Friday, July 15, 2011

பாலா என்கிற மனநோயாளி! மூன்றாவது உலகம்..

* ஏதாவது ஒரு விசயத்தில் என்னைக்குமே நீ மாறாமல் இருக்கியா? சொல்லுனு கேட்டால், "எனக்கு குரூர காட்சிகளை ரசித்து எடுக்கும் மனநோயாளி பாலாவின் படங்கள் எப்போவுமே பிடிக்காது"னு சொல்லுவேன். பாலாவின் காமெடிப் படம் "அவன் - இவன்" கூட சுத்தமாப் பிடிக்கலை. இந்தப்படத்தில் பாலா எடுத்திருக்க காமெடி எதுவும் இயற்கையாக இல்லை. எதோ வலுக்கட்டாயமாக எனக்குக் காமடிப்படம் எடுக்கத்தெரியும், எல்லாரும் வந்து சிரிங்கனு எழவைக்கூட்டியிருக்காரு! பாலா காட்டுற சிரிப்பு"கிச்சுக் கிச்சு"மூட்டுவதுபோல எரிச்சலாத்தான் இருக்கு! ஒரு சில விசயம் ஒரு சிலராலதான் முடியும்! பாலா, காமெடியை விட்டு ஒதுங்கி இருப்பது எல்லாருக்கும் நல்லது. இந்தக் "காமெடி"ப் படத்திலும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவதுபோல "மிருகவெறி" பிடித்த ஒரு சில பாத்திரங்களை புகுத்தி கொடூரமான க்ளைமேக்ஸ் கொண்டுவந்து திருப்தி அடைந்து இருக்கிறார் இந்த மனநோயாளி! Yeah, Bala fucked up in his attempt to make a comedy film too! இந்தப்படம் இன்னும் பார்க்கலைனா "அவன் இவன்" நடக்கிற தியேட்டர் பக்கம் போகாதீங்கப்பா!

இந்தியா இன்னும் மூன்றாவது உலகம்தான்!

* இந்தியா முன்னேறலைனு யார் சார் சொன்னா? கார், டி வி, இண்டெர்னெட் னு மட்டும் இல்லாமல் இன்று பெண்களுக்கும் நெறையவே சுதந்திரம் கெடச்சிருக்கு! ஹாண்டா, டொயோட்டா, பி எம் டபுள்யு, பெண்ஸ்னு பல லட்சக்கணக்கான கார்கள் இன்னைக்கு புதுப்பணக்காரர்களால் வாங்கப்பட்டு மட்டமான் ரோடுகளில் ஓடிக்கிட்டு இருக்கு!

அப்படியா? அப்போ ஏன்ப்பா இன்னும் நம்மள வெள்ளைக்காரங்க "third world country" னு சொல்லி அசிங்கப் படுத்துறாங்க? இன்னும் நம்ம மக்கள்ல பாதிப்பேருக்கு தலையில் பேன் இருக்கு! இன்னும் நம்ம ரோட்டில் காறித் துப்புவதை நிறுத்தலை! சிறுவர் சிறிமியர் பல கோடிப்பேருக்கு நாடாப் புழு வயித்தில் இருக்கு! பிச்சைக்காரங்களுக்கு இன்னும் பஞ்சமில்லை! புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கிறது பிறகு அதை சொந்தமாக்கிக்கிறது! இதுமாதிரி ஈனத்தனமா வாழ்றவங்க "ஏழைகள்"னு சொல்லிக்கிட்டு நாட்டை நாறடிக்கிறார்கள்! ஓட்டுக்காக இதுபோல் சேரிகளை அரசியல்வாதிகள் கண்டுக்கிறதில்லைனாலும் வெள்ளைக்காரன் கண்டுக்கிட்டு நம்மள "third world country" னு சொல்றாங்களாம். க்ரீமி லேயர்ல உள்ள சில விழுக்காடுகள் கார் பங்களானு வாழ்ந்தாலும் ஏழைகள் இன்னும் குறையவில்லை! "சுகாதாரம், சுத்தம்" எல்லாம் எந்த வகையிலும் கூடவில்லையாம்! ஆத்தா ஆட்சியிலும் பவர்கட் இருக்கத்தான் செய்யுது. இப்போ முன்பைவிட மோசம்னு கூட சொல்றாங்க! ஆத்தா ஏதாவது புதுசா நியூக்லியர் ப்ளாண்ட் ஆரம்பிச்சாத்தான் எதுவும் செய்ய முடியும்!

மற்றபடி பெண்கள் சுதந்திரம்? படிச்சவங்க படிக்காதவங்க எல்லாரும் வேலைக்குப் போகிறாங்க! கல்யாணம் ஆகாதவங்க காதலர்களுடனும், கல்யாணம் ஆனவர்கள் "பாய் ஃப்ரண்டு" களுடனும் செல் ஃபோன், இண்டெர்னெட் அது இதுனு உறவு வைத்துக்கொள்வது, தேவைனா "அடுத்த ஸ்டெப்" போவதெல்லாம் இன்னைக்கு நம்ம ஊரில் ரொம்ப சாதாரணமாயிடுச்சு. இது நிச்சயம் முன்னேற்றம்தான்! இன்னும் சில ஆண்டுகளில் கலாச்சாரக்காவலர்கள் எல்லாம் தலையில் துண்டைபோட்டுக்கிட்டு ஒண்ணாக்கூடி ஒப்பாரி வைக்க வேண்டியதுதான் போங்க! சுனாமி போல மக்கள் எல்லாம் மாறிக்கொண்டு "முன்னேறிக்கொண்டு" போகும்போது கலாச்சாரக்காவலர்கள் எல்லாம் ஒரு மயிரையும் புடுங்கமுடியாது!

