Thursday, November 8, 2012

ஜெயமோஹன் - எஸ் வி ராஜதுரை விவகாரத்தில் கருத்துச் சுதந்திரம்?!

சின்மயி, கார்திக் சிதம்பரம் போன்றவர்கள் "மானநஷ்ட இழப்பு"/ "defamation" சம்மந்தமாக வழக்குப் ப போட்டதால் நம்ம கருத்துச் சுதந்திரம் பறிபோனதாக இணையதளமே கலங்கி நிற்கிறது. பறிக்கப்படும் நம் கருத்துச் சுதந்திரத்தைத் திரும்பப் பெற  தமிழ் இணையதளம் போராடுகிறது.

இந்த சூழ்நிலையில் எஸ் வி ராஜதுரை - ஜெயமோஹன் பிரச்சினை மறுபடியும் உயிர்பெற்று எஸ் வி ஆர், ஜெயமோஹன் மேலே வழக்குத் தொடுத்து இருக்கார்.

 எஸ்.வி.ராஜதுரை வழக்கு

"தன்னைப்பற்றி உண்மைக்கு புறம்பானதை எழுதிய ஜெயமோஹன் தன்னை அவமனாபபடுத்தி, தன்னை மனவுளைச்சளுக்கு ஆளாக்கிவிட்டார். அதனால் அதை ஈடு செய்ய 20 லட்ச ரூபாய் மானநஷ்டம் கொடுக்க வேண்டுமென சட்டப்படி நோட்டிஸ்" அனுப்பியுள்ளார், எஸ் வி ஆர்.

இந்த மாஷ்டுத் தொகையையும் அவர் வக்கீல் எழுதிய மிகவும் "கடுமையான" நேட்டிஸையும் பார்த்து நான் பயந்துட்டேன்.

இந்தப் பிரச்சினைகளும்மேலே சொல்லப்பட்ட இரண்டு பிரச்சினைகள் (சின்மயி, கார்த்திக் சிதம்பரம்) போல்தான். இதைப்பற்றி ஏற்கனவே இந்தத் தளத்தில் பாலாசுப்ரா என்பவரிடம் நெறையவே பின்னூட்டங்களில் விவாதிச்சாச்சு. அதைப்பற்றி அறிய கீழே க்ளிக் செய்யவும்.

 அய்யோ பாவம் ஜெயமோஹன்!

சரி, ஜெயமோஹன் வார்த்தை பியோத்தில் தவறே செய்திருந்தாலும், அந்தத் தவறுக்கு தண்டனை என்ன? ஒரு மன்னிப்பா? இல்லைனா அபராதம்  20 லட்ச ரூபாயா?? என்ன இருந்தாலும், 20 லட்ச ரூ நஷ்ட ஈடு என்பது என்னைப் பொருத்தவரையில்  மிகவும் அதிகம்தான். எஸ் வி ராஜதுரை அவர்கள் கொஞ்சம் கருணை காட்டி "ழை எழுத்தாளர்" ஜெயமோஹனை (அவரு சிறு தவறு செய்திருந்தாலும்) மன்னித்துவிட்டால்த்தான் என்ன? என்றுதான் எனக்குத் தோணுது. சரி, இது அவரு பிரச்சினை. இதில் நான் என்ன எதுவும் சொல்வது? னு ஒதுங்கிக்கிறேன்.

நம்ம எல்லாம் அசியல்வாதிகள் இல்லை என்தால் பொதுவாக இணையவெளியில் ஒருவர் மீது பண சம்மத்தப்பட்ட குற்றச்சாட்டை வைக்கும்போது எனக்கு எப்போதுமே அது சரி என்று தோணாது. "அதில் ஒண்ணும் தவறில்லை, அதுவும் நம் கருத்துச் சுதந்திரம்"  என்பதுபோல்தான் பலர் சொல்றாங்க. சிங்கை செந்தில்நாதனுக்குக்கு பதிவுலகில் பல நல்ல உள்ளங்கள்  உதவி செய்யும் பொழுது, பணம் கலக்ட் செய்த நம்ம  பதிவர் நரசிம்மிடம் கணக்குக்கேட்டு, மேலும் பலவாறு கேள்விகளை இணையதளங்களில் எழுப்பி விமர்சனம் வந்தபோதுகூட நான் நரசிம்க்கு  ஆதரவாக, அவரை இணையதளத்தில் embarrass செய்யக்கூடாது என்றுதான் பேசியதாகத்தான் எனக்கு ஞாபகம்.

ஒருவகையில் பார்த்தால் இன்னைக்கு உள்ள ஜெயமோஹன் - ராஜதுரை பிரச்சினை, ரவி- கார்த்திக் சிதம்பரம் பிரச்சினை எல்லாமே ஒரே வகைதான்.

* இந்த ரெண்டு பிரச்சினைகளிலுமே நம் நிலைப்பாடு ஒண்ணுதானா?

* அதாவது விமர்சனம் செய்தவர்களின் கருத்துச் சுதந்திரமா இவைகள்?

* இல்லைனா  நம் நிலைப்பாடு வேறு வேறவா?

என்பதை "பெரியவர்கள்" சொன்னா நல்லாயிருக்கும்!

12 comments:

ராஜ நடராஜன் said...

