இந்தியா முன்னேறுகிறது! எங்கே பார்த்தாலும், காரு, ஃப்ளாட், வேலைவாய்ப்பு, இணையதளம், டாஸ்மாக் தண்ணி னு எல்லாமே அதிகமாகிப் போயிக்கொண்டு இருக்கு! ஆளாளுக்கு ஒரு செல் ஃபோன் வச்சுக்கிட்டு தன் பொன்னான நேரத்தை செல்ஃபோன்ல பேசியே வீணடிக்கிற அளவுக்கு முன்னேறி இருக்கிறது.
கேள்ர் ஃப்ரெண்டு, பாய் ஃப்ரெண்டு, காசுவல் செக்ஸ், ப்ரி மாரிட்டல் செக்ஸ், அடல்ட்டரி எல்லாம் தப்பே இல்லை, இதெல்லாம் எதுக்கு பெருசுபடுத்திக்கிட்டு னு பேசுற அளவுக்கு முன்னேறிடுச்சு இந்தியா.
நம்ம ஞாநி, காதலர்களுக்கு செக்ஸ் வச்சுக்க பார்க்ல ஏதாவது வழி செய்யனும், பாவம் இடம் கெடைக்காமல் ரொம்ப கஷ்டப்படுறாங்கனுகூட ஒருதர காதல்ர்கள் தினத்தின் போது ஏதோ எழுதினாரு.
ஆனால், இப்படி ஒரு பக்கம் முன்னேறிக்கொண்டு போகிற பாரதம் கெட்ட நடத்தை, கொலை கொள்ளை, கற்பழிப்பு, விபச்சாரம், ஏமாற்று போன்ற இன்னொரு பக்கத்திலும் முன்னேறிக்கொண்டுதான் இருக்கும்! அதையும் நம்ம புரிந்து கொள்ளனும்.
அந்த முன்னேற்றத்தை மக்கள் உணரும் தருணம் இதுபோல் கொலை நடக்கும்போதுதான்! கொஞ்சம் குதர்க்கமாகச் சொன்னால் ஒரு மாணவன் ஆசிரியையை (ஆசிரியரை அல்ல!) குத்திக் கொலை செய்யும் அளவுக்கு இந்தியா முன்னேறியிருக்கிறதுனு சொல்லலாம்!
ஆமா, யாரு மேலே தப்பு?
மாணவனை கஷ்டப்படுத்திய ஆசிரியர் மேலேயா?
இல்லை மாணவனை இப்படி வளர்த்துவிட்ட பெற்றோர் மேலேயா?
இல்லைனா கொலை செய்த மாணவன் மேலேயா?
நான் எதுவும் சொல்றாப்பிலே இல்லை!
ஆனால் இதே போல கொஞ்ச வருடம் முன்னாள் ஒரு மாணவியை ஆசிரியர் மற்றும் அவங்க தரப்பு திருடியாதச் சொல்லி "பொய்க்குற்றம் சாட்டி" அவமானப்படுத்தியதால் அந்த ஏழை மாணவி தற்கொலை செய்துகொண்டாள். அந்தத் துயரம் நடந்ததுக்கும் ஆசிரியர்தரப்பு மேல்தான் குற்றம் சாட்டப்பட்டது.
இப்போ நடந்துள்ள இந்த கொலை சம்மந்தப்பட்ட கேஸிலும் இரக்கமில்லாதவர்கள் பலியான ஆசிரியர் மேல் குற்றம் சாட்டலாம்தான்!
அமெரிக்காவில் யுனிவேர்ஸிட்டி ஆஃப் லாஸ் ஏஞ்சல்ஸ் ல ஒரு வேதியில் பேராசிரியரின் கீழ் வேலை செய்த இள அறிவியல் மாணவி சில வருடங்கள் முன்னால் பரிதாபமாக ஆய்வக விபத்தில் இறந்தாள்! டெர்ஸியரி ப்யூட்டல் லித்தியம் என்கிற ஒரு "ரியேஜண்ட்"டை பெரிய அளவில் -அருகில் யாரும் இல்லாதபோது, ஒரு விடுமுறை நாள் அன்று- பயன்படுத்தி, அது தீப்பிடிச்சு, இவள் ஆய்வக அணிவுடை (தீப்பிடிக்காத லாப் கோட்) அணீயாததால் இவள் அணிந்திருந்த ஸ்வெட்டரில் தீப் பிடித்து, பிறகு உடம்பெல்லாம் தீப்பிடித்து எரிந்து பரிதாப மாக இறந்தாள் (தீக் காயங்களால்).
