்றதுபோல! உலகத்தில் இதுபோல நடக்கலையா என்ன? அப்படி எழுதினால் ஒருமாதிரியாக புதுமையா இருக்குமா? புதுமையாத்தான் இருக்கும் ஆனால் அப்படி ஒரு கதையை யார் படிப்பா? என்ன கதை எழுதினாலும் கதையின் நாயகன் நல்லவனாகத்தான் இருக்கணுமா? அப்படித்தானே காலங்காலமா எழுதுறாங்க? நம்ம மட்டும் அதை எப்படி மாற்றுவது?

பேசாமல் கடவுள் மனிதன் செய்யும் அயோக்கித்தனத்தைப் பார்த்து துன்பம் தாங்காமல் கஷ்டப்பட்டு மனம் உடைந்து அழுகிற மாதிரி. அவரை ஒரு சில நல்ல மனிதர்கள் காப்பாத்தி, சமாதானப் படுத்தி  வாழ வைப்பது போல எழுதினால் என்ன? அப்படி எழுதினால் இதுவரைக்கும் யாரும் எழுதாத புதுமையான கதையா இருக்குமே? ஆனால் கதை படிக்கிறவன்ல 90% மேலே ஆத்திகனாத்தான் இருக்கான். கடவுளை எல்லாம் இப்படி ஆக்கினால், கதைக்கு "படுகேவலம்" னுதான் விமர்சனம் வரும். அதென்ன வாசகர்களை திருப்தி படத்துறவந்தான் எழுத்தாளனா? தன் எண்ணங்களை துணிவாக வெளிப்படுத்துபவன் இல்லையா உண்மையான எழுத்தாளன்? இப்படி மோஹன் லூசுத்தனமான யோசித்துக் கொண்டிருக்கும்போது..

"என்னங்க ஒரே யோசனையாயிருக்கு?" என்றாள் மனைவி ருக்மணி ஒரு தினுஷான இழுவையுடன்.

"சும்மாதான்..ஏதாவது புதுமையா எழுதலாம்னு ஒரு புது ப்ளாட் சீரியஸா யோசிக்கிறேன்" என்றான்.

"நீங்க இன்னும் இதை விடலையா?"

"எதை?"

"அதான் இந்த கதை எழுதுறதைத்தான்.. படு மட்டமா இருக்கு உங்க கதை எல்லாம்! இதுக்கு செலவழிக்கிற நேரத்தில் ஏதாவது ஓவர் டைம் வேலை பண்ணினால் இதைவிட பத்து மடங்கு சம்பாரிக்கலாம். உங்களுக்கு எதுக்குங்க இதெல்லாம்?"

"உன்னிடம் போய் சொன்னேன் பாரு! நான் எழுதுற எந்தக்கதையுமே  உனக்குப் பிடிக்காது! உன்னிடம் கொடுத்து விமர்சனம் பண்ணச்சொன்னால் மொதல்ல, கதையில் வரும் ஹீரோயினைத்தான் கவனிப்ப,  உனக்கு என் கதையில் வர்ற எந்த ஹீரோயினை பிடிக்கவே பிடிக்காது. அதனாலேயே மனசாட்சியே இல்லாமல் தாறுமாறா ஏதாவது விமர்சனம் பண்ணுவ!"

"என்ன சொல்றீங்க? உங்க ஹீரோயின் மேலே எல்லாம் எனக்கு பொறாமைனு தானே சொல்ல வர்றீங்க?"

"இல்லை. உன் குணத்துக்கு சம்மந்தமே இல்லாமல் ஒரு ஹீரோயினை உருவாக்கினால், அந்த ஹீரோ என்னவோ நான் போலவும், அந்த ஹீரோயின் ஏதோ உன் சக்களத்தி போலவும் எதையோ கற்பனை பண்ணுறயே ஏன் அது? சும்மா ஒரு கற்பனைதானே இந்தக் கதை,  அதில் வருகிற கேரக்டர்கள் இதெல்லாம்? நீ அப்படி யோசிக்க வேண்டியதுதானே? "

"ரசிச்சு ரசிச்சுத்தானே கதை எழுதுறீங்க? உங்க கதையிலே வர்றாளே அந்த ஹீரோயினை ரசிச்சு ரசிச்சுத்தானே வர்ணிச்சு எழுதுறீங்க?"

"சும்மா ஒரு  கற்பனைக் கதைதானே? கற்பனை நாயகிதானே அவள்?"

