Thursday, August 9, 2012

எது அருவருப்பான வேலை?

தனக்கு எவ்வளவு மாதச்சம்பளம்னு யோசித்துப் பார்த்தான் பிரகாஷ்! சமீபத்தில் மிகப்பெரிய போனஸ் ஒண்ணு கொடுத்தாங்க அவன் சாதனைக்கு. ஆனால் அவன் செய்ற வேலைய நெனச்சா அவனுக்கே குற்றவுணர்வா இருந்துச்சு. படிச்சு வந்து சமூகத்துக்கு அவன் உதவுறானா? இல்லை படிச்சு வந்து சமூகத்தை பாழாக்கிறானா? அவனுக்கு பதில் தெரியும்! நான் செய்யலைனா இன்னொருத்தன் செய்யப்போறான்? னு அவனுக்கே அவன்  சொல்லும் சமாதானம் எல்லாம் இப்போ அவனிடமே எடுபடவில்லை!

சாக்கடை அள்ளுறதெல்லாம் புனிதமான வேலை! என்ன இருந்தாலும் அவர்கள் அசுத்தத்தை சுத்தம் செய்றாங்க. ஆனா அந்தமாரி  நல்லவேலையைச் செய்ய நம்மாளுக எவனும் முன்வரமாட்டான்!  நம்ம ஊர்ல உயர்சாதி இந்தியனுக்கு என்னைக்குமே மூளை கெடையாது! இல்லாத கடவுளுக்கு ஓடி ஓடி சேவை செய்வான்! இதுபோல் நல்லவேலை செய்றவங்களை  கீழ்சாதினு கேவலப்படுத்துவான்!

ஆமா அசுத்தத்தை அகற்றும் அவங்களுக்கு எவ்வளவு சம்பளம்?
 சாக்கடை அள்ளுபவன்   சம்பளத்தை அதிகமாக்கினால் என்ன? மாதம் ரெண்டு லட்சம், ஏன்  ஐந்து லட்சம் இவர்களுக்கு சம்பளம் என்று ஆக்கினால் என்ன?! எவனுமே செய்யத் துணியாத ஒரு கஷ்டமான வேலைக்கு அதிக சம்பளம் கொடுத்தால் என்ன? சமுதாயத்துக்கு உதவிக்கொண்டே அவனும்  அவங்க  பிள்ளைகளை நல்லாப் படிக்க வைக்கலாம். அப்போத்தானே அவங்களும் நாளைக்கு ஒரு நல்ல படிப்புப் படிச்சு ஒரு உயர்தர வாழ்க்கை வாழ வாய்ப்வாவது அமையும்! இப்படியெல்லாம் நம்மாளு யோசிப்பானா?. இவனுக அசுத்தத்தை சுத்தம் செய்யனு ஒரு சாதியை உருவாக்கி அவர்களை சிறுமைப்படுத்தி பொழைப்பை ஓட்டும் கீழ்த்தரமானவனுகதான் இந்த உயர்சாதி  இந்தியர்கள்.

பிரகாஷ், தனக்குள்ளே பேசிக்கொண்டான்..நான் செய்யும் வேலையில் காமப் பசியைத்தான் தூண்டுறேன். அறியாச் சிறுவர்களை கெடுக்கிறேன். எவ்வளவு ஒரு கேவலமான தொழில் இது! நிச்சயமாக ஒரு வேசி செய்றதைவிட கேவலமான தொழில்!  ஆனால் இன்னும் வயித்துப்பொழைப்புக்காக அதே வேலையில்தான் இருக்கான், பிரகாஷ். யாருக்குத் தெரியப்போது பிரகாஷ், என்ன  தொழில் செய்றான்னு? அதையெல்லாம் வெளியே சொல்ல அவன் என்ன முட்டாளா?

அவன் படிச்சதென்னவோ சாஃப்ட் வேர் இஞ்சினியரிங்தான். இருந்தாலும் அவன் இன்று தான் என்ன தொழில் செய்கிறேன் என்று வெளிப்படையாக  யாரிடமும் தைரியமாகச் சொல்லமுடியாத நிலை. ஆமா இன்னைக்கு லட்ச லட்சமாக சம்பாரிக்கும் ஒரு சாஃப்ட்-போர்ன் -இஞ்சினியர்! அப்படினா? போர்ன்சைட் நடத்துறவங்களுக்கு வெப்-டிசைனர் மற்றும் தள அட்மினிஸ்ட்ரேட்டர்!

இந்த "புனிதமான வேலை" செய்துதான் பிரகாஷ் சமூகத்துக்கு உதவிக்கொண்டே லட்சலட்சமா சம்பாரிக்கிறான்! ஆனால் எத்தனை "சோப்" போட்டுக்குளிச்சாலும், எத்தனை "டீ-யோடரைசர்" பயன்படுத்தினாலும் அவன் நாற்றம் என்றுமே அவனைவிட்டுப் போனதில்லை!

41 comments:

தணல் said...

//நிச்சயமாக ஒரு வேஷி செய்றதைவிட கேவலமான தொழில்!//

வேசி செய்வதை ஏன் கேவலம்ன்னு சொல்லுறீர்? அப்படிக் காமம் விற்றுப் பிழைக்க வேண்டிய நிலைக்கு அவர்களைத் தள்ளியிருக்கும் சமூகத்தினர் அல்லவா கேவலம் என்று நினைக்கப்பட வேண்டியவர்கள்?

உடனே உன் அக்காவோ தங்கையோ இல்லை உன் வீட்டுப் பெண் யாராவது செய்தால் ஒப்புக்குவியா என்று கேட்பீர்கள். அதில் உடல்ரீதியான வன்முறை, எய்ட்ஸ் மற்றும் இதர பால்வினை நோய்கள் ஏற்படக் கூடிய சாத்தியம் அதிகம், சமூகத்தில் அவர்களுக்கு மரியாதையோ அங்கீகாரமோ இல்லை என்பதால் எனது குடும்பத்தினரோ அல்லது வேண்டப்பட்டவருக்கோ அப்படிப்பட்ட தொழில் வேண்டாம் என்றே நினைப்பேன். ஆனால் வயிற்றுப்பிழைப்புக்காக அதைச் செய்து கொண்டிருப்பவர்களை கேவலம் என்று நினைக்கவில்லை.

நிற்க, காமம் தூண்டப்படுவதை நானும் சரியென்று நினைக்கவில்லை!

//இவனுகளுக்கு மூளை இருந்தால் சாக்கடை அள்ளுபவன் சம்பளத்தை அதிகமாக்குவதற்கு என்ன? மாதம் ரெண்டு லட்சம், ஏன் ஐந்து லட்சம் இவர்களுக்கு சம்பளம் என்று ஆக்கினால் என்ன?! //

அமெரிக்காவில் என்ன நிலை? முழுக்க முழுக்க கருவிகளை வைத்தே செய்து கொள்கிறார்களா? இல்லை மனிதர்களை வைத்து என்றால் அவர்களுக்கு மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் சம்பளம் எப்படி?

வருண் said...

****தணல் said...

//நிச்சயமாக ஒரு வேஷி செய்றதைவிட கேவலமான தொழில்!//

வேசி செய்வதை ஏன் கேவலம்ன்னு சொல்லுறீர்? அப்படிக் காமம் விற்றுப் பிழைக்க வேண்டிய நிலைக்கு அவர்களைத் தள்ளியிருக்கும் சமூகத்தினர் அல்லவா கேவலம் என்று நினைக்கப்பட வேண்டியவர்கள்?