இப்போ அந்த பேராசிரியருடைய கவனக்குறைவாலதான் இவள் இறந்ததாக அந்தப் பெண்ணின் தாய் தந்தையர் இவர் மற்றும் யுனிவேர்ஸிட்டி மேலே கேஸ் போட்டு, அது "ட்ரயலு" க்கு போகும் நிலையில் இருக்கு. இந்த பேராசிரியர் கவனக்குறைவால்தான் அவள் இறந்தாள்னு என்று சட்டம், ஜூரி, கோர்ட் முடிவு செய்தால், இந்தப் பேராசிரியருக்கு, 4 வருடங்கள் வரை சிறைத்தண்டனை கெடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
கீழே உள்ள பதிவில் இதைப்பற்றி எழுதியிருக்கேன். இந்த நிகழ்வு நடந்து சில மாதங்களில்..
நல்ல நெருப்பும், கெட்ட நெருப்பும்! (உண்மைக்கதை)
அதனால் ஆசிரியர் வேலை எல்லாம் அபாயமில்லாதது என்பதெல்லாம் இன்றைய நிலையில் உண்மையல்ல! ஆமா, இந்தியாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி!`
நவீன இந்திய ஆசிரியகளுக்கு..
பழைய இந்தியாவில்..
* வாத்தியார் மாணவனை அடித்தால் தப்பு இல்லை! அவன் நன்மைக்காகத்தானே அடிக்கிறார்னு ஒரு சில பெற்றோர்களே நல்லா அடிக்கச் சொல்லுவாங்க!
* அடியாத மாடு படியாது னு ஒரு சில வாத்தியார்கள் மட்டுமல்ல பெற்றோர்களும் நம்பியதும் உண்டு!
ஆனால் இன்னைக்கு நவீன இந்தியா மாறிக்கொண்டு வருகிறது. அதற்கேற்ப ஆசிரியர்களும் தங்களை மாற்றிக்கொள்ளனும் என்பதை கவனத்தில் கொள்ளத்தான் இதுபோல் ஒரு பரிதாபமான் நிகழ்ச்சி நடந்துள்ளது. ஒரு ஆசிரியர், ஒரு மன நலம் பாதிக்கப் பட்ட மாணவனை சரியாக எடைபோடாததால, கவனக்குறைவாக இருந்ததால பலியாகியுள்ளார்.
என்ன பயங்கரம்! தப்புத்தான். நீங்க கடவுளுக்கு சமம்தான். ஆனால்..மாணவனை அடிக்கிறது, சரியாப் படிக்கிறதில்லை என்பதால் உங்களுக்கே தெரியாமல் அவனை அவமானப் படுத்துறது எல்லாம் சட்டப்படி குற்றம். அதையெல்லாம் ஆசிரியர்கள் விட்டுத் தொலையனும். அவன் நல்லாப் படிக்கலைனா அவன் தலையெழுத்து! அவனுக்கு உதவி செய்யனும்னா அவனை நீங்க "ஊக்குவிக்கனும்". அப்படி எதும் செய்ய முடியலைனா மூடிக்கிட்டு இருங்க! அவன் படிக்கலைனா அவந்தான் பாதிக்கப்படப்போறான். நீங்க ஏன் போட்டுக்கிட்டு, சும்மா என்னவோ அவன் படிக்கலைனா உங்க குடிமுழுகிப் போறாப்பிலே?
அப்புறம் இன்றைய நவீன பெற்றோர்களுக்கு!
படிக்கிற பிள்ளைக்கு என்ன பிரச்சினை? அவனுக்கு என்ன தேவை? அவன் "ஐ க்யு" லெவெல் என்ன? அவனால் என்ன படிக்க முடியும்? என்ன முடியாது? னு அன்றாடம் கவனிக்க எல்லாம் பெற்றோர்களான உங்களுக்கு நேரமில்லைனா என்ன எழவுக்குடா பிள்ளை உங்களுக்கு? இந்தியா ஜனத்தொகைதான் பெருகிக்கிட்டே போகுதே? நீங்க பேசாமல் பிள்ளை எல்லாம் பெற்றுக்காமல் புருஷனும் பெண்டாட்டியும் சந்தோஷமா இருக்க வேண்டியதுதானே?
இன்னைக்கு, 15 வயது மாணவர்கள் போர்னோக்ராஃபி பார்க்கிறாங்க! பலவகையில் மோசமான "எக்ஸ்போஷர்" அவங்களுக்கு கெடைக்கிது! ஆனால் பெற்றோர்கள் (நீங்கதான்) எல்லாம் சம்பாதிப்பதில் ரொம்பவே பிஸியா இருக்கீங்க. பெற்றோர்களில் சிலர், கெடைக்கிற நேரத்தில் அவங்க சந்தோஷத்துக்கு போர்ன் பார்ப்பதில் இருந்து நாகரீகமாக குடிப்பதில் நேரத்தை செலவளிக்கிறாங்க! அடல்ட்ஸ்தானே? இதில் என்ன தப்பு? அடல்ட்ஸ்க்கு நெறையாப் பொறுப்பு இருக்கு! இது மாதிரி சில்லரை வேலை எல்லாம் செய்யும்போது அது குழந்தைகள் பார்வைக்கு எட்டாமல் செய்யனும்கிற பெரிய பொறுப்பு!