"உங்க கற்பனையில் வரும் பொண்ணும் நிஜம்தான்!"

"அதெப்படி கற்பனை நெஜமாகும்?"

"அது நெஜம்தான். கதையா இருந்தாலும் அதுவும் ஒரு உண்மையான உணர்ச்சிகள் உள்ள பெண்தான். உங்களால நெஜத்தில் முடியாததை எல்லாம் கதையில் உருவாக்கி அவ கிட்ட நல்லா ஜொள்ளு விடுறீங்க"

"நாசமாப் போச்சு போ!"

"அதனாலதான் உங்க கற்பனை நாயகியை எனக்கு சுத்தமாப் பிடிக்கலை. அதுவும் அந்த ஹீரோயின் எப்போவுமே என் குணத்துக்கு சம்மந்தமே இல்லாமல் இருக்கிறாளே அது ஏன்?."

"எல்லாக்கதையிலுமே உன்னை மனசில் வச்சு ஹீரோயினா எழுதினால், எல்லா ஹீரோயினுமே ஒரே மாதிரி இல்ல இருப்பாங்க?"

"இருந்துட்டுப் போகட்டுமே?"

"அப்படி எழுதினால் யார் படிப்பா?"

"ஏன் படிக்க மாட்டாங்க?"

" சினிமாலகூட நடிகைகளுக்கு மார்க்கட் கொஞ்ச நாள்தான் இருக்கு. காலேஜ்ல முதல் வருடம் வந்து சேருற பெண்களுக்குத்தான் மார்க்கட்! ரெண்டாவது வருடம் போயிட்டா அவ பேரழகியா இருந்தாலும் எவனும் திரும்பிக்கூட பார்க்கமாட்டான்"

"அதனால?"

"அதனால் ஒண்ணுமில்ல. உன்னப்போயி என் கதையை விமர்சனம் பண்ண சொன்னேனே, என்னைச் சொல்லனும்"

"ஆமா, உங்க கதையை வேறெப்படி விமர்சனம் பண்றது? மட்டமா இருந்தா மட்டம்னுதான் சொல்லமுடியும்?"

"பேசாமல் நான் எழுதுற குப்பையை படிக்காமல் இருந்து விடேன்?"

"நான் ஒரு ஜீவனாவது படிக்கிறேனே உங்க கதையை ? அதை நினத்து சந்தோஷப்படுங்கள்! அதுவும் இல்லாமல் போயிடப்போது!"

"அப்பப்போ இப்படி வேற காமெடி பண்னுற?"

"உண்மை அதுதான்!"

"பேசாமல், நியூமூன், ஹாரி பாட்டர் மாதிரி ஏதாவது புதுமாதிரியா எழுதலாம்னு இருக்கேன்!"

"ஆமா எழுதி உங்ககதையை வச்சு கோடி கோடியா சம்பாரிச்சு எனக்கு ஒரு வைர நெக்லஸ் வாங்கி தரப்போறீங்களாக்கும்?".

"தமிழ்ல கதை எழுதி இன்னும் யாருமே கோடி சம்பாரிக்கவில்லையாம். தமிழ் எழுத்தாளர் எல்லாம் ஏழைகள்தான்.பலர் பிச்சைக்காரகள்தான்"

"சுஜாதா எல்லாம் ஏழையாவா இருந்தார்?"

"அவர் சம்பாரிச்சது கதை எழுதி இல்லையாம். அவருக்கு பி இ எல் ல ஒரு நிரந்தர வேலை இருந்துச்சு. அதை வச்சுத்தான் அவர் பொழைப்பு ஓடுச்சாம்! கதை எல்லாம் சும்மா பொழுதுபோக்குக்காக, பேரு, புகழுக்காக எழுதினாராம்."

"அப்போ, ஒரு நல்ல கதையா அர்த்தமா எழுதி, சுஜாதாவுக்கே கெடைக்காத "ஞானபீட பரிசு" (Jnanpith award) வாங்கி பணக்காரறாகுங்க"

"அந்த பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?'

"எவ்வளவு?"

"வெறும் ஏழு லட்சம்தான்! உனக்கு வேண்டிய வைர நெக்லஸ் வாங்க அந்தப்பணம் பத்தாது"

"சரி சரி, இதை விட்டுட்டு ஆகவேண்டியதைப் பாருங்க! கதை எழுதுறாராம் கதை!"