உடனே உன் அக்காவோ தங்கையோ இல்லை உன் வீட்டுப் பெண் யாராவது செய்தால் ஒப்புக்குவியா என்று கேட்பீர்கள். அதில் உடல்ரீதியான வன்முறை, எய்ட்ஸ் மற்றும் இதர பால்வினை நோய்கள் ஏற்படக் கூடிய சாத்தியம் அதிகம், சமூகத்தில் அவர்களுக்கு மரியாதையோ அங்கீகாரமோ இல்லை என்பதால் எனது குடும்பத்தினரோ அல்லது வேண்டப்பட்டவருக்கோ அப்படிப்பட்ட தொழில் வேண்டாம் என்றே நினைப்பேன். ஆனால் வயிற்றுப்பிழைப்புக்காக அதைச் செய்து கொண்டிருப்பவர்களை கேவலம் என்று நினைக்கவில்லை.***

சரி, பரிதாபமாக பலியாகி மாட்டிக்கிறவங்க, சந்த்ரப்ப சூழ்நிலையால், ஏழ்மையால் இப்படி ஆனவங்க போன்றவர்களை ஒதுக்கி வைத்துவிடுவோம்.

சமீபத்தில் ஒரு தெலுகு நடிகையையும் ஒரு கம்பெணி எம் டி யையும் ஒரு 5 ஸ்டார் ஓட்டல்ல பிடிச்சாங்க. அந்த ரூம்க்கு ஒரு நாள் வாடகை 20,000 மோ என்னவோ சொன்னாங்க. இதுபோல் சம்பாரிக்கிறவங்களும் வேசிதான். அவர்களும் பாவம்தானா? நான் இன்னும் அதுபோல் ஹோட்டலில் தங்கியதில்லை! "வேசி" எல்லாருமே நல்லவங்களோ சந்தர்ப்ப சூழ்நிலையால் வஞ்சிக்கப் பட்டவங்களா என்னனு தெரியலை எனக்கு. ஒரு சிலர் "கால் கேர்ளா" இருக்காங்க, "ஈஸி மணி"க்காக இப்படி எறங்குறவங்களையும் நம்ம மதிக்கனுமா?

இந்த "மாமாக்கள்" மற்றும் "பிம்ப்" கள் இருக்கானுகளே அவனுகளும் ஏதாவது சொல்லி தன் மனைவி தன்னை வஞ்சித்துட்டதா சொல்லுவானுக. அவங்களுக்கும் பரிதாபப்படலாம்.

இப்படியே போனோம்னா உலகத்தில் நீங்களும் நானும்தான் மட்டும்தான் கெட்டவங்கனு ஆயிடும், தணல். :)

வருண் said...

///Yamuna, along with a CEO of a software company and another man, suspected to be a broker, were arrested during a raid at 8:30 pm on Thursday by the women and narcotics wing of Central Crime Branch.
View slideshow: Yamuna actress photos, pics

Later the police said they had received information that the actress came in the city in the afternoon, and her client arrived at the hotel in the evening. The arrested were taken to the CCB office. Click here to view photo gallery.

After the raid, the joint commissioner of the police Alok Kumar Singh visited the hotel. When he enquired with the hotel authorities, the spokesperson of the hotel denied any raids and said that, the police had visited as a VIP party that was going on at the hotel.
Yamuna Telugu actress
Yamuna Telugu actress
Photo credit:
www.filmyfair.com

The police meanwhile are suspecting a high profile prostitution racket after the incident. Read more.

Her co-stars are in a state of shock and not ready to believe that the actress caught in a five star hotel was Yamuna.///

சொல்லுங்க, இவங்க ரெண்டு பேருக்கும் பரிதாபப்படுவோமா, தணல்?

வருண் said...

***இவனுகளுக்கு மூளை இருந்தால் சாக்கடை அள்ளுபவன் சம்பளத்தை அதிகமாக்குவதற்கு என்ன? மாதம் ரெண்டு லட்சம், ஏன் ஐந்து லட்சம் இவர்களுக்கு சம்பளம் என்று ஆக்கினால் என்ன?! //

அமெரிக்காவில் என்ன நிலை? முழுக்க முழுக்க கருவிகளை வைத்தே செய்து கொள்கிறார்களா? இல்லை மனிதர்களை வைத்து என்றால் அவர்களுக்கு மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் சம்பளம் எப்படி?***

எனக்கு இது பற்றி விளக்கம் சரியாத் தெரியவில்லை. ஆனால் நம்ம ஊர் மாரி இதுக்குனு ஒரு சாதி யாரும் உருவாக்கவில்லை. அந்த சாதிக்காரங்களை காலங்காலமாக "அப்யூஸ்' பண்ணவில்லை

வருண் said...

***இவனுகளுக்கு மூளை இருந்தால் சாக்கடை அள்ளுபவன் சம்பளத்தை அதிகமாக்குவதற்கு என்ன? மாதம் ரெண்டு லட்சம், ஏன் ஐந்து லட்சம் இவர்களுக்கு சம்பளம் என்று ஆக்கினால் என்ன?! //

அமெரிக்காவில் என்ன நிலை? முழுக்க முழுக்க கருவிகளை வைத்தே செய்து கொள்கிறார்களா? இல்லை மனிதர்களை வைத்து என்றால் அவர்களுக்கு மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் சம்பளம் எப்படி?***

பொதுவாக குப்பை லாரில வந்து கலக்ட் பண்ணுறவங்களுக்கு ரொம்ப நல்ல அவர்லி பே னு சொல்லுவாங்க. அந்த வேலை கிடைப்பதும் கஷ்டம். ஆனால் ஹவ்ஸ் கீப்பிங் பண்ணுறவங்களுக்கு எப்படினு தெரியலை. ஆனால் ஒரு பெரிய கம்பெணில வேலை பார்த்தால் நிச்சயம் ஹெல்த் இண்சூரன்ஸ் பெனிஃபிட்ஸ் எல்லாம் கவர் ஆகத்தான் செய்யும். :)

தணல் said...

//"வேசி" எல்லாருமே நல்லவங்களோ சந்தர்ப்ப சூழ்நிலையால் வஞ்சிக்கப் பட்டவங்களா என்னனு தெரியலை எனக்கு.//

வருண், கல்கத்தா மும்பை போன்ற நகரங்களில் மிகச் சிறிய அறைகளில் காமம் விற்றுப் பிழைப்பவர்கள், பதின் பருவத்திலேயே இத்தொழிலுக்கு உட்படுத்தப்படுவர்கள் போன்றவர்களே அனேகம்!

தனது திரைப்பட வாய்ப்புக்காக காமம் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் ஒரு நடிகை, அப்படி இசைந்தால் தான் அவருக்கு வாய்ப்பு அளிக்கக் கூடிய தயாரிப்பாளர்-இயக்குனர்-நடிகர் - இவர்களில் யார் குற்றவாளி? நடிப்புத் திறமையை, அதில் இருக்கும் ஈடுபாட்டை வைத்து நியாயமாக அவருக்கு வழங்கப்பட வேண்டிய வாய்ப்பு, காமத்துக்கு இசைந்தால் மட்டுமே வழங்கப்படும் என்றால், குற்றவாளி யார்?

நீங்கள் சொன்ன //சமீபத்தில் ஒரு தெலுகு நடிகையையும் ஒரு கம்பெணி எம் டி யையும் ஒரு 5 ஸ்டார் ஓட்டல்ல பிடிச்சாங்க.// உதாரணத்துக்கு வருவோம்! இவ்விடயத்தில் நாம் வேறுபடலாம்! As long as prostitution is not imposed on a person - be it either by gundas, her parents relatives, or societal causes (like poverty or the prior devadaasi type of subjugation), I would not consider it a crime! Its between them - one lends the body and the other pays for it. Still, I would argue for her if that man tries to hurt her in the process! I agree that things would be a lot different when viewed through his family's eyes.

Please note that this does not mean I am encouraging such things! What I am trying to say is, there are a lot of actual crimes including bribery that are going on affecting the poor and voiceless ones! Did you watch the movie 'Vaanam' by any chance?