வருண்!நீங்க ஜெயமோகன் - எஸ் வி ராஜதுரை பற்றி பின்னூட்டத்தில் கோடிட்டு காட்டும் போது பிரச்சினையின் பின்புலம் அறியாமலிருந்தேன்.நேற்று ஆதவன் தீட்சண்யா தளத்தில் ராஜதுரை அவரது பக்க கருத்தாக உள்ளக்கிடக்கை அத்தனையையும் கொட்டியதை வாசிக்க நேர்ந்தது.ஆனால் ஜெயமோகன் தரப்பு கருத்து என்னவென்று தெரியாத தேடலில் மாட்டியவர் அட்ராசக்க சிபி.

எஸ் வி ரா வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருந்தால் தனது கருத்து வெளிப்பாடு மட்டுமே எனும் பட்சத்தில் ஜெமோ சமாதான தூது அனுப்பியிருக்கலாம்.அல்லது நேரடியாகவே தொடர்பு கொண்டு பிரச்சினையை தணிக்க முயற்சி செய்திருக்கலாம்.மாறாக நானும் கேஸ் போட்டிருக்கிறேன் என்கிறார்.

எஸ்விரா தனது தரப்பு விளக்கத்தை விலாவாரியாக சொன்னதிலிருந்து புலப்படுவது ஜெமோவின் கருத்து சுதந்திரம் என்ற போதிலும் நானும் மல்லுக்கட்டுவேனாக்கும் போங்கு தவறானது.

சின்மயி விவகாரத்தை ஜெமோ கூட ஒன்றாக இணைக்க முயல்வதைத்தான் கோர்த்து விடறதுன்னு யதார்த்தமாக சொல்வாங்க:)

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

வாங்க நடராஜன்.

***சின்மயி விவகாரத்தை ஜெமோ கூட ஒன்றாக இணைக்க முயல்வதைத்தான் கோர்த்து விடறதுன்னு யதார்த்தமாக சொல்வாங்க:)***

:-))))

Honestly, சின்மயி கேஸை இதிலிருந்து கழட்டிவிடுவதும் சரியாகப் படவில்லை. ஏன் என்றால் அவரும் "defamation" என்ற குற்றச்சாட்டையும் வைத்தார்னு நம்புறேன். மேலும் என்னைப் பொறுத்தவரையில் பின்னால வந்த ரெண்டு கேஸ்களுமே இன்மயி கேஸுக்கு அப்புறம் வந்ததால, அவருடைய செயல்பாடால்தான் இவர்களும் "ஊக்குவிக்கப்பட்டார்களா"? என்கிற கேள்வியும் எழுகிறது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ராஜதுரை கேட்டது சரியா தப்பா? அதை சொல்லுங்க பாஸ்

'பரிவை' சே.குமார் said...

ராஜதுரை கேட்டிருப்பது அதிகம்தான்...

வருண் said...

****T.N.MURALIDHARAN said...

ராஜதுரை கேட்டது சரியா தப்பா? அதை சொல்லுங்க பாஸ்

8 November 2012 4:53 PM
------------

சே. குமார் said...

ராஜதுரை கேட்டிருப்பது அதிகம்தான்...

8 November 2012 11:23 PM****

ஜெயமோஹனும் இதுமாரி எழுதியிருக்க வேண்டியதில்லை.. ராஜதுரையும் அவரை சேலஞ் செய்ததுடன் விட்டு இருக்கலாம்.. 20 லட்சம் ரொம்ப அதிகம்போலதான் இருக்கு.. அந்த வக்கீல் நோட்டிஸும் கொஞ்சம் "politically correct" மொழியில் எழுதி இருக்கலாம்..

passerby said...

True Chinmayi and K Chidamabaram also filed defamation case. But they filed FIR on basis of which Srinivasan and others..(dont remember names) were arrested. Now the Police has to defend the case in court.

In Jemo case, it is just a lawyer's notice for which Jemo wont go to jail, nor the police will come to his doorsteps.

Jemo can either ignore the notice in which case nothing will happen to him; only that the other party will proceed to file a case against him, which means Jemo can defend it.

Such a legal process is well in order and good. Filing FIR is not. The accused faces public opprobrium becaue the public will first think that the accused is really the wrong party; police arrest and jail will also bring mental torture and public shame to him and family members.

Therefore, you need not bother about the lawyer notice, i mean, no freedom of speech etc. is questioned here. Why to blog?

It is left to Jemo what to do; not for others at all.

Your surprise over the style of language used by the lawyers. Such language is a trick to intimidte the other party. Indeed, indirect intimidation i.e. legally, is the main motive of lawyers notices. Amout of defamation sought by the lawyers is also a sort of intimation. Not really meant.

In other words, you will have to read between the lines.

வருண் said...

Thanks for explaining the difference between the first two cases and JM case, passerby! :-)

***Your surprise over the style of language used by the lawyers. Such language is a trick to intimidte the other party. Indeed, indirect intimidation i.e. legally, is the main motive of lawyers notices. Amout of defamation sought by the lawyers is also a sort of intimation. Not really meant.

In other words, you will have to read between the lines.***

I was indeed shocked to see such a language from a lawyer indeed! I am learning.. :))))

passerby said...

//I was indeed shocked to see such a language from a lawyer indeed! I am learning.. :))))//\\

I, too.

But it is not uncommon, isn't?

Anonymous said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

வருண் said...

நன்றிங்க ரெவெரி மற்றும் மதுரைத் தமிழன்!

உங்கள் இருவருக்கும் என் இனிய தீவாளி வாழ்த்துக்கள்! :-)