Wednesday, May 19, 2010

ஷங்கரால் முடியும்! மணிரத்னத்தால் முடியாது!

எனக்கு இயக்குனர் மணிரதனத்தை பார்த்துட்டு ஒரே குழப்பம்! இயக்குனர்களுடைய கனவு அல்லது மோட்டிவேஷன் என்னனு தெரியலை! இவர்களுக்கு வேண்டியது புகழா ? இல்லை பணமா? இல்லை சுதந்திரமா? இல்லை எல்லாமேவா?

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய படங்களில் அல்மோஸ்ட் 90% இவருடைய சொந்தத் தயாரிப்பில்தான். மெட்ராஸ் டாக்கீஸ் இல்லைனா ஜி வி ஃபில்ம்ஸ்! ராவணனும் இதற்கு விதிவிலக்கல்ல! அதாவது இவருக்கு ஒரு இயக்குனர் அந்தஸ்து கிடைத்தவுடன்! அதற்கு முன்னால் பலர் படங்களை இயக்குனராக மட்டும் வேலை செய்து இயக்கியுள்ளார்.

ஒரு தயாரிப்பாளர் எதுக்குப் படம் எடுக்கிறாங்க? ரொம்ப சிம்ப்பிள்! வியாபாரம்! பணம் சம்பாரிக்க! அதைத்தான் எ வி எம் பண்ணுறாங்க, பாலாஜி பண்ணினார், கவிதாலயா மூலம் பாலசந்தர் பண்ணினார். இவர்களைப் பொருத்தவரையில் சினிமா ஒரு வியாபாரம். கலைத்தொண்டெல்லாம் கெடையாது! அதற்கு தேவையான நடிகர்களை, இயக்குனரை, இசையமப்பாளரை ஹயர்ப் பண்ணி பணத்தைப்போட்டு படத்தை எடுத்து லாபம் சம்பாரிக்கிறாங்க. படம் ஃப்ளாப் ஆனா நொடிச்சுப் போவதும் உண்டு.

பொதுவாக இயக்குனர்களில் ஒரு வகை என்னனா இயக்குனராக பணியாற்றி சம்பளத்தை வாங்கிக்கொண்டு புகழையும் பேரையும் அவார்ட்டையும் பெறுவது. எஸ் பி எம், கே எஸ் ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா, பி வாசு மற்றும் ஷங்கர் எல்லாம் இந்த வகைதான். இதில் இவர்கள் திறமையை நம்பி ஒரு ஆள் பணம் போடனும், இவர்களை படத்தை சீக்கிரம் முடிக்கச்சொல்லி ப்ரெஷெரை பண்ணுவாங்க. பெரிய நடிகர்னா, அவர்கள் ஐடியாவையும் கேட்டு அட்ஜஸ்ட் பண்ணிப்போகனும்.

ஆனால் மெளனராகத்தில் இருந்து மணிரத்னம் இயக்கியபடங்கள் (>95%) இவர் அல்லது இவர் அண்ணந்தான் தயாரிப்பாளர். இதனால் இவருக்கு பல நன்மைகள் இருந்தாலும், இது ஒண்ணும் பெரிய ஸ்மார்ட் மூவ் னு சொல்ல முடியாது! ஸ்மார்ட் மூவ் வாயிருந்தால் ஏன் ஜி வி இந்த நிலைமைக்கு ஆளானார்?

புகழ் வந்தவுடன், நம்ம மக்களுக்கு எல்லாமே அவங்க கண்ட்ரோல்ல இருக்கனும் என்கிற மிகப்பெரிய ஈகோ வந்துவிடுகிறது என்றுதான் சொல்லனும். அதாவது இவர்களால் அடுத்தவர்களுடன் இணைந்து வேலை செய்யமுடியாது. இன்னைக்கு கமலோட மணிரத்னம் சேர்ந்து வொர்க் பண்ன முடியுமா? இல்லை ரஜினியோட சேர்ந்து வொர்க்ப் பண்ண முடியுமா? இது ஒரு மாதிரியான வியாதி! இதனால் இவர்களால் தெளிவா ஒரு படத்தில் ஃபோக்கஸ் பண்ண முடியுது. இவர்களுக்கு ஒரு திருப்தி இருக்கு! இவர்களால் இவர்கள் திறமையை, க்ரியேட்டிவிட்டியை வெளிக்கொண்டுவர முடியுது!

