Wednesday, May 26, 2010

அரிசிப்புழு சாப்பிடாதவனும்.. -கடலை கார்னர் (55)

"என்ன ஆண்ட்டி! அந்த வடநாட்டு அம்மா உங்கள நல்லா கவனிச்சுச்சா!"

"யாரைச் சொல்றீங்கனு தெரியலை. ஆனால் அங்கவுள்ள அம்மா கொஞ்சம் அறுக்கத்தான் செஞ்சது. ஆனால் விலையெல்லாம் ரொம்பப் பரவாயில்லை கண்ணன். இது மாதிரி கடையெல்லாம் காண்சஸ் சிட்டியில் கெடையாது. இங்கேதான் எல்லாம் கெடைக்குது!"

"பேசாமல் சிகாகோ மூவ் பண்ணிடுங்க, ஆண்ட்டி!"

"நெனச்ச நேரம் மூவ் பண்ண முடியுமா, பிருந்தா? இந்த ஊர்ல பர்மணெண்டா ஒரு வேலையும், ஒரு ஹஸ்பண்டும் வச்சிருக்க முடிஞ்சதுனாவே பெரிய சாதனைதான்"

"அது சரி, உங்க "எக்ஸை" அப்பப்போ கவுத்தலைனா போர் அடிக்குமா, ஆண்ட்டி?"

"ஹா ஹா ஹா! உண்மையைத்தானே சொல்றேன், கண்ணன்!"


"அவரும் ஆம்பளைனு அவங்க "எக்ஸ்"க்கு வக்காலத்து வாங்குறீங்களா, கண்ணன்?"

"வக்காலத்தெல்லாம் வாங்கல பிருந்த்! ஒருவரோட சேர்ந்து வாழமுடியலைனா அவர் மோசமா இருக்கனும்னு இல்லையே! அவங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகலை! அவ்வளவுதான்"

"இப்போ என்ன சொல்ல வர்றீங்க?'

"மேரிட்டல் ப்ராப்ளம்ஸ் ரொம்ப காம்ப்ளெக்ஸான ஒண்ணு, பிருந்த்! உனக்கு அனுபவம் பத்தாதுனு சொல்ல வர்றேன்!"

"நீங்க இதுவரை எத்தனை முறை கல்யாணம் பண்ணி வாழ்ந்து இருக்கீங்க? பெரிய அனுபவசாலி!"

"ஏய்! நான் அனுபவசாலினு உன்ட்ட இப்போ சொன்னேனா?"

"அப்ப எதுக்கு பெரிய இவர் மாதிரி பேசுறீங்க?"

"உன்னைவிட எனக்கு அனுபவம் ஜாஸ்திதான்!"

"இருக்கலாம். ஆனா இந்த ஆண்ட்டி "எக்ஸ்" மேட்டர்ல என்னைவிட உங்களுக்கு கெடையவே கெடையாது!"

"என்ன ரெண்டு பேரும் அவங்க "எக்ஸ்" பத்தி நைட் பூராம் பொறணி பேசுனீங்களா?"

"நெறையா சொல்லியிருக்காங்க! ஆண்ட்டி! அந்த "பீட்சா" கதையை கண்ணன்ட்டசொல்லவா?"

"கண்ணன்ட்டயா? ஐயோ வேணாம், பிருந்தா!"


"என்ன இவ்ளோ வெக்கப்படுறாங்க ஆண்ட்டி! என்னனு சொல்லு!"

"ஆண்ட்டி சொல்றேனே?"

"சரி சொல்லு!"

"இரு, இரு! என்ன? ரொம்ப மோசமான பெட்ரூம் மேட்டரா?"

"ஆமா!"

"ஆண்ட்டியை எம்பாரெஸ் பண்ண வேணாம் அப்புறம் இன்னொரு நேரம் சொல்லு, பிருந்த்!"

"கண்ணன்! நீங்க என்ன கைல ஏதோ இன்னொரு பார்ஸல் வச்சிருக்கீங்க?"

"ஏன் நீங்க மட்டும்தான் ஷாப்பிங் பண்ணனுமா? இங்கேயே நின்னுட்டே இருக்க எனக்கு போர் அடிச்சது அதான் ஒரு கடையில் போய் எனக்குத் தேவையனா ஒரு சிலதை வாங்கிட்டு வந்தேன்!"

"என்ன அது!"

"அதெல்லாம் சொல்ல முடியாது! என் ஃப்ரெண்டு ஒருத்திக்கு "

"ஒருத்தியா? யாருக்கு அது?"

"என்னுடைய க்ளோஸ் ஃப்ரெண்டு ஒருத்திக்கு ஜூலைல பொறந்தநாள் வருது. "

"எனக்கும் ஜூலைலதான் பொறந்த நாள்!"

