Monday, November 22, 2010

தீபாவளி படங்களின் தலைஎழுத்து! “வ” ப்ளாப்!


தீபாவளிப் படங்களின் தலை எழுத்து (வெற்றியா தோல்வியா?) ஒருவழியாக தெரிந்துவிட்டது!

* தனுஷின் உத்தம புத்திரன் ஓரளவுக்கு வெற்றிப்படமாகி விட்டது. விமர்சகர்கள் பார்வையில் மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் இந்தப்படம் ஒரே மாதிரி வெற்றி என்கிற முடிவைத்தான் தந்திருக்கு! கவுண்டர் கம்யுனிட்டி கோவை ஏரியாவில் அவர்களை தாக்கியதற்காக இதை எதிர்த்தாலும், தனுஷ் மன்னிப்புக் கேட்டு சமாளித்துவிட்டதாகத் தோனுது.

* பிரபு சாலமனின் மைனா படம் முதலில் க்ளிக் ஆகாவிட்டாலும், மக்கள் இந்தப்படத்தைப் பற்றி நல்லவிதமாக வெளியில் சொன்னபடியாலும், நல்லவிதமாக விளம்பரம் செய்ததாலும் படம் கொஞ்சம் ஸ்லோவாக பிக் அப் கி வெற்றியடைந்துவிட்டது.

* புஷ்கர்- காயத்ரியின் “வ” குவாட்டர் கட்டிங்க்கு வரிவிலக்கும் கிடைக்கவில்லை! விமர்சகர்களையும் இந்தப்படம் ஆகவரவில்லை! பாக்ஸ் ஆபிஸிலும் படம் மண்ணைக்கவ்வியது!

தீபாவளிக்கு 25 நாட்கள் முன்பே, 2000 பிரதிகள் ரிலீஸ் பண்ணப்பட்ட, சூப்பர் ஸ்டாரின் எந்திரன் 50 நாட்களை கடந்த பிறகும், இன்னும் நல்லாவே போய்க்கொண்டிருக்கிறது. முக்கியமாக, தமிழ்நாட்டைவிட, மலேசியா, சிங்கப்பூர், கேரளா, ஆந்திரா, பெங்ளூர் போன்ற டெரிட்டோரிகளில் படம் இன்னும் ஸ்ட்ராங்கா போய்க்கொண்டு இருக்கிறது!

10 comments:

ராமலக்ஷ்மி said...

//பெங்ளூர் போன்ற டெரிட்டோரிகளில்//

உண்மைதான். தீபாவளி வார இறுதியில் முழுதாக நிறைந்திருந்த ஐநாக்ஸ் அரங்கில்தான் பார்த்தேன்:)!

வருண் said...

வாங்க ராமலக்ஷ்மி! :)

பெங்களூர் ஐனாக்ஸில் உங்க எக்ஸ்பீரியன்ஸ், இந்த உண்மையை ஊர்ஜிதம் செய்யுதுங்க, நன்றி :)

Philosophy Prabhakaran said...

ரொம்ப லேட்டா சொல்றீங்களே... ரிசல்ட்டுன்னா கடைசில தான் சொல்லுவாங்களோ...

Chitra said...

Enthiran Rocks!!!

R.Gopi said...

எந்திரன் - மக்களின் மனம் கவர்ந்த மந்திரன்.....

பாலா said...

எங்கள் ஊரிலும் இதே நிலைதான். மற்ற திரை அரங்குகள் காற்றாட எந்திரன் மட்டும் நிரம்பி வழிந்தது.

அப்புறம் நண்பரே...தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன். மறுக்காமல் வந்து எழுதுங்கள்.

http://balapakkangal.blogspot.com/2010/11/blog-post_24.html

வருண் said...

***philosophy prabhakaran said...

ரொம்ப லேட்டா சொல்றீங்களே... ரிசல்ட்டுன்னா கடைசில தான் சொல்லுவாங்களோ...

23 November 2010 3:56 PM***

ஆமாங்க அவசரப்பட்டுத் தவறான செய்தியை கொடுக்க வேண்டாமேனு ஒரு நல்லெண்ணம்தான் :)

வருண் said...

**Chitra said...

Enthiran Rocks!!!

23 November 2010 7:02 PM***

வாங்க சித்ரா! :)

வருண் said...

**R.Gopi said...

எந்திரன் - மக்களின் மனம் கவர்ந்த மந்திரன்.....

23 November 2010 10:20 PM**

வாங்க கோபி! உண்மையத்தான் சொல்லியிருக்கீங்க! :)))

வருண் said...

***பாலா said...

எங்கள் ஊரிலும் இதே நிலைதான். மற்ற திரை அரங்குகள் காற்றாட எந்திரன் மட்டும் நிரம்பி வழிந்தது.

அப்புறம் நண்பரே...தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன். மறுக்காமல் வந்து எழுதுங்கள்.

http://balapakkangal.blogspot.com/2010/11/blog-post_24.html***

வந்து என்னனு பார்க்கிறேன், நண்பர் பாலா! :) அழைப்புக்கு ரொம்ப நன்றிங்க :)