Wednesday, May 19, 2010

ஐயா, தயவு செய்து என் பொண்டாட்டியை நீங்களே..

இன்னிக்கு மதர்ஸ் டே, அட்லீஸ்ட் விஷ் கூட பண்ணமாட்டியா நீ?

அப்படியா? சாரிமா, மறந்துப்போச்சு!

இதெல்லாம் கரெக்ட்டா மறந்துடு! இப்படி ராத்திரியானா தொந்தரவு பண்ணறியே, இதை மட்டும் மறக்கமாட்டியா?

இதை மறப்போமா? நீ வேணா தூங்கு, நான் பார்த்துக்கறேன்

எருமைமாடு மாதிரி என் மேலே வந்து விழறியே, எப்படி தூங்கறதாம்? பகலெல்லாம் உன் பையன் தொந்தரவு, ராத்திரியானா நீ!

உன்னை யாரு என்னை கல்யாணம் பண்ண சொன்னது? வேற நல்லவனா பார்த்து பண்ணியிருக்கலாம் இல்லை?

ஹலோ, எனக்கு எவ்வளவு மார்க்கெட் வேல்யூ இருந்தது தெரியுமா? எத்தனை பேரு என் பின்னால சுத்தியிருக்காங்க தெரியுமா? இப்போ ஏதோ இப்படி இருக்கேன்!(இரவில் மெல்லிய வெளிச்சத்திலும் அவன் முகம் கருத்தது நன்றாக தெரிந்தது. எனக்கு ரொம்ப சிரிப்பு! இத்தனை சீக்கிரம் ஒருவனை பொறாமை பட வைக்க முடியுமா?)

எத்தனை பேரு சுத்தியிருக்காங்க? நீ எத்தனை பேரை லவ் பண்ணி இருக்கே? நம்ம கல்யாணத்துக்கு கொஞ்சம் முன்னால கூட ஏதோ இருந்ததாக சொன்னியே, அதை பத்தி கொஞ்சம் சொல்லேன்!

ஏன் உனக்கு சொல்லனும்? பொறாமையா?

பொறாமையா, சே சே அதெல்லாம் கிடையாது! உன்னை முதலில் பார்க்கும் போதே நினைச்சேன்! இவ்வளவு அழகா இருக்காளே கூட நல்ல வேலையில் வேற இருக்கா- நிறைய பேரு இவ பின்னால சுத்தியிருப்பானுங்களேனு நினைச்சேன்(குரலில் சற்று முன் இருந்த உற்சாகம் நன்றாக வடிந்திருந்தது)

சரி சொல்றேன், கேட்டுட்டு அப்புறம் இதை வைச்சு டார்ச்சர் பண்ணக்கூடாது!

சத்தியமா பண்ணமாட்டேன்! சீக்கிரம் சொல்லுடி செல்லம்(இதற்கு மேல் எழுதினால் அடுத்தவர் ப்ரைவசி கெடும் என்பதால் கதையை சென்சார் செய்கிறேன்)

"................ அப்புறம்.........."

சீக்கிரம் முடிவை சொல்லு, முடிவு இருக்கு தானே?

(அவன் கண்களில் மிளிரும் கவலை+பொறாமை+தவிப்பை ரொம்ப ரசித்தேன்)கொஞ்சம் பொறுடா, அவசரப்படுத்தாதே! "...................."

பச் அவ்வளவு தானா? நான் ஏதோனு பயந்துட்டேன்!

ஏதோனா? என்ன நினைச்சே?

ரியலாவே செக்ஸ் இருக்குமோனு பயந்தேன்!

அப்படி ரியலா இருந்தா என்ன, என்னை டிவோர்ஸ் பண்ணிடுவியா?

அடிப்பாவி! உன் வாயை மவுத்வாஷ் போட்டு கழுவு!

அப்புறம் என்னவாம்?