// "ஈஸி மணி"க்காக இப்படி எறங்குறவங்களையும் நம்ம மதிக்கனுமா?//

என்னைக் கேட்டால், மதிக்கனும்மென்றோ மிதிக்கணுமென்றோ அவசியம் இல்லை! மேலே சொன்னது போல, one lends the body and the other pays for it. Its a business deal for them, as your company pays you for your brain! ஆனால், அப்படிப்பட்டவர்களுடன் என்னால் நட்பாக முடியுமா தெரியவில்லை. முன்பே தெரியவந்தால், எனது வீட்டை அப்படிப்பட்ட தொழில் செய்ய வாடகைக்கு விட மாட்டேன்! இதைத்தாண்டி, அவர்களை சமூகரீதியாக discriminate செய்ய விரும்பவில்லை! நீங்கள் சொல்லுங்க வருண், ஒரு வங்கியில் உயரதிகாரியாக இருக்கிறீர்கள், டாகுமென்ட்ஸ் எல்லாம் சரியாயிருக்கின்றன, அவர் ஒரு வேசி என்று உங்களுக்குத் தெரிந்திருக்கிறது, இப்படிப்பட்ட ஒருவருக்கு லோன் வழங்கவோ மறுக்கவோ உங்களால் முடியும் எனும் பட்சத்தில், என்ன முடிவெடுப்பீர்கள்?

வருண் said...

***As long as prostitution is not imposed on a person - be it either by gundas, her parents relatives, or societal causes (like poverty or the prior devadaasi type of subjugation), I would not consider it a crime! Its between them - one lends the body and the other pays for it.***

I dont think it is as simple as you think.

First of all it is ILLEGAL there in that Hotel in b'lore. They dont pay income tax for the transaction either. So, it is a crime!

தணல் said...

//பொதுவாக குப்பை லாரில வந்து கலக்ட் பண்ணுறவங்களுக்கு ரொம்ப நல்ல அவர்லி பே னு சொல்லுவாங்க. அந்த வேலை கிடைப்பதும் கஷ்டம். ஆனால் ஹவ்ஸ் கீப்பிங் பண்ணுறவங்களுக்கு எப்படினு தெரியலை. ஆனால் ஒரு பெரிய கம்பெணில வேலை பார்த்தால் நிச்சயம் ஹெல்த் இண்சூரன்ஸ் பெனிஃபிட்ஸ் எல்லாம் கவர் ஆகத்தான் செய்யும். :)//

Well, I don't think so, but I do not know much about this! I am making a guess because the pay here is mostly on skill basis! A freelance electrician may get paid more, say 50-100 bucks/hour, but these guys may not get that much! A play school teacher would get 10-15 bucks/hour, as some say it is not skill based!

தணல் said...

//First of all it is ILLEGAL there in that Hotel in b'lore. They dont pay income tax for the transaction either. So, it is a crime!//

Illegal when they don't pay the maamool, otherwise it would have been legal :-)

Even homosexuality is a crime in India! :-)

வருண் said...

***Well, I don't think so, but I do not know much about this! I am making a guess because the pay here is mostly on skill basis.***

I am not sure how you define "skills"

A garbage collector gets paid at least three times more than that of a bank teller. A plumber gets paid at least twice more than that of a lecturer (hourly pay).

தணல் said...

//I am not sure how you define "skills"//

Either you or me can collect trash or clean our rooms! But to create a software or to teach, the person should have skills for that, right!

//A garbage collector gets paid at least three times more than a bank teller.//

As I said, I am not sure about this! I do not know any such guy personally!

But I can tell this for sure, in a company, the guy who cleans the toilet may not get paid as much as the secretary there!

தணல் said...

//But to create a software or to teach, the person should have skills for that, right!//

I would also consider electric works and plumbing as skilled!

Thamizhan said...

அமெரிக்கவில் ஒரு நகைச்சுவை உண்டு.ஒரு கிழவி தனது கழிவறையில் அடைப்பு என்று நிபுனரைக்( Plumber )கூப்பிட்டார்.
அவர் தனது காரில் வந்து 5 மணித்துளிகளில் முடித்து விட்டு 150 டாலர் பில் கொடுத்தார்.அம்மையார் கோபமாக நீ என்ன நரம்பியல் சர்ஜன் என்று நினைப்பா என்று கேட்டார்.
ஆம், இதற்குமுன் நான் ஒரு நியூரோ சர்ஜன் என்றாராம்.

Jayadev Das said...

வடை, வாழைப்பழம், சுடு சோறு என்று பின்னூட்டம் போடும் பதிவுகளே அதிகம். ஆனால் நீங்க நல்ல அலசி ஆராயும் கூட்டமாகப் பார்த்து பிடித்து வச்சிருக்கீங்க!! எல்லோரும் நிறைய எழுதறாங்க, அதுவும் பதிவில் உள்ள விஷயங்களைப் பத்தி மட்டும். அந்த விஷயத்தில் வருண் நீங்க லக்கி.

CS. Mohan Kumar said...

வருண்: உங்கள் கமன்ட் ஒன்று எடக்கு மடக்கு பதிவில் வாசித்தேன். பலரையும் பற்றி மிக அருமையாய் அலசி ஆராய்ந்து உங்களுக்குள் வைத்துள்ளீர்கள். அதில் என் பற்றி நீங்கள் எழுதிய கருத்துக்கு மிக நன்றி. உங்கள் கமன்ட் வாசித்ததும் நானே அதுக்கு முன் அவசரப்பட்டு அங்கு கமன்ட் போட்டு விட்டேனோ என்று தோன்றியது

அங்கு சொல்லாத சில விஷயம் இங்கு சொல்கிறேன்:

ப்ளாக் ஒரு விதத்தில் நம்ம டைரி தான். மத்தவங்களுக்கு " பாருங்க நான் இதெல்லாம் செய்றேன்" என்பதை விட, நாளைக்கு நானே எடுத்து பார்த்து கொள்ளவும் தான் என்னை பற்றிய குறிப்புகள் வீடுதிரும்பலில் சற்று அதிகம் இருக்கும். ஆனால் இதனை ஓரளவு இனி குறைத்து கொள்ள வேண்டுமென நினைக்கிறேன்

தமிழ் மணத்தில் சிற்சில குறைகள் இருந்தாலும் நிச்சயம் மிக பாப்புலர் திரட்டி . எனக்கு இன்றைக்கும் வரும் விசிடர்சில் பாதிக்கு மேல் அங்கிருந்து தான் வர்றாங்க. அதனால் தான் அதில் முதலிடம் வர்றது மகிழ்வா இருக்கு. மேலும் பிற்காலத்தில் இது நமக்கு மறக்காமல் இருக்கட்டும் என ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்தேன்

பயணக்கட்டுரைகள் பலருக்கும் நிஜமாக பயன்படுவதை முழுமையாய் உணர்ந்துள்ளேன். ப்ளாக் எழுதாத பலர் மெயிலில் தொடர்பு கொண்டு அது பற்றி கேட்கிறார்கள். பதிவர் நண்பர்களின் அலுவலகத்தில் உள்ளோர், வெளியூர் போகும் போது நம்ம ப்ளாக் காட்டி இதில் எங்கே தங்கலாம்; என்ன இடம் பார்க்கலாம் என பாத்துக்குங்க என சொன்னதாக இதுவரை பலர் போனில் சொல்லி விட்டனர். அதனால் தான் பயண கட்டுரை தொடர்கிறது

சமீப காலமாக நம்மை திட்டி நிறைய பதிவு வருகிறது. சிலர் போனே செய்து தினம் பதிவு போடாதே என்கிறார்கள். சாப்பாட்டு கடை பற்றி எழுத உனக்கு என்ன தகுதி இருக்கு என்கிறார் இன்னொருவர்.

பல நேரங்களில் ஜெயந்தனின் இந்த கவிதை தான் ஆறுதலாக உள்ளது

எங்கும் யாருக்கும் எதுவும் நடக்கலாம்.
கத்திகள் எங்கிருந்தும் முதுகில் பாயலாம்
யாரும் யாரையும் எதுவும் பேசலாம்...
கூளமாய் நரகலாய் நினைக்கலாம்
எல்லாம் அவர்களை அவர்கள் காட்டும் காரியம்
நீ போய்க்கொண்டிரு...
-ஜெயந்தன்

வருண் said...

