Wednesday, February 22, 2012

பிரபல பொறம்போக்குகளுக்கு சில கேள்விகள்!

நான் இங்கே "பிரபல" பதிவர்கள் பத்தி எழுதலை, அதனால நீங்க பிரபலப்பதிவர்னு நீங்களே நெனச்சுக்கிட்டு இருந்தாலும், இல்லை உலகம் உங்களை அப்படி நினைத்தாலும், இல்லை அதுதான் உண்மை என்றாலும், நீங்க தவறாக புரிஞ்சுக்கிடாதீங்க. நான் பிரபலங்கள் பத்தி எழுதுறேன்! உங்களைப் பத்தி இல்லைங்க! அதாவது பிரபல நடிகர்கள், நடிகைகள், எழுத்தாளர்கள், விமர்சர்கள் இப்படி வகையறாக்களைப் பத்தி.

மதிப்பிற்குரிய பிரபலங்களே!!!

நீங்க ஒரு பெரிய எழுத்தாளர், இல்லை பிரபல நடிகர், இல்லை பிரபல விமர்சகர்தான் உங்களுக்குனு ஒரு தரம் தகுதி எல்லாம் இருக்கு, உண்மைதான். முக்கியமாக உங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்காங்க என்பதால் நீங்க பிரபலம்னு நாங்களும் முழுமனதாகவோ இல்லை அரைமனதாகவோ ஒத்துக்கிறோம்!

நமக்குக்கிடைத்திருக்கிற பதிவுலக சுதந்திரத்தால் இன்றைய பதிவுலகில் யாரு வேணா யாரை வேணா எப்படி வேணா விமர்சிக்கலாம் என்கிற நிலை வந்துயிருக்கு. அதனால் உங்களைப் பத்தி தவறான ஒரு செய்தியை தகுதியே இல்லாத ஒரு வம்புப் பதிவர் எழுதுறதெல்லாம் இந்தக் காலத்தில் ரொம்ப சகஜம்தான். ஆனால் அந்தப் பதிவில் உள்ள உண்மை மற்றும் பொய்கள் எதுவென்று உங்களுக்கு மட்டும்தான் தெரியும்.

சப்போஸ், அப்படி ஒரு பதிவர் உங்களைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் எழுதுறாருனு வச்சுக்குவோம். அதோட அந்தப் பதிவர் "அனானி"களை அந்தத்தளத்தில் கருத்துச் சொல்ல விடுவதில்லை! உங்க நண்பரோ, மனைவியோ, இல்லை உங்களைப் பிடிக்காதவரோ அந்தப் பதிவை படிச்சுப்புட்டு, வந்து உங்ககிட்ட சொல்லிப்புடுறாக. நீங்கதான் பெரிய ஆளாச்சே. இப்படி பொய்த் தகவல் கொடுத்ததால் ஏற்படும் அவதூறை நெனச்சு ரொம்பக் கோவப்படுறீங்க. கோபத்தில் அந்தத் தளத்துக்கு வந்துடுறீங்க. இந்த ஒரு சூழ்நிலையில் நீங்க "எதிர் கருத்து" சொல்லத் துடிக்கிறீங்க. இப்போ நீங்க, நீங்களாவே "இதெல்லாம் தவறான செய்திப்பூ!" னு எடுத்துச் சொல்லலாம். அப்படிச் சொல்ல உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. உங்க உரிமை மதிக்கப்படும், நிச்சயம் பறிக்கப்படாது! பொதுவா ஞாநி அதுபோல் செய்றதுமாரித் தெரியுது.

உங்களைப்பற்றி அவதூறு எழுதிய வலைதளத்துக்கு நீங்க வர்றீங்க! உங்க உண்மையான பெயரை, அதாவது, கமல்ஹாசன், ரஜினிகாந்து, விஜய்யி, ஜெயமோகன், சாரு நிவேதிதா, ஞாநி, எஸ் ராமகிருஷ்ணனு உங்களை நீங்க அந்த வலைதளத்தில் காட்டாமல், ஒரு குப்பன், சுப்பன் இல்லைனா ஏதோ ஒரு பொறம்போக்குப் பேரை வச்சுக்கிட்டு இன்னொரு "ஐடெண்ட்டிட்டி" ல வர்ரீக . வந்து விவாதிக்கிறீங்க, சண்டையே போடுறீங்க!

இப்போ, நீங்க சொல்ற கருத்தில் 100% உண்மைதான் இருக்கு. ஆனால், தங்களை நீங்கள் யாருனு அடையாளம் காட்டிக்கவில்லை! நீங்க உள்ளே களத்தில் இறங்கி அடித்துச் சொல்றீங்க, அப்படி எல்லாம் நடக்கவில்லை னு. இந்த இடத்தில் நீங்க எவ்ளோ பெரிய ஆளாயிருந்தாலும், ஒரு சாதாரண பொறம்போக்கு ஐ டில வருவதால் உங்க கருத்துக்கு மதிப்புக் கொடுக்கப்படுவதில்லை. அப்புறம் நீங்க உள்ளே இறங்கி விசயத்தை விளக்கும்போது உங்களை நீங்களே கொஞ்சம் அடையாளம் காட்டிப்புடுறீங்க. இதெப்படி இந்தாளுக்கு "மேற்படியாருடைய" தனிப்பட்ட பிரச்சினையெல்லாம் இவ்ளோ விலாவரியாத் தெரியுது? னு யோசிக்க வைக்குமளவுக்கு. இவரு உண்மையிலேயே பொறம்போக்கு சுப்பன் தானா? இல்லை சும்மா பொறம்போக்கு வேடம் தரித்து வந்த "இன்னாரா"?னு சந்தேகம் வந்து புடுது. கவலைப் படாதீங்க! வெறும், சந்தேகம்தான், அதை வச்சு ஒண்ணும் பண்ண முடியாதுதான். ஆனால் உங்களுக்கு மனசாட்சி மனசாட்சினு ஒண்ணு இல்லையா? என்ன?? சரி, ஒவ்வொருவருடைய மனசாட்சியும் வேற வேறமாரி செய்லபடலாமா? அது சரிதான்.