ஒன்னும் இல்லை, வருத்தப்பட்டிருப்பேன்! என் ஈகோ டேமேஜ் ஆகியிருக்கும், வேறென்ன! என் பொண்டாட்டிக்கு நான் தான் முதல் அனுபவமா இருக்கனும்னு நினைக்கிறது தானே காமன் இண்டியன் மெண்டாலிட்டி, நான் மட்டும் எக்செப்ஷனா என்ன?

அப்படி நினைக்கிறது சரியா?

தப்புதான்! இருந்தாலும் நான் ரொம்ப லக்கி!

இப்போ நான் அவரோடு பேசினால் உனக்கு ஓகேவா?

சாதாரணமா ப்ரெண்ட்ஸ் மாதிரினா ஓகே!

என்ன இவ்வளவு தாராளம்?

எல்லாம் ஒரு சின்ன லாஜிக் தான்! நீ ரொம்ப ஸ்லிம்மா, நல்ல வேலையில் இருக்கும் போதே வேண்டாம்னு சொன்னவங்க, இப்போ நீ முப்பது பவுண்டு ஏறி, ஒரு குழந்தை பெத்து, பார்ட் டைம்மா வேலை பார்க்கறே, he is definitely not going to go for you now!

ரொம்ப கொழுப்புடா உனக்கு! ஒருவேளை உன் லாஜிக் தப்பாயிடுச்சுனா?

தப்பாயிடுச்சுனா என்ன? "ஐயா தயவு செய்து என் பொண்டாட்டியை நீங்களே வச்சுக்கோங்க" னு சொல்லிட்டு நான் ஊர்ல இருந்து ஏதாவது 18 வயசு பொண்ணா பார்த்து பண்ணிப்பேன்!

முதல்ல என் மேலே இருந்து கையை எடு, தள்ளிப்படு! என்ன ஹஸ்பண்ட் நீ?

கண்ணுக்குட்டிக்கு கோபமா? சரி கண்ணை மூடு!

எதுக்கு? அன்னிக்கு மாதிரியா? அதுக்கெல்லாம் இப்போ எனக்கு மூட் இல்லை. ரொம்ப இன்சென்சிடிவ் நீ!

நீ நினைக்கிற மாதிரி இல்லை, ப்ளீஸ் கொஞ்சம் கண்ணை மூடேன்!கையை நீட்டு

என்ன இது?

கண்ணை திறந்து பார் இப்போ! ஹாப்பி மதர்ஸ் டே ஸ்வீட் ஹார்ட்!

ஹேய் ரொம்ப அழகாயிருக்கு! மறக்கலையா நீ?

லூசு, இதைப்போய் மறப்பேனா?

எவ்வளவு இது?

அதெல்லாம் உனக்கெதுக்கு? டாக்ஸ் ரிட்டன்ஸ் வந்தது இல்லையா? அதான்!

உனக்கும் ஏதாவது வாங்க வேண்டியது தானே?

நான் என்ன பொண்ணா நகையெல்லாம் போட? எனக்கு வேண்டியதெல்லாம் தான் உன் கிட்ட இருக்கே, தினமும் கொஞ்சம் கொஞ்சமா வாங்கிக்கறேன்!

(சிரிப்பு) ரொம்ப தேங்க்ஸ்டா!

எதுக்கு?

வேறெத்துக்கு, கிப்ட்டுக்கு தான்! அடிவாங்கப்போறே நீ!

3 comments:

Chitra said...

(அவன் கண்களில் மிளிரும் கவலை+பொறாமை+தவிப்பை ரொம்ப ரசித்தேன்)கொஞ்சம் பொறுடா, அவசரப்படுத்தாதே! "....................".... ;-)

வருண் said...

****ஹலோ, எனக்கு எவ்வளவு மார்க்கெட் வேல்யூ இருந்தது தெரியுமா? எத்தனை பேரு என் பின்னால சுத்தியிருக்காங்க தெரியுமா?***

:-))))))

லதானந்த் said...

கயல்விழி!
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பெயரில் இடுகையைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.