மோகன்: ஜெயந்தன் கவிதைக்கு நன்றி.

நீங்க இதே போல் பதிவு நெறையா எழுதி, உங்களை பலரும் கண்டுக்காமல்ப் போயி, வாராவாரம் #1 பதிவராகாமல் இருந்திருந்தால்...

இந்த வம்பே உங்களுக்கு வந்திருக்காது. :))) என்ன செய்றது? பாப்புளர் ஆனா வம்புதான்! :)
விமர்சனம் பல கோணங்களில், பல இடங்களில் இருந்து வரத்தான் செய்யும்.

விமர்சனத்தால் உங்க எழுத்து பாதிக்கப்படாமல் பார்த்துக்கோங்க. அதுதான் முக்கியம். மற்றதெல்லாம் ரெண்டாவதுதான். Take it easy and move on! :)

CS. Mohan Kumar said...

வருண்: உங்க சாரு பற்றிய பதிவுகளை நான் ரசித்து படிபேன். நானும் அதே உணர்வு அந்த ஆள் மேல் கொண்டுள்ளதால் ! உங்கள் அளவு அவரை மட்டுமல்ல யாரையும் திட்டி எழுத தைரியம் இல்லை.

சென்னையிலா இருக்கீங்க? இருந்தால் ஆகஸ்ட் -26 பதிவர் சந்திப்புக்கு வர பாருங்கள்

வருண் said...

***உங்கள் அளவு அவரை மட்டுமல்ல யாரையும் திட்டி எழுத தைரியம் இல்லை. ***

உங்களமாரி யாரையும் திட்டாமல் நல்லா எழுதுறதுதான் தரமான எழுத்துங்க. :) அப்படி நீங்க எழுவதால்தான் நான் உங்களுக்கு வக்காலத்தும் வாங்குறேன். அப்படியே மென்மேலும் தொடருங்கள்! :)

நான் அமெரிக்காவில் பல ஆண்டுகளாக "அகதியா" இருக்கேன்ங்க. ஆகஸ்ட்-26ல சென்னைக்கு வர இயலாது. எல்லாம் இனிதே நடக்க வாழ்த்துக்கள்! :)

வருண் said...

***தணல் said...

//First of all it is ILLEGAL there in that Hotel in b'lore. They dont pay income tax for the transaction either. So, it is a crime!//

Illegal when they don't pay the maamool, otherwise it would have been legal :-)***

தணல்,

பல அபலைகள் பல மிருகங்களால் அப்யூஸ் செய்யப்பட்டு விலைமாதால் நீங்க விலை மாதுக்கு சப்போர்ட் செய்து பேசுறீங்க.

நான் இது நாள் வரை விலைமாதிடம் சென்றதில்லை.

சரி, நம்ம அம்மா வந்தாள் "அலங்காரம்" போல பெண்களுக்கு நீங்க எப்படி வக்காலத்து வாங்கப் போறீங்கனு சொல்லுங்க. அங்கேயிருந்து போகலாம்! :)

வருண் said...

*** தணல் said...

//I am not sure how you define "skills"//

Either you or me can collect trash or clean our rooms! But to create a software or to teach, the person should have skills for that, right!

//A garbage collector gets paid at least three times more than a bank teller.//

As I said, I am not sure about this! I do not know any such guy personally!

But I can tell this for sure, in a company, the guy who cleans the toilet may not get paid as much as the secretary there!

9 August 2012 7:23 PM***

A secretary has a college education. They spend $100,000 for their college education and loans.

A janitor does not need a college education. They are loan-free! So, they both can live a "same living" with what they get paid. :-)

வருண் said...

***தணல் said...

//But to create a software or to teach, the person should have skills for that, right!//

I would also consider electric works and plumbing as skilled!***

What kind of skills a "call girl" has other than having a sexy body and good look. She makes much more than a plumber or electrician. But you get offended if I call that as "easy money"!!!

வருண் said...

***Thamizhan said...

அமெரிக்கவில் ஒரு நகைச்சுவை உண்டு.ஒரு கிழவி தனது கழிவறையில் அடைப்பு என்று நிபுனரைக்( Plumber )கூப்பிட்டார்.
அவர் தனது காரில் வந்து 5 மணித்துளிகளில் முடித்து விட்டு 150 டாலர் பில் கொடுத்தார்.அம்மையார் கோபமாக நீ என்ன நரம்பியல் சர்ஜன் என்று நினைப்பா என்று கேட்டார்.
ஆம், இதற்குமுன் நான் ஒரு நியூரோ சர்ஜன் என்றாராம்.****

இது உண்மைக்கதையா இருந்தாலும் அதிசயப்பட இல்லை! "career changes" are very common in US! You can not underestimate anybody based on what he does for making his living! :)

வருண் said...

***Jayadev Das said...

வடை, வாழைப்பழம், சுடு சோறு என்று பின்னூட்டம் போடும் பதிவுகளே அதிகம். ஆனால் நீங்க நல்ல அலசி ஆராயும் கூட்டமாகப் பார்த்து பிடித்து வச்சிருக்கீங்க!! எல்லோரும் நிறைய எழுதறாங்க, அதுவும் பதிவில் உள்ள விஷயங்களைப் பத்தி மட்டும். அந்த விஷயத்தில் வருண் நீங்க லக்கி.***

உண்மைதான், ஜெயவேல்! :)

தணல் said...

//பல அபலைகள் பல மிருகங்களால் அப்யூஸ் செய்யப்பட்டு விலைமாதால் நீங்க விலை மாதுக்கு சப்போர்ட் செய்து பேசுறீங்க.//

நல்லவேளை, விபச்சாரத்துக்கு சப்போர்ட் செய்கிறேன் என்று சொல்லாமல் போனீர்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன்! :-)

அப்யூஸ் செய்யப்பட்டவர்களை நான் மட்டுமல்ல, நீங்களும் சப்போர்ட் செய்வீர்கள் என்றே நம்புகிறேன்!

அப்யூஸ் செய்யப்படாமல் நேரடியாகக் குதிப்பவர்களை - அதிகாரத்தில் உள்ள மிருகங்களால் அவர்கள் 'inhumane' ஆக நடத்தப்பட்டால், அப்பெண்களது தொழிலைச் சொல்லி அதை அம்மிருகங்கள் நியாயப்படுத்திக் கொள்கின்றன என்றால் அப்பெண்களையும் சப்போர்ட் செய்வேன்!

//சரி, நம்ம அம்மா வந்தாள் "அலங்காரம்" போல பெண்களுக்கு நீங்க எப்படி வக்காலத்து வாங்கப் போறீங்கனு சொல்லுங்க. அங்கேயிருந்து போகலாம்! :)//

இது என்னன்னு புரியலை வருண்! சினிமாவா டிவி சீரியலா நாவலா சிறுகதையா? சிறுகதையாக இருந்தால் லிங்க் தந்தீர் என்றால் வாசித்துவிட்டுச் சொல்கிறேன்.

//But you get offended if I call that as "easy money"!!!//

I won't get offended if you call it easy money! :-) It is easy money, indeed! But there are a lot other professionals who make easy money with less workload as compared to a janitor or siththaal or a farmer! It all depends on the market!

And obviously, 'sex' would never lose its market unless it goes back to the very native form of life!
There may be no such business of prostitution among the native groups still surviving somewhere in the forests!

This is especially true in today's scenario where there are semi or truly porno writers and movie makers, whose sole purpose is to make money by stimulating virtual sexual feelings. I would say even Cable Sankar writes such semi porno stuff in the name of story as he knows which stuff has market!

//நான் *இது நாள் வரை* விலைமாதிடம் சென்றதில்லை.//

நல்லது, *இனியும்* இப்படியே இருங்க! :-) இப்படி அதிரடி டிஸ்க்லோஷர் எல்லாம் பண்றீங்க, LOL!