-முற்றும்
**************

நீங்க படிச்சது இல்லைதானே?

ஏற்கனவே படிச்சாச்சா?!!

 ஆமா இதுவும் மீள்பதிவுதான்.

Monday, May 19, 2014

கொஞ்ச நாள் தனியறையில் படுங்க டார்லிங்!

கல்லூரியில் படிக்கும்போதூ லலிதாவைக் காதலிக்காத ஆளே இல்லை! அவளிடம் ஜொள்ளுவிடாத மாணவனும் ஏன் ஆசிரியரும் அவனுக்குத்தெரிய இல்லை! லலிதா ஒரு அழகுதான். அவள் பேசினால் ஒரு அழகு, நடந்தால் ஒரு அழகு, சிரித்தால் ஒரு அழகு, அவள் கல்லூரி காண்டீனில் காஃபி குடிப்பதும் ஒரு அழகுதான்.

 எத்தனையோ அப்ளிக்கேஷன் வந்தும் லலிதா அவை எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு வசந்த்தைத்தான் காதலித்தாள். அன்று அவள் காதல் இனித்தது. அதைவிட அவள் இனித்தாள்.  

ஆனால் இன்று??

 அவர்களுக்கு  கல்யாணம் ஆகி சில வருடங்கள் ஆகிவிட்டது. இன்றும் லலிதா ஒரு அழகுதான். தன் இதயத்தை வசந்த்திடம் கொடுத்து  அவனைக் காதலித்து மணந்து கொண்ட அவள் வசந்த்தின் எல்லா ஆசையையும் நிறைவேற்றினாளா ? 

பாவம் வசந்த் அன்று இரவும் பெருமூச்சுவிட்டுவிட்டுத்தான் தூங்கினான். அவன் ஆசைகள்  நிராசையாக ஆனதால். வசந்த் எத்தனையோ வாதம் செய்துபார்த்தாலும் லலிதா இந்த ஒரு விசயத்தில் மிகவும் பிடிவாதமாக இருந்தாள். போதாக்குறைக்கு நாளையிலிருந்து,  "கொஞ்ச நாள் தனியறையில் படுங்க டார்லிங்!"னு இவனை தனியாக ஒரு அறையில் தூங்கவும் சொல்லிவிட்டாள்..

 

**********

“அந்தப் படத்தில் பார்த்த இல்லையா லலிதா?”

“அதனால் என்ன வசந்த்? எனக்கு அது மாதிரி படமே பிடிக்கலை. அருவருப்பா இருக்கு. என்னால் ரசிக்க முடியவில்லை”

“நிறையப்பேர் அப்படித்தான் சந்தோஷப்படுத்திக்கிறாங்க.  இந்த ஃபாரத்தில் வாசிச்சியா?”

“ஆமா நீங்க காட்டிய டிஸ்கஸனைப் பாத்தேன். அனானிமஸா ஒரு சிலர் வந்து ஏதோ எழுதி இருக்காங்க. ஆனா எனக்கு சுத்தமாகப் பிடிக்கலை வசந்த்”

“நம்மளும் ட்ரைப் பண்ணினால் என்ன? கேக்கிறேன்னு கோவிச்சுக்காதே. ட்ரை பண்ணாமல் உனக்கு எப்படித் தெரியும்? உனக்கு பிடிச்சாலும் பிடிக்கும்”

“அது ஹைஜீனிக் இல்லை வசந்த். அன்ஹெல்த்தி! மேலும் அப்படி செய்யாதனால நீங்க ஒண்ணும் குறைஞ்சிபோயிட மாட்டீங்க, வசந்த் டார்லிங்!”

“அவங்க எல்லாம் நல்லா இருக்குனுதானே சொல்றாங்க?”

“எனக்கு இது ஒரு லிமிட்டை க்ராஸ் பண்ணி நீங்க மிருகமாகிக்கொண்டு போறமாதிரி இருக்கு. என்னைக்கேட்டால் இதெல்லாம் ஆறாவது அறிவின் துஷ்பிரயோகம்னுதான் சொல்லுவேன்”

“நீ ஏன் அப்படி நினைக்கிற?”

“மன்னிக்கவும் வசந்த், நான் நினைக்கலை, அதுதான் உண்மை!”

“இல்லை லலிதா..”

