விஸ்வரூபத்திற்கு இஸ்லாமியர்கள் தேவையில்லாமல் கொதித்தெழுகிறார்கள் என்று நம்புகிறார்கள் கலை, கலை, கலை என்று சினிமாவை கட்டி அழும் கமல்ஹாசனின் விசிறிகள். இவர்களைப் பொறுத்தவரையில் சினிமாவை ஒரு கலையாகவும், கமலை ஒரு கலைஞனாகவும் எல்லாரும் பார்க்க கத்துக்கணும் என்கிற எதிர்பார்ப்பு!
இஸ்லாமியர்கள் பார்வையில் விஸ்வரூபம்..
இந்தப்படம் முழுக்க முழுக்க தீவீரவாதம் பற்றியது. இதில் தீவிரவாதிகளாக வருபவர்கள் எல்லாரும் இஸ்லாமியர்கள்.
"எங்களை ஏன் இப்படியே தீவிரவாதிகளாகவே காட்டுறீங்க?" என்கிறார்கள் இஸ்லாமியர்கள். அதனால் இப்படத்தை தடை செய்யச் சொல்லி வேண்டுதல் விடுத்து, முதல்வர் ஜெயாவின் கருணையில் இடைக்கால தடை வாங்கியுள்ளார்கள் இந்தப் பட வெளியீட்டுக்கு!
சரி நம்ம கமல் கதாபாத்திரம் இந்தப்படத்தில் ஒரு இஸ்லாமியர் இல்லையா?னு கேட்டால்..நம்ம ஹீரோ கமல் இந்தப்படத்தில் ஒரு பார்ப்பனராக நடித்து உள்ளாராம்! ஒருவேளை "இஸ்லாமியப் பார்ப்பனரா" என்னனு எனக்குத் தெரியலை.
கமலையும், கமல் விசிறிகளையும், நடுநிலைவாதிகளையும் பொறுத்தவரையில் இது ஒரு கற்பனைக் கதை என்பதை எல்லோரும் தெளிவாக விளங்கிக்கொள்ளணும்! அப்புறம் இதில் வரும் இஸ்லாமியத் தீவிரவாதிகளை கலையுணர்வுடன், கலைத்துவமாக, ஒரு காதாபாத்திரங்களாக மட்டும் அனைவரும் பார்க்க வேண்டும்! ஆமா, பார்ப்பானாக வரும் கமலையும்தான்! மதச்சாயம் பூசி இந்தப்படத்தில் வரும் யாரையும் நீங்க பார்க்கப்படாது! அதுபோல் ஒரு திறந்த மனது இஸ்லாமிய சகோதரர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது!
மிகவும் அப்பாவியான, உலகமே அறியாத, உலக நாயகன் கமல், அவருடைய இஸ்லாமிய சகோதரர்கள் எல்லாம் இவருடைய கலை ஆர்வத்தையும், இவர் நல்ல எண்ணத்தையும் "சரி யாக" புரிந்து கொள்வார்கள் என்றும் விஸ்வரூபம் படத்தைப் பாராட்டுவார்கள் என்றும் நம்பி மோசம் போய்விட்டார் போல் தெரிகிறது. கமலின் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் இந்தப் படத்தை கலைக் கண்ணோடும், இதில் வரும் கதாபாத்திரங்களுக்கு மதச்சாயம் பூசாமலும், பார்ப்பாரகள், மேலும் இந்தப் படத்த்தை முழுமனதாகப் பாராட்டுவார்கள் என்று ஏமாந்து நிற்கிறார் உலகம் அறியாத உலக நாயகன் கமல்!
* கமல்ஹாசன் என்கிற இந்த அப்பாவிக் கலைஞன் தற்போது படும் இன்னல்களுக்காக நாம் எல்லாம் கூடி ஒப்பாரி வைத்து அழுவோமா?
* இல்லைனா "உன்னைப்போல் ஒருவன்" வெளியிட்ட போதே அந்தப் படத்தை இஸ்லாமியர்கள் எடுத்துக் கொண்ட, விமர்சித்த விதத்திலிருந்து இவர் பாடம் கற்று, இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டுவதை அதோட இவர் நிறுத்தி இருக்கணுமா?
இது விவாதிக்க வேண்டிய விடயம்!
Showing posts with label பார்ப்பனர்கள். Show all posts

Thursday, January 24, 2013
Friday, November 16, 2012
டோண்டு ராகவர் சொன்னது சரிதான்! சாதி ஒழியாது!