தணல் said...

//A secretary has a college education. They spend $100,000 for their college education and loans.

A janitor does not need a college education. They are loan-free! So, they both can live a "same living" with what they get paid. :-)//

If you have to choose between one of these choices, which one would you choose? :-)

வருண் said...

**I would say even Cable Sankar writes such semi porno stuff in the name of story as he knows which stuff has market!***

I don't read his stories. But the fact is he gets more readers for cinema stuff. If he does not write about cinema reviews, he will NOT be in this "position". It is not true, it is a misconception that adding porn-stuff can bring more readers.

I watched the movie, savages, recently. It is more like a soft porn. A girl is in love with two guys EQUALLY. They both make love to her (one at a time) but they don't show any threesome. They show explicit sex scenes. But the movie is a box office FLOP!

I am not really sure adding to story or movie "porn-stuff" will help or make it worse.

50 shades of grey is considered as a love story and it succeeded mainly because or "love" "not porn".

It is a misconception, people think adding porn will help. But I suspect very much.

வருண் said...

*** If you have to choose between one of these choices, which one would you choose? :-)
10 August 2012 9:08 PM ***

Honestly I don't like debts, so I might choose stress-free janitor job! :-) I really don't know how to answer this question as I already chose something else.

வருண் said...

தி ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’
வெங்கட் சாமிநாதன் | இதழ் 51 | | அச்சிடு அச்சிடு

இன்றைய தமிழ் இலக்கியத்தில் தி.ஜானகிராமன் ஒரு தனித்த, விதிவிலக்கான நிகழ்வு. அவர் ஒரு முதல் தர இலக்கியத் தரமான எழுத்தாளர் அதே சமயம் மிகப் பிரபலமான, எல்லோரும் விரும்பி வாசிக்கும் எழுத்தாளரும் கூட. இவரைப் போன்று இலக்கியத் தரமும் பிராபல்யமும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற இன்னொரு எழுத்தாளர் இன்று தமிழ் எழுத்துலகில் இல்லை. அவருடைய எழுத்தின் குணங்கள் மிக நுண்ணிய ரசனை கொண்ட விமர்சகனையும் வியக்க வைக்கும். வெகு சாதாரண வாசகனையும் கவர்ந்து கொள்ளும். அவருடைய சம்பிரதாய கட்டுப்பாடுகளை மீறும் கதைகளில் காணும் ஆழம், கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் உருவாக்கப்படும் தீவிரம், எல்லாம் ஒரு விமர்சகனை வியக்க வைக்கும் அதே சமயம் அவரது சொக்க வைக்கும் நடையழகும், வெகு சுலபமாக எவ்வித சிரமமும் கொடுக்காமல் எத்தனை நூறு பக்கங்களானாலும் அலுக்காமல் படிக்க வைக்கும் எளிய சின்ன சின்ன சம்பாஷணைகளாலேயே ஆன கதை சொல்லும் நேர்த்தி எல்லாம் எந்த சாதாரண வாசகனையும் மனம் கவரும்.. சாதாரணமாக நம்மில் பெரும்பாலாருக்கு வார்த்தைகளில் அடைபட மறுக்கும் எந்த சிக்கலான சம்பவமுமோ, அல்லது சிந்தனையுமோ வெகு எளிதாக அன்றாடம் நாம் புழங்கும் வார்த்தைகளில் ஜானகிராமனால் சொல்லிவிட முடிகிறது. தன்னை அதிகம் சிரமப்படுத்திக்கொள்ளாத சாதாரண கதை படிக்கும் வாசகன் இத்தகைய எழுத்தின் ஆழத்தை உணர்த்து கொள்ளாமல் படித்துச் செல்லக்கூடும் தான். ஆனால் ஜானகிராமன் எழுத்து தரும் சுகானுபவத்தில்அவன் தீவிர ஜானகிராமன் ரசிகனாகிவிடுகிறான் இதெல்லாம் போக, ஜானகிராமனின் எழுத்தில் காணும் பரிகாசமும் கேலியும் யாரையும் துன்புறுத்தாத மென்மையும் விடம்பன குணமும் கொண்டது. இது எந்த ரக வாசகனையும் கவர்ந்து ரசிக்க வைக்கும்.

ஜானகிராமனின் நாவல்கள், சிறுகதைகள் எல்லாமே அவர் பிறந்த தஞ்சை ஜில்லாவின் மத்திய தர பிராமணர்களின் வாழ்க்கையைச் சித்தரிப்பவை, அந்த வாழ்க்கை கொண்ட மதிப்புகளின் உச்சங்களையும் சீர்கேடுகளையும் பிரதிபலிக்கும் ஆவணம் என்றும் ஒரு நோக்கில் சொல்லலாம். ஜானகிராமன் படைக்கும் உலகம் லக்ஷிய வாதிகளால் நிறைந்தது. அவர்கள் தாம் தமக்கு விதித்துக்கொண்டுள்ள லக்ஷியங்களைக் காக்க எப்போதும் வாழ்க்கையின் வதைக்கும் யதார்த்தங்களையும், சூழ்நிலையையும் போராடிக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. அவர்களது லக்ஷியங்கள் மரபிலிருந்து பெற்றவையாக இருக்கலாம். அல்லது அவர்களே தேர்ந்து கொண்டவையாக இருக்கலாம். அல்லது அவர்கள் செய்யும் தொழில் சார்ந்தவையாக இருக்கலாம். அவர்கள் லக்ஷியவாதிகளாக இருக்கலாம். ஆனால் ஜானகிராமன் சொல்கிறார், “என் எல்லா கதாபாத்திரங்களும் வாழ்க்கையிலிருந்து பெறப்பட்டவர்கள் தான்.” இதை நாம் நம்பலாம்.. ஏனெனில் ஜானகிராமன் வாழ்க்கையையும் மனிதர்களையும் அவர்கள் சுபாவங்களையும் மிகவும் கூர்ந்து கவனிப்பவர். அவர்கள் ஒவ்வொருவரது தனிப்பட்ட பாவனைகளையும் குணவிசேஷங்களையும் நிறைந்த விவரங்களோடு ஒரு முழுச் சித்திரத்தைத் தன் எழுத்தில் கொணர்ந்து விடுபவர். அவர் எழுத்தே அவர் கூற்றுக்கு சாட்சி.

ஜானகிராமன் சம்பிரதாயங்களில் நம்பிக்கை கொண்டவர். அதே சமயம் அவர் ஒரு யதார்த்த வாதியும் கூட. சம்பிரதாயங்களில் நம்பிக்கை என்றால் அவர் பழமையின் லட்சியங்களில் வாழ்க்கை மதிப்புகளில் நம்பிக்கை கொண்டவர் என்று அர்த்தம். யதார்த்த வாதி என்றால், இன்றைய யதார்த்த வாழ்க்கையைப் பற்றிய பூரண பிரக்ஞை யோடு அவர் இருந்த போதிலும், நம்மில் பலரைப் போல பழம் லட்சியங்களும், வாழ்க்கை மதிப்புகளும் இன்றைக்கு செலவாணி இழந்தவை என்று அவர் நினைப்பவரில்லை. அவற்றிற்கு இன்றும் ஜீவிய நியாயம் உண்டு என்று நம்புகிறவர். அவற்றிற்கான புதிய உறவுகளும் தேவைகளும் இன்றைய வாழ்க்கையில் உண்டு, அவற்றிற்கான புதிய அர்த்தங்களும், இன்றைய வாழ்க்கையில் அவை பொருந்தும் புதிய பார்வைகளும் உண்டு என்று எண்ணுபவர். அவருக்கு சமூகத்தில் தனி மனிதனின் முக்கியத்துவம் தான் பெரிது. அந்த தனிமனிதன் தன் தனித்வத்தை விட்டுக்கொடாது தன் வாழ்க்கையை தன் லட்சியங்களுக்கு ஏற்ப வாழும் போராட்டங்களைத் தான் அவர் கதைகள் சொல்கின்றன.

