Wednesday, January 18, 2012

நாத்திகர்களின் பெயரில் மறையாத மதச்சாயம்!

வர வர பதிவுலகில் நாத்திகர்களுக்கு ஒரே பஞ்சமாப் போச்சு! பேசிப் பேசி தளர்ந்துட்டாங்களா? இல்லைனா இவர்களை நம்ம எதுவுமே செய்ய முடியாது, இவர்களே தன் மதம்தான் உயர்ந்ததுனு இன்னொரு மதத்தினரிடம் சண்டைபோட்டு அடிச்சுக்கிட்டு நாறட்டும்! நம்ம சும்மா ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்ப்போம்னு இருக்காங்களானு தெரியலை!

நாத்திகம் என்பது கடவுள் நம்பிக்கை இல்லாமை! கடவுள்னு ஒரு ஆளு இருந்து எல்லாத்தையும் படச்சுவிட்டாருனு நம்பாதவர்கள். இப்படி படச்சுவிட்டு மனித விலங்குகள் ஆடும் ஆட்டத்தை சிரிக்காமல், அழுகாமல், கேலி செய்யாமல் வேடிக்கை பார்க்கும் உணர்ச்சியில்லாத ஒரு மாதிரியான ஜந்து இந்த ஆளு னு நம்பாதவர்கள்! என்ன இப்படி சொல்லிப்புட்ட? ஜந்தா? வேறெப்படி சொல்றது? கடவுளுக்கு உணர்ச்சிகள் உண்டு, மூளை உண்டுனு யார் சொன்னா? சொன்னாலும் எப்படித்தெரியும் அந்த மேதைக்கு?

இப்படி நாத்திகர்கள் பலவிதமாக வியாக்யாணம் பேசலாம்தான். ஆனால், நம்ம ஊரிலே ஒரு பெரிய பிரச்சினை இருக்கு! உங்க பேரு இருக்குல? அதாங்க, வருண் னு சொல்லிக்கிறீங்கள்ல அது வந்து ஒரு இந்து பேரு! ஏன் சமஸ்கிரதத்தில் இருந்து வந்ததுனு சொல்லலாம். பார்ப்பனர்கள்தான் இப்படி பேரெல்லாம் வச்சுக்குவாங்கனுகூட சொல்லலாம்.

ஆக, நீங்க நாத்திகரா இருக்கலாம், இருந்தாலும் நீங்க "ஒரு இந்து நாத்திகர்"னுதான் எல்லாரும் உங்களை நெனைப்பாங்க! நீங்க என்னதான் கடவுள் நம்பிக்கை இல்லாமல், கடவுள் என்பதே அர்த்தமில்லாத ஒண்ணுனு நெனச்சாலும், உணர்ந்தாலும், உங்க மதம் இன்னும் உங்க பேருல ஒட்டிக்கிட்டு இருக்குனு மறந்துவிடாதீர்கள்! அதனாலென்ன? அதனலென்னனா பேசாமல் இந்து மதத்தையும், இந்து மதத்தை என்னைக்குமே விட்டுக்கொடுக்காத பார்ப்பனர்களையும், இந்துக்கடவுள்களையும் மட்டும் திட்டிப்புட்டு, இந்துத்தவாக்களை கேலி பண்ணிப்புட்டு போனீங்கனா உங்களுக்கு பிரச்சினை இல்லை! ஆனால் நம்மதான் மதநம்பிக்கையில்லா நாத்திகராச்சே எம்மதமும் நமக்கு "சமமதம்"தானே?னு நெனச்சுக்கிட்டு பிற மதத்தவரை நீங்க என்ன சொன்னாலும், உங்களை "இந்து" என்றுதான் உலகம் சொல்லும். நாத்திகர் என்றல்ல! இது யாரு தப்பு? நீங்களே சொல்லுங்க! யாரு தப்பு? உங்க தப்பு இல்லைனும் சொல்ல முடியாது!

உங்க பேரு ஏன் இந்துப் பேரா இருக்கு? ஏன் ரகுமான் அலல்து ஜான் னு இல்லை? வருண் னு இருக்கு? நீங்க நாத்திகர்தான், எனக்குப் புரியுது! ஆனால் இந்து அடையாளம் இன்னும் போகாத நாத்திகர் நீங்கள் என்பதை நீங்க மறுக்க முடியாது! நீங்க பிற மதத்தவரை விமர்சிக்கும்போது அதன் விளைவுகளை நீங்க சந்தித்தே ஆகனும்!

6 comments:

அமர பாரதி said...

வருன்,

வேணும்னா திலொபலகுலுமாளீ அப்படீன்னு பேர் வெச்சுக்கிட்ட மதம் சாராத நாத்திகன் அப்படின்னு சொல்லலாமா? ;-)

வருண் said...

