Showing posts with label நீயா நானா?. Show all posts
Showing posts with label நீயா நானா?. Show all posts

Monday, January 6, 2014

நீயா நானா விருதுகள்?? அற்பனுக்கு பவுசு!

விஜய் டிவி விருதுகள் சரி. அதென்ன நீயா நானா விருதுகள்? நீயா நானா ஷோ வெற்றிகரமாகப் போய்க்கொண்டிருப்பதால் அதைவச்சி இப்படியெல்லாம் காமெடி பண்ணனுமா என்ன?

 

* சிவ கார்த்திகேயனுக்கு சிறந்த எண்டர்டைனெர் விருது!

* விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் விருது!

ரெண்டு பேரையும் மேடையில் ஒண்ணாவிட்டு, ரெண்டு பேரையும் வலுக்கட்டாயமாக மாத்தி மாத்தி ஒரு மேதையை இன்னொரு மேதையைவிட்டுப் புகழவச்சு.. என்ன கொடுமைப்பா இது கோபிநாத்?

அதென்னனு தெரியலை, கடந்த முறை எதார்த்தமாகப் பேசிய விஜய் சேதுபதி, இந்த முறை மூச்சு வாங்கி வாங்கி ப் பேசுறாரு?

"நீயா நானா" விருது மண்ணாங்கட்டினு  ஒரு ஷோ பெயரை வச்சு ரொம்ப ஆடாதீங்கப்பா!

"அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்!" என்கிற பழமொழிக்கு அழகான உதாரணம்தான் இந்தமாதிரி "நீயா நானா" விருது என்பது.

**********

OK, Now, Relax please!



****************

Is n't she more beautiful with more clothes on and of course with this smile? :)

Tuesday, June 25, 2013

நீயா நானா? படித்த பெண்கள் சமைப்பது பற்றி விவாதம்!

நம்ம கோபிநாத் வெகு கவனமாக, முழுநேர வீட்டரசிகளை எல்லாம் களை எடுத்துவிட்டு, படித்து வேலைபார்த்துக்கொண்டு சமையலையும் கவனிக்கும் அந்தக்காலத்தில் புதுமைப்பெண்ணாக திகழ்ந்த அம்மாக்களையும், வேலை பார்த்துக்கொண்டே சமைப்பது கடினம் என்று வாதிடும் இந்தக்காலத்துப் புதுமைப்பெண்ணாக வாழும் அம்மாக்களையும் ஒன்று கூட்டி எதிர் எதிரணியில் உட்காரவைத்து வாதிடவிட்டு வேடிக்கை பார்த்தார்.

இந்த ஷோவை நடத்த கோபிநாத் மாரி ஆண்களுக்கும், இதை விமர்சிக்க என்னைமாரி ஆம்பளைகளுக்கும் என்ன தகுதி இருக்கு? னு எனக்கே தெரியலை (மனசாட்சி! :-) )

இந்தக்காலத்து,  கொஞ்ச வயசு ஆண்ட்டி ஒண்ணு, சமையல்க்காரி என்கிற ஒரு அடிமையை ( I am sure, her cook is CHEAP and hard to run her life with the salary aunty gives) வைத்துக்கொண்டு, தனக்கும், தன் கணவனுக்கும், குழந்தைக்கும் தேவையானதை அவரிடம் வாய்க்கு ருசியாகச் சமைக்கச் சொல்லிவிட்டு...  "வீட்டு வேலை எல்லாம் பார்த்தால் என்னால் கணவனுக்குத் தேவையான அளவு செக்ஸில் பங்குபெற முடியவில்லை! என்றும், அதனால சமையல் அறையிலெல்லாம் வேர்க்க வேர்க்க அதிக நேரம் என்னால் செலவழிக்க முடியாது" னு வாதிட்டாங்க வாதிட்டாங்க. யப்ப்பா!  என்னவோ கணவனை சந்தோஷப்படுத்தவே இவரு வாழ்றமாரியும், தனக்கு சாப்பாட்டைவிட செக்ஸ்தான் முக்கியமானது என்பது போலவும்..அதனாலதான் நான் சமையலை இன்னொருவர் தலையில் கட்டிவிட வேண்டிய கட்டாய சூழல் வந்ததுபோல் இவரு என்னதான் வாதிட்டாலும், எத்தனை பேரு அவர் வாதத்தை மதித்தார்கள்னு தெரியலை..சரி இவருக்கு வேர்க்க விறுவிறுக்க  சமைத்துப் போடும் "அடிமை" வேலைக்காரி அம்மாவுடைய செக்ஸ் லைஃப் எல்லாம் பத்தி  இந்த ஆண்ட்டியால் யோசிக்க முடியுமா? இன்னொரு பெண்ணை அடிமையாக்கித்தான் இது புதுமைப்பெண்ணா தலைதூக்க முடியுது பாவம்! :( இந்த ஆண்ட்டி சொன்னதிலெல்லாம் உண்மை மட்டும் கெடையாது.. வெறும் வாதம்தான் இது..