சித்தாள் வேலை செய்றவங்க மொதல்கொண்டு தினக்கூலிக்கு வேலை செய்றவங்க, மூட்டை தூக்குறவங்க (லோட்மேன்) வாங்கிற கூலி அந்தக்காலத்தைவிட பலமடங்கு அதிகமாயிடுச்சு. அவங்க வாழ்க்கைத்தரம் உயர்ந்தததோ இல்லையோ, உழைப்பவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஓரளவு ஊதியம் கெடைக்குது என்பது ரொம்ப நல்ல விசயம்தான்!

இன்னொரு விசயம் சுத்தம் சுகாதாரம் இருக்கோ இல்லையோ எப்படினு தெரியலை மக்கள் எல்லார்ட்டயும் நெறையாவேப் பணம் இருக்கு. ஆயிரம் ரூபாய், ஐனூறு ரூபாய்த் தாள்களை KFC, PIZZA HUT ல போய் அள்ளி எறிகிறார்கள்! வெளிநாட்டில் போய் அடிமையாக இருந்தோ அல்லது கந்துவட்டிக்கு வாங்கியோ பணம் வச்சிருக்காங்க!

இன்னைக்கு நம்ம ஊரில் மருத்துவ வசதிகள் நெறையவே இருக்கு. இதன் விளைவாக லைஃப் எக்ஸ்பெக்டெண்ஸி ரொம்பவே அதிகமாகி இருக்கு! தாய்மை அடைவதில் குறையுள்ளவர்கள் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கிற வைத்தியம் நெறையவே இருக்கு. இந்த விசயத்தில் மேலை நாடுகளைவிட இதில் நம்ம ஒரு படி மேலே இருக்கோமாம்! ஆனால் அப்படியும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத தம்பதிகள் இன்னும் தெரியாத ஒரு குழந்தையை "அடாப்ஷன்" செய்ய இன்னும் சரியாக முன்வரவில்லை என்பதை குறிப்பிடவேண்டும்!

பெரிய குறைனு சொல்லப்போனா ட்ராஃபிக், மக்கள் தொகை ரெண்டு விசயமும் மிகப்பெரிய பிரச்சினைகள். கார்கள் இருக்கு போதுமான சாலைகள் இல்லை! ஆனால் புறநகர்ப் பகுதியில் இருந்து பல ஊர்களுக்கு போடப்பட்டிருக்கும் "டோல் வே" என்னவோ பெரிய முன்னேற்றம்தான். சிட்டிக்கு உள்ளே உள்ள ட்ராஃபிக்தான் பெரிய பிரச்சினையாயிருக்கு! இதைப்பத்தி யாராவது கவலைப்படுறாங்களா? னு தெரியலை! இந்த ட்ராஃபிக்ல ஒரு சினிமாப் பார்க்கப் போக எவ்வளவு மெனக்கட வேண்டியிருக்கு? அதனால்தானோ என்னவோ எல்லாரும் டி வி லயே உக்காந்துறாங்க!

வெள்ளைக்காரனுக்கும் நமக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னனா இதுபோல் சிட்டியில் உள்ள ட்ராஃபிக் பிரச்சினைகளை அவங்க கொஞ்சம் புத்திசாலித்தனமாக சமாளிக்கிறாங்க. பெரிய நகரங்களில் வாழும் பெரிய பெரிய பேராசிரியர்கள், டாக்டர்கள் எல்லாம் "பஸ் அல்லது ரயிலில்" டெய்லி வேலைக்கு கம்யூட் பண்ணுறாங்க. சென்னை "மெட்ரோ ரயில்" வந்தால் ட்ராஃபிக் பிரச்சினைகள் எல்லாம் சரியாகிடுமா?எல்லாரும் காரை ஓரமாவிட்டுப்புட்டு ரயில்ல பயணம் செய்வாங்களா?

6 comments:

கயல்விழி said...

I guess you just got back from India :) Hope you had a terrific time there and welcome back my friend!

தமிழ்வாசி - Prakash said...

ரயில்ல போக மாட்டாங்க. கௌரவம் என்னாகறது?

Sunantha said...
This comment has been removed by a blog administrator.
வருண் said...

**கயல்விழி said...

I guess you just got back from India :) Hope you had a terrific time there and welcome back my friend!

15 July 2011 2:17 PM**

Hi Kayal! :)

---------------------

***தமிழ்வாசி - Prakash said...

ரயில்ல போக மாட்டாங்க. கௌரவம் என்னாகறது?

15 July 2011 3:05 PM***

வாங்க ப்ரகாஷ்!

பார்க்கலாம் மெட்ரோ ரயில் வந்ததும் ஏதாவது முன்னேற்ரம் இருக்கானு! :)!

அகில் பூங்குன்றன் said...

I wish i read this yesterday. nethu eve youtube la dvd print irukkennu parthen.... pesama bala avar gurunathar mathiri padam edukkama irukkalam

வருண் said...

வாங்க அகில்!

உங்களுக்கும் பிடிக்கலையா? :)