நம்ம ஐயங்கார்வால் டோண்டு ராகவர், "சாதியை மெனக்கெட்டு ஒழிக்க வேண்டியதில்லை! நீங்க என்னதான் ஒழிச்சாலும் அது ஒழியாது! நம்ம சாதிதான் உயர்சாதினு நெனச்சுண்டு வாழ்ந்தா தப்பே இல்லை!" என்கிற கருத்தை மையமாக வைத்துப் பதிவெழுதும் போதெல்லாம் எரிச்சல்தான் வரும்! ஆனால் உண்மையில் "தமிழ்நாட்டில் சாதி ஒழியுமா?" என்ற கேள்வி மனதில் தோன்றும், எங்கேயோ இடிக்கும். "ஒழியவே ஒழியாது போல" னு மனசாட்சி சித்ரவதை செய்யும்.
சமீபத்திய பரமக்குடி குருபூஜை சம்பவம் (இந்த முறை இழப்பு முக்குலத்தோருக்கு என்பதை மனதில் கொள்ளவும்!), இப்போ தர்மபுரி சம்பவம் (இழப்பு தலித்களுக்கு) எல்லாத்தையும் பார்க்கும்போதும், அதைப் பற்றி நம் மக்கள் எதுவும் கிளறாமல் "கள்ள மெளனம்" சாதிப்பதையும் பார்த்தாலே தெரியும், பார்ப்பனர்கள் மட்டுமல்லாமல் எல்லா "உயர்சாதி இந்துக்களும்" தன் சாதிதான் உயர்சாதி னு பெருமையில்தான் முட்டாள்களாக வாழ்ந்துகொண்டு இருக்காங்க என்று. அதிலும், இன்றும் தாழ்த்தப்பட்டவர்களை இந்த முட்டாள்கள் குறைவாக நினைக்கிறாங்க. இவர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுடன் திருமண உறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்கிற நிர்பந்தம்/சூழ்நிலை வரும்போது, பார்ப்பனர்களைவிட "திராவிட உயர்சாதி ஹிந்துக்கள்தான்" அதிக (முக்கியமாக முக்குலத்தோர், வன்னியர்கள்) சாதிவெறி பிடிச்சவங்க என்பது தெளிவாகத் தெரியுது.
பச்சையா உண்மையை உலக நடப்பை பேசுவோம்..
இன்றைய சூழல்களில், உண்மை நிலவரம் என்ன? கிராமங்கள், சிறு நகரங்கள் எல்லாவற்றிலுமே பார்ப்பனர்கள் மட்டுமல்லாமல், வன்னியர், முக்குலத்தோர்கள், கவுண்டர், வெள்ளாளர், முதலியார், கோணார், நாடார், நாயக்கர், ரெட்டியார் அப்புறம் "விட்டுப்போனவர்கள்" ஏன் தலித்கள்கூட சாதியை கட்டிப்பிடிச்சுக் கிட்டுத்தான் அழுதுக்கிட்டு இருக்காங்க. அதை எவனும் மறுக்க முடியாது!
தலித்கள் அல்லாத எல்லா சாதிக்காரர்களும் (இவர்கள் என்ன தொழில் செய்தாலும், சுத்தமாக இல்லாவிட்டாலும்) தன்னையும் தன் சாதியை பெருசாவும் உயர்வாகத்தான் நெனச்சுக்கிட்டு சாதித் திமிருடன் இருக்காங்க.
தங்களை, "பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிறப்டுத்தப்பட்டோர்கள்" என்றல்லாம் வகைப்படுத்தி அரசாங்கக் காதிதங்களில் (தேவையான நேரங்களில்) எழுதிக்கிட்டாலும், உண்மையில் தன் சாதியை உயர்சாதி என்பதுபோல்தான் உயர்வாக நெனச்சுக்கிட்டு, பேசிக்கிட்டு சாதிவெறியுடன்தான் உயர்சாதி திராவிட இந்துக்கள் வாழ்றாங்க. அதே நேரத்தில் ரிசெர்வேஷனை மட்டும் வெகுகவனமாக தங்கள் முன்னேற்றத்துக்கு பயன்படுத்திக்கொள்றாங்க. இதில் இன்னொரு பரிதாபம் என்னனா ரிசெர்வேஷன் அவர்கள் உயர்வுக்கு நிச்சயம் தேவை என்பதால், தாழ்த்தப்பட்டவர்களும் அவங்களுடைய சாதிச்சாயத்தை விட்டு முழுவதும் வெளிவரமுடியாத ஒரு சூழலில் மாட்டிக்கிட்டாங்க. அவர்கள் தேவைக்காக அவர்களுடைய சாதிச்சாயத்தைவிட்டு அவர்களும் வெளியே வரமுடியாது என்பது கசப்பான உண்மை!
