மோகமுள்ளைப் பார்ப்போம்!
தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து!மோகமுள் தி. ஜானகிராமன் எழுதிய புகழ்பெற்ற ஒரு புதினம். இது தமிழ்த் திரைப்படமாக வெளிவந்தது. கர்நாடக இசையோடு தொடர்புடைய புதினம்.
அந்தணர் குலத்தில் பிறந்த பாபு மற்றும் மராட்டிய வம்சாவழித் தோன்றலாக, காலவோட்டத்தில் தஞ்சை பூமியில் தங்கி விட்ட இனத்தைச் சார்ந்த யமுனா ஆகியோரின் வாழ்வினையும், பாபு அவள் மீது கொள்ளும் சற்றே மரபு மீறிய காதலையும் பற்றியதான இப்புதினம், ஜானகிராமனின் இதர பல புதினங்களைப் போலவே, கும்பகோணச் சூழலில், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் புனையப்பட்டு, அக்கால கட்டத்திய நடைமுறைகளையும், சமுதாயச் சட்டங்களையும், நம்பிக்கைகளையும் விரித்துரைத்து அக்காலத்தினை ஆவணப்படுத்தும் ஒரு இலக்கியமாகவே திகழ்கிறது. இதன் அடிநாதமாக கருநாடக இசை மற்றும் அதனைப் பழகுவோர் பற்றிய ஒரு விமர்சன நூலாகவும் இருப்பது இதன் சிறப்பு. இந்த இரண்டு கருத்துக்களும் ஒன்றோடொன்று முரண்படாது, ஒன்றையொன்று தாங்கிப் பிடித்ததாக அமைத்திருப்பது தி.ஜானகிராமனின் நுண்ணிய கருத்தாற்றலையும், தாம் எழுதும் விடயங்கள் பற்றி அவருக்கு இருந்த ஆளுமையையும் பறையறிவிக்கிறது.
தி.ஜானகிராமனின் மிக அற்புதமான படைப்பு என இது இன்றளவும் போற்றப்படுகிறது.
பாபு-யமுனா(பாபுவின் மூத்த சகோதரி ஸ்தானத்தில் உள்ளவள்) வின் உறவு, அக்கா-தம்பி போல் அந்த உறவு ஒழுங்காப் போயிக்கிட்டு இருக்கும். திடீர்னு ஒருநாள் பாபுவுக்கு ஜுரம் அடிக்கும்போது எல்லாம் அலங்கோலமாக மாறிவிடும்! பாபுவை விடுங்க! யமுனாவுக்கு இது நிச்சயம் மிகப்பெரிய அதிர்ச்சியான நிகழ்வுதான். நான் கதை படிக்க ஆரம்பிக்கும்போதே முந்திரிக்கொட்டை நண்பன் ஒருவன் "இந்தத் திருப்பத்தை"ச் சொல்லிவிட்டான்! That's it! அதுக்கப்புறம் இந்தக்கதையை படிக்க எந்த ஆவலும் இல்லாமல்ப் போயிடுச்சு. நான் கொடுத்து வச்சது அம்புட்டுத்தான்! பாபு என்கிற கேரக்டர்மேலே அலாதி வெறுப்பு! எரிச்சல்! மேலும் எனக்கு கர்னாடக இசைபத்தியெல்லாம் ஒரு மண்ணும் தெரியாது. அதுகூட இன்னும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆமா எனக்கு என்னதான் இந்த நாவல்ல பிரச்சினைனு நான் இன்னொரு கோணத்தில் யோசிச்சுப் பார்த்தால் தி ஜா ராவின் இந்தக்கதையில்மட்டும்தான் ஒரு "ஆண்" கேரக்டர் "முறை தவறி" நடக்கிறாப்பிலே எழுதி இருக்காரு.
May be I am a male chauvinist pig? இருக்கலாம்! Women and children can be careless but not men! - Don Veto in The Godfather! :) இல்லையா? :)
இதெல்லாம் வெட்டிப்பேச்சு, தவறுனாலே ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து செய்றதுதான். ஆனால், நம்ம கோபாலி "மரப்பசு"வில் ஹீரோ கெடையாது! அம்மணிதான் எல்லாம். அதேபோல் அம்மா வந்தாளில் அலங்காரம்தான் ஹீரோயின். அம்பைனு ஒருவர் எழுதியதுபோல பொதுவா அலங்காரம், அம்மணி, ரங்கமணி இதுபோல் முக்கியமான "ஹீரோயின்கள்"தான் தகாத உறவில் "இன்வால்வ்" ஆவதுபோல தி ஜா ர மற்ற புதினங்களில் எல்லாம் எழுதியிருப்பாரு! பாபு போல் ஒரு ஹீரோவை அதுபோல் சித்தரித்தது ரொம்ப கம்மி. செம்பருத்தியில் வரும் சட்டநாதன் மேலே ஒரு குறையும் சொல்ல முடியாது. ஒருவேளை என் பிரச்சினை, அதான் எனக்கு இந்தக்கதை பிடிக்காததுக்கு காரணம் அதானானு என்னனு தெரியலை. For some reason, it is something so "bizzare" and this story is completely unacceptable for me, I think.