எனக்குத் தெரிய ஒரு 14 வயதுப் பெண் தன் பெற்றோர்கள் வேலையில் இருக்கும்போது தன் வீட்டிற்கு படிக்க வந்த தன் தோழிகளை தன் அப்பாவின் பெட் ரூமுக்கு அழைத்துச் சென்று அவள் பெற்றோர்கள் பார்க்கும் அடல்ட் மூவியைத் தன் தோழிகளைப் பார்க்கச் செய்து இருக்கிறாள். இதே சென்னையில்தான்! நம்ம ஊரில் இந்த அளவுக்கு படித்த பெற்றோர்கள் பொறுப்பில்லாமல் இருக்காங்க!
அப்புறம் ஒருத்தரு, நவீன எழுத்தாளரு அவரு தளத்தில் எழுதுறாரு, அது ஒரு ஜோக்காம்! நெஜம்மாவே எனக்கு சொல்லவே கஷ்டமாயிருக்கு! பெற்றோர்கள் உடலுறவு செய்யும்போது சின்னப்பய்யன் (மகன்) உள்ள வந்துட்டானாம்! இதுபோல ஒரு சூழலைச் சொல்லி ஒரு கழிவான ஜோக்! தமிழ் இணையதளத்தில்தான்!! எதுக்கு? ஒரு 1000 ஹிட் அதிகமாக் கிடைக்க? 18+ போடத்தவறிய இதை எத்தனை நூறு அரைவேக்காட்டு சிறுவர்கள் வாசிக்கிறாங்களோ! இதுபோல் ஒரு குடும்ப சூழல்ல ஜோக்!!! கேட்டால், இந்த மாதிரித்தான் உலகம் இருக்குனு சொல்றானுக! ஏன்யா இதெல்லாம் ஒரு ஜோக்கா? கேவலமாயில்லை? னு கேட்டால், நீ ஏன் மெண்டல் மாரி டென்ஷனாகிற? இந்த மாரி பொறுப்பில்லாத அப்பா அம்மாதான் இன்னைக்கு இந்தியாவில் இருக்காங்கனு சொல்லி சிரிக்கிறாங்க!
அது சரி, அப்போ, இது மாதிரி கொலைகளையும் சாதாரணமா எடுத்துக்க வேண்டியதுதான். சும்மா குய்யோ முறையோ னு எதுக்கு கத்திக்கிட்டு?
இன்றைய பெற்றோர்கள் இதுபோல் பொறுப்பில்லாமல் இருந்தால், இன்றைய மாணவன், கொலை செய்வான், நாளைக்கு டீச்சரை கற்பழிப்பான்! ஆமா, இதுதான், பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் தன் எழுத்துத் திறமையால் உருவாக்கப்போகும் இந்தியா! எல்லாத்தையும் பார்த்துட்டு மூடிக்கிட்டு போயிட்டே இருங்க. ஆமா, எதுக்கு ஒப்பாரி எல்லாம் வச்சுக்கிட்டு? பேசாமல் இல்லாத இந்தியாவ கற்பனையில் காதலிச்சு வாழ்ந்துக்கிட்டு போவீங்களா?
4 comments:
யார் புலம்பி என்ன ஆகப்போகிறது? எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணவே பயமாக இருக்கு.
வணக்கம் நண்பரே!
இறந்த ஆசிரியைக்கு நம் அஞ்சலி!!!!!!
உலகின் பல பகுதிகளில் நடந்த ஒன்று நம் அருகே நடந்துள்ளது.
உலகம் எவ்வழி,இந்தியாவும் அவ்வழியே!!!!!!!!.
பிற நாடு,வீடுகளில் நடப்பது நம் நாடு,வீடுகளில் நடக்கது என்பதற்கு யாரும் உத்தரவாதம் தர முடியுமா?
இச்செயலுக்கு பல் காரணங்களை சொன்னாலும் இம்மாதிரி சம்பவங்களை இனிமேல் தடுக்க,தவிர்க்க நம் அரசு,கல்வித்துறை,பெற்றோர்,பள்ளிகள் ஏதாவது செய்யுமா,முடியுமா என்பதுதான் விடை தெரியா கேள்வி
இனிமேல் மாணவர்கள் படித்தாலும் படிக்காவிட்டாலும் கடமைக்கு பாடம் எடுத்துவிட்டு சென்றுவிடுவதுதான் ஆசிரியர்களுக்கு நல்லது. சினிமா, இணையம் என்று எங்கும் ஆபாசமும் வன்முறையும் நிறைந்து காணப்படும் சூழ்நிலையில் அதை பல பெற்றோர்களும் ஆதரிக்கும் நிலையில் இளைய தலைமுறையிடம் ஆசிரியர்கள் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
வருகைக்கும், தங்கள் கருத்துக்கும் நன்றி, பழனி.கந்தசாமி சார், சார்வாகன் & ராபின்! :-)
Post a Comment