Friday, September 26, 2008

காதல் கல்வெட்டு-13

"அந்தக்கடிதத்திலிருந்த விசயத்தை சொல்றேன் கேட்டுகோ, கேக்கறியா, கயல்?"

"சொல்லுங்க, வேற வழி?"

"உன்னை நல்லா உதைக்கனும், கயல்! ஏதோ கதை கேட்பது பிடிக்தாத மாதிரி ரொம்பத்தான் சலிச்சுக்கிற?"

"சரி, சரி, சொல்லுங்க, வருண். சும்மாதான் டீஸ் பண்ணினேன்"


டியர் வருண்,

எப்படி இருக்கீங்க வருண்? you would not have expected this letter from me. ஏன் என்னோட பழகினீங்க, வருண்? லக்ஷ்மி சொல்லுவாள் வருணோட ரொம்பப்பேசாதே என்று. அதையும் மீறி உங்களோட வந்து பேசுவேன். யாரோடையுமே இப்படியெல்லாம் நான் பேசியதில்லை, பழகியதில்லை.உங்க டேட் ஆஃப் பெர்த் படி பார்த்தால் நீங்க "ஜெமினி". உங்களுக்கு கண்மூடித்தனமான விசிறிகள் அதிகமாக இருப்பாங்களாம். ஜோசியத்தில் எல்லாம் நம்பிக்கை எனக்குக்கிடையாது, இருந்தாலும் ஒரு பொழுதுபோக்குக்காக பார்ப்பேன். அம்மாவிடம் உங்களைப்பற்றி சொல்லுவேன். அடிக்கடி உங்களைப்பற்றி சொல்வதால், என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். எனக்கு ஒரு செருப்பு வாங்கனும்னாக்கூட அப்பா அம்மாதான் செலெக்ட் பண்ணுவாங்க, வருண். கல்யாணம் எல்லாம் நினைத்துப்பார்க்கவே முடியாது.

எனக்கு இந்த கடிதத்திற்கு பதில் எழுதுவீங்களா வருண்?

Affectionately yours,
Jeyanthi.

"ஆமா, என்னதான் சொல்கிறாள் உங்க ஜெயந்தி?"

"நாந்தான் என்ன எழுதினாள்னு சொன்னேன் இல்லை, கயல்?"

"ஆமாம், சொன்னீங்க. ஆனால் எனக்கு ஒன்னுமே புரியல! உங்களை லவ் பண்ணுவதா சொல்றாளா?"

"நேரடியா அப்படி சொல்லவில்லை, நான் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பாள் இல்லையா?"

"நீங்க சொன்னீங்களா?"

"என்ன சொல்ல? நான் உன்னை காதலிக்கிறேன். ஆனால் இப்போ கல்யாணம் எல்லாம் பண்ணிக்கமுடியாது. என் ஃபேமிலி சூழ்நிலையில் நான் நல்லாப்படித்து முதலில் வேலைக்குப்போகனும்...இப்படியா?"

"பதிலே எழுதலையா, நீங்கள்?"

"இல்லையே, எழுதினேன். அவளை மாதிரியே நானும் ஏதோ உளறினேன். ஆனால் உன்னைக்காதலிக்கிறேன் என்றெல்லாம் சொல்லவில்லை"

"ஏன் சொல்லவில்லை? என்னென்ன உளறனீங்க அதையும் சொல்லுங்க. அவள் உளறல்களை மட்டும் சொன்னவர் உங்களுடையதை மட்டும் மறைக்கறீங்க பார்த்தீங்களா?" சொல்லிவிட்டு மீண்டும் குறும்பாக சிரித்தாள்.

"அப்படி ஒரு கமிட்மெண்டுக்கு நான் அப்போது தயாரா இல்லை கயல்"

"But you loved her?"

"yes, I think so"

"What is wrong in saying it?"

"I don't think that will take us anywhere further. I have had lots of responsibilities, Kayal"

"அப்போ உங்களை காதலிக்கிறேன்னு பொண்ணுங்கதான் வந்து சொல்லனுமா?"

"நான் அப்படியா சொன்னேன்?"

"அப்புறம் என்னவாம்? பொதுவா எந்தப்பொண்ணும் சொல்ல மாட்டாள், வருண்"

"நான் எதிர்பார்க்கவில்லை, கயல்"

"ஆமாம்,உங்க ஜென்னி எதுவும் புது பாய்ஃப்ரெண்ட் பிடிச்சு இருக்காளா இப்போ?"

"இல்லையே, அவள் ரொம்ப வருத்தமா இருக்காள்"

"ஏன் நீங்க ஆறுதல் சொல்லலையா, இந்திப்பட ஷாருக்கான் மாதிரி?"

"உனக்கு கொழுப்புத்தானே? நான் அவளோட அப்படியெல்லாம் பழகலைனு எத்தனை தடவை சொல்றது உனக்கு?"

"எப்படியெல்லாம்?" இப்போது அவள் வருணை பார்த்த பார்வையில் குறும்பு கொப்பளித்தது. சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு சீரியசான முகபாவத்துடன் கேட்டாள்,

"எப்படி எல்லாம் பழகலைனு கேட்டேன்?"

"சரி அதை விடு! அவள்தான் உன்னை ஞாபகப்படுத்தி கூப்பிடச் சொன்னாள்"

"உங்களுக்கு நான் கால் பண்றேனோ இல்லையோ, அவள் தினமும் உங்களுக்கு கால் பண்ணுகிறாள். அவளுக்கென்ன அக்கறையாம்? அவள் என்னை ஞாபகப்படுத்தலைனா, கால் பண்ணி இருக்க மாட்டீங்களா? உங்களுடைய குரலைக்கேட்க நான் ஒன்னும் ஏங்கவில்லை"

"ஏதாவது ஹேண்ட்சம் பாய்ப்ரெண்டோட ஓடிப்பிடித்து விளையாடிட்டு இருந்து இருப்ப. உனக்கெதுக்கு என் ஞாபகம் எல்லாம் வருது?'

"அது ஓரளவு உண்மைதான். ராம கிருஷ்ணன் என்று ஒருவரை தான் டேட் பண்ணிட்டு இருக்கேன். கொஞ்சம் டீசண்டா பழகுகிறார். ஆனால் அப்படி ஒண்ணும் "இது" வரவில்லை அவர் மேலே"

"இது னா என்ன அது?"

"உங்க ஜெயந்திக்கு உங்க மேலே இருந்துச்சில்ல அதுதான்"

கயல் இன்று வருணை கிண்டலடித்தே கொல்லப்போகிறாள் என்று தெரிந்துவிட்டது, பேச்சை மாற்ற, "சரி கோயிலுக்குப்போகலாமா? வந்து நேரமாச்சு!" என்றான்.

"சரி வாங்க போகலாம். ஏதோ பெரிய காதல் கதை சொல்றேனு சொல்லி இப்படி ஏமாத்திட்டீங்களே வருண்"

"அவ்வளவுதான் என் காதல் கதை, கயல். ஃப்யூச்சர்ல ரொம்ப ரொமான்ஸோட யாரையாவது காதலித்தால் உனக்கு அப்படியே சொல்றேன், சரியா?

கயல் உதட்டை சுழித்து பழிப்புக்காட்டினாள்.

"நீ பழிப்புக்காட்டினால் ரொம்பவே அழகா இருக்க கயல்"

"உங்ககிட்ட கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கனும்"

"ஆமாம், அதற்கு உதவி செய்ய அந்தக் கடவுள்ட்டப்போயி வேண்டிக்கோ"

"அம்மா பேருக்கு ஒரு அர்ச்சனை மட்டும்தான் இன்று. கடவுளை ரொம்பத் தொல்லை பண்ணப்போவதில்லை, உங்களை பார்த்துக்க நானே போதும்"

இருவரும் வாசலில் காலணிகளை கழட்டி வைத்துவிட்டு கோயிலுக்குள் நுழைந்தார்கள்

-தொடரும்

15 comments:

குடுகுடுப்பை said...

சாமியோவ் எஸ்கேப் ஆயிறு ரெண்டு கொடுமை டிங்கு டிங்குன்னு வருது.

நசரேயன் said...

அசத்தலான நடை தொடர்ந்து எழுதுங்கள்

வருண் said...

***குடுகுடுப்பை said...
சாமியோவ் எஸ்கேப் ஆயிறு ரெண்டு கொடுமை டிங்கு டிங்குன்னு வருது.

26 September, 2008 12:02 PM***

LOL!

வருண் said...

***நசரேயன் said...
அசத்தலான நடை தொடர்ந்து எழுதுங்கள்

26 September, 2008 12:48 PM***

நன்றி, நசரேயன்! :)

Sundar சுந்தர் said...

இயல்பாய் இருக்கு. அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன்!

SK said...

'ஏதோ நினைவு தான் என்னை சுத்தி வருகுது'

அருமை இந்த பாகம். கலக்குங்க. இதுக்கு மேல நான் இங்கே எழுதின எதாவது ஒளரி கொட்டிடுவேன்.

வருண் said...

*** Sundar said...
இயல்பாய் இருக்கு. அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன்!

27 September, 2008 7:42 AM
-------------------

SK said...
'ஏதோ நினைவு தான் என்னை சுத்தி வருகுது'

அருமை இந்த பாகம். கலக்குங்க. இதுக்கு மேல நான் இங்கே எழுதின எதாவது ஒளரி கொட்டிடுவேன்.

27 September, 2008 3:46 PM***

வாங்க சுந்தர், எஸ் கே :)

தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி சுந்தர், & எஸ் கே! :)

இவன் said...

அடுத்த பாகம் எப்போ வருண்??

வருண் said...

விரைவில், இவன்! :)

உங்கள் வருகைக்கு நன்றி! :)

அது சரி said...

நீங்க செதுக்குற வேகத்துல போரடிச்சி போயி, கல்லு எந்திருச்சி போயிர போவுது சாமி!

இந்த மாசம் ஒரு இஞ்ச்சு, அப்புறம் ஒரு ரெண்டு மாசம் கழிச்சி இன்னொரு இஞ்ச்சி... இப்பிடியே போனா, நீங்க எப்ப செதுக்கி முடிக்கிறது..

கொஞ்சம் வெரசா செதுக்குங்க சாரே! :0)

வருண் said...

வாங்க அது சரி! :)

"வெரசா" என்கிற வார்த்தை கேட்டு பலவருடங்கள் ஆயிருச்சு!

நான் இதை செதுக்கி முடிப்பதா இல்லை. இப்படியே போயிக்கொண்டேதான் இருக்கும்.

விரைவில் அடுத்த பாகம் எழுதுறேன்! :)

SK said...

வருன் கயல்விழின்னு ஒரு ஜீவன் இன்னும் இருக்காங்களா

எங்கயுமே பாக்க முடியலை. பதிவும் இல்லை. விசாரித்தாக தெரிவிக்கவும்.

வருண் said...

SK!

Kayal is doing great. She just is busy with her professional career. She will be back to say at least hi soon! :-) I will pass on your regards to her!

கயல்விழி said...

வந்தாச்சு SK :)

Anonymous said...

Keep up the good work.