எனிவே, "பொறம்போக்கு" ஐ டி ல வர்ர, "பிரபலம்" உங்களுக்கு சில கேள்விகள்!

* இணையதளம் தவிர, சாதாரண உலகில் இதை நீங்க செய்றது கொஞ்சம் என்ன ரொம்பவே கஷ்டம். இணையதளத்தில் மட்டும்தான் இப்படி இன்னொருவர்போல வந்து உங்களுக்காக நீங்களே வாதாட முடியும். இல்லையா?

* நீங்க செய்ற இந்தக் காரியம் உங்க மனசாட்சிக்கு சரினு தோனுதா? இது ஒரு கீழ்த்தரமான செயல் இல்லையா?

* இது மாதிரி செய்வது பெரிய மனுஷனுக்கு (பிரபலங்களுக்கு) அழகா? அப்புறம் உங்களுக்கு முதுகெலும்பு இல்லைனு நான் சொல்லலாமா?

ஏன் இந்தக் கேள்விகள்? எதுக்கு இந்த வெட்டிப் பேச்சு??

ஒரு சில பிரபலங்கள் இணையதள பதிவுலகில் மாறுவேடத்தில் திரிவதாக ஆதாரப்பூர்வமான தகவல்கள் கெடச்சி இருக்கு. இந்த பிரபலங்கள் தாங்கள் தாக்கப் படும்போது சுப்பனாகவோ, சொக்கனாகவே வந்து இஷ்டத்துக்கு வார்த்தை ஜாலங்களை அள்ளிவிடுவதாக நம்பப்படுகிறது. ஒருவேளை இந்தப் பதிவையும் அந்த மாதிரிப் பொறம்போக்கு பிரபலம் வாசிக்கலாம். அவங்களுக்குத்தான் இந்த மெசேஜ்! அப்படி இன்னொருவர்போல வந்து தனக்காக விவாதம் செய்றது எல்லாம் ரொம்பக் கீழ்த்தரமான செயல்னு பொறம்போக்குப் பிரபலங்ககிட்ட சொல்லிப்புடனும்னுதான் இந்த கேள்விகள், பதில்கள், இந்தப் பதிவு எல்லாமே!

9 comments:

ILA(@)இளா said...

//முக்கியமாக உங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்காங்க//
என்ன ஒரு 300 பேர் இருப்பாங்களா?

துரைடேனியல் said...

நல்லவனுக்கு நாலைந்து ஐ.டி எதுக்கு? ஒரு தளமும் ஒரு ஐ.டி யும் போதாதா? என்ன கூட ஒரு தளம் வச்சிக்குரலாம். ஆனால் நாலைந்து எதுக்கு? நீங்க சொல்றது உண்மைதான் சகோ. பதிவுலகில் தங்கங்களை விட கவரிங்குகள்தான் அதிகம்.

Avargal Unmaigal said...

நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மையாகதான் தெரிகின்றன சில வலைத்தளங்களை படிக்கையிலே வலைத்தளங்களில் போலிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கின்றன. சில வலைதளங்களில் நடக்கும் அடிதடிகளை பார்க்கும் போது அது உண்மையாகவே இருக்கிறது

Ramani said...

பொறம்போக்குகளின் பொய்ம்முகத்தை
மிக அருமையாக கிழித்தெறிந்தமைக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்

கவிதா | Kavitha said...

இதனால் நீங்க சொல்லவரும் கருத்து?

வருண் said...

***ILA(@)இளா said...

//முக்கியமாக உங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்காங்க//
என்ன ஒரு 300 பேர் இருப்பாங்களா?

22 February 2012 11:24 AM***

என்னங்க நீங்க, 300 னு ஒரு சின்ன # சொல்லிட்டீங்க? :(

வருண் said...

தங்கள் கருத்துக்கு நன்றி துரை டேனியல், அவர்கள் உண்மைகள் & ரமணி! :-)

வருண் said...

***Blogger கவிதா | Kavitha said...

இதனால் நீங்க சொல்லவரும் கருத்து?

22 February 2012 7:43 PM***

நம்ம நம்மளாவே இருக்கலாமே? ஏன் இன்னொருவர்போல வந்து நமக்காக நாமே வாதாடனும்னு சொல்ல வர்றேன்னு உங்களுக்குப் புரியலையா, கவிதா!!!! :)))

பரமசிவம் said...

உண்மையில் பரமசிவமாகிய நான் நானேதான்!
என் முகம் அழகாக இல்லை என்பதால்,
பெரிய அறிவாளின்னு காட்டிக்க ‘மூளை’ படம் போட்டுட்டேன்!
நான் செஞ்சது தப்பு இல்லீங்களே?