* எனக்கு இவர் எழுதும் ஓ பக்கங்கள் பொதுவாக எரிச்சலைத்தருகிறது.
* இன்றைய சமுதாயத்தில் பல அவலங்கள், பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில், இவர் தனிப்பட்ட ஒரே ஒர் அரசியல்வாதி கருணாநிதியை மட்டும் தாக்குவதில் முழுகவனம் செலுத்துவது, இவருடைய பக்குவமின்மையை காட்டுகிறது.
* கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொண்டு திரியும் இவர், மதவாதிகளையும், தன் மதத்தையும் ஓரளவுக்கு அரவணைப்பது போல் எனக்கு தோன்றுகிறது. சமீபத்தில் ஜெ ஜெ வும் சசிகலாவும் ஒரு கோயிலில் மாலை மாற்றி/அணிந்துக்கொண்டதை எந்த விமர்சனமும் செய்யாமல் அவர்களுக்கு வக்காலத்து வேற!
* இன்றைய சமுதாயத்தில் போர்னோகிராஃபி தலைதூக்கி, கொஞ்ச நஞ்சமிருந்த நம் கலாச்சாரமும் சீரழிந்து போயிருக்கும் நிலையில், காதலர்களுக்கு லவ் பண்ண இடம் வேண்டும் என்று இவர் படும் கவலை எரிச்ச்லைத்தான் உண்டுபண்ணுகிறது.
* சமீபத்தில் எழுதிய ஓ பக்கங்களில், இவரின் கடவுள் மத நம்பிக்கை இல்லாத இரு நண்பர்கள் தன் மனைவிகளுக்காக சில ரிலிஜியஸ் ஃபங்க்சன் எல்லாம் செய்கிறார்கள் அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்று விமர்சிப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.
இதிலென்ன வேடிக்கை?
உன்னுடைய கொள்கையோ, நம்பிக்கையோ உன் மனைவிக்கு/காதலிக்கு இருக்கனும் என்கிற அவசியமே இல்லை என்பது இவருக்கு தெரியாதா?
அவளுடைய நம்பிக்கையில் நீ தலையிடுவது, அல்லது உன் நம்பிக்கைதான் சரி என்று சொல்வதும் அநாகரீகம் என்பதும் இவருக்கு தெரியாதா?
சிங்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் இவருக்கு தாம்பத்ய வாழ்க்கையில் அனுபவமில்லாததும்/பொதுவாக வாழ்க்கை என்பது காம்ப்ரோமைஸ் என்று சரியாக புரியாமல் தவிப்பது இவர் விமர்சனத்தில் இருந்து அழகாக புரிகிறது.
எல்லோரையம் விமர்சிக்கும் இவரை கடுமையாக விமர்சிப்பதில் எனக்கு எந்த தவறும் இருப்பதாக தோன்றவில்லை!
10 comments:
தங்கள் விமர்சனங்கள் கூர்மையாய் இருக்கின்றன. வாழ்த்துக்கள்
உங்கள் விமர்சனங்கள் கூர்மையான பார்வை கொண்டுள்ளன. வாழ்த்துக்கள்!
நன்றி, லதானந்த். :)
எல்லோரையம் விமர்சிக்கும் இவரை கடுமையாக விமர்சிப்பதில் எனக்கு எந்த தவறும் இருப்பதாக தோன்றவில்லை! //
கரெக்டா சொன்னீங்க!!!
yea, i turned to next page, when the moment i see "nyaanee"
ஞாநி ஒரு பக்கசார்புடையவர். அவரது விமரிசனங்கள் சில நன்றாக இருக்கும், ஆன பல நேரங்களில் கேடுகெட்டத்தனமாக இருக்கும்.
உங்கள் பதிவு மிகச்சரியானது.
நானும் ஞாநியை கண்டித்து எழுதியுள்ளேன். எனது பதிவை பாருங்கள்.
http://maraneri.blogspot.com/2008/07/blog-post_05.html
*** ஜோசப் பால்ராஜ் said...
நானும் ஞாநியை கண்டித்து எழுதியுள்ளேன். எனது பதிவை பாருங்கள்.
http://maraneri.blogspot.com/2008/07/blog-post_05.html
23 July, 2008 11:28 PM ***
வாங்க பால்ராஜ்!!!.
நான் இப்போதுதான் உங்கள் பதிவைப்பார்க்கிறேன்!
நான் நிச்சயம் உங்கள் ப்ளாக் வந்து உங்கள் பதிவைப்பார்க்கிறேன்! :-)
*** Jebastin said...
yea, i turned to next page, when the moment i see "nyaanee"
1 July, 2008 5:15 AM ***
நீங்க ரொம்ப ஸ்மார்ட் தான்! :-) :-)
நானும் ஞானியின் கட்டுரைகளை படிப்பவன்.சில நேரங்களில் தேவையில்லாமல் கருணாநிதியை கிண்டல் செய்வதே தன் வேலை என்பது போல் எழுதுவார்.அதற்க்காக அவர் கட்டுரைகளை தவிர்ப்பது இல்லை.அதே நேரம் சில விஷயங்கள் சரியாகவும் இருக்கும்.படித்து சில விஷயங்களை ஏற்றுக்கொண்டும் மற்ற விஷயங்களை தவிர்த்தும் விடுவேன்
Post a Comment