"ஆமா உலகத்திலேயே ஜூலையிலே பொறந்தது நீ மட்டும்தான்னு நெனச்சுக்காதே!"

"நீங்கதான் என் பொறந்த நாளுக்கு எதுவுமே வாங்கித் தர்றது இல்லையே! சும்மா ஒரு ஹாப்பி பர்த்டே விஷ்! அவ்வளவுதான்"

"வேறென்ன வேணும்? செக்ஸா?"

"அபப்டியா நான் சொன்னேன்?"

"கண்ணன் ரொம்ப கஞ்சமா பிருந்தா?"


"நீங்க வேறயா!"

"ஆமா, ஆண்ட்டி! எச்சில் கையிலே காக்காய் விரட்டமாட்டார்னு சொல்லுவாங்க இல்லை! அதுக்கு அழகான உதாரணம் இவர்தான்!"

"ஹா ஹா ஹா!"


"உன்னை மாதிரி மேக் அப், காஸ்மடிக்ஸ் அது இதுனு ஊதாரியா செலவழிக்கலைனா கஞ்சமா?"

"நான் ஊதாரி எல்லாம் இல்ல!"

"அமெரிக்கா வந்து இண்டிப்பெண்டெண்டா நாலு காசு சம்பாரிச்சாச்சுனா, நீங்க ஆடுற ஆட்டம் இருக்கே!"

"நான் சம்பாரிச்ச காசை, என் மேக் அப்க்கு செலவழிப்பது எல்லாம் தப்பில்லை!"

"சரி ஏதாவது இந்தியன் ரெஸ்டரண்ட் போவோமா? எனக்குப் பசிக்குது"


"ஆண்ட்டி ப்யூர் வெஜிட்டேரியன்! உடுப்பி பேலஸ்தான் போகனும்!"

"அய்யோ அங்கே சாம்பார் படு மட்டமா இருக்கு! அங்கே வேணாம்! வைஸ்ராய் போவோமா? லன்ச் பஃபே! வெஜ் நான் வெஜ் ரெண்டும் இருக்கும்"

"சரி வைஸ்ராயே போவோம்!"

**************************

"கண்ணன்! நீங்க என்ன வெஜிட்டேரியனா!"


"அவர் சும்மா நடிக்கிறார், ஆண்ட்டி! விட்டா உங்களையும் என்னையும்கூட சாப்பிட்டுவிடுவார்"

"இல்லை ஆண்ட்டிக்கு கம்பெணி கொடுக்கத்தான்!"

"ஏன் எனக்கு கம்பெணி கொடுத்தா என்ன?"

"ஆமா நீ சிக்கன் இல்லாமல் சாப்பிடுறதே இல்லை! அமெரிக்கா வந்து கெட்டுப்போயிட்டா இந்த "மாமி"!

"இங்கே வந்துதான் சிக்கன்லாம் சாப்பிடுறியா, பிருந்தா!"


"வேற என்ன? இவங்க ஆத்துலயா இவங்க அம்மா கோழியடிச்சு சமைக்கிறாங்க? அவங்களுக்கு இவ சிக்கன்லாம் சாப்பிடுறது தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியலை!"

"இங்கே வந்துதான் சிக்கன்லாம் சாப்பிடுறேன் ஆண்ட்டி! அமெரிக்கா வந்து ரொம்ப முன்னேறிட்டேன் போல இருக்கு!"

"ரெட்லாப்ஸ்டர்ல போயி சீ ஃபூட் எல்லாம் திண்பா! கேட்டால் அதுலதான் ஃபேட் கம்மியா ப்ரோட்டீன் ரிச்சா இருக்காம்!"

"எனக்குப் பிடிச்சத நான் சாப்பிடுறேன் உங்களுக்கென்ன?"

"ஆண்ட்டி, நீங்க என்ன சுத்தமான வெஜிட்டேரியனா?"

"ஆமா, கண்ணன்!"


"அப்சலூட் செண்ஸ்ல பார்த்தால் நீங்க நிச்சயம் ஏதாவது நான்வெஜ் சாப்பிட்டுத்தான் இருப்பீங்க!"

"இல்லையே!"

"இங்கே உள்ள அமெரிக்கன் ரெஸ்டாரெண்ட்ல ஆயில்ல எல்லாம் அனிமல் ஃபேட் எல்லாம் சேர்கிறாங்க ஆண்ட்டி!" ஃப்ரென்ச் ஃப்ரைஸ் கூட நாண்வெஜ்தான்!

"நெஜம்மாவா?"

"நெஜம்மாத்தான் ஆண்ட்டி! சரி விடுங்க. நீங்க வெஜ்னே நெனச்சு சாப்பிட்டா அது வெஜ்தான்!"

