அமெரிக்காவில் ஒரு கொலை வழக்கு! இங்கு நீதிவழங்குவது எல்லாம் நம்ம ஊர்போல நீதிபதிகள் அல்ல! ஆமாம், ஒருவரை குற்றவாளியா? இல்லையா?னு முடிவுசெய்வது சட்டம் படித்த, வயதில் முதிர்ந்த நீதிபதிகள் அல்ல! சாதாரண பொதுமக்களில் சிலர்.
* 17 வயது மார்ட்டின் என்கிற கருப்புப் பையன் கொலை செய்யப்பட்டார்.
* கொலைசெய்த, (லட்டினோ மற்றும் வெள்ளையர்கள் கலப்பு) ஸிம்மர்மேன் (30 வயது? ), தற்காப்புக்காகக் கொன்றேன் என்று தன்னிலை விளக்கம் கொடுக்கிறார்.
சட்ட நிர்வாகத்தால் ஆறு பெண்கள்தான் (பொதுமக்கள்) ஜூரியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். இவர்கள், சாதாரண பொது மக்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள், இவர்கள் முன்னால் அரசாங்க வ்க்கீல்கள் குழு, ஸிம்மர்மேன் கில்ட்டி என்று வாதிட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஸிம்மர்மேன் வக்கீல்கள் அவர் தற்காப்புக்காக கொன்றார் என்று வாதிட்டார்கள்.
நடந்தது என்ன?
மார்ட்டின் என்கிற 17 வயதுப் பையன் இரவு 6-7 மணிப்போல ஸிம்மர்மேன் வாழும் அந்தப்பகுதியில் நடந்து போய்க்கொண்டு இருக்கிறான். அவன் எதையோ திருடப்போகிறான் என்று அவன் நடவடிக்கை மற்றும் அவன் மேல் சந்தேகப்பட்ட ஸிம்மர்மேன் (போலிஸ் இல்லை), அவனை காரில் இருந்துகொண்டே தொடர்ந்து இருக்கிறான்.
இந்த நிகழ்வு நடந்தபோது இந்த இருவரைத் தவிர பக்கத்தில் யாருமே இல்லை. சாட்சினு யாரும் கெடையாது!
நிகழ்வு நடக்கும் முன்பு, ஸிம்மர்மேன், போலிஸை 911ல் அழைத்து இதுபோல் சந்தேகப்படும்படி ஒருவன் நடக்கிறான். அவனை நான் ஃபாலோ பண்ணுகிறேன் என்று சொல்ல, போலிஸ் அவனிடம் காரைவிட்டு வெளியில் வராதே! அவனைத் தொடாதே! என்று சொல்லியுள்ளது.
அதன்பிறகு, போலிஸ் அங்கு வருமுன்னே, தொடரப்பட்ட மார்ட்டினுக்கும், தொடர்ந்த ஸிம்மர்மேனுக்கும் கைகலப்பு நடந்து இருக்கிறது. தன்னைத் தொடர்வதை உணர்ந்த மார்ட்டின் ஸிம்மெர்மேனை பயங்கரமாகத் தாக்கியதாக ஸிம்மர்மேன் சொல்கிறார். ஆதாரமாக ஸிம்மர்மேன் மூக்கு லேசா உடைக்கப்பட்டு ரத்தம் வந்துள்ளது, பின் தலையில் (பிடரியில்) இரண்டு இடத்தில் சுமாரான ரத்தக் காயம். தன்னைத் தாக்கிய மார்ட்டினை ஸிம்மெர்மேன் தன் துப்பாக்கியை வைத்து இதயத்தில் சுட்டு கொன்றுவிட்டார். காரணம்? தற்காப்புக்காக கொன்றேன் என்கிறார்.
17 வயதே ஆன மார்ட்டின், ஒரு நல்ல மாணவனாக பள்ளியில் இல்லை. சமீபத்தில் அவன் பையில் போதை மருந்து இருந்தற்காகப் பள்ளியில் இருந்து தற்காலியமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளான். இது மார்ட்டினிடம் உள்ள பெரிய கருப்புப் புள்ளி!
ஸிம்மர்மேன், ஒரு "வாலண்டீர், neighborhood watch" தலைவர் என்கிறார்கள். அதாவது அந்தப் பகுதியில் எதுவும் திருட்டு, கற்பழிப்பு நடப்பதைத் தடுக்க, அந்தத் தெருவில் வாழும் சிலர் ஒன்று சேர்ந்து காவல்துறை போல் இயங்குவது. இவர்கள் துப்பாக்கி லைசெசெண்ஸ் பெற்று துப்பாக்கியும் வைத்து இருக்கலாம்.
இந்தத் ட்ரயல் நடக்கும்போது என்னுடைய கணிப்பின்படி, ஸிம்மர்மேன் "guilty" என்றுதான் ஜூரி முடிவு செய்வார்கள் என்று எண்ணினேன். ஆனால், நடந்தது வேறு! They found him, "Not guilty!"
6 comments:
எப்படி?
சிம்மர்மேன் ஒரு போலிஸ் இல்லை. சும்மா நடந்துபோன சிருவன் மார்ட்டினைத் தொடர்ந்து போயி அவன் கோபத்தை கிளப்பி. அவனை தாக்க வைத்தது, சிம்மர்மேனின் முட்டாள்த்தனம். அந்தப் பையன் யாரு வீட்டையும் உடைத்து உள் நுழைய வில்லை. சும்மா தெருவில் நடந்து போயிருக்கான். அவனைத் தூண்டிவிட்டு, வம்பை விலைக்கு வாங்கி, அவனிடம் அடி வாங்கி அவனைக்கொன்று?? இதெல்லாம் தேவையா?
நீதி வழங்கிய அறுவரும் பெண்களை!!!பெண்புத்தி பின்புத்தி என்பதற்கு இது ஒரு அழகான எடுத்துக்காட்டு!
தொடர்கிறேன்
போலீசுக்கு தகவல் சொல்லிட்டு அத்தோட நின்னிருக்கலாம். இதே மார்ட்டின் ஒரு புதிய ஆளாக இருந்திருந்தால் தீர்ப்பு வேறு விதமாக இருந்திருக்குமோ என்னவோ/
***கரந்தை ஜெயக்குமார் said...
தொடர்கிறேன்***
நன்றி, திரு. ஜெயக்குமார்.
நானும் அவன் குற்றவாளி என்றுதான் தீருப்பு வரும் என்று நினைத்து இருந்தேன். :(
நான் படித்த தகவல்கள் படி நீங்கள் சொன்ன கருத்துக்கள் எல்லாம் சரியே :(
அந்த Jury'களில் ஒருவர் அந்த
"ஸ்டேட் சட்டபடி" தான் குற்றவாளி இல்லை என்று சொல்லி இருக்கிறார்.
எதுவாக இருந்தாலும் இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆக நிறைய வாய்ப்பு இருக்கிறது.. இது கருப்பு இனத்தவருக்கு மட்டும் அல்ல, இந்திய/சீன/மற்ற சிறுபான்மையினருக்கும் :(
Post a Comment