மூன்று நாடகங்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு குறு நாவல்கள், ஆறு நாவல்கள் இது வரை(1968) வெளிவந்துள்ள அவரது எழுத்துக்கள். அவர் நாவல் எழுத ஆரம்பித்தது சமீப காலமாகத் தான். இருப்பினும், வெகு சீக்கிரம் அவர் இலக்கியத் தரமான தமிழ் நாவலாசிரியர்களில் ஒருவராக தன்னை அடையாளப் படுத்திக்கொண்டுவிட்டார். அவரது இரண்டாவது நாவல், மோக முள், இதுகாறும் அவர் எழுதியவற்றுள் சிகர சாதனை என்று சொல்லவேண்டும் அத்தோடு இன்றைய தமிழ் நாவல் இலக்கியத்திலேயே சிகர சாதனை என்றும் அதைச் சொல்ல வேண்டும். இப்போது நம் முன் இருப்பது அவரது மிகச் சமீபத்திய நாவல். அம்மா வந்தாள் சமீப காலங்களில் எழுதப்பட்டுள்ளவற்றில் சிறந்ததும் ஆகும்.

வருண் said...

அப்பு தன் ஏழாம் வயதிலியே தன் பெற்றோர்களிடமிருந்து பிரிந்து ஒரு தூரத்து கிராமத்தில், குருகுலம் போன்ற ஒரு பாடசாலையில் வேதம் படிக்கப் போய்விடுகிறான். அங்கு அவனுக்கு வேதங்களும், ஆசார அனுஷ்டானங்களும் போதிக்கப்படுகிறது. அந்த பாட சாலை ஒரு வயதான விதவையின் தர்மத்தில் நடைபெறுகிறது. அங்கு ஏழுவயதிலேயே விதவையாகிவிட்ட ஒரு பெண்ணும் அந்த விதவை மூதாட்டியின் சம்ரக்ஷணையில் வளர்கிறாள். விதவைப் பாட்டிக்கு அப்புவிடம் ஒரு தனி பாசம். அதன் காரணமாக, சாதாரணமாக அந்த மாதிரியான ஆசாரம் மிகுந்த வீடுகளில் கிடைக்காத சலுகையோடும் சுதந்திரத்தோடும் அப்பு அந்த வீட்டில் வளைய வருகிறான். அப்பு பதினேழு வருடங்கள் அந்த வேத பாடசாலையில் வேதங்களும் ஆசார அனுஷ்டானங்களும் படிப்பதில் கழிக்கிறான். இந்த பதினேழு வருஷங்களும் தன் பெற்றோர்கள் தன்னை மாத்திரம் ஏன் இந்தப் பாடசாலைக்கு வேதம் படிக்க அனுப்பினார்கள்?. தான் நான்காவது பிள்ளை. மற்ற மூத்த சகோதரகள், சகோதரிகள் எல்லாருக்கும் ஆங்கிலப் படிப்பு கிடைத்திருக்கும் போது தனக்கு மாத்திரம் ஏன் இப்படி என்ற எண்ணங்களில் அவ்வப்போது அவன் மனம் உளைச்சல் பட்டதுண்டு. அத்தோடு அந்தப் பாடசாலையில் வளைய வரும் அந்த விதவைப் பெண் இந்து தன்னிடம் காட்டும் பாசம், அதை ஏற்பதா, அல்லது மறுத்து ஒதுங்குவதா, என்ற ஊசலாட்டம் வேறு அவனை வாட்டிக்கொண்டிருந்திருக்கிறது. வேத பாடசாலைப் படிப்பு முடிந்ததும் அப்பு தன் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறான். இந்து அவனை தன்னைவிட்டுப் போகவேண்டாம் இங்கேயே என்னோடேயே இருந்து கொள் என்று வற்புறுத்துகிறாள். அப்புவோ இந்துவை தான் தன் அம்மாவாகவே, வேதங்களைப் போன்ற ஒரு புனித வடிவிலேயே பார்த்து வந்ததாகச் சொல்லி மறுக்கிறான். இதைக்கேட்ட இந்துவுக்கு பொறுக்க முடிவதில்லை. அவன் அம்மா அப்படி ஒன்றும் அவன் நினைப்பது போல புனிதமே உருவானவள் அல்ல, அவளுக்கும் வேண்டிய அளவு வேண்டாத உறவுகள் உண்டு,, எனவே தன்னையோ வேதங்களையோ அவன் அம்மாவோடு சேர்த்துப் பேசவேண்டாம் என்று தன் சீற்றத்தைக் கொட்டித் தீர்க்கிறாள்.

வருண் said...

அப்பு 17 வருஷங்கள் கழித்து தன் வீடு திரும்புகிறான். அங்கு ஒரு ஆஜானுபாகுவான, மத்திம வயதினனான ஒரு அழகான பணக்காரன் தன் பழைய காதலியாக அம்மாவைப் பார்க்க வழக்கமாக வந்துபோய்க்கொண்டிருப்பது தெரிகிறது. அப்போது தான் அவனுக்குத் தெரிகிறது தான் தான் தன் அப்பாவுக்குப் பிறந்த கடைசிக் குழந்தை என்றும் அங்கு இருக்கும் தன் தம்பி தங்கைகள் எல்லாம் தன் தாய்க்கும் இந்த வந்து போகிற பணக்காரனுக்கும் பிறந்தவர்கள் என்று. இது வீட்டில் உள்ள எல்லாருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கிறது. தன் அப்பாவுக்கும் கூடத் தான். அவரும் செய்வதறியாது இவ்வளவையும் சகித்துக்கொண்டு தான் அங்கு இருக்கிறார். எல்லாவற்றையும் ஒதுங்கி நின்று பார்க்கும், எதிலும் தான் ஒட்டாத சாட்சிபூதராகிவிடுகிறார். அவன் அம்மா அலங்காரத்தம்மாளுக்கு தன் கடந்த கால பாபங்கள் எல்லாம் தெரிந்தே இருக்கிறது. வருந்தி வேதனைப் படுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை. காலைச் சுற்றிய பாம்பு விடமாட்டேங்கறதே என்பது அவள் வேதனை.. இந்தப் பாபத்தைக் கழிக்கத் தான் அப்புவை தான் வேதம் படிக்க அனுப்பி வைத்ததாகவும், அவன் ஒரு ரிஷியாகத் திரும்பி வருவான், அவன் கற்ற வேதங்களின் ஒளிப் பிழம்பில் தன் பாபங்களைப் பொசுக்கிக்கொள்ள நினைத்ததாகச் சொல்கிறாள்.

அப்பு திரும்பிச் செல்கிறான். தன் பழைய வேதப் பாடசாலைக்கு. அவன் மேல தன் பாசமெல்லாம் பொழிந்த இந்துவிடமும் தான்.

வருண் said...

