Thursday, February 2, 2012

உங்களோட கூட்டணி வச்சதுக்கு நாங்க வெட்கப்படுறோம்!

என்னபபா இது, தமிழ்நாட்டு அரசியல் எல்லாம் உப்புச் சப்பு இல்லாமல் இம்பூட்டுக் கேவலமா இருக்கு! ஒரு 10 வயது சிறுவன் சொல்லிடுவான், "இன்னைக்கு இந்த அரசியல் தலைவர் இப்படிச் சொல்லுவாரு, ஆனால் இதே தலைவர் நாளைக்கு வெற்றியடஞ்ச உடனே அப்படியே மாத்திப் பேசுவாருனு! "

இந்த மாதிரி இருக்கிற அரசியல் தலைவர்களை நம்ம அரைவேக்காடுகள், "இவங்கதான் அரசியல் சாணக்கியர்கள் அது இதுனு "எதையாவது சொல்லி உளறிக்கிட்டு திரிவானுக! இப்படி அரசியல் சாணக்கியன் பட்டம் கொடுக்க ஒரு வெட்டிக்கூட்டம்!

ஆட்சியைப் பிடிக்க முன்னால இந்த அம்மா, எங்க கூட்டணி தரமான அசைக்க முடியாத கூட்டணி அது இதுனு பேசினாரு. சரி, சொன்னது சொல்லியாச்சு, சொன்னதை அப்படியே விட்டுத் தொலைய வேண்டியதுதானே?

இப்போ ஒரு பிரச்சினையினு வந்ததும் சிறுபிள்ளைத்தனமாக "இவங்க இல்லாமலே நாங்க வெற்றியடஞ்சி இருப்போம், இது இவங்களுக்கு நான் போட்ட பிச்சை, கட்சி முடிவெடுத்தாலதான் நான் சேர்ந்தேன், எனக்கு எப்போவுமே தே மு தி கவுடன் கூட்டுச் சேர இஷ்டமில்லை! "னு எதுக்கு வெவஸ்தைகெட்டதனமா சொல்லிக்கிட்டு? இதெல்லாம் ரொம்பக் கேவலாமாயிருக்குங்க ! யாருக்கு? உங்களுக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்குத்தான்! என்ன என்ன? "நீங்க வேற, அவனுக முட்டாப் பசங்க, எல்லாத்தையும் உதிர்த்தவனுகனு சொல்றீங்களா?" அது சரிதான்!

ஒருவேளை தோல்வியடைஞ்சி இருந்தாலும், விஜய்காந்து எம் எல் எ வேட்பாளரைப்போட்டு அடிச்சதாலேதான் நாங்களும் தோற்றோம்னு சொல்லியிருக்கும்! அப்போவும் விஜய் காந்துக்கு "க்ரிடிட்" கொடுக்கபடும்! இதுவும் ஒரு 10 வயதுக் குழந்தைக்குக்கூடத் தெரியும்!

கூட்டணி எல்லாம் நிலையானது இல்லைதான். தேர்தல், வெற்றி எல்லாம் முடிஞ்சதும், ஆளுங்கட்சி, எதிர் கட்சினு ஆயிப்போச்சு, சரி! அவன் அவன் கடமையைச் செய்யனும், அதுவும் சரி! இன்னைக்கு நிலைமையில் எதிர் கட்சி பிரச்சினையை கிளப்பினால், அதற்கு ஒழுங்கா பதில் சொல்லனும் இல்லைனா விட்டுட்டு போயிகிட்டே இருக்கனும்! அதைவிட்டுப்புட்டு சும்மா என்னாலதான் உனக்கு 27 தொகுதி கெடைச்சதுனு கேவலமா ஒரு அறிக்கை! உடனே அவரு, இந்தம்மாவோட நான் கூட்டு வச்சதே தப்பு னு, எதிர் வாதம். இப்போ என்ன எழவுக்குப்பா பழசைப்போட்டு கிளறி எடுக்கிறீங்க?

உண்மையச் சொல்லப்போனால், ஜெயலலிதா வெற்றிக்கும், விஜய் காந்த் வெற்றிக்கும் காரணம் யாரு?

எல்லாருக்கும் தெரியும் நம்ம தானைத் தலைவர்தான், இவங்க வெற்றிக்கு வழி வகுத்ததுனு! அப்படியிருக்கும்போது ஏன் இதுக ரெண்டும் ஏன் ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிட்டு, உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டனு உளறிக்கிட்டு? நம்ம தானை தலைவருக்கு தெனமும் ஒரு மாலையைப்போட்டு வணங்குவாங்களா!!

ஆமா நம்ம "அரசியல் மாமா", சோ மாரிச்சாமி "துக்குஃபக்குளக்கு"ல என்னப்பா சொல்றாரு இப்போ? தமிழ்நாட்டு அரசியல் கூத்து பத்தியெல்லாம் கண்டுக்காம எதையாவது அன்னா ஹாசாரே, இல்லைனா காங்கிரஸ் பத்தி எழுதிக்கிட்டு திரிவான் அந்தப் பார்ப்பனப் பொறம்போக்கு!

தரகு வேலை செஞ்சு ஜெ-யையும், வி-காந்தையும் ஒண்ணு சேர்த்துவிட்டு ஜெயிச்சதுக்கப்புறம், வேலை முடிஞ்சதா?? இன்னைக்கு அடிச்சுக்கிட்டு நாறும்போது யாரு சொல்றது சரி, யாரு சொல்றது தப்பு னு சொல்லுய்யா அரசியல மாமா!!!

2 comments:

ராஜ நடராஜன் said...

இங்கே ஒருத்தரையும் காணோமின்னுட்டுதான் அங்கே வந்து காய்ச்சுனிங்களாக்கும்:)

முதலில் சூரியன் அமெரிக்காவுல உதிக்கிறமாதிரி பூமியை மாத்திடனும்.ஏன்னா மற்ற பதிவர்கள் சன் டிவி,நக்கீரன் காணொளியெல்லாம் பார்த்துட்டு பதிவும் போட்டு,சூடாகவும் வந்து உட்கார்ந்த பின்னாடி நீங்க தூங்கி எழுந்து சாவகாசமா வந்து பதிவு போடுறீங்க.

வருண் said...

***ராஜ நடராஜன் said...

இங்கே ஒருத்தரையும் காணோமின்னுட்டுதான் அங்கே வந்து காய்ச்சுனிங்களாக்கும்:)***

அப்படியெல்லாம் கெடையாதுங்க. எப்போவாவாது யாரிடமாவது விவாதம் பண்ணத் தோனும். ஆரம்பிச்சா அது எழு கடல்தாண்டி ஏழுமலை தாண்டி, சூராவளியாகித்தான் நிக்கும்!!

இன்னைக்கு நீங்கதான் அந்த அதிஷ்டசாலி! :)))

----------------------

***முதலில் சூரியன் அமெரிக்காவுல உதிக்கிறமாதிரி பூமியை மாத்திடனும்.ஏன்னா மற்ற பதிவர்கள் சன் டிவி,நக்கீரன் காணொளியெல்லாம் பார்த்துட்டு பதிவும் போட்டு,சூடாகவும் வந்து உட்கார்ந்த பின்னாடி நீங்க தூங்கி எழுந்து சாவகாசமா வந்து பதிவு போடுறீங்க.***

ஒரு சில நேரம் நிதானமாத்தான் எழுதத்தோனும். இந்தப்பதிவை, அம்மா, விசய்காந்து, சோமாரிசாமி போன்றவர்கல் படிச்சாப்போதும், பாருங்க!