Tuesday, February 14, 2012

காதலர் தினமும் ஒரு படமும்!

காதலர் தினம் சமயத்தில் இந்தப் படம் வெளிவந்துள்ளது, The Vow!. காதலர்கள் பார்க்க வேண்டிய படம். வெகுவிரைவில் இதை தமிழ்ல யாராவது ஒரு "ஜீனியஸ்" காப்பியடிச்சு வெளியிட வாய்ப்புள்ளது.

கதை.. ரெண்டு பேரு சந்திக்கிறாங்க, பிடிச்சுப் போயிடுது காதலிச்சு கல்யாணம் செய்துகொள்றாங்க. அவன் ஒரு ரெக்கார்ட் ஸ்டுடியோ வச்சு நடத்திக்கிட்டு இருக்கான். அவள் ஒரு ஆர்ட்டிஸ்ட். ஒரு சின்ன ஸ்டுடியோ வைத்து அவள் தொழில் செஞ்சுக்கிட்டு இருக்கா. ரெண்டு பேரும் பெரிய அளவில் சம்பாரிக்காவிட்டாலும் சந்தோஷமாகத்தான் வாழ்ந்துகொண்டு இருக்காங்க.

அப்போ ஒரு "ஸ்னோ டே" அன்று, அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து போகிற காரை பின்னாலலிருந்து ஒரு "ஸ்னோ ரிமோவ் பண்ணுற ட்ரக்" வந்து அடிச்சுப்புடுது. பெரிய விபத்து. ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு..
அவளுக்கு மூளையில் அடிபட்டு எப்படியோ பிழைத்துவிடுகிறாள். அவனுக்கு அப்படி எதுவும் பெரிய காயம் இல்லை.

இப்போ அவ 'கோமா"ல இருந்து வெளிவந்தவுடன், அவளுக்கு தன் கணவனையே யாருனு தெரியலை. அவனை சந்திச்சது, கல்யாணம் செய்தது எதுவுமே ஞாபகம் இல்லை அவளுக்கு. அவன், அவளிடம் தாந்தான் அவள் கணவன்னு சொல்ல வேண்டிய பரிதாப நிலை. தாந்தான் அவள் கணவன்னு "கன்வின்ஸ்"ப் பண்ண அதற்கான ஆதாரங்கள் ஃபோட்டோ வீடியோ எல்லாம் மனைவியிடமே காட்ட வேண்டிய கட்டாயம். இவ்வளவு சொன்ன, விளக்கிய பிறகும், அவளுக்கு அவன் ஒரு "ஸ்ட்ரேஞ்சர" போலவே உணர்வு. அவளால அவனை ஏற்றுக்க முடியாத சூழல்.

இதில் வேடிக்கை என்னனா, திடீர்னு அவளோட அம்மா, பணக்கார அப்பா, தங்கை எல்லோரும் அவளைப் பார்க்க, கவனிக்க வந்திடுறாங்க. அவங்கள அவளுக்கு ஞாபகம் இருக்கும். அவள், அவ கணவனை சந்திக்கும்போது அம்மா அப்பா விடம் இருந்து பிரிந்து வந்து தனியாக வாழ்ந்து கொண்டுயிருப்பாள். ஏதோ பிரச்சினையால் வீட்டிலிருந்து வெளியே வந்திருப்பாள். அவளுக்கு அது என்னனு ஞாபகம் இருக்காது. இப்போவும் அது ஞாபக்த்துக்கு வராது.

இப்போ அப்பா அம்மா, ஒரே அன்பு, பாசம்.. திரும்ப அவளை தங்கள் வீட்டிற்கே கூட்டிச்செல்ல முயற்சிப்பாங்க. ரொம்ப பணக்காரங்க அவங்க. அவளோட பேரண்ட்ஸ் அவளோட கணவனை மீட் பண்ணியதே இல்லை. அதனால, அவனைப் பத்தி அவங்க ரொம்ப கவலைப்படமாட்டாங்க, அவனை சட்டையே செய்ய மாட்டாங்க. மகளுக்கும் அவனை ஞாபகம் இல்லை என்பதால், அவன் எப்படிப் பட்டவனோனு அவனைக் கழட்டிவிடப் பார்க்கிறாங்க. அதைவிட கொடுமை என்னனா, அவளுக்கு ஏற்கனவே ஒரு பாய்ஃப்ரெண்டு ஒருத்தன் இருந்து இருப்பான். அந்த உறவு ஏற்கனவே முறிந்துபோயி இருக்கும். இவ அவனை "டம்ப்" பண்ணியிருப்பாள். அவனைக்கூட அவளுக்கு நல்லா ஞாபகம் இருக்கும். ஏன் அவனோட உறவு முறிச்சுக்கிட்டோம்னு தெரியாது. ஹஸ்பண்டை சுத்தமாக ஞாபகம் இருக்காது.

ஆனால் நம்ம ஹாண்ட்சம் ஹீரோவுக்கு (ஹி இஸ் ஹாட்) அம்மா அப்பா யாருமே கெடையாது. மனைவிதான் எல்லாம். உண்மையிலேயே அவளை கண்ணா பின்னானு லவ் பண்ணுவான். அவளுக்கு ஞாபக சக்தி (அவனைப்பத்தி, அவங்களப் பத்தி) கொண்டுவர முயற்சிப்பான். காதலர் தினம் இந்த மாதிரி தம்பதிகளுக்கு எவ்ளோ முக்கியம்? அதனால காதலர் தினத்தை யாரும் கேலி பண்ணாதீங்கப்பா! It means a lot to some couple!

Anyway, அம்மா அப்பா, தங்கை மற்றும் இவனை மீட் பண்ணும் முன்னாலிருந்து எக்ஸ் பாய்ஃப்ரெண்டு எல்லாம் ஞாபகத்தில் இருக்கும். ஏன் வீட்டிலிருந்து வெளியே வந்தோம்? முக்கியமா எப்படி தன் கணவ்னை சந்திச்சோம், எப்படி காதலிச்சோம், எவ்வளவு தூரம் அவனை காதலிச்சோம், என்ன வேலை செய்துகொண்டிருந்தோம் எதுவுமே ஞாபகம் இருக்காது.

அவன் அவளைத் அவங்க வாழ்ந்துகொண்டிருந்த தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, நினைவை திருப்பிக் கொண்டு வர முயற்சிப்பான். ஆனால் அது அவ்வளவு ஒண்ணும் நல்லாப் போகாது. அவளுக்கு எதுவும் ஞாபகம் வராது. இந்த நிலையில் அவளோட அம்மா அப்பா அவள அவங்க வீட்டுக்கு அழைச்சுப் போவாங்க.

அங்கே போனதும் அவளை அவளோட அப்பா, மறுபடியும் "சட்டம்" படிக்க வைக்க காலேஜில் சேர்ந்த்துவிடப் பார்ப்பார். "சட்டம்" அவளுக்குப் பிடிக்காமல்ப் போயிதான் "ஆர்ட்டிஸ்ட்" ஆகி இருப்பாள். ஆனால் அது அவளுக்கு இப்போ ஞாபகம் இருக்காது.

அவ தங்கைக்கு "எங்கேஜ்மெண்ட்" நடக்கும், திருமணம் நடக்கப்போகும். அதை சாக்கு வச்சு அவளை அவள் பெற்றோர்கள் கணவனிடம் இருந்து அழச்சுட்டு வந்து தன்னுடனே வச்சுக்குவாங்க. அவளுக்கும் கணவன் மேலே இன்னும் ரொம்ப பிடிப்பு வராது என்பதால் சரினு பெற்றோர்கள் வீட்டுக்குப் போய் விடுவாள். எக்ஸ் பாய்ஃப்ரெண்டு இவளை மறுபடியும் கல்யாணம் செய்துக்க முயற்சிப்பான். அவளோட பேரெண்ட்ஸ் இந்த ஏழைக் கணவனை சீரியஸாவே கழட்டிவிட முயற்சிப்பாங்க. விவாகரத்து செய்ய அவளும் சரினு சொல்ற நிலைமையில் இருப்பாள்.

நம்ம ஹீரோ விடாமுயற்சியில் ஈடுபட்டு அவளோட "ஸ்ட்ரேஞ்சரா"கவே பழக ஒரு "டேட்" கேப்பான். அவள் சம்மதத்துடன் ஒரு நாள் ரெண்டு பேரும் சேர்ந்து சுத்துவாங்க. அவளுக்கு அவனைப் பிடிக்கும்தான் ஆனால்.. அப்பா அம்மா அவளை கன்வின்ஸ் பண்ணி "லா" படிக்க அனுப்பிவிடுவாங்க.

வேற வழியில்லாமல் அவனும் (ஹஸ்பண்ட்) விரக்தி ஆகி அவளை விவாகரத்து செய்யும் நிலை வந்துவிடும். விவாகரத்தும் செஞ்சுடுவாங்க..

ஆனால் "லா" படிக்கும்போது அவளால் அந்த லெக்ச்சர்கள்ல கவனம் செலுத்த முடியாது. எதையோ வரைந்து கொண்டு இருப்பாள். :-)

ஒரு நாள் ஒரு பழைய ஃப்ரெண்டை சந்திப்பாள். அவள் இவளிடம் வந்து முன்னால நடந்த ஒரு தப்புக்கு மன்னிப்பு கேப்பாள். அது என்னனா இவள் தோழிக்கும் இவளோட அப்பாவுக்கும் ஒரு "அஃபையர்" (கள்ளக்காதல்) வந்துவிடும். அந்த விசயம் அவளுக்கு தெரிஞ்சதும்தான் இவ்வளவு மட்டமான அப்பாவைப் பிடிக்காமல் வீட்டைவிட்டு ஓடி தனியாக வாழ்ந்துகொண்டிருப்பாள். இப்போ இந்த விசயம் அவளுக்கு அவள் தோழியின் மன்னிப்பால் ஞாபகப்படுத்தப் படும். இந்த கசப்பான் உண்மை தெரிந்தவுடன் மறுபடியும் அப்பாவை வெறுப்பாள், அம்மாவை திட்டுவாள்.

தனக்கு ஆர்ட்ல இண்டெரெஸ்ட் இருப்பதையும் உணர்ந்து, "லா" ஒத்துவராதுனு முடிவுக்கு வந்துவிடுவாள். திரும்பி தன் கணவனைத் தேடிப் போவாள். அவன் இன்னும் "சிங்கிளா" இருக்கானா? என்ன ஆகுதுனு போயி வண்ணத்திரையில் பாருங்கப்பா!

A quote: The difference between friendship and love is how much you can hurt each other! :)

11 comments:

ILA(@)இளா said...

இன்னிக்குத்தான் Metro.usல பெருசா பாராட்டி இருந்தாங்க. அப்படியா என்ன கதையா இருக்கும்னு யோசிட்டிருக்கும்போதே உங்க பதிவு. பார்த்துட வேண்டியதுதான்

வருண் said...

It is a decent romantic comedy, iLa. Surprisingly it made 40 million @ the domestic box office! So, people like it, it seems! :-)

அமர பாரதி said...

வருன்,

//இதை தமிழ்ல யாராவது ஒரு "ஜீனியஸ்" காப்பியடிச்சு வெளியிட வாய்ப்புள்ளது.// கிட்டத்தட்ட இதே கதைதானே மூன்றாம் பிறை?

வருண் said...

அப்படினு சொல்லலாம்கிறீங்களா? மூன்றாம் பிறையை பாலுமஹேந்திரா எதிலே இருந்து காப்பியடிச்சாருனு தெரியலைங்க எனக்கு. அந்தக் கதை நிச்சயம் நம்மளோட ஒரிஜினல் ஐடியா கெடையாதுனுதான் நெனைக்கிறேன்.

அப்புறம் மூன்றாம் பிறையில் கமல், ஸ்ரீதேவியை மொதல்ல சந்திக்கும்போதே அவளுக்கு புத்தி சுவாதீனம் இருக்காதுனு நெனைக்கிறேங்க. இதிலே ரெண்டு பேரும் ரொம்ப நார்மல்தான் சந்திக்கும்போது. சாதாரண உடல் கவர்ச்சி, உள்ளக் கவர்ச்சி, காதல், கல்யாணம்தான் இங்கே! "பரிதாப"பட்டு ஒருவரை ஒருவர் நேசிப்பதுபோல் எதுவும் இருக்காது. விபத்துக்கு அப்புறமும் ரெண்டுபேருமே நார்மல்தான். என்ன அவளுக்கு மூளையில் அடிபட்டதால்னு சில வருடங்கள் மட்டும் மறந்துடும்னு சொல்றாங்க!

இந்தப் படம் உங்களுக்கு பக்கத்துல எங்கேயாவது திரையரங்கில் வந்தால்ப் பாருங்க, அமர பாரதி! :)

arun said...

Deepavali In Tamil...

வருண் said...

ஆமா, அந்தப் படத்துல ஹீரோயினுக்கு (பாவனா?) இது மாதிரித்தான் ஏதோ ஆகும் இல்ல? :-)

அமர பாரதி said...

பார்க்கிறேன் வருன். இல்ல, ஹாலிவுட் தமிழ் படத்த காப்பியடிக்குதுன்னு சொல்லலாமா?

வருண் said...

நம்ம இயக்குனர்கள் ஹாலிவுட் படங்கள் பார்க்கிற அளவுக்கு ஹாலிவுட் இயக்குனர்கள் தமிழ்ப் படம் பார்ப்பதில்லை என்பது என் நம்பிக்கை மட்டுமல்ல பொதுவாக எல்லோருடைய நம்பிக்கையும்கூட. ஆனால் எதையும் நான் அடித்துச் சொல்வதற்கில்லை. I will have to show something else, right here. Let me go fish something out and come back and write another response here. :-)

வருண் said...

//For those of you who have not seen Endhiran, it is a cross between The Terminator, The Sound of Music and every Steven Segal movie ever made. Upon seeing this movie, Academy Award-winning director Oliver Stone described it as “original and fresh” which we all know is just a polite way of saying “WTF have I just watched?! MY EYES….THEY BURN!”

The West is clearly not ready for this level of awesomeness, Hollywood: 0 Rajanikanth: 1.

—Gajen Kanesarajah. Stay updated on Gajen’s articles via facebook or follow him on twitter @Mystic_Tamil///

I really got irritated when I happened to read this in "rathi's blog" சினிமா அபத்தங்களும், அபத்த சினிமாக்களும்! http://lulurathi.blogspot.com/2012/01/blog-post_31.html
--------------

I did not want to make a mess in her blog and so I let this Gajan get away with his bullshit.

Now, you triggered me to talk about this.

I am going to use bad language here especially on this MORON called Gajan Kanesarajah! So, get ready!

He can certainly criticize Tamil movies and clips, I dont see anything wrong with it.

What is bothering me is, this Gajan is speculating WHAT OLIVER STONE really meant. That is OUTRAGEOUS! How does this mother fucker know what OLIVER STONE really meant?? Did he talk to him in PERSON?? I am really SERIOUS here! He cant just say some bullshit and say, that is what Oliver Stone really meant.

My question here are to the Gajan!

* 1) First of all why the fuck OLIVER STONE HAD to go watch ENTHIRAN?

* 2) No one forced him as far as I know. Even if he is forced/invited to watch it, he could have said that "I need to jerk off" and I dont have time for it.

* 3) Does not he anything else better to do instead of watching enthiran, like jerking off???


Anyway, I mean, all we have is, BIG MOUTH trash-talking mother fuckers like Gajan to interpret or misinterpret even casual remarks by Hollywood "biggies".

அமர பாரதி said...

Varun,

//ஹாலிவுட் தமிழ் படத்த காப்பியடிக்குதுன்னு சொல்லலாமா?// I write this for fun only was a bit sarcastic. ;-)

Mystic Tamil said...
This comment has been removed by the author.