தி. ஜானகிராமனின் பலமே சம்பாஷணைகளாலேயே கதை சொல்லும் அவர் சிறப்புத் தான். அவரது எல்லா எழுத்துக்களிலும் போல இந்த நாவலிலும் அவர் சம்பாஷணைகளில்தான் அவர் உலகமே விரிகிறது. இன்றைய எந்த தமிழ் எழுத்திலும் இதற்கு இணையான ஒரு சிருஷ்டிகரத்தை காணமுடியாது. கதை சொல்லல் வெகு சரளமாக, எளிமையாக, அதே சமயம் கொள்ளை அழகுடன் ஆற்றின் புது வெள்ளம் போலச் ஓடுவது அறியாது செல்கிறது. ஒரு குதூகலத்தின் துள்ளல், ஆரவாரம். எப்படிச் சொன்னாலும் அது அப்படியாகத் தான் தோன்றும். அவருடைய நடை பனிக்கால காலை நேரங்களில் புல் நுனியில் துளிர்த்து பளிச்சிடும் பனித் துளிகள் போல கண் சிமிட்டும். ஈர்க்கும். அவருடைய வர்ணணைகள். கதை சொல்லிச் செல்லும் போது இடைபுகுந்து அவர் சொல்லும் சில பார்வைகள், இவற்றில் எல்லாம் ஒரு Cinematic Quality இருக்கும். ஃப்ரெஞ்ச் சினிமாவின் Cinema Verite பாணியில் அந்த சம்பவத்தின், அந்த சூழலின் அடர்த்தி நம் கண்முன் விரியும் அந்தக் காட்சியின், அல்லது சம்பவத்தின் வர்ணணை வாசகனின் கண்முன் அததனை அடர்த்தியான விவரங்களுடனும், ஏதோ ஒரு நடப்பு நிகழ்ச்சியைப் புகைப்படம் எடுத்தது போல ஒரு உக்கிரத்துடன், யதார்த்த பதிவாக கண்முன் காட்சி தரும். பலருக்கு இந்த விவர வர்ணணைகள் அநாவசியமாக, கதைக்குத் தேவையற்றனவாகத் தோன்றக்கூடும். அவர்கள் கதை மட்டுமே வேண்டுபவர்கள்.

மேலும் ஜானகிராமனின் எழுத்தின் ஒரு தனித்வ சிறப்பைப் பற்றிச் சொல்ல வேண்டும். பாலியல் உறவுகளைப் பற்றியே நிறைய எழுதுவதாக ஒரு பரவலான கருத்து உண்டு. அவரது கதை சொல்லலும் சம்பாஷணைகளும் பாத்திர வார்ப்பும், மிக நுட்பமானவை. கத்தி மேல் நடப்பது போன்றன. சறுக்கி விடும் அபாயம் கொண்டவை. கண்ணியத்துக்கும் ஆபாசத்துக்குமான இடைவெளி மிக நுண்ணியதாக இருக்கும். அவர் எழுத்தில் நுட்பமும் மென்மையும் மற்றவர் கையாளலில் ஆபாசமாகக் கீழிறங்கிவிடக்கூடும். அதை மிக லாவகமாக, தன்னறியாத நம்பிக்கையுடன் கையாளும் திறன் அவருக்கு வாய்த்திருந்தது. அத்தோடு இது சாத்தியமல்ல என்று நாம் சாதாரணமாக நினைக்கும் இடங்கள் கூட மிக யதார்த்தமாக, இது நடந்திருக்கக்கூடும் தான் என்று நம்மை நம்பவைக்கும் எழுத்துத் திறன் அவரது. என் மனதில் இப்போது இருப்பது அந்த குக்கிராமத்தில், ஆசாரம் மிகுந்த வேதம் போதிக்கும் வீட்டில், ஒரு இளம் விதவையும் ஆசாரமான விதவைப் பாட்டியும் இருக்கும் சூழலில் அப்புவும் இந்துவும் பழகும் அன்னியோன்யம் நாம் நம்ப வியலாத ஒன்று. பிராமண குடும்பங்களில் இது சாத்தியமே இல்லை. ஆனால் தி ஜானகிராமனின் எழுத்துத் திறன் நம்மை நம்ப வைக்கும் தந்திரம் செய்கிறது.இந்த நாவலில் மிக நெருடலான ஒரு விஷயம், தன் கணவனுக்குப் பிறந்த கடைசி பிள்ளையை வேதம் படிக்க அனுப்பி வைத்து அவன் ஒரு வேதவித்தாகத் திரும்பி வந்தால், தன் பாபங்கள் எல்லாம், இன்னமும் தொடரும் பாபங்கள் எல்லாம் அதில் கரைந்து விடும் என்று அலங்காரத்தம்மாள் எப்படி நம்புகிறாள்? தன் பிள்ளை வேதம் படிப்பது தன் பாபங்களுக்கான விமோசனம் என்று எந்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது? வேதங்கள் என்ன பாபாத்மாக்களுக்கு அடைக்கலம் தருமா, தன் பாபங்களை அது எப்படி சுத்திகரிக்கும் என்று அலங்காரத்தம்மாள் நினைக்கிறாள்? வேதங்களைப் புனித தெய்வ வாக்காகப் பூஜிக்கும் மனதுக்கு இது ஒரு பாபகாரியமாகத்தானே தோன்றும். ஆசார சீலர்களை விட்டு விடுவோம். இன்றைய அறிவு ஜீவி ஒருத்தனுக்கு இதில் என்ன மனத்தத்துவ விளக்கங்கள், சமாதானங்கள் காணுதல் சாத்தியம்?

தன் எல்லா பாத்திரங்களும், சம்பவங்களும் வாழ்க்கையிலிருந்து பெறப்பட்டவையே என்றும், அவற்றை நம்புவதும் நம்ப மறுப்பதும் அவரவருக்குக் கிட்டும் அனுபவங்களைப் பொருத்தது என்று ஜானகிராமன் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். இதை நாம் ஒப்புக்கொள்வதாக இருந்தால், கதாபாத்திரங்களின் சம்பவங்களின் நீட்சியை நாம் ஒத்துக்கொள்ளும் அளவிற்கு ஜானகிராமனின் கதை சொல்லலில் ஒரு தவிர்க்க முடியாமையைக் காணலாம்.

இந்த தர்க்க அதர்க்க நியாயங்களையும் சாத்தியங்களையும், விளக்கங்களையும் பற்றி ஒருவரது கருத்து எப்படி இருந்தாலும், ஜானகிராமன் எழுத்து எதையும் படிப்பது ஒரு அனுபவம், ஒரு மகிழ்ச்சி தரும் அனுபவம் என்பதைச் சொல்லியே ஆகவேண்டும்., ஜானகிராமனைத் தமிழில் படிக்க இயலாத தமிழ் அறியாதவர்கள் தாம் இழந்தது என்ன என்பதை அறியமாட்டார்கள்.

(முற்றும்)

1968 ஆண்டில் ஏதோ ஒரு நாளில் National Herald New Delhi தினசரி பதிப்பில் வெளியான ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்.

லின்க்/தொடுப்பு :http://solvanam.com/?p=15663

வருண் said...

நானும் தமிழ் ஓவியா மாதிரி ஆயிட்டேன். :)))

தணல் said...

//I don't read his stories. But the fact is he gets more readers for cinema stuff. If he does not write about cinema reviews, he will NOT be in this "position". It is not true, it is a misconception that adding porn-stuff can bring more readers.//

It may not bring him more readers to his blog, I agree! But when it is sold as a book, that would definitely add to its sale!

//It is a misconception, people think adding porn will help. But I suspect very much.//

You are right, when the movie has its own strong stuff, adding porn may not help! Think of Batman series. I have not watched the latest one, but the previous two were big hits without any sex stuff. Nolan and his team were able to make it! We can site many such examples! Cameron was able to make both Avatar (without explicit sex scenes) and Titanic (with some such scenes) great success. I would rather consider these as sex scenes, not porn.

But for the otherwise weak movies, adding some sex scenes will try to strengthen its market.

Mostly porn based stories without an interesting plot may not make a big success as those kind are abundantly available in the internet, and people here may not consider it worth watching in the theater.

However, back in India (Kerala), once Shakila movies were able to succeed very well amongst the other big budget and big hero based ones. But the market for this type would have decreased over years as more wild stuff is available over internet.

தணல் said...

BTW, the story I referred to written by Cable Sankar is, நான் வைரம் ஷர்மி. It is a serial story.

The one pasted by you looks like review of a novel. I will go over it. Thanks. May be you should consider starting it as a new conversation.

வருண் said...

*** //I don't read his stories. But the fact is he gets more readers for cinema stuff. If he does not write about cinema reviews, he will NOT be in this "position". It is not true, it is a misconception that adding porn-stuff can bring more readers.//

It may not bring him more readers to his blog, I agree! But when it is sold as a book, that would definitely add to its sale!***

I dont know how many writers really make some tidy sum of money. I hear that not many novels sold that many copies and the writers make very little money.