“சரி, வசந்த், எல்லாம் ட்ரை பண்ணனும்னு சொல்றீங்க இல்ல? ஒரு சில ஆம்பளைங்க ஆம்பளைங்களோடயே படுக்கிறாங்க. ரெண்டு ஆண்கள் சந்தோஷமாக இருக்காங்க. சரியா? அதுவுந்தான் படிக்கிறீங்க. இல்லையா வசந்த்?”

“ஆமா. அதனால?”

“நீங்களும் அது மாதிரி எதுவும் ட்ரை பண்ணியதுண்டா, வசந்த்?"

"ச்சீ ச்சீ!"
 
"என்ன ச்சீ?  ஒருவேளை உங்களுக்கும் பிடிச்சாலும் பிடிக்கும். ட்ரை பண்ணினால்தானே தெரியும்?”

“ச்சீ, நெனச்சாலே எனக்கு வாம்மிட் வருது”

“எனக்கும் அதேபோல்தான் இருக்கு, நீங்க சொல்வது. நான் என்ன சொல்ல வர்றேன்னா, எல்லாரும் செய்றாங்கனு  நம்ம செய்யணும்னு ஒண்ணும் இல்லை, வசந்த். நம்ம நம்மளாவே இருப்போமே, டார்லிங்? நம்ம அளவுக்கு அவங்க சந்தோஷமா இருக்காங்கனு எனக்கு தோனலை”

“எனக்கு போர் அடிக்குது ருட்டீன், லலிதா”

“எதுதான் போர் அடிக்காது? அதுவும் ருட்டீன் ஆனதும் அதுவும் போர் அடிக்கத்தான் செய்யும். அப்புறம் அவன் இப்படி செய்றான், இவ அப்படிச் சொன்னானு புதுசா இன்னோண்ணை  ஆரம்பிப்பீங்க. கோவிச்சுக்காதீங்க உங்களுக்கு எல்லாமே உதிர்த்துவிட்டது வசந்த். எது ரைட், எதுதப்புனு தெரியாமல் பித்துப்பிடிச்சு அலைறீங்க. இட் ஈஸ் டேஞ்ஜரஸ், வசந்த் டார்லிங். யு ஆர் பிகமிங் சிக், டார்லிங்”

“இல்லை லலிதா..”

“வசந்த்! நான் சொல்லுறதை கேளுங்க, ப்ளீஸ்”

“என்ன சொல்லு”

“தேர் இஸ் நோ லிமிட் ஃபார் திஸ். டோண்ட் யு சி தட், டார்லிங்?”


“அதனால?”

“ஐ டோண்ட் வாண்ட் டு ட்ரை  அண்ட் ஃபைண்ட் த லிமிட்”


“லலிதா! யு ஆர் மை பெட்டர் ஹால்ஃப், ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி ஆனஸ்ட் வித் யு”

ஸோ அம் ஐ, டார்லிங்.  நானும் என்னுடைய  "ஆனஸ்ட் ஒப்பீனின்ய்னை"த் தான் சொல்றேன், வசந்த்”

ஐ லவ் யு லலிதா”

“ஐ லவ் யு மோர், டார்லிங்.
நான் ஒண்ணு சொல்றேன் கேக்கிறீங்களா?”

“என்ன?”

“கொஞ்ச நாள் வேற வேற ரூமில் படுப்போமா?”

“ஏன்?”

“உங்க பக்கத்தில் படுத்துப் படுத்து  எனக்கும்  ருட்டீன் போர் அடிக்குது. சரியா?"

"என் முகத்தைப் பார்த்துச் சொல்லுங்க,  சரியா?”அவள் சிரித்தாள்

“ம்ம்.. சரி நாளையில் இருந்து..”

*****








அதன்பிறகு வசந்த், லலிதாவை அணைத்துக்கொண்டு அப்படியே தூங்கிவிட்டான். அவள், அவன் நெத்தியில் முத்தமிட்டாள். வசந்த் மட்டுமல்ல, லலிதாவும்தான் அப்போது ஒரு பெருமூச்சுவிட்டாள். அவளும்தான்  தன் கணவன் எப்படி எல்லாம் இருக்கணும் என்று கனவுகண்டிருக்கிறாள் . வசந்த் இப்பொழுது ஆசைப்படுவது போல,   ஒரு மிருகமாக தன் கணவன் அமையணும் என்று அவள் ஒருநாளும் ஆசைப்பட்டதில்லை. ஆசைகள் நிராசைகள் ஆவது வசந்த்க்கு மட்டுமல்ல, லலிதாவுக்கும்தான்.