தெரியலைங்க, நீங்க எப்படி பேர் வச்சிக்கிட்டாலும், என்னை மாதிரி ஐடெண்டிட்டி இல்லாமல்/முகம்/விலாசம் எல்லாம் கொடுக்காமல் இருந்தால் மதம் சாதியெல்லாம் கண்டுபிடிக்க முடியாது. அப்படியல்லாமல் ஊர் உலகைப்போல உங்க விலாசம், நீங்க யாருனு வெளியில் சொல்லி பலருக்குத் தெரிந்தால் உங்க அப்பா/அம்மாவின் மதம் நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்களுக்கு அளிக்கப்படும்!உங்க சாதியும் கண்டறியப்படும்! :-)))

குலவுசனப்பிரியன் said...

எழுத்தாளர் பிரபஞ்சனிடம் பெயர்க்காரணம் கேட்டபோது, அவர்காலத்தைய படைப்பாளிகள் (வேற்று மாநிலத்தவர் உட்பட) பலரும் இன்ன மதம் என்று அடையாளப்படுத்த இயலாத பொதுப் புனைப் பெயர்களை ஏற்றுக் கொண்டதாக சொன்னார். பதிவர்களும் அதைப் பின்பற்றலாம்.

கோவி.கண்ணன் said...

போச்சு.... இன்னிக்கு கண்ணாடிக்கு முன் நின்று எழுதிய பதிவா ?

அவ்வ்வ்வ்வ்வ்வ்

சார்வாகன் said...

100% உண்மை.
ஆனால் பெயர் மட்டுமல்ல சில மரபு வழி பழக்க வழக்கஙகளையும் தவிர்க்க இயலவில்லை என்பது என் அனுபவம்.குடும்பத்தில் ஒருவர் மட்டும் இறை மறுப்பாளராக இருக்கும் பட்சத்தில் மத நடைமுறைகளை கொஞ்சம் கிண்டல் பண்ணிணாலும் பட்டும் படாமல் கலந்து கொள்ள வேண்டியே உள்ளது.
நன்றிவாழ்த்துக்க‌ள்.

suvanappiriyan said...

திரு வருண்!

//ஆக, நீங்க நாத்திகரா இருக்கலாம், இருந்தாலும் நீங்க "ஒரு இந்து நாத்திகர்"னுதான் எல்லாரும் உங்களை நெனைப்பாங்க! நீங்க என்னதான் கடவுள் நம்பிக்கை இல்லாமல், கடவுள் என்பதே அர்த்தமில்லாத ஒண்ணுனு நெனச்சாலும், உணர்ந்தாலும், உங்க மதம் இன்னும் உங்க பேருல ஒட்டிக்கிட்டு இருக்குனு மறந்துவிடாதீர்கள்! அதனாலென்ன? அதனலென்னனா பேசாமல் இந்து மதத்தையும், இந்து மதத்தை என்னைக்குமே விட்டுக்கொடுக்காத பார்ப்பனர்களையும், இந்துக்கடவுள்களையும் மட்டும் திட்டிப்புட்டு, இந்துத்தவாக்களை கேலி பண்ணிப்புட்டு போனீங்கனா உங்களுக்கு பிரச்சினை இல்லை! ஆனால் நம்மதான் மதநம்பிக்கையில்லா நாத்திகராச்சே எம்மதமும் நமக்கு "சமமதம்"தானே?னு நெனச்சுக்கிட்டு பிற மதத்தவரை நீங்க என்ன சொன்னாலும், உங்களை "இந்து" என்றுதான் உலகம் சொல்லும்//

அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் கருத்தோடு முற்றிலும் ஒத்துப் போகிறேன்.

திரு சார்வாகன்!

//ஆனால் பெயர் மட்டுமல்ல சில மரபு வழி பழக்க வழக்கஙகளையும் தவிர்க்க இயலவில்லை என்பது என் அனுபவம்.குடும்பத்தில் ஒருவர் மட்டும் இறை மறுப்பாளராக இருக்கும் பட்சத்தில் மத நடைமுறைகளை கொஞ்சம் கிண்டல் பண்ணிணாலும் பட்டும் படாமல் கலந்து கொள்ள வேண்டியே உள்ளது.
நன்றிவாழ்த்துக்க‌ள்.//

உண்மை இவ்வாறிருக்க ' ஆத்திகர்களே!! எங்களைப் போல் நீங்களும் நாத்திகராக மாற மாட்டீர்களா' என்று எங்களை பிடித்து இழுக்க முயற்ச்சிப்பது நடைமுறை சாத்தியமில்லாததுதானே!