"கண்ணன் ஒரு பழமொழி சொல்லுவாரு, ஆண்ட்டி!"

"பழமொழியா?.. என்ன பழமொழி அது?"


"மரப்பசுல ஜானிகிராமன் சொன்னது! எனக்கு க்ரிடிட் கொடுக்காதே!"

"என்ன பழமொழி? சொல்லுங்க!"


"இப்போ சாப்பிடுற போது வேணாம் . சாபிட்டுட்டு காருக்கு போகும்போது சொல்றேன்!"

********************

"ஆண்ட்டிக்கு அந்தப் பழமொழியை சொல்லுங்க, கண்ணன்!"

"விட மாட்டியா?"

"ஆமா சொல்லுங்க!"

"அசிங்கமா இருக்கும். பரவாயில்லையா?"

"சரி பரவாயில்லை!"

"அரிசிப்புழு சாப்பிடாதவனும், அவுசாரி கையால சாப்பிடாதவனும் இந்த உலகத்திலே இல்லையாம்! னு ஜானகிராமன் எழுதி இருப்பாரு! அதாவது ஏதாவது ஒரு அக்கேஷனில் நம்மளயே அறியாமல் நம்ம நான்வெஜ் சாப்பிட்டு இருக்கலாம்!"

"சரி அவுசாரினா என்ன, கண்ணன்?"

"நன்னடத்தையில்லாத பெண்மணினு வச்சுக்குவோமே!"

"நெஜம்மாவே மரப்பசுல இது இருக்கா?"

"அப்படித்தான் எனக்கு ஞாபகம்!"

"ஏன் இப்படி ஒரு பழமொழி?"

"என்னைக்கேட்டால் சில அசிங்கமான பழமொழியிலும் நல்ல அர்த்தங்கள் இருக்குங்க. அதையும் நம்ம எடுத்திக்கிறதுல தவறேதும் இல்லையே!"

"கண்ணன்! அந்த கழுதைப் பழமொழி ஒண்ணு சொல்லுவீங்களே.. அதையும் சொல்லுங்க"

"நீ சும்மா இருக்க மாட்டியா!"

"அதென்ன கழுதைப் பழமொழி!"

"அது ரொம்ப "எ" பழமொழி! அதெல்லாம் உங்ககிட்ட சொல்லி என்னை நானே தாழ்த்திக்கப் போவதில்லை! வேணும்னா பிருந்தாட்ட கேட்டு தெரிஞுக்கோங்க! அவளுக்கு நல்லாத் தெரியும். விழுந்து விழுந்து சிரிச்சா அதை கேட்ட்டுட்டு"

"நானா? நான் அந்தப் பழமொழியெல்லாம் செத்தாலும் சொல்லமாட்டேன், கண்ணன்!"

"அப்போ ஆண்ட்டி ரொம்ப அன்லக்கி! சரி, ட்ரங்க்ல வாங்கின எல்லாத்தையும் டம்ப் பண்ணுங்க! இடம் பத்தலைனா, பேக் சீட்லதான் வைக்கனும்!"

"இடம் எல்லாம் பத்தும் கண்ணன்!"

-தொடரும்

4 comments:

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

Chitra said...

"வக்காலத்தெல்லாம் வாங்கல பிருந்த்! ஒருவரோட சேர்ந்து வாழமுடியலைனா அவர் மோசமா இருக்கனும்னு இல்லையே! அவங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகலை! அவ்வளவுதான்"


...... பழமொழிகளில் கருத்துக்களை அள்ளி தெளித்து ஒரு தொடர் கதை..... நடத்துங்க...... Devon ஸ்ட்ரீட் - அருமை பெருமையும் வருது..... ம்ம்ம்....

வருண் said...

**** www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

26 May 2010 2:38 PM***

நன்றி தலைவன் குழுமம்!

வருண் said...

**** Chitra said...

"வக்காலத்தெல்லாம் வாங்கல பிருந்த்! ஒருவரோட சேர்ந்து வாழமுடியலைனா அவர் மோசமா இருக்கனும்னு இல்லையே! அவங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகலை! அவ்வளவுதான்"


...... பழமொழிகளில் கருத்துக்களை அள்ளி தெளித்து ஒரு தொடர் கதை..... நடத்துங்க...... Devon ஸ்ட்ரீட் - அருமை பெருமையும் வருது..... ம்ம்ம்....

26 May 2010 2:48 PM***

வாங்க சித்ரா! :)))

அடுத்து டாலஸ்ல எவெரெஸ்ட் தியேட்டர்ல ரஜினி படம் பார்த்த கதையை "கதை விட" விடலாமானு பார்க்கிறேன் :)))