Thursday, May 15, 2014

பல்லழகி, என் பேத்தி ஒரு பேரழகி!

சரஸ்வதியால் நம்பவே முடியவில்லை! அவள் கண்களுக்கு ஏதோ சினிமா நடிகை, இல்லை மாடல் போல இருந்தாள் அவள் பேத்தி வசந்தி. அமெரிக்காவில் இருந்து 5 வருடம் சென்று வந்த தன் பேத்தியின் வளர்ச்சியைப் பார்த்து வியந்தாள்! வசந்திக்கு வயது 17 ஆகிறது. கொள்ளை அழகா இருக்காள் என் பேத்தி என்று அவளுக்கு சுத்திப்போட்டாள். ஊர்க்கண்ணு பட்டுறப்போகிறது என்று யாரிடமும் வசந்தியை காட்டக்கூட பயந்தாள், சரஸ்வதி. வசந்தி பேசும் ஆங்கிலமும், மழலைமொழி போல் பேசும் தமிழும்! எல்லாமே சரஸ்வதிக்கு அழகாத்தான் தெரிந்தது.

பார்ப்பதற்கு சரஸ்வதி சிறுவயதில் இருந்தது போலவேதான் இருந்தாள் வசந்தி. கண் மூக்கு, காது, நிறம், ஏன் உடல்வாகுகூட அப்படியே சிறுவயதில் சரஸ்வதி இருந்ததுபோல்தான் இருந்தது. ஆனால் வசந்தியின் வெண்மையான பல்வரிசை மட்டும்..
 

அவள் புன்னகைக்கும்போது எவ்வளவு அழகா இருக்கிறாள்! வசந்தியின் பல்வரிசை தன் பல்வரிசைபோல் தாறுமாறாக இல்லாமல் எவ்வளவு வரிசையா இருக்கு! என்று வியந்தாள். தன் பேத்திக்கா இவ்வளவு அழகான பல்வரிசை! என்று சரஸ்வதியால் நம்பவே முடியவில்லை!

தனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து சரஸ்வதி வாழ்நாளில் சிரிக்ககூட பயப்படுவாள். வாயை பொத்திக் கொண்டுதான் சிரிப்பாள். அவளுக்கு 50 வயதாகும்வரை யாராவது ஃபோட்டோ எடுத்தால்கூட ஒதுங்கி ஓடிவிடுவாள். அவ்வளவு விஹாரமாக இருந்தது அவள் பல்வரிசை. தன் பல்வரிசைமட்டும் நல்லா இருந்தால் எவ்வளவு அழகா நான் இருந்து இருப்பேன் என்று சரஸ்வதி வாழ்நாளில் ஏங்காமல் இருந்த நாளே இல்லை. சமீபத்தில் பார்த்த படையப்பா படத்தில் வரும் அந்த பாடல் வரி (முகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை) எவ்வளவு சரியாக உள்ளது என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்வாள். இப்போது அவளுக்கு பல்லெல்லாம் போய் 78 வயதாகிவிட்டது. பல்லெல்லாம் போய்விட்டதால் அந்த பிரச்சினை இல்லை!

சரஸ்வதி அன்று மகனுடன் கோவிலுக்கு போகும்போது மருமகள் சாந்தி, மற்றும் பேத்தி வசந்தி யாரும் இல்லாமல் அவனிடம் தனியாக பேச நேரம் கிடைத்தது. அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் மகன் ராஜேந்திரனுடன் நடந்து எங்கே போனாலும் அவளுக்கு பெருமையாக இருக்கும். அதுதான் அவளுக்கு சொர்க்கம்!

சாமி கும்பிட்டுவிட்டு கோயிலில் மணல் பகுதியில் அம்மாவும் மகனும் அமர்ந்தார்கள்.

“உன் பேத்தி அபப்டியே உன்னை மாதிரியேதான் இருக்காம்மா” என்றான் மகன் ராஜேந்திரன் பெருமையாக.

“குணம் சரிதான்டா. ஆனால் பார்க்க அவள் என்னை மாதிரி இல்லைடா! அவள் பேரழகியா இருக்காள் என் பேத்தி. என்னை மாதிரியா இருக்காள்?” என்றாள் பெருமையாக.