தயாரிப்பாளர் மணிரத்னம் ஒரு வியாபாரி தான்! இயக்குனர் மணிரத்னம் ஒரு பெரிய ஈகோயிஸ்ட் தான்! இவரால் ஷங்கர் போல் ஒரு எ வி எம் படத்தையோ, அல்லது சன் டி வி படத்தையோ அல்லது எ ஆர் ரகுமான தவிர இன்னொரு இசையமப்பாளரைப் போட்டு வெற்றி பெரமுடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி!

கலைஞன் என்றாலே "அகம்பாவம்" தலைவிரித்தாடுவது என்னவோ தவிர்க்க முடியாதுதான். இளையராஜாவின் ஈகோ உலகத்துக்கே தெரியும்! கமலஹாசனின் ஈகோ சிறுகுழந்தைக்கு கூடத் தெரியும்! ஆனால் மணிரத்னத்தின் ஈகோ அவருக்கே தெரியுதோ என்னவோ! கவனிச்சுப் பார்த்தால் அவருடைய பல இயலாமைகள் விளங்கும்! ஆமாம் இயக்குனர் ஷங்கரால் ஒரு இயக்குனராக மட்டும் தன்னை அர்ப்பணிக்க முடியும்! அது மணிரதனத்தால் முடியாது! இல்லை இல்லை மணிரத்னம் பெரிய கலைத்தொண்டு செய்றவர் என்றெல்லாம் பேசினால் அது வெட்டிப் பேச்சு!

19 comments:

Kannan said...

வருண், என்ன சொல்ல வாரிங்க? யாராவது பெரிய தயாரிப்பாளர் கேட்டு, மணிரத்னம் முடியாதுன்னு சொன்னாரா? இல்ல நான் வேற யாருக்கும் படம் இயக்க மாட்டேன்னு சொன்னாரா? அவங்க அவங்க விருப்பத்துக்கு எத மாதிரி தான் வாழ முடியும். மேலும் தன்னுடைய தயாரிப்பில் படம் எடுக்க தில்லு வேணும். அது மணிரத்தினத்திடம் தான் இருக்கு. பொதுவா, யாரும் இந்தப் படத்தை யாரு தயாரிச்சு இருக்கான்னு பார்க்க மாட்டாங்க. இயக்குனர், நடிகர், தொழில் நுட்பம் மற்றும் இசைக்காக தான் படம் ஓடுகிறது.

asker said...

enna sollurenga neenga sanker than oru viyabari oora emathuravaru mari rathnam is best director.

வருண் said...

****Kannan said...

வருண், என்ன சொல்ல வாரிங்க? யாராவது பெரிய தயாரிப்பாளர் கேட்டு, மணிரத்னம் முடியாதுன்னு சொன்னாரா? இல்ல நான் வேற யாருக்கும் படம் இயக்க மாட்டேன்னு சொன்னாரா? ***

கண்ணன்! நான் அப்படியெல்லாம் எதுவும் சொல்லங்க!

***அவங்க அவங்க விருப்பத்துக்கு எத மாதிரி தான் வாழ முடியும். ***

அதைத்தான் நானு சொல்றேன்.

***மேலும் தன்னுடைய தயாரிப்பில் படம் எடுக்க தில்லு வேணும். அது மணிரத்தினத்திடம் தான் இருக்கு.***

அவருக்கு தில்லு இல்லைனு நான் சொன்னேனா?

***பொதுவா, யாரும் இந்தப் படத்தை யாரு தயாரிச்சு இருக்கான்னு பார்க்க மாட்டாங்க. இயக்குனர், நடிகர், தொழில் நுட்பம் மற்றும் இசைக்காக தான் படம் ஓடுகிறது.
19 May 2010 11:03 AM ****

உண்மைதான் ஆனால், எ வி எம், சத்யா மூவிஸ் படமெல்லாம் கொஞ்சம் பெரிய நிறுவனங்கள். அவங்க தயாரிப்பு நல்லாயிருக்குனு நினைப்பது உண்டுனு நெனைக்கிறேன் :)

வருண் said...

****asker said...enna sollurenga neenga sanker than oru viyabari oora emathuravaru mari rathnam is best director.

19 May 2010 11:12 AM***

சரிங்க, அவருதான் பெஸ்ட்டு! :)

laguda paandi said...

வருண், உங்க கருத்து சரியா? ஷங்கர் படம் தயாரிக்கவில்லையா? அவர் வியாபாரி இல்லையா?
என்ன விதமான சிந்தனை இது? சத்தியமா எனக்கு புரியல.
 ஷங்கர் இயக்கிய படத்தின் பட்ஜெட், அவர் தயாரித்த படத்தின் பட்ஜெட் ரெண்டையும் ஒப்பிட்டு பாருங்கள், உண்மை புரியும். 