அப்புறம் ம சிவகுமார்னு ஒருத்தர் ஆஹா ஓஹோனு புகழ்ந்து ஒரு விமர்சனம் கொடுத்து இருக்காரு அதையும் பாருங்க!
தமிழுக்கு நோபல் பரிசு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் தனது குறிக்கோள் என்று கவிஞர் வைரமுத்து சொல்வார். தமிழில் நோபல் பரிசு வாங்கும் தகுதியோடு எழுதப்பட்ட எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் ஜானகிராமன். அத்தகைய படைப்புகளில் முதல் இடம் மோகமுள்ளுக்கு நிச்சயமாக உண்டு.
-ம சிவகுமாரின் கருத்து
சிங்கம் இருக்குல, அதாங்க காட்டுக்கு ராஜா! அதுல ஒரு ஆண் சிங்கம் பெண்சிங்கத்தோட உடலுறவு செய்து, நெறையா குட்டிகள் போட்டு ஒரே குடும்பமா தன் குகைக்குள் வளர்க்குமாம்! அப்போ, குட்டிகளோட அப்பா மேலும் தன் கணவனான அந்த ஆண்சிங்கத்தை இன்னொரு பலமான இளம் ஆண்சிங்கம் வந்து சண்டைபோட்டு அடிச்சு கொன்னுபோட்டுடுமாம்! கொன்னுட்டு, அதோட அந்த ஆண்சிங்கத்துக்கு பிறந்த குட்டிகளை எல்லாத்தையுமே கொன்னுடுமாம்! பெண்சிங்கத்தை மட்டும்தான் உயிரோட விடுமாம்! அப்புறம், இந்த புது ஆண்சிங்கம், விதவையாக்கப்பட்ட பெண் சிங்கத்தோட அன்பா பழகி, உடலுறவு கொண்டு, தனக்குனு குட்டிகள் உண்டாக்கி, பெற்று வளர்க்குமாம். இந்த பெண் சிங்கம் இருக்குல்ல, அது இதை எல்லாத்தையும் சகித்துக்கொண்டு, தன் கணவனைக்கொன்ற இந்த ஆண் சிங்கத்தின் குட்டிகளை (தன் குட்டிகளை) பால்கொடுத்து, வளர்த்து ஆளாக்குமாம். இந்த விதவை பெண் சிங்கம் வேற வழிதெரியாமல் புது ஆண் சிங்கத்துடன் சந்தோஷமா வாழுமாம்!
என்ன ஒரு பரிதாபம்? ஆண் (பாபு) இச்சைக்கு ஒரு நாள் எதிர்பாராமல் பலியான நம்ம யமுனா கேரக்டர் போல வாழும் பெண்கள், இந்தப் பெண் சிங்கத்தைத்தான் எனக்கு நினைவுபடுத்துவாங்க! I could never ever understand this lioness!
4 comments:
அருமை நண்பரே.
மோக முள் திரைப்ப்டம் பார்த்துதான் நாவலே படித்தேன்.பிடித்ததா என்று சரியாக கூற முடியாது.வித்தியாசமான் நாவல்,உங்கள் விமர்சனம் போல்.அவ்வளவுதான். விமர்சனத்தில் இச்செய்திதான்(சிங்கம்) ஹை லைட்
இந்த சிங்கம் விஷயத்தை பால குமாரன் கூட ஒரு நாவலில் சொல்லி இருந்தார்.பல போர்களில் மனிதர்களும் இது போல் நடந்ததும் வரலாறு.
நன்றி
எங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
***சார்வாகன் said...
அருமை நண்பரே.
மோக முள் திரைப்ப்டம் பார்த்துதான் நாவலே படித்தேன்.பிடித்ததா என்று சரியாக கூற முடியாது.வித்தியாசமான் நாவல்,உங்கள் விமர்சனம் போல்.அவ்வளவுதான். விமர்சனத்தில் இச்செய்திதான்(சிங்கம்) ஹை லைட்***
வாங்க சார்வாகன்!
சிங்கத்துட்ட இருந்துதான் நம்மாளுக இந்த மாதிரி பெண்கள் உணர்வுகளை தன் உணர்வுபோல் மதிக்காமல் அவர்களை அடிமைப்படுத்தி, அடக்கி ஆள கத்துக்கிட்டானோ? னு தெரியலைங்க.
**இந்த சிங்கம் விஷயத்தை பால குமாரன் கூட ஒரு நாவலில் சொல்லி இருந்தார்.பல போர்களில் மனிதர்களும் இது போல் நடந்ததும் வரலாறு.
நன்றி
11 January 2012 5:11 PM***
அப்படியாங்க? பகிர்தலுக்கு நன்றி! :)
***Rathnavel said...
எங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
12 January 2012 4:08 PM***
வாங்க ரத்னவேல் சார்! நன்றி!
உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் என்னுடைய இனிய பொங்கல் வாழ்த்துக்கள், சார்!
Post a Comment