Tuesday, July 26, 2011

டியர் ஃப்ரெண்ட்! முதல் உலகப்போர் ஹீரோ!



படத்தில் உள்ள நம்ம டியர் ஃப்ரெண்டு தான் முதல் உலகப்போரில் தன் உயிரை பணயம் வைத்து இருநூறு வீரர்கள் உயிரை காப்பாற்றினாராம்!"Cher Ami" என்பதுதான் இந்தப் புறாவின் பெயர். ஃப்ரென்ச்சு ல அப்படினா "டியர் ஃப்ரெண்டு"னு அர்த்தமாம்!

முதல் உலகப்போர் நடந்துகொண்டு இருக்கும்போது பிராண்சுக்கு உதவிக்கு சென்ற சுமார் 500 அமெரிக்க வீரர்கள் ஜெர்மன் படைகளால் சுற்றி சூழப்பட்டு மாட்டிக்கொண்டார்களாம். இரண்டே நாட்களில் பலவிதமாக தாக்கப்பட்ட இவர்களில் பலர் உயிரிழந்து 200 பேர்களானார்களாம். சுற்றி ஜெர்மன் படைகள் இருப்பதால் ஒரு இடத்தில் இவர்கள் 200 பேரும் மறைந்து இருந்தார்களாம். உணவோ, போதுமான இயந்திரங்களோ இல்லாததால் இவர்களுக்கு மற்ற படைகளின் உதவி தேவையான ஒரு நிலை.

ஆனால் இவங்க இருக்கிற இடம் தெரியாமல் அமெரிக்க போர் விமானங்கள் ஜெர்மன் காரனைத் தாக்குவதாக எண்ணி இவர்கள் மேலேயே குண்டு வீசும் அபாயமான சூழ்நிலையில் இருந்தார்களாம்.

இதுபோல் சூழ்நிலையில் "அந்தக்காலத்தில் (1918?) தகவல் அனுப்புவது நன்கு பழக்கப்பட்ட புறாக்கள் மூலம்தானாம். இங்கிலாந்து நாட்டில் பழக்கப்பட்ட 400 புறாக்கள் அமெரிக்கப் படைக்கு கொடுக்கப்பட்டு இருந்தனவாம்! இந்த ஒரு சூழ்நிலையில் படைத்தலைவரால்,

* "உதவி தேவை" என்று அனுப்பபட்ட முதல் புறா ஜெர்மன் படையால் சுட்டுக்கொல்லப்பட்டது.

* "உதவி தேவை" என்று இரண்டாவது அனுப்பட்ட புறாவும் ஜெர்மன்ஸால் சுட்டுக்கொல்லப்பட்டதாம்!

* மூன்றாவதாக, நம்ம "டியர் ஃப்ரெண்டை" (Cher Ami) அனுப்பினார்களாம்! கீழே கொடுக்கப்பட்டுள்ளதுதான் அதன் இடது காலில் கட்டியிருந்த "message"

"We are along the road parallel to 276.4.
"Our own artillery is dropping a barrage directly on us.
"For heaven's sake, stop it."

இதையும் ஜெர்மன் படைகள் விட்டு வைக்கவில்லையாம்! சுட்டுத்தள்ளினார்களாம்! ஒரு குண்டு மார்புவழியாக பாய்ந்ததாம்! இன்னொன்னு வலது காலை காலிபண்ணிடுச்சாம். இதுவும் காலி என்று நினைத்தார்களாம் அமெரிக்க வீரர்கள். ஆனால் இந்தப்புறா இவ்வளவு குண்டு அடிகளை வாங்கிக்கொண்டு உயரே பறந்து சென்று, 25 மைல்கள் 25 நிமிடத்தில் பறந்து சென்று மெசேஜை கொண்டு சேர்த்ததாம்! உடனே உதவிக்கு வந்து இவர்கள் 200 பேரை உயிரையும் காப்பாற்றினார்களாம்!

தொடுப்பு 1

தொடுப்பு 2

2 comments:

கோமதி அரசு said...

படத்தில் உள்ள நம்ம டியர் ஃப்ரெண்டு தான் முதல் உலகப்போரில் தன் உயிரை பணயம் வைத்து இருநூறு வீரர்கள் உயிரை காப்பாற்றினாராம்!"Cher Ami" என்பதுதான் இந்தப் புறாவின் பெயர். ஃப்ரென்ச்சு ல அப்படினா "டியர் ஃப்ரெண்டு"னு அர்த்தமாம்!/

தன் உடலில் காயங்கள் பட்டு இருந்தாலும் தன் கடமையை செய்து 200 பேரின் உயிரை காப்பாற்றிய டியர் ஃப்ரெண்டு வணங்கபடவேண்டிய அற்புத நண்பர் தான்.

வருண் said...

வாங்க, கோமதியம்மா! :)

உங்க வருகைக்கும், கருத்துப் பகிர்தலுக்கும் நன்றி. :)

உங்கள் கண்ணில் இப்பதிவை கொண்டு வந்து காட்டிய மிஸஸ் ராஜி பரமசிவத்திற்கும் நன்றி. :)