அதேபோல் எதிரணியில் உள்ள அம்மாக்கள், சமையல் என் ஏரியா, அதில் நாந்தான் ராணி, அதை யாருக்கும் விட்டுக்கொடுக்கத் தயாரா இல்லை என்பதுபோல் வாதம் செய்தார்கள். ஒரு அம்மா, காமம், காதல் எல்லாம் கொஞ்ச நாள்தான், தங்கள் ருசியான சமையல்தான் தங்கள் வாழ்வை காலத்தால் அழியாமல் சிறப்படைய வைக்கிறது என்பதுபோல வாதிட்டாங்க. இதுவும் ஒரு மாதிரியான முழுமையாக ஏற்றுக்க முடியாத வாதம்தான். இவங்க கஷ்டங்களை, வலிகளை எல்லாம் இவங்க ரொம்ப எளிதாக எடுத்துக் கொண்டதுபோல் காட்டிக்கிட்டாங்க..அவ்ளோதான்..

என்னைப்பொறுத்த வரையில் சமையல் என்பது ஒருவருடைய இண்டெரெஸ்ட்டை பொறுத்தது. ஒரு சிலருக்கு அது நல்லா வரும்!  ஒரு சிலருக்கு வராது. இதில், ஆண் பெண் என்கிற பேதம் எல்லாம் இல்லை! வீட்டரசியாகவே உள்ள அம்மாமார்கள்கூட ஒரு சிலர் ரசிச்சி ரசிச்சி சமைப்பார்கள், ஒரு சிலர், சினிமா கோயில்னு ஊர்சுற்றுவது போன்ற மற்றவவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு  சமையல்கட்டிற்கு டிமிக்கி கொடுப்பாங்க..எங்க அம்மா பெருமையெல்லாம் நான் பாடப் போறதில்லை! :-) இதெல்லாம் நம்ம பார்க்கலையா என்ன? "எனக்கு இண்டெரெஸ்ட் இருக்கு சமைக்கிறேன், ஒரு சிலருக்கு இல்லை" என்பதை  யாருமே தெளிவாகச் சொல்லவில்லை.

மேலே சமையல்க்காரி வைச்சு சமைத்து, கணவனை வேர்வையில்லாமல் சந்தோஷப்படுத்திய ஆண்ட்டி (சமைத்துவிட்டு ஒரு குளியல் போட்டா என்னவாம்? ஓ தண்ணீர் பஞ்சமோ? ), எனக்கு சமையலில் இண்டெரெஸ்ட் இல்லை, அதனால என்னதான் கஷ்டப்பட்டாலும் அப்படி ஒண்ணும் என் சமையல் நல்லா வராது. மேலும் பெண்கள் சமைக்கிறது என்பது என்னைப் பொறுத்தவரையில்  அடிமைத்தனம்போல நம் கலாச்சாரத்தில் காலம்காலமாக தொடருகிறது. அதனால நான் அதில் நேரம் செல்வழிப்பதில்லை.. சமையல் செய்வதில் எனக்கு வெறுப்பு, ஆனால் வாய்க்கு ருசியா யாராவது ஒரு அடிமை குறைந்த செலவில் எனக்கு வேளாவேளைக்கு சமைத்துப் போட்டால் நல்லா சாப்பிடப் பிடிக்கும்னு சொல்லியிருக்கலாம்.

Our priorities are mostly based on our interest. We go away from something like cooking because we dont do well in it and we can never excel in it no matter how long we spend. Based on your cooking skills and bed-room skills you prefer one over other. Of course, there are some women, who are skillful in both- may be they are gifted!;)

சொல்ல மறந்துட்டேனே.. ஒரு சிறுகதை எழுத்தாளர்னு ஒரு ஆளு வந்து அவர் தம் மனைவியை சமையல்கட்டுப் பக்கமே விடுவதில்லைனு ஏதோ பேசினார். எத்தனை பெணகள் அல்லது ஆண்கள் அவரோட தியரியை ரசிச்சாங்கனு தெரியலை. அவருக்கு சமையலில் இண்டெரெஸ்ட் அதிகமோ என்னவோ.. எனக்கென்னவோ அவர் பேசியது எல்ல்லாம் எரிச்சலைத்தான் கிளப்பியது..