மற்றபடி சாதி வேறுபாடு, உயர்வு தாழ்வு ஓரளவுக்கு ஒழிவது எங்கே என்று பார்த்தால்.. நாடுவிட்டு நாடு சென்று செட்டில் ஆனவங்ககிட்டதான்னு சொல்லலாம். அதுவும் வேறு நாட்டில் செட்டில் ஆகி ஒரு ஜெனெரேசன் ஆன பிறகு அவர்கள் சந்ததியினர் யாரும் சாதி பார்ப்பதில்லை. அங்கே பிறந்து வளரும் குழந்தைகளுக்கு சாதியை ஊட்டுவது மிக மிகக் கடினம் என்பதும் ஒரு முக்கியக்காரணம். சவுத் ஆஃப்ரிக்கா, ஈழம், வட அமெரிக்கா, கனடா, யு கே, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் செட்டில் ஆனவர்களுக்கு ரிசர்வேஷனும் கெடையாது, சாதியும் பொதுவாக யாரும் பார்ப்பதில்லை- ஒரு சில லூசுகள் தவிர்த்து.
சரி இப்போ நடக்கிற இந்த சாதி வெறி, அடி தடி சண்டை, தீ வைத்து எரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு???
* பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதி இந்துக்கள் போலவே தாழ்த்தப் பட்டவர்களும் தங்களையும் தன் சாதியையும் மற்ற சாதிகளை எல்லாம்விட உயர்வாக நினைத்துக்கொள்ளனும்.பிறப்பால் எல்லாரும் சமம்தானே? அவன் உயர்வுனா நீங்களும் அதே அளவு உயர்வுதான்!
* தன்னை சாதி அடிப்படையில் மட்டம் தட்டும் மற்ற சாதிக்காரர்களை இவர்கள் மட்டமாக நினைத்துக் கொண்டு, தேவையென்றால் சுத்தமாக அந்த மூடர்களிடம் இருந்து நாகரிகமா, சட்ட உதவியுடன் ஒதுங்கிப் போயிடனும். இது கோழைத்தனம் இல்லை! முட்டாள்களைப் பார்த்து ஒதுங்கிப்போவது புத்திசாலித்தனம்.
* மற்ற கீழ்ப்புத்தி உள்ள உயர்சாதிக்காரனோட அவர்களே விரும்பி வந்தாலும் திருமணம் சம்மந்தம் செய்வது நமக்கு இழுக்கு என்று திடமாக எண்ண வேண்டும். அந்த கருத்தை தன் சாதி சனம், குழந்தைகள் சொந்தக்காரங்க எல்லாரிடமும் எடுத்துச் சொல்லி அந்த நம்பிக்கையை அவங்க சமூகத்தில் வித்திட்டு, வளர்த்து, தன்னை உயர்வாக சமுதாயத்தில் ஆக்கிக்கனும். அப்படி இவர்கள் தன்னையும் தன் சாதியையும், தன் சாதி சனங்களையும் உயர்வாக எண்ணி தன் சாதிக்காரவுங்களோடமட்டும் உறவுகள் வைத்துக்கொண்டு, இந்த உயர்சாதி முட்டாள்களிடமிருந்து ஒதுங்கி சந்தோஷமாக வாழ்வதே இப்போதைக்கு நல்ல முடிவாத் தெரியுது.
* முக்கியமாக கலப்பு மணத்தை இவர்களே சீரியஸாக புறக்கணிக்கனும். கலப்பு மணம்னு வரும்போதுதானே யார் உயர்ந்த சாதி என்கிற கேள்வியே வருது? அதன் விளைவால்தான் பல பிரச்சினைகள் தலைதூக்குது. இன்று திருமணம் சுமூகமாக முடிந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் இந்த சாதிப் பிரச்சினை வெடிக்கலாம். அதனால் இவங்களே அதுக்கு வாய்ப்பே கொடுக்கலைனா என்ன பிரச்சினை வரப்போது சொல்லுங்க?
என்னுடைய ஆலோசனை கேவலமாக, மட்டமாக இருக்கலாம்.. ஆனால் இதைத்தவிர எனக்கு எதுவும் " practical solution"ஆகத் தெரியவில்லை!
சும்மா நம்ம பதிவுலகில் சாதியை ஒழிக்கனும், எல்லாரும் சமம்தான் னு கத்துறதுனால ஒரு எழவும் ஆகப்போவதில்லை! இந்த உயர்சாதி முண்டங்கள் ஒரு போதும் தன்னைப்போல் மற்றவர்களை மதிக்கக் கத்துக்கப்போவதில்லை என்பதே நிதர்சனம்!

Subscribe to:
Comments (Atom)