கிரி said...

வருண் இன்னும் கொஞ்சம் தெளிவா கூறி இருக்கலாம்..

வருண் said...

***laguda paandi said...
வருண், உங்க கருத்து சரியா? ஷங்கர் படம் தயாரிக்கவில்லையா? அவர் வியாபாரி இல்லையா?
என்ன விதமான சிந்தனை இது? சத்தியமா எனக்கு புரியல.
ஷங்கர் இயக்கிய படத்தின் பட்ஜெட், அவர் தயாரித்த படத்தின் பட்ஜெட் ரெண்டையும் ஒப்பிட்டு பாருங்கள், உண்மை புரியும்.

20 May 2010 3:27 AM****

ஷங்கரிடம் உள்ள குறைகளை நான் மறுக்கவில்லைங்க. அதே சமயத்தில் மணிரத்னத்தை கடவுளாக சித்தரிக்கும் சிலருக்கு, அவரை இன்னொரு கோணத்தில் இப்படியும் பார்க்கலாம் என்கிறேன்.

வருண் said...

****கிரி said...
வருண் இன்னும் கொஞ்சம் தெளிவா கூறி இருக்கலாம்..

20 May 2010 5:58 AM ****

வாங்க, கிரி! :)

உண்மையிலேயே கொஞ்சம் குழம்பிப்போயிதான் இதை எழுதினேன். :))))

வருகைக்கும், பகிர்தலுக்கும் நன்றி, கிரி :)

Dhans... said...

Blog - ல எதாவது எழுதனுமேன்னு எழுதகூடாது.... ஷங்கர் -யும் மணிரத்னத்தையும் compare பண்றதே பெரிய தப்பு.

ஷங்கர் டைரக்ட் பண்ண படம் அத்தனையும் மெகா பட்ஜெட் படங்கள். முதல்வன் படத்தை தவிர எந்த படத்தையும் தானே தயாரித்து ரிஸ்க் எடுக்கவே இல்ல. ஷங்கரோட S Pictures எடுத்த எல்லா படமும் ரிஸ்க் இல்லாம ரஸ்க்கு சாப்பிட்டதுதான். ஏன் ஷங்கருக்கு ஹிந்தில முதல்வன் படத்தை தயாரிச்சு ஹிட்டாக்க முடியல? ஷங்கரோட அர்ப்பனிப்புனு எதவேச்சு சொல்றிங்கன்னு சுத்தமா புரியல... இவர மாதிரி பெரிய இயக்குனர்கள் எல்லாம் பெரிய சம்பளத்தோட ஏரியா ரைட்சும் வாங்குறது உங்களுக்கு தெரியும்ன்னு நினைக்குறேன். சன் டிவி எப்படியும் எந்திரன் படத்த விளம்பர படுத்தியே ஓட வச்சுடுவாங்க இது எல்லாருக்கும் தெரியும் அது கட்டாயமா ஷங்கருக்கும் தெரியும் அதான் அவருக்கும் வேணும்.

அதென்னது கலைத்தொண்டு!!! சினிமா துறைல யாரும் கலைதொண்டோ கலைசெவையோ செய்ய வரல. வர்றதே நாலு காசு பாக்க தானே. நான் சொல்றது மணியும் சேர்த்துதான்.

G.V மணிரத்னம் படத்த மட்டும் எடுக்கல. தமிழன், சொக்கத்தங்கம், மே மாதம், இந்திரா லாம் பிற இயக்குனர்களுடன் அவர் எடுத்த வெற்றி திரைப்படங்கள்.

தன்னோட direction மேல நம்பிக்கையும், ஒரு படத்த தானே தயாரிக்கும் அளவுக்கு பணமும் இருக்றப்ப ஏன் இன்னொருத்தர் production ல படம் எடுக்கணும்.

நீங்க சொன்ன எந்த இயக்குனரும் தோல்வி படங்களுக்கு எந்த பொறுப்பும் ஏற்பது இல்ல. படம் பப்படம் ஆகும் பட்சத்தில் தயாரிப்பாளரின் கதி அதோ கதி!!!. இருவர் ன்னு ஒரு படம். மெட்ராஸ் டாக்கீஸ் முதல் படம். 1997 Flimfare சிறந்த படம் ஆனா அது மணிரத்னத்தோட பிளாப் படங்கள்ல ஒன்னு. ஒரு பெரிய வியாபாரின்னா அந்த படத்த மணிரத்னம் ஏன் எடுக்கணும் ??

