Tuesday, May 14, 2013

எழுத்தாளனின் நல்ல படைப்பிற்கு செக்ஸ் ஹார்மோன்கள் அவசியமா?

நம்ம ஊர் எழுத்தாளர்களை எடுத்துக்கொள்ளுங்கள், இவர்களுடைய சிறந்த படைப்புகள்னு பார்த்தால், இவர்கள் இளமையாகவோ அல்லது நடுவயதிலேயோ இவர்களிடம் இருந்து உருவாகி வெளிவந்தவைகள்தான்.
பொதுவாக இவர்களுக்கு வயதாக ஆக இவர்கள் எழுத்து மங்க ஆரம்பித்து விடுகிறது.

ஒருவர் அனுபவம் மிக்கவராக ஆகும்போது அவரால் இன்னும் நல்லா எழுதமுடியவேண்டும்! ஆனால் வயதான காலத்தில் சாண்டில்யன் எழுதிய சரித்திர காமக்கதைகளோ, ஜானகிராமனின் பர்வேர்ட்டெட் சிந்தனைகளுடன் வந்த நளபாகமோ, அல்லது பாலகுமாரனின் ஆன்மீகக கட்டுரைக் குப்பைகளோ விமர்சகர்களையோ வாசகர்களையோ அதிகமாகக் கவரவில்லை! அதே சமயத்தில் இளமையில் இவர்கள் எழுதிய, கடல் புறா, யவன ராணி, அம்மா வந்தாள், மரப்பசு போன்றவை விமர்சகர்களையும் வாசகர்களையும் அதிகம் கவர்ந்தது எனலாம்.

சிறந்த திரைப்பட இயக்குனர்களின்  படைப்புகளும் அதேபோல்தான். அது இயக்குனர் இமயமாக இருக்கட்டும், இல்லை இயக்குனர் சிகரமாக இருக்கட்டும்! மணிரத்னம், பாலுமஹேந்திரா, மகேந்திரன், பாக்ராஜ், டி ராஜேந்தர் யாருமே இதற்கு விதிவிலக்கு கெடையாது! வயதாகிவிட்டால் இவர்கள் இயக்கத்தில் நடிக்க இவர்களே உருவாக்கிய நடிகர்களே தயங்கி ஒதுங்கி ஓடுகிறார்கள்.

 File:Testosteron.svg



எனக்கென்னவோ, நம்ம எழுத்தாளர்களையும், இயக்குனர்களையும் எடுத்துக்கொண்டு, கொஞ்சம் இன்னொரு கோணத்தில் பார்த்தால் இவர்களுடைய செக்ஸ் ஹார்மோனுக்கும் (டெஸ்டாஸ்டீரோன் லெவலுக்கும்) க்ரியேட்டிவிட்டிக்கும் சம்மந்தம் இருப்பதுபோல இருக்கு!


 File:Testosterone-from-xtal-3D-balls.png
When their sexual performance goes down they could not do well in their profession as well or WHAT?  புதிராக இருக்கிறது?!

13 comments:

தர்ஷன் said...

ஹார்மோன்ஸ் சம்பந்தப்படுதான்னு தெரியல்ல பாஸ், எங்கேயாவது உங்கள் விருப்பப்படி ஆய்வு செய்வார்களாக, ஆனால் இவர்கள் தம்மை அப்டேட் செய்துகொள்வதில்லை. மணிரத்னத்தை பொருத்தவரை தனக்கு பரிச்சயமில்லாத களத்தில் கை வைக்கிறார். சுஜாதாவும் வாலியும் தம்மை அப்டேட் செய்து கொள்ளவில்லையா? கமலை சொல்லலாம் என நினைத்தேன் அடிக்க வருவீர்கள் என விட்டு விட்டேன்

வருண் said...

வாங்க தர்ஷன்!

எனக்கு கமல்மேல் உள்ள "காதலை" தள்ளி வச்சுட்டுப் பார்த்தால் கமலுடைய விஸ்வரூபம் அவருடைய முந்தைய க்ரியேஷன்களை விட பெட்டர் தான்னு நிச்சயம் சொல்லலாம். (வியாபார மற்றும் டெக் ஆஸ்பக்ட்டைப் பார்த்தால்). ஆனால் ஹே ராமை விட இதில் கமல் ஒரு படி மேலே போயிருக்கார்னு விமர்சகர்கள் யாரும் அடிச்சு சொல்லவில்லை! அது ஏன்னு தெரியவில்லை! :)

கவியாழி said...

