Wednesday, January 4, 2012

புத்தாண்டு 2012! சில எண்ணங்கள்!

2012! "இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்"னு எல்லாரையும் வாழ்த்துறோம்! எதிர்த்தாப்பிலே பார்க்கிறவங்களை தெரிஞ்சவங்க, தெரியாதவங்க, நண்பர்கள் எல்லாருக்கும் "ஹாப்பி நியு இயர்" சொல்றோம், அவங்களும் "சேம் டு யு"னு வாழ்த்துறாங்க. ஒரு சிலருடன் "ஹாப்பி நியு இயர்" இ-மெயில்ல போனவருடம் சொன்னதுக்கப்புறம் அடுத்த கரஸ்பாண்டெண்ஸ் இந்த வருடம் நியு இயருக்கு இன்னொரு வாழ்த்து!!! நான் இன்னும் உயிரோடதான் இருக்கேன்னு சொல்றதத் தவிர இந்த நியு இயர் விஷ் மெசேஜ்ல என்ன இருக்குனு எனக்குத் தெரியலை?

கடந்த வருடங்கள் போலவே, 2012 ஆரம்பிச்சாலும் இன்னும் கொஞ்ச நாளைக்கு தேதியில் வருடம் போடும்போது 2011னு போட்டுட்டு அடிச்சு 2012னு மாத்தி எழுதுறவங்கள்ல நானும் ஒருவன். இன்னும் கொஞ்ச நாள் ஆகும் தவறில்லாமல் தேதி போட! ஒரு வேளை புத்தாண்டு வாழ்த்துக்கள்னு வாழ்த்துறது தேதியை (வருடத்தை) சரிவரப்போடுனு ஞாபகப்படுத்தத்தானோ என்னவோ!

கடந்த வருடம் மோசமான வருடமாகப் போயிருந்தால் புதிய வருடம் இனியதாக அமைய கனவுகளுடன் ஆரம்பிக்கிறோம். கடந்தவருடம் நல்லாப் போயிருந்தால் இந்த வருடமும் அதைவிட நல்லாப் போகனும்னு பேராசைதான் நமக்கு. 2012னா என்ன 2021னா என்ன? உண்மையில் பொதுவா செய்யும் சிறு சிறு தவறுகளை திரும்பத்திரும்ப செஞ்சுக்கிட்டேதான் இருக்கோம், இருக்கிறோம், இருப்போம். ஒரு சில தவறுகளை விட்டுவிட்டாலும் புதுசா ஏதாவது தப்பு செய்ய ஆரம்பிக்கிறோம்.

கடந்த வருடங்கள் போலவே இந்த வருடமும் புதுசு புதுசா துரோகங்களையும், ஏமாற்றங்களையும், சந்தர்ப்பவாதிகளையும், சுயநலவாதிகளையும், இரக்கமில்லாதவர்களையும் சந்திக்கத்தான் போறோம்! எவ்வளவு கவனமாக இருந்தாலும் ஏமாறாமல், வஞ்சிக்கப்படாமல் இருக்கப்போவதில்லை!

"ஆண்டவனே! எங்களால் எந்தச் சுமையை தாங்க முடியாதோ அதை எங்களுக்குத் தந்துவிடாதே! நாங்கள் வலுவிழந்த மனிதர்கள்" னு ஆத்திகர்கள் கடவுள்ட்ட கெஞ்சி கூத்தாடிக்கேட்டுக் கொண்டாலும் வர்றது வரத்தான் போகுது. நடக்கிறதுதானே நடக்கும்? எந்த வருடம் நம்ம ஆண்டவன் எல்லாரையும் ஒட்டு மொத்தமாக (ஐ மீன் எல்லாரையும்) துன்பத்திலேயே ஆழ்த்தாமல் இருந்து இருக்காரு? இந்த வருடம் மட்டும் அப்படி செய்யப்போறாரா என்ன?

ஆண்டவன் என்னதான் அருள் புரிஞ்சாலும் கடந்த வருடங்கள் போலவே வெற்றி, சந்தோஷங்களுடன் தோல்வியும் இழப்புகளும் வரத்தான் போகுது. ஒவ்வொரு ஆண்டும் பல தோல்விகள், சில இழப்புகள் வந்துக்கிட்டேதான் இருக்கு! இந்த ஆண்டும் அப்படித்தான். ஒருவேளை நமக்கு பெரிய இழப்பு எதுவும் வராமல் போனாலும், வெற்றிமேல் வெற்றி நமக்கு வந்தாலும் நாம் வாழ்த்துகிற நம்மைச்சுற்றி வாழ்கிற நண்பர்களுக்கு அப்படி இருக்கனும்னு இல்லையே? அதெப்படிங்க எல்லாருக்கும் இந்தப் புத்தாண்டு இனிதாக அமையும்? Let us not fool ourselves and think that everything and everybody is going to have wonderful 2012. I am not pessimistic! I am rather practical and ready to face the reality in 2012!

ஆமா, நாம் தைரியமாக வரும் ஆண்டை, வரும் நாட்களை எதிர்கொள்ளுவோம்! வரும் வெற்றி தோல்விகளை நல்ல அனுபவமாக எடுத்துக்கொண்டு வாழக்கையை எதிர்கொள்ளுவோம்!

ஆமா ஏன் புத்தாண்டுக்கு எல்லாரும் குடிச்சுத் தொலையிறாங்க?னு தெரியலை. நான்லாம் குடிக்கிறது இல்லைங்க ! ஆமா புத்தாண்டுக்குக் குடிப்பதில்லை!

6 comments:

மதுரை சரவணன் said...

nalla piraaththanaiyudan puththaandu vaalththukkal.

ராமலக்ஷ்மி said...

புத்தாண்டு வாழ்த்துகள்:)!

Unknown said...

வாழ்த்துக்கள்,
முதல் நாள் குடிச்சா வருஷம் பூரா குடிக்க வேண்டுமே என்றா?

http://unmayapoyya.blogspot.com/2012/01/blog-post.html

சுதா SJ said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் வருண் :))))

வருண் said...

வாங்க மதுரை சரவணன், ராமலக்ஷ்மி, அப்பு & துஷ்யந்தன்!

நன்றி! உங்கள அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

-வருண்

இராஜராஜேஸ்வரி said...

தைரியமாக வரும் ஆண்டை, வரும் நாட்களை எதிர்கொள்ளுவோம்! வரும் வெற்றி தோல்விகளை நல்ல அனுபவமாக எடுத்துக்கொண்டு வாழக்கையை எதிர்கொள்ளுவோம்!