“இல்லம்மா அவள் உன்னை மாதிரியே டபுள் ஆக்ட்டாக இருந்தாள்” இங்கே பாரு அவளுடைய பழைய படங்கள் எல்லாம்” என்று தன்னிடம் இருந்த ஒரு சின்ன ஆல்பத்தை காட்டினான்.

சரஸ்வதியால் நம்பவே முடியலை!! 4 வருடம் முன்னால் எடுத்த படத்தில் அவள் பேத்தியின் முகம் தான் சிறுபிள்ளையாக 13 வயதில் இருந்தது போலவே இருந்தது. முக்கியமாக அவள் பல்வரிசை!

“எப்படிடா இப்போ முகம் வேற மாதிரி இவ்வளவு அழகா இருக்கு?” என்றாள் அம்மா புரியாமல்.

“நீ பிறந்து வளர்ந்த காலத்தில் “ஆர்தோடாண்டிக்ஸ்” என்கிற பல் வைத்தியம் எல்லாம் இந்தியாவில் இல்லை அம்மா. அதனால் உனக்கு உன் ப்லவரிசையை சரிசெய்யும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் வசந்திக்கு உனக்குப் போலவே இருந்த பல்வரிசையைத்தான் “ஆர்த்தோடாண்டிக்ஸ்” பல் வைத்தியம் செய்து  சரி செய்தோம்” என்று விளக்கினான்

“எப்படிடா? அம்மாவுக்கு புரியவே இல்லை. அதெப்படி இப்படி அழகா மாற்றமுடியும்?” என்றாள் சரஸ்வதி ஆச்சர்யமாக.

“அமெரிக்காவில் பொதுவாக எல்லோருக்கும் பல்வரிசை சரியாக இருக்கும் என்பதை பார்த்து இருக்கியா அம்மா?”

“ஆமாடா வெள்ளைக்காரங்களுக்கெல்லாம் சரியாக அழகா பல்வரிசை இருக்கும், பார்த்து இருக்கேன் அங்கே வசந்தி பிறந்த போது வந்தபோது மற்றும் டி வி யில் பார்க்கும்போது. அவங்க வெள்ளைக்காரங்க இல்லையா? அவங்களுக்கு ஏன்டா நமக்கு மாதிரி பல்வரிசை வருது?”

“இல்லம்மா அவர்களிலும் பலருக்கும் உனக்கு, மற்றும் வசந்திக்கு போலதான் சிறுவயதில் இருந்து இருக்கும். ஆனால் அவர்கள் அதை சின்ன வயதிலேயே சரி செய்துவிடுவார்கள்.”

“எப்படிடா இப்படி மாற்ற முடியும்!!!”

“வசந்திக்கு பர்மனெண்ட் பற்கள் வந்தவுடன், மேலே இரண்டு பற்கள், கீழே இரண்டு பற்கள் நாலு பற்களை ஆப்பரேஷன் செய்து முதலில் எடுத்துவிட்டார்கள்! அப்புறம், பலவிதமா ப்ரேஸஸ் (உலோக கம்பிகள் வைத்து) அழுத்தி அந்த இடைவெளியை சரி செய்தார்கள். ஒரு நாளில் ஒரு மாதத்தில் இதையெல்லாம் செய்ய முடியாது! இரண்டு வருடம் வைத்தியம் செய்து அவள் பல்வரிசையை சரி செய்தார்கள்”

“நெஜம்மாவாடா! இப்படியெல்லாம் செய்யமுடியுமா!”

“நீயும் அமெரிக்காவில், ஏன் இந்தியாவில்கூட இப்போ பிறந்து இருந்தால் உன் புன்னகையையும் அழகா ஆக்கியிருக்கலாம்மா” என்றான் ராஜேந்திரன்.

“நான் அதைப்பற்றி இப்போ கவலைப்படலைடா, ராஜா. என் அழகான பேத்தியை பார்க்கும்போது என்னை சரிசெய்து பார்ப்பது போலதான் இருக்குடா அம்மாவுக்கு” என்றாள் சரஸ்வதி குரல் தளுதளுக்க.

“இப்போ எல்லாம் விதியை மதியால் வெல்லலாம் அம்மா! விஞ்ஞானம் மற்றும் மருத்துவம் ரொம்ப முன்னேறிவிட்டது.” என்றான் ராஜேந்திரன்.

 --------------------

இதுவும் மீள்பதிவே!

தலைப்பு பெயர் மட்டும் மாற்றிவிட்டேன்:

விதியை மதியால் வெல்லலாம் அம்மா!