நல்ல ஆராய்ச்சி?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இயான் ஃபிளம்மிங் பத்தி ஒரு வதந்தி உலாவுவது உண்டு. அதையும் இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தங்களுக்கு தெரிந்த கதைக்கலனை உபயோகப் படுத்தி வந்தவர்கள் பெரிய ஆட்கள் ஆகிவிட்டபின் எல்லா இடங்களிலும் கதையைக் கொண்டு செல்வதால் சில பல பெருந்தலைகள் தோற்றன. மண்வாசனை, பதினாறு வயதினிலே கிராமங்களும் நகர மக்களுக்கு பரிச்சயமில்லாததுதான். ஆனால் அவை உண்மை.அதனால் ஜெயித்தன. தாஜ்மகால் கிராமமும் மக்களும் பரிச்சயம் இல்லாததுதான் ஆனால் அது ஒரு கற்பனை. ஒருவேளை அந்த படத்தில் அது ஜெயித்திருந்தாலும் தொடர்ந்து வந்திருந்தால் அது தோற்றிருக்கும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

படைப்பாளிகள் இளைஞர்களாக இருக்கும்போது அவரக்ளுடன் வேலை செய்பவர்களில் சிலராவது அவர்களைவிட வயதானவரக்ள் இருந்திருப்பார்கள். அவர்கள் படைப்பாளிகளின் குறைகளைச் சொல்லி இருக்கக் கூடும். அதனால் அவர்கள் அதைச் சரி செய்து கொண்டு சிறப்பான படைப்புகளைக் கொடுத்திருப்பார்கள். குறிப்பிட்ட வயதிற்குப் பின் எது செய்தாலும் சூப்பர் என்று சொல்லும் கூட்டம்தான் கூட இருக்கும். அது கீழே தள்ளிவிட்டு விடும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

விசு உடன் கிஷ்மு இருக்கும்வரை அவரது படைப்புகள் ரசிக்கும்படி இருந்ததும் அதற்குப் பிறகு வேறுமாதிரி ஆனதும் பதியப் பட வேண்டியவை.

Jayadev Das said...

This cannot be generalized. Some people shine for a shorter period, some for longer and few as along as they existed. There are no hard and fast rule.

வருண் said...

**கவியாழி கண்ணதாசன் said...

நல்ல ஆராய்ச்சி?***

இல்லை, எழுத்தாளனுக்கு என்ன தேவை? ஒரு பேணாவும், சிந்தனைகளும்.. அனுபவம் அதிகமாக ஆக ஏன் எழுத்து மங்குதுனு என்பது எனக்குள் எழும் கேள்வி. அதை அப்படியே சொல்லிட்டேன்.

உங்க வருகைக்கு நன்றி, சார். :)

வருண் said...

சுரேஷ்: உங்க பல கருத்துக்களுக்கு ஆழ்ந்த சிந்தனையுடன் இதை அனலைஸ் செய்ததற்கும் நன்றி.

நீங்க சொல்றது இயக்குனர்களுக்கு வேணா ஒத்து வரலாம். எழுத்தாளனுக்கு என்ன தேவை?? அவனேதான் அவனுக்கு எல்லாம்! இல்லையா?

வருண் said...

***Jayadev Das said...

This cannot be generalized. Some people shine for a shorter period, some for longer and few as along as they existed. There are no hard and fast rule.***

வயதான காலத்தில் கொடிகட்டிப் பறந்த நாலு தமிழ் எழுத்தாளர்களையும், நாலு தமிழ் திரைப்பட இயக்குனர்களையும் காட்டி இதை நீங்க சொல்லியிருந்தால் நல்லாயிருக்கும், ஜெயவேல் (ள்)! :)

ரிஷி said...

"வாலிப" வாலியை மறந்து விட்டீர்களா வருண்? இந்த வயதிலேயும் சக்கப் போடு போடுகிறாரே?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

முதுமையில் ஜொலிக்க முடியாமல் போவதற்கு காரணம் வாசிப்பவர்கள் அல்லது ரசிப்பவர்கள்தான். எந்தக் கலையாக இருப்பினும் ரசிகர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவும் நடுத்தர வயதுடையவர்களாகவுமே இருக்கிறார்கள்.இதில் விதி விளக்குகள் இருக்கலாம்.. படைப்பிற்கு மட்டுமல்ல ரசிப்பதற்கும் வயது காரணமாக இருக்கிறது வாழ்வின் முதல் பாதியில் இருக்கும் ரசிப்புத் தன்மையும் பிற்பகுதியில் நோய் மற்றும் உடல் பலவீனம் காரணமாக குறைந்துவிடுகிறது.இது படைப்பிலும் எதிரொலிக்கிறது ரசிப்பிலும் எதிரொலிக்கிறது.