Friday, May 28, 2010

சிங்கம்! வெற்றி நிச்சயம்!


ஹரி - சூர்யா இணையும் மூனாவதுபடம்தான் இந்தச் சிங்கம். என்னப்பா பேரு வச்சிருக்கீங்க? சிங்கம் கரடி, நாய், பூனையினு?னு சொன்னால், "அண்ணே, தொரசிங்கம்னு பேரு கேட்டதில்லையா? தமிழ்ப் பேருண்ணே "னு சொல்லி சமாளிக்கிறாங்க!

சரி, ஹரியுடைய ஆறு, வேல் ரெண்டுமே மசாலாப் படங்கள்தான் ஆனால் வெற்றியடைந்த படங்கள்! அதேபோல் சிங்கமும் ஒரு முழுநீள மசாலாப் படம்தான். இருந்தாலும் விமர்சகர்களை கவர்ந்திருக் கிறார்கள் ஹரியும் சூர்யாவும்! விமர்சனங்கள் எல்லாம் ஒரு மாதிரி பாஸிட்டிவாத்தான் வந்திருக்கு! எ செண்டர் மட்டுமல்லாமல் பி & சி செண்டர்களிலும் படம் நல்லாப் போகும்னு உத்திரவாதம் கொடுக்கிறாங்க, எல்லாரும். வெற்றி நிச்சயம் என்கிறார்கள்!

சில விமர்சகர்கள் என்ன சொல்றாங்கனு கேளுங்க!

Sify: பைசா வசூல்! அப்படினா, கமர்சியல் ஹிட் என்று அர்த்தம்னு நான் நெனைக்கிறேன்! சூர்யாதான் இந்தப் படத்தை தோளில் சுமக்கிறார் என்று கண்ணா பின்னானு சூர்யாவை மேலே தூக்கி வைத்துள்ளார்கள்! விவேக் காமெடி ரொம்ப சுமாருக்கும் கீழயாம்! அந்த ஹீரோயின், "அனு அக்கா" எப்படி? அவர் சும்மா க்ளாமருக்கு மட்டும்தானாம்! பிரகாஷ்ராஜ், வழக்கம்போல நல்லாவே செய்திருக்காராம்!

Rediff: என்ன சொல்றாங்கனா, இப்போ வந்த எல்லா மசாலாப் படங்களுக்கும் தாயாம்! இந்த சிங்கம்! இப்படியும் மசாலாப் படத்தை புகழலாமா? இரண்டரை நட்சத்திரங்கள்தான் கொடுத்தாலும் விமர்சனம் நல்லாவே எழுதி சூர்யாவை புகழ்ந்து தள்ளி இருக்காங்க! விவேக் காமெடி நல்லாயில்லைனுதான் சொல்லியிருக்காங்க இவங்களும். சரக்கு தீர்ந்து போச்சா விவேக்குக்கு? :( ஹீரோயின் சும்மா வந்து போறாராம்!

ஆமா, சுறா னா விஜயை திட்டுறீங்க, சிங்கம் னா சூர்யாவை புகழ்றீங்க? இதெல்லாம் அநியாயம்னு தோனுதா? சூர்யா தொடர்ந்து வெறும் சிங்கமா (மசாலாவா) ஒரேமாதிரி பண்ணாமல் எல்லா வகையிலும் படம் பண்ணுவதால்தான் இருக்கும். அப்புறம் அவரு இன்னும் முதல்வராகனும்னு ஆசைப்படலை அதுவும் ஒரு காரணம் போல!

அப்புறம், ஆறுச்"சாமி"யோட கம்பேர் பண்ணினால் இந்தச் சிங்கம் எப்படினு கேட்டால், நிச்சயம் சாமி இதைவிட நல்லபடம்னுதான் எல்லாரும் சொல்றாக! ப்ளாட்டும் சரி, காமெடி (விவேக்கிடம் அப்போ கொஞ்சம் சரக்கு இருந்துச்சு) எல்லாமே சாமி பெட்டர்தானாம்.

இப்படி படமே பார்க்காமல் விமர்சனம் எழுதுறது கொஞ்சம்கூட நல்லாயில்லைங் கிறீங்களா? நம்மளவிட இது போல் வலையில் எழுதும் ஆங்கில விமர்சகர்கள கருத்து தரம் மற்றும்ம் விலையுயர்ந்தது இல்லையா? அதான்!

