Monday, January 30, 2012

திருவாளர் எஸ் எ சந்திரசேகரா!!


தப்புனு சொல்லல! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ரொம்ப அவசியமான ஒரு சங்கம்தான், சரி! திரைப்பட தொழிலாளர்கள், ஏழை என்பதால் அவர்கள் கிளப்பும் பிரச்சினை எல்லாம் நியாய மானது, ஏழைகள் பக்கம் நியாயம் இருக்கும்னு சொல்லவெல்லாம் முடியாது, அதுவும் சரிதான்! பொறம்போக்கு நெலத்தை ஆக்கிரமிக்கிரவங்களும் ஏழைகள்தான், அது ஏழை செய்வதால் நியாயம்னு சொல்ல முடியுமா? அதனால் ஏழை, பணக்காரன் என்பதை எல்லாம் விட்டுப்புடுவோம். உண்மையான பிரச்சினை உங்களமாரி ஆளுக்குத்தான் தெரியும், ஒத்துக்கிறோம்! ஆனால்..

பெரிய நட்சத்திரங்கள் படம் எல்லாம் பொங்கல், தீவாளி, வருடப்பிறப்பு போன்ற தேதிகளில்தான் வெளியாகனும்னு என்ன சட்டம் அப்படி ஒரு விவஸ்தை கெட்ட சட்டம் வேண்டிக்கெடக்கு? இது என்ன நீங்க எல்லாம் சின்னத் தயாரிப்பாளர்களுக்கு செய்ற உதவியா? இல்லைனா "பெரிய ஆட்கள்" படமெல்லாம் போட்டியில்லாமல் கல்லாக்கட்டனும்னு முயற்சியா?

தெரியாமல்தான் கேக்கிறேன் இது மாதிரி சட்டம் எல்லாம் கேணத்தனமா இல்லையா? நேத்து வந்த கார்த்தி, சின்னப்பசங்க தனுஷ் மற்றும் சிம்பு, உங்க மகரு விஜய்யி, அஜீத், சூர்யா, விக்ரம் எல்லாம் பெரிய ஸ்டார்னு எதை வைத்து முடிவு செய்றீங்க? ஆமா என்ன அளவுகோல் இதுக்கெல்லாம்?

சரி, ஒரு சுமாரான பணக்காரன் பெரிய ஸ்டாரை வச்சு கடனை உடன வாங்கி கையப்பிடிச்சு, காலைப்பிடிச்சு, ஒரு பட்ம் எடுத்து ஜனவரி 15ல் முடிச்சுட்டு, அப்புறம் 3 மாதம் சும்மா உக்காந்து இருக்கனுமா கந்த வட்டி கெட்டிக்கிட்டு? அப்படி உக்காந்து இருந்துட்டு ஏப்ரல் 14 ல ரிலீஸ் பண்ணி படம் ஃப்ளாப் ஆச்சுனா, நஷ்டத்துக்கு மேலே நஷ்டம் ஆகும்! சரி, அதையும் தயாரிப்பாளர் யோசித்துப் பார்த்து படம் எடுக்கனும்னு நீங்க வியாக்யானம் பேசலாம்தான்.

சரி, என்னுடைய கேள்வி இதுதான்..

* ரஜினி மற்றும் கமல் படங்கள் மட்டும் ஏன் இதற்கு விதிவிலக்கா அமையுது?

* இதேபோல் முன்னால் இருந்த தலைவர் இந்த சட்டத்தை அமலில் வைத்து இருக்கும்போதுதான் எந்திரன் மற்றும் மன்மதன் அம்பு படங்கள் வெளிவந்தன.

* அவங்க படம்னா அதுக்குனு தனி சட்டமா? இதெல்லாம் நல்லாவேயில்லை.

Sreedhar Pillai
Somebody is sure 2 break the new TFPC rule 4 big film releases. Wait and Watch! It is not practical in the long run.
28 Jan


* மேலே சொல்லியிருப்பதுபோல் இந்த சட்டத்தை ஒரு சிலர் விரைவில் உடைக்கத்தான் போறாங்க! உங்க மூக்கு உடையத்தான் போகுது!

No comments: