Wednesday, November 10, 2010

கமலஹாசனும் படுக்கை அறையும்!

கமலஹாசன் சொன்னது: ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகளைப் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விசயம். அதை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது,ஆபாசமானது, அர்த்தமற்றது.

நிச்சயம் இவர் ஒரு பகுத்தறிவுவாதி என்றால் இங்கே ஆத்திக உணர்வுகள் = நாத்திக கொள்கைகள், உணர்வுகள். அதாவது, கமல், "நாத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகளைப் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விசயம். அதை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது,ஆபாசமானது, அர்த்தமற்றது." என்பதையும்தான் இங்கே சேர்த்து சொல்கிறார்.

அப்போ நாத்திக உணர்வும் படுக்கை அறை உணர்வுகள்தான்னு இவர் நினைத்தால். தந்தை பெரியார் ஏன் அவர் படுக்கை அறை உணர்வுகளை உலகுக்கு சொன்னார்?

* கடவுளை கற்பித்தவன் முட்டாள்!

* பரப்புகிறவன் அயோக்கியன்!

* வணங்குகிறவன் காட்டுமிராண்டி!

தந்தை பெரியார் அவர் எண்ணங்களை, அவர் நம்பிக்கையை சத்தமாக வெளியே சொல்ல வில்லையா?

கமலஹாசன், அடுத்த முறை என்ன எழவைனாலும் "படுக்கை அறை" மேட்டர்னு பேசுவதுக்கு முன்னால் கொஞ்சம் இதையெல்லாம் யோசிக்கனும். எதுக்கெடுத்தாலும் இது படுக்கை அறை சமாச்சாரம் போலனு ஏதாவது சொல்லக்கூடாது!

ஆத்திக கொள்கைகள் ஒருவருடைய தனிப்பட்ட மேட்டர்னா, நாத்திக கொள்கைகளும்தான் ஒருவர் தனிப்பட்ட மேட்டர் என்பது இவருக்கு புரிந்து இருந்தால், இவர் பல பெரியவர்களை தான் அறியாமலே அவமானப் படுத்தியுள்ளார்னுதான் சொல்லனும்.

கமலு சொல்லிப்புட்டாருனு, பண்டாரங்கள்ல இருந்து ஆண்மீகவாதினு சொல்லிக்கிட்டு திரியிறவர் பலர் இதை ரசிக்கலாம். ஆனால், உண்மையான பகுத்தறிவு வாதி, ஆத்திகன் உணர்வுகளையும், நாத்திகன் உணர்வுகளையும் மதிக்கத் தெரிந்தவன். அவர்கள் உணர்வுகளை புரிந்துகொண்டவந்தான்!

மேலும் நாத்திகர்களும் கடவுளும்னு (இங்கே க்ளிக் செய்யவும்) நானும் ஏதோ பதிவுபோட்டு இருக்கேன். இது என் படுக்கை அறை மேட்டர்னு நான் நினைக்கவில்லை! நினைத்து இருந்தால் அதை எப்படி உலகுக்கு சொல்லியிருப்பேன்?

12 comments:

Chitra said...

:-)

Karikal@ன் - கரிகாலன் said...

சரிதான்லே

ராம்ஜி_யாஹூ said...

?

ராம்ஜி_யாஹூ said...

?

நசரேயன் said...

சரி மாப்பு

வருண் said...

****Chitra said...

:-)

10 November 2010 11:28 AM***

வாங்க, சித்ரா :)

வருண் said...

***Blogger Karikal@ன் - கரிகாலன் said...

சரிதான்லே

10 November 2010 1:38 PM***

வாங்க, கரிகாலன். தங்கள் கருத்துக்கு நன்றிங்க! :)

வருண் said...

***Blogger ராம்ஜி_யாஹூ said...

?

10 November 2010 5:08 PM
-----------
Blogger ராம்ஜி_யாஹூ said...

?