A R ரஹ்மான உங்களுக்கு காட்டுனதே மணிரத்னம் தான். அப்பறம் ஏன் அவரு இன்னொரு இசைஅமைப்பாளர் கொண்டுவரணும். இளையராஜாவோட சேர்ந்து பல ஹிட் கொடுத்ததையும் மறக்க கூடாது.

உங்க கருத்தை மறுத்து சொன்ன அது வெட்டிப் பேச்சு. மறுபடியும் நான் உங்களுக்கு சொல்றது... Blog - ல எதாவது எழுதனுமேன்னு எழுதகூடாது....

வருண் said...

***Dhans... said...
Blog - ல எதாவது எழுதனுமேன்னு எழுதகூடாது.... ஷங்கர் -யும் மணிரத்னத்தையும் compare பண்றதே பெரிய தப்பு.****

வாங்க தன்ஸ்!

என்னுடைய கண்ணோட்டாததில் வலைதள சுதந்திரம்தான் இதுபோல் வித்தியாசமான கோணத்தை பகிர்வது உதவுதுங்க. இதெப்படி தப்பாகும்? :)

***ஷங்கர் டைரக்ட் பண்ண படம் அத்தனையும் மெகா பட்ஜெட் படங்கள். முதல்வன் படத்தை தவிர எந்த படத்தையும் தானே தயாரித்து ரிஸ்க் எடுக்கவே இல்ல. ***

மறுக்கவில்லை!

***ஷங்கரோட S Pictures எடுத்த எல்லா படமும் ரிஸ்க் இல்லாம ரஸ்க்கு சாப்பிட்டதுதான்.***

ஒரு வகையில் உண்மை ஆனால் இன்னொரு கண்ணோட்டத்தில் சில நல்ல இளம் இயக்குனர்களை உருவாக்கி இருக்கார் இல்லையா? இன்னொருவருடைய திறமையில் நம்பிக்கை வைத்து இருக்கார்னுகூட அதை சொல்லலாம்.

** ஏன் ஷங்கருக்கு ஹிந்தில முதல்வன் படத்தை தயாரிச்சு ஹிட்டாக்க முடியல?***

அப்படிப்பார்தால், தில் சே யும், யுவாவும் அதைவிட பெரிய ஃப்ளாப்.
ஹிந்தில ஷங்கர் படம் விழுந்தஹ்டு நல்லதாப்போச்சு. தமிழ்லயே அவர் குப்பைகூட்ட உதவியது.

இல்லைனா இன்னைக்கு சூப்பர் ஸ்டாரின் எந்திரனுக்கு பதிலா ஹிந்தியில் ரோபோ உருவாகியிருக்கும். ஹு கேர்ஸ் எபவ்ட் ஹிந்தி ஃபில்ம்ஸ்? நாட் மி :)

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

***அதென்னது கலைத்தொண்டு!!! சினிமா துறைல யாரும் கலைதொண்டோ கலைசெவையோ செய்ய வரல. வர்றதே நாலு காசு பாக்க தானே. நான் சொல்றது மணியும் சேர்த்துதான்.***

நல்லா சொன்னீங்க!!!

***G.V மணிரத்னம் படத்த மட்டும் எடுக்கல. தமிழன், சொக்கத்தங்கம், மே மாதம், இந்திரா லாம் பிற இயக்குனர்களுடன் அவர் எடுத்த வெற்றி திரைப்படங்கள்.***

இல்லங்க நாயகன், தளபதி எல்லாம் அவர் படம்தான். மணியோட விக்கில பாருங்க.

***தன்னோட direction மேல நம்பிக்கையும், ஒரு படத்த தானே தயாரிக்கும் அளவுக்கு பணமும் இருக்றப்ப ஏன் இன்னொருத்தர் production ல படம் எடுக்கணும்.***

இது ஒரு கோணம்!

***நீங்க சொன்ன எந்த இயக்குனரும் தோல்வி படங்களுக்கு எந்த பொறுப்பும் ஏற்பது இல்ல. படம் பப்படம் ஆகும் பட்சத்தில் தயாரிப்பாளரின் கதி அதோ கதி!!!.***

இல்லங்க, they go out of business and their career ends. அதைவிட என்ன பெரிய தண்டனை வேணும்?