நான் எழுதினா அங்காடி தெரு விமர்சனம் மாதிரிதான் வரும் எனக்கு! நான் எஸ்கேப்!

12 comments:

ILA(@)இளா said...

நான் எஸ்கேப்

வருண் said...

அதாங்க, மெமோரியல் டே வீக் எண்ட் வருதுல்ல! அதைச் சாக்கு வச்சு!

--------------

சரி, இளா, என்ன நீங்க இப்போலாம பதிவே போடுறது இல்லை! வாழக்கையில் இதெல்லாம் வேஸ்ட் டுனு அதுக்குள்ள புரிஞ்சிருச்சா உங்களுக்கு? :)))

28 May 2010 12:35 PM

வருண் said...
This comment has been removed by the author.
ILA(@)இளா said...

//என்ன நீங்க இப்போலாம பதிவே போடுறது இல்லை/
ஆணி புடுங்குற இடத்துல எல்லா ப்யூஸையும் புடிங்கிட்டாங்க. பொழப்பையும் பார்க்கனுமே :). வேஸ்ட்டுன்னெல்லாம் நினைக்கிறதே இல்லீங்க. பொழுது போவனும்ல. இப்போதான் இடம் மாறி இருக்கேன். அடுத்த வாரத்துக்குன்னு 5 பதிவு தயார் பண்ணியாச்சு. . அப்புறம் நாங்க நாளைக்கு சிங்கம் போறோம் ..றோம்..ம்ம்

வருண் said...

***Blogger ILA(@)இளா said...

//என்ன நீங்க இப்போலாம பதிவே போடுறது இல்லை/
ஆணி புடுங்குற இடத்துல எல்லா ப்யூஸையும் புடிங்கிட்டாங்க. பொழப்பையும் பார்க்கனுமே :)***

பொழைப்புதாங்க முக்கியம். வலையுலகம் சாப்பாடு போடாது!

***வேஸ்ட்டுன்னெல்லாம் நினைக்கிறதே இல்லீங்க. பொழுது போவனும்ல. இப்போதான் இடம் மாறி இருக்கேன். அடுத்த வாரத்துக்குன்னு 5 பதிவு தயார் பண்ணியாச்சு. . அப்புறம் நாங்க நாளைக்கு சிங்கம் போறோம் ..றோம்..ம்ம்***

எஞ்சாய் மாடி! :)

கயல்விழி said...

//ஆணி புடுங்குற இடத்துல எல்லா ப்யூஸையும் புடிங்கிட்டாங்க//

LOL I can so relate to that. I am actually forced to work these days(that's outrageous, how dare they?
)

கயல்விழி said...

நல்ல விமர்சனம். Going to watch this movie over the long weekend :)

வருண் said...

If time permits, you could write a review of how much you liked or disliked the movie, kayal :)

ராமலக்ஷ்மி said...

//இப்படி படமே பார்க்காமல் விமர்சனம் எழுதுறது கொஞ்சம்கூட நல்லாயில்லைங் கிறீங்களா//

:))!

கிரி said...

:-) படம் வெற்றி பெரும் என்று தான் நானும் நினைக்கிறேன். பதிவர்கள் தான் பலர் வழக்கம் போல நல்ல இல்லைன்னு எழுதிட்டு இருக்காங்க :-)

வருண் said...

ராமலக்ஷ்மி said...
//இப்படி படமே பார்க்காமல் விமர்சனம் எழுதுறது கொஞ்சம்கூட நல்லாயில்லைங் கிறீங்களா//

:))!

28 May 2010 8:18 PM**

வாங்க, ராமலக்ஷ்மி :)

வருண் said...

***கிரி said...
:-) படம் வெற்றி பெரும் என்று தான் நானும் நினைக்கிறேன். பதிவர்கள் தான் பலர் வழக்கம் போல நல்ல இல்லைன்னு எழுதிட்டு இருக்காங்க :-)

28 May 2010 8:27 PM***

வாங்க, கிரி! :)

போலிஸா சூர்யா நடிப்பதால் இது ஒரு பெரிய ப்ளஸ்னு நெனைக்கிறேன். அவருக்கு இந்த ரோல் நல்லா ஃபிட் ஆகுது. பார்க்கலாம், இன்னும் 2 வாரத்தில் தெரிஞ்சிடும் :)