10 November 2010 5:08 PM***

கேள்விக்குமேலே கேள்வியா இருக்கு.:)))

"செக்ஸ்"க்கும் இதுக்கும் முடிச்சுப்போடுறது கமலாலதான் முடியும். அதுக்கும் தலையை ஆட்டுரது உங்களைப்போல ஒரு சிலராலதான் முடியும்! :)

வருண் said...

***நசரேயன் said...

சரி மாப்பு

10 November 2010 5:21 PM***

நீங்க ரொம்ப "ஷை" டைப் மாதிரி தெரிந்தது. அதைப்பத்தி கேக்கலாம்னு நெனச்சேன். இப்போ உங்க பின்னூட்டம் என்னை யோசிக்க வைச்சுருச்சு! ஒருவேளை நீங்க ஷை இல்லையோ னு.. :)

பாலா said...

நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க. செக்ஸ் என்பது பப்ளிக்கா இருக்கணும்னு நினைக்கிறவர் அவர். ஆகவே இதையும் பப்ளிக்கா பண்ணணும்னு கூட சொல்லி இருக்கலாமே?

இப்படிக்கு மாத்தி யோசிப்போர் சங்கம்.

வருண் said...

***பாலா said...

நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க. செக்ஸ் என்பது பப்ளிக்கா இருக்கணும்னு நினைக்கிறவர் அவர். ***

சினிமாவில் எக்ஸ்ப்லிஸிட் கிஸ்ஸிங் சீனில் தப்பு இல்லை! நான் இன் பார்ட்னெரை கிஸ் பண்ணுவதுபோல்தான் சினிமாவில் என் "காதலி"யை கிஸ் பண்ணூறேன் னு நியாயப் படுத்தினார். ஆனால், அது நாலு சுவர்களுக்குள் நடப்பதுனு நினைக்கிறேன். :)

சில கலையுலக மேதாவிகள் அதை ரசிச்சாலும் அதை அவரு நிறுத்தக் காரணம், மக்கள் அவர் படத்தை இந்துபோல் சீன்களுக்காக புறக்கணிக்க ஆரம்பிச்சுட்டாங்க! ஃபேமிலி ஆடியண்ஸ் அவர் படத்துக்கு குறைய ஆரம்பித்தது. வேற வழியில்லாமல் கொறைச்சுக்கிட்டார் (பெரிய பட்ஜெட் படங்களில்)

***ஆகவே இதையும் பப்ளிக்கா பண்ணணும்னு கூட சொல்லி இருக்கலாமே?

இப்படிக்கு மாத்தி யோசிப்போர் சங்கம்.
11 November 2010 7:21 AM ***

இல்லங்க, அவர் அப்படி சொல்லல.

உண்மையிலே அவர் இண்டெர்வியூவை நான் ரசித்தேன். ரொம்ப நல்லாத்தான் போச்சு. இந்த இடத்தில்தான் திடீர்னு எதையோ தேவையில்லாமல் சொல்லிவிட்டார் னு தோனுது. Yes, religion including atheism is personal. But you cant correlate that with sex and privacy here.

ஏன் இவரே, கல்யாணம் என்பது தேவையில்லை, திருமணங்கள் உடைகின்றனனு பொதுப்படையா விமர்சித்தார். இவர் சொல்லியிருக்க வேண்டியது, இவர் கலயாணத்தை மட்டும்தான். பலரின் கல்யாணம் உடையாமல் ஸ்ட்ராங்காதான் போயிக்கிட்டு இருக்கு. ஆனால் பொதுவாத்தான் சொன்னார், இப்போ என்னவோ இவர் இதுபோல பேசுறது இல்லைங்கிற மாதிரி சொல்றார்.

R.Gopi said...

மிக சரி....

ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகளைப் போல கருத வேண்டும் என்று அவர் சொன்னால், நீங்கள் சொன்னது போல் நாத்திக உணர்வையும் அப்படியே கருத வேண்டும்.... இப்படி வெளியே வந்து புலம்பக்கூடாது...

வாய் இருக்கிறதே என்று எதையும் பேசினால் என்ன தான் செய்வது?