Saturday, May 15, 2010

“காண்டம் குஷ்பு” தி மு க வில் சேர்ந்தார்!


"கற்பைப் பத்தியெல்லாம் கவலைப் படாதீங்க, கல்யாணத்துக்கு முன்னாலே உடலுறவு கொள்ளும்போது கவனமா காண்டம் மட்டும் பயன்படுத்துங்க" னு தான் குஷ்பு சொன்னார். இதில் கற்பை மட்டும் பிடிச்சுத் தொங்கி காண்டத்தை தவறவிட்ட தமிழர்கள் பலர்!

யுஎஸ் யுனிவேர்சிட்டி லைப்ரரிகளில் வெண்டிங் மெஷினில் காண்டம் விற்பதை நான் பார்த்திருக்கேன். மொதல்ல சிப்ஸ், கோக்குடன் காண்டமும் இருப்பதைப் பார்த்ததும் ஷாக்!!!! ஆமா, லைப்ரரியில் எதுக்கு இதெல்லாம் விக்கிறாங்கனு நண்பர்களிடம் சொன்ன போது, என் அறியாமையை கேலி செய்யாமல் ஒரு சில அமெரிக்கர்கள் விளக்கினார்கள். "அதாவது ஸ்டூடண்ட்ஸ் இதுபோல் தப்பு செய்வது சகஜம். ஆனால் இந்த வயதில் அவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டால் அவர்கள் வாழ்க்கை பாழாப்போயிடும். காண்டம் பயன்படுத்தினால் எச் ஐ வி யும் இவர்களுக்குள் பரவாமல் இருக்கும். அதனால தப்பு பண்ணினாலும், இதுபோல் பெரிய வம்பில் மாட்டாமல் இருப்பது நல்லதுதானே?" என்று விளக்கினார்கள்.

இன்னைக்கு குஷ்புவின் எயிட்ஸ் விழிப்புணர்வு முயற்சி மூலம் காதல் முற்றி காமத்தில் இறங்கும் நம்ம மாணவர்கள், புரிந்து கொண்டது, செக்ஸ் வச்சுக்கிட்டா தப்பில்லை என்பது மட்டும்தானா? இல்லைனா காண்டம் பயன்படுத்தி செக்ஸ் வச்சுக்கிட்டா தப்பில்லைனுதான் குஷ்பு சொன்னார் என்பதை தெளிவாகப் புரிந்துகொண்டு கவனமாக காண்டம் பயன்படுத்துறாங்களா? அப்போ இன்றைய மாணவர்கள் கடைகளில் போய் காண்டம் வாங்க பயப்படுவதோ வெட்கப்படுவதோ இல்லையா?

இதை ஏன் நான் இத்தனை பெருசு படுத்துறேன்னா நம்ம ஆளு எதையுமே ஒழுங்கா புரிஞ்சுக்க மாட்டான். "காண்டம் பயன்படுத்தினால் செக்ஸ் நல்லாவே இல்லை, நீ பேசாமல் ஏதாவது ஓரல் காண்ட்ராசெப்டிவ் எடுத்துக்கோ"னு அறிவுரை சொ ன்னாலும் சொல்லுவானுகள் லூசுப்பயலுகள். I mean the whole point of giving a “license” to have premarital sex is for controlling the spread of HIV. Did our younger generation understand that correctly? They are not stupid to have sex with oral contraceptive protection??

நம்ம உச்சநீதி மன்றமே "குஷ்பு சொன் னதில் தப்பில்லை, கற்பாவது கழுதையாவது. கடவுளே இரண்டு பெண்டாட்டிக்காரர், கல்யாணதிற்கு முன்னாலேயே காதலியிடம் உடலுறவு- காண்டம் பயன்படுத்தாமல்- கொண்டிருக்கிறார், அப்படியிருக்கும்போது நம்ம எல்லாம் என்ன? சாதாரண மனிதர்கள்தானே? கடவுள் மாதிரி முட்டாள்தனமாக காண்டம் பயன்படுத்தாமல் இருக்காமல், 100% எச் ஐ வி ப்ரூஃப் காண்டம் பயன்படுத்தி உடலுறவு கொள்ளுங்கள். அதெல்லாம் தப்பே இல்லை!" என்று சொல்லி விட்டார்கள்.

சரி குஷ்பு தப்பே செய்யலைனாலும், குஷ்புவை இந்த சட்டப்பிரச்சினை யிலிருந்து யாரு காப்பாத்தினார்கள்? கடவுளா? இல்லை நம்ம அரசியல் வாதிகளா? சோனியா காந்தியா இருக்குமோ ? அவர்தானே இத்தாலி நாட்டுக்காரர். அங்கேயெல்லாம் ப்ரிமேரிட்டல் செக்ஸ் எல்லாம் பெரிய விசயமே இல்லையே! ஆனால் கத்தோலிக்க மதம் கல்யாணததிற்கு உடலுறவு கொள்வதை சரினு சொல் லலையே னு சொல்றீங்களா? மதம் சொல்றதை யெல்லாம் யாரு ஃபாலோ பண்ணுவா?

அப்போ சோனியாதான் ப்ரிமேரிட்டல் செக்ஸ்லாம் ஒண்ணுமில்லைனு நம்புவதால் குஷ்புவை காப்பாத்தினாரா? ஒருவேளை அதற்கு நன்றிக்கடனா குஷ்பு காங்கிரஸில் சேருவாரா? அப்படித்தான் ஆகும் என்று பலரும் நினைத்ததை தப்பு என்று நிரூபிப்பதுபோல இன்று தி மு க வில் சேர்ந்துவிட்டார் குஷ்பு! என்னைப் பொறுத்தமட்டில் இது குஷ்புவின் “ஸ்மார்ட் மூவ்” டு சேவ் ஹெர் பட்!
பார்க்கலாம் தி மு க வின் உதவியுடன் இவர் எவ்வளவுதூரம் காண்டம் விற்பனையை அதிகமாக்கி எச் ஐ வி பரவுவதை தடுக்கிறார் என்று!

5 comments:

காலப் பறவை said...

:)))

laguda paandi said...

If we compare Kushbhoo's statement with your kadalai corner sereis, what she said is nothing.

I dont know why such controversy. If kushboo has to sell condomn then you may need to run a whole sale shop for conodmns.

வருண் said...

***காலப் பறவை said...
:)))

15 May 2010 11:40 PM***

வாங்க, காலப்பறவை :)

வருண் said...

***laguda paandi said...
If we compare Kushbhoo's statement with your kadalai corner sereis, what she said is nothing.

I dont know why such controversy. If kushboo has to sell condomn then you may need to run a whole sale shop for conodmns.

16 May 2010 1:47 AM***

வாங்க, லகுடாப் பாண்டி!!!

குஷ்பு வலியுறித்தியது, கற்பை இல்ல, காண்டத்தைனு உண்மையைச் சொன்னா நீங்க நம்ம கடலை கார்னர, காண்டக் கார்னராக்க சொல்றீங்க!

என்னவோ போங்க சார்! :)

கோவி.கண்ணன் said...

//
அப்போ சோனியாதான் ப்ரிமேரிட்டல் செக்ஸ்லாம் ஒண்ணுமில்லைனு நம்புவதால் குஷ்புவை காப்பாத்தினாரா?//

நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்லி அந்த ஆயாவை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்.

:)