*** இருவர் ன்னு ஒரு படம். மெட்ராஸ் டாக்கீஸ் முதல் படம். 1997 Flimfare சிறந்த படம் ஆனா அது மணிரத்னத்தோட பிளாப் படங்கள்ல ஒன்னு. ஒரு பெரிய வியாபாரின்னா அந்த படத்த மணிரத்னம் ஏன் எடுக்கணும் ??***

ஃப்ளாப் ஆகும்னு அவருக்குத் தெரியாது. அதான்.

***உங்க கருத்தை மறுத்து சொன்ன அது வெட்டிப் பேச்சு. மறுபடியும் நான் உங்களுக்கு சொல்றது... Blog - ல எதாவது எழுதனுமேன்னு எழுதகூடாது....***

இல்லையே நான் அபப்டி சொல்லலைங்க,

நான் சொன்னது..

மணிரத்னம் பெரிய கலைத்தொண்டு செய்றவர் என்றெல்லாம் பேசினால் அது வெட்டிப் பேச்சு!

bhuvanendar said...

yenga "mani" producer ra irukarathu avaroda yentha sinthanaiyum commercial la vennum nu sollura yentha poducer kitta goondu killiya sgida kudathunu than.... avar producer ra iruntha avaroda point ta yarukagavum matha vendam ithu padaipaliyin suthanthiratha kaakum...i cannot accept your point at all....

வருண் said...

bhuvanendar said...
***yenga "mani" producer ra irukarathu avaroda yentha sinthanaiyum commercial la vennum nu sollura yentha poducer kitta goondu killiya sgida kudathunu than.... avar producer ra iruntha avaroda point ta yarukagavum matha vendam ithu padaipaliyin suthanthiratha kaakum...i cannot accept your point at all....

21 May 2010 2:43 AM***

That is fine with me. That is why you are who you are and I am, who I am. Or not? :)

ராம்ஜி_யாஹூ said...

on some aspects I agree with you, Initial mani ratnam films were really good like idaya koil, mouna ragam, idayathai tirudathe, agni natchtram, nayagan,

after Roja his focus was more on hindi market and that leads to his failures. he has not been success nowadays.

வருண் said...

*** ராம்ஜி_யாஹூ said...
on some aspects I agree with you, Initial mani ratnam films were really good like idaya koil, mouna ragam, idayathai tirudathe, agni natchtram, nayagan,

after Roja his focus was more on hindi market and that leads to his failures. he has not been success nowadays.

21 May 2010 9:30 AM***

தளபதிவரை வளர்ந்துகொண்டேதான் போனார். ரோஜால இருந்து இந்திக்கு போயி சாதிக்கப் போனாரு. தமிழை ஒரு மாதிரியா கழட்டிவிட்டுட்டுப் போனாரு, ஹிந்திலயும் ஒண்ணும் பெருசா சாதிக்கலை. 75% ஃப்ளாப்தான் கொடுத்தார்!

Sabarinathan said...

Varun - Your statment is wrong. He is the only director, played in different role, For eg. Great love story (Mouna Raagam), For family and baby movie (Anjali), Roja, Kannthil Muthamital, Guru, Bombay, Nayagaan etc. Dont compare any one with Manirathnam.

வருண் said...

Sabarinathan said...
***Varun - Your statment is wrong.***

:-)))

***He is the only director, played in different role, For eg. Great love story (Mouna Raagam), For family and baby movie (Anjali), Roja, Kannthil Muthamital, Guru, Bombay, Nayagaan etc.***

He is a good director, I agree!

*** Dont compare any one with Manirathnam.

22 May 2010 8:55 PM***

Well, we can certainly compare with other commercial directors if not with KB-like quality directors. Bcos, MR has earned an MBA degree and a commercial director and businessman as well if you carefully look at his "activities" from another view.

Anyway, thanks for sharing your thoughts :)

pon said...

***ஷங்கரோட S Pictures எடுத்த எல்லா படமும் ரிஸ்க் இல்லாம ரஸ்க்கு சாப்பிட்டதுதான்.***

ஒரு வகையில் உண்மை ஆனால் இன்னொரு கண்ணோட்டத்தில் சில நல்ல இளம் இயக்குனர்களை உருவாக்கி இருக்கார் இல்லையா? இன்னொருவருடைய திறமையில் நம்பிக்கை வைத்து இருக்கார்னுகூட அதை சொல்லலாம்.
Apati yendral mani kudathan new directors a arimugam seithu vtchu irrukar