There is nothing wrong in adding sex scenes as long as it blends well. But it is a challenge for the writer to add that in right proportion!

e.g. Bhagyaraj added some kinky stuff in mundhanai mudichu, it beccame block buster. Later he took that to next level (chinna veedu), but it did not work there.

வருண் said...

***The one pasted by you looks like review of a novel. I will go over it. Thanks. May be you should consider starting it as a new conversation.***

You should read "amma vandhaaL". There is lot to talk about it, esp about the "woman character" (alangaram) in it.

Here is a dialog which I never forget. It goes like this..

அலங்காரத்தோட ஆம்படையார் அவளைப் பத்தி யோசிச்சுக்கிட்டுப் படுத்து இருப்பாரு..

"பேரு வச்சிருக்காங்க பாரு! அலங்காரம்னு! தேவடியாளுக்கு வைக்கிற மாதிரி!"...

தணல் said...

//There is nothing wrong in adding sex scenes as long as it blends well.//

The same would apply to movies as well. When it blends well, it appears more of a romantic/casual sex scene between the couple. When it stands out, it looks like a semi porn.

// But it is a challenge for the writer to add that in right proportion!//

Right proportion? So could we argue that a story about a sex worker should have a lot of sex scenes? I don't agree with that! It is only a justification by the writer or the movie maker for the semi porn scenes he has created!

This particular story, naan sharmi vairam, has more sexual stuff, which I believe, is out of proportion. But as I said, it can be justified pointing to the theme of the story. But Cable Sankar would himself accept that he wrote it that way to make the sale better.

//அலங்காரத்தோட ஆம்படையார் அவளைப் பத்தி யோசிச்சுக்கிட்டுப் படுத்து இருப்பாரு..

"பேரு வச்சிருக்காங்க பாரு! அலங்காரம்னு! தேவடியாளுக்கு வைக்கிற மாதிரி!"...//

Looks like there is a lot to talk about the husband character as well, LOL! :-)

வருண் said...

***So could we argue that a story about a sex worker should have a lot of sex scenes? ****

I dont know, a good friend of mine and I agreed that sex is a beautiful thing but when someone giving you sex of money, or as you force them to give you, then I dont even consider that as "sex". How can it be beautiful?

***This particular story, naan sharmi vairam, has more sexual stuff, which I believe, is out of proportion. But as I said, it can be justified pointing to the theme of the story. But Cable Sankar would himself accept that he wrote it that way to make the sale better.***

Reading about "sex workers" or "prostitutes" are big turn off for me as they give you sex as you pay for it. My philosophy about sex is completely different! LOL

வருண் said...

***Looks like there is a lot to talk about the husband character as well, LOL! :-)***

You must read ammA vandhaaL. You could discuss and debate about every character in the neovel for EVER! There is a lot to talk about every character! Some of the characters are not understood even by the creator of such characters (T Janakiraman), imo! LOL

தணல் said...

//You must read ammA vandhaaL.//

I don't have this book, neither can I buy it from here. I could not find online access too.

// a good friend of mine and I agreed that sex is a beautiful thing but when someone giving you sex of money, or as you force them to give you, then I dont even consider that as "sex". //

I understand. But for many, it is just a hunger or urge or simply an itch that has to be quenched. It has evolved from a mere reproductive process to a pleasurable(physically and psychologically) process as well as a perverted process! It has even become a virtual process for humans like reading about it or watching others doing it :-) For some perverts, forced ones would yield more pleasure psychologically. Its much more complex than we can think.

Anonymous said...

//இவனுக அசுத்தத்தை சுத்தம் செய்யனு ஒரு சாதியை உருவாக்கி அவர்களை சிறுமைப்படுத்தி பொழைப்பை ஓட்டும் கீழ்த்தரமானவனுகதான் இந்த உயர்சாதி இந்தியர்கள்.//

அருமையான பதிவு சகோ.. அசுத்தத்தை அகற்ற ஒரு சாதி என்னக் கொடுமை இது !!! கனடாவில் குப்பை அள்ளுவோர் வேலை நிறுத்தம் செய்ததில் மூன்று மாதம் நாறிப் போனது டொரோண்டோ.. பிறகு என்ன நல்ல சம்பளம் கொடுத்தார்கள் ... ( ஏற்கனவே அவர்கள் வாங்கும் சம்பளம் நம்மை விட அதிகமாக்கும் ) .... !!!

//இந்த "புனிதமான வேலை" செய்துதான் பிரகாஷ் சமூகத்துக்கு உதவிக்கொண்டே லட்சலட்சமா சம்பாரிக்கிறான்! ஆனால் எத்தனை "சோப்" போட்டுக்குளிச்சாலும், எத்தனை "டீ-யோடரைசர்" பயன்படுத்தினாலும் அவன் நாற்றம் என்றுமே அவனைவிட்டுப் போனதில்லை!//

போர்னோ கிராபி என்பது சமூகக் கேடான ஒன்று என்பதில் ஐயமில்லை !!! ஆனால் போர்ன்களை எந்தளவுக்கு பயன்படுத்துகின்றோம் என்பது பொறுத்து தான் அதன் நன்மை தீமைகள் எல்லாம் !!! மிதம் மிஞ்சிய போர்னோ கிராபி நம்மை அடிமையாக்கி மன உளச்சலுக்குக் கொண்டு போய் விடும்.. அதே சமயம் அளவான, கல்வி முறையிலான போர்னோகிராபி பல்வேறு குடும்ப சிக்கல்களைத் தீர்க்க உதவியாக இருப்பவை ... !!! போர்னோக்கள் என்பது கத்தி போல பத்திரமாக பயன்படுத்தினால் நறுக்க உதவும் ( குடும்ப பாலியல் சிக்கல்களை ) தவறாக பயன்படுத்தினால் கொன்றே விடும் ( வாழ்க்கையை ) ....

ஆனால் போர்னோ கிராபி என்ற பெயரில் பொது இடங்களில் பெண்களை படம் பிடிப்பது, காதலன் / கணவன்மார்களே காதலி / மனைவிகளை படம் பிடித்துப் போடுவது போன்ற கேடுக் கெட்டத் தனம் எதுவும் இல்லை .. அப்படி செய்பவர்கள் சொந்த தாய், தங்கையர்களை அப்படி செய்வார்களா ???!!! அதே போல போர்னோ கிராபிகளில் அப்பாவி பெண்களை ஏமாற்றி நடிக்க வைப்போரும் உள்ளார்கள் .. இவர்களின் இந்த ஈனச் செயல்களுக்கு நிற்க வைத்து அறுத்தால் மட்டுமே தீர்வாகும் !!!

தொழில் முறையில் போர்னோக்களில் நடிக்க முன் வருபவர்கள் - ஒருவகையில் பாலியல் தொழிலாளிகள் தான். அவர்களின் சேவை நிச்சயம் பாராட்டத்தக்க ஒன்று எனலாம். ஏனெனில் பாலியல் கல்வி புகட்டவும், வெறிப்பிடித்த மனித மனங்களை அடக்கவும் அவர்கள் செய்யும் சேவை மகத்தானது .. !!! சொல்லப் போனால் சவிதா பாபி போல கார்ட்டூன்கள் யாரையும் நிர்பந்திக்காமல் கனவு உலகில் செல்கின்றது .. ஆனால் சவிதா பாபி போன்ற கார்ட்டீன் போர்ன்களில் தவறாகச் சித்தரிக்கப்படும் உறவுநிலைகள் பல முறை முகம் சுளிக்க வைப்பவை என்பதில் ஐயமில்லை ...

நம் இந்தியர்களின் பாரம்பரிய போர்னோக்களை அஜந்தா - எல்லோராவில் இரசிக்கும்படி இருக்கின்றன.. அதை விட புனிதமான போர்னோக்களை நான் எங்கும் பார்த்ததில்லை.