Friday, May 31, 2013

தினகரனில் சுஜாதா பற்றி அவதூறு வருகிறதா?!

ஜெயமோஹன் தளத்தில் வெளியாகியுள்ள   கடிதம்தான் கீழே உள்ள சுஜாதா பற்றி பேசப்படும் ஒரு கட்டுரை! ஒரு தீவிர சுஜாதா ரசிகர், சுஜாதா மேல் அவதூறு வரப்போகிறது என்றும் வரும் ஞாயிறு அன்று தினகரன் பதிவில் அவரை இழிவு படுத்தும் கட்டுரை இடம் பெறப்போகிறது என்கிற கவலையுடன் ஜெயமோஹன் தளத்தில் பகிர்ந்து கொண்டது இந்தக்கடிதம்.

இதை அங்கேயிருந்து வெட்டி ஒட்டி இருக்கிறேன். இதற்கு ஜெயமோஹன், அவர் பாணியிலே பதில் சொல்லியிருக்கிறார். அவர் பதிலை நீங்க வாசிக்கணும்னா, நீங்க அவர் தளத்திற்குப் போக  சுஜாதாவை காப்பாற்ற வேண்டுமா? "இங்கே சொடுக்கவும்!

அதை விடுத்து கொஞ்சம் இந்த சுஜாதா ரசிகரின், பிரச்சினையை நாம் கவனமாகப் பார்ப்போம்.


அன்புள்ள ஜெயமோகன் சார்,

வணக்கம்..
திருச்சியில் தங்களை சந்தித்த பின் இப்போது தான் பேசுகிறேன்.. நலமா?
சமீபமாக எழுத்தாளன் தமிழ் சமூகத்தில் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்படுகிறான் என்பது குறித்து பல்வேறு கருத்து மோதல்கள் இணையம் எங்கும் தெறிக்கின்றன.. உங்கள் கருத்துக்களுடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன்.. பல மனிதர்கள் அறிஞர்களை அல்லது ஏதேனும் ஒரு துறை வல்லுனரை சந்திக்கும் வேளையில் தங்களுக்கு தெரிந்த அச்சு பிச்சு தகவல்களை அவர்களுக்கு சொல்லிகொடுத்து விட்டு நகரவே முயல்கின்றனர்.. உண்மை..
சிறிது நாட்களுக்கு முன் சுஜாதா குறித்த பதிவுகளும், பதில்களும் அளித்திருந்தீர்கள்.. சுஜாதா தீவிர இலக்கியம் படைப்பதற்கான அத்தனை தகுதிகள் இருந்தும் அதை முயலவில்லை என்றீர்கள். சுஜாதாவின் எழுத்து காலம் தாண்டி நிற்குமா என்பது குறித்து நான் பேச போவதில்லை..
அவரது வாசகனாக சொல்கிறேன்.. சுஜாதா ஒரு கதாநாயகன் போல் எல்லோர் மனதிலும் இருந்தார்.. இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.. எழுத்தாளர் என்றவுடன் பலரும் அறிந்த மிக சில தமிழ் எழுத்தாளர்களில் அவரும் ஒருவர்..
வெகுஜனம் விரும்பும் படைப்பை நோக்கியே தன்னை திருப்பிக்கொண்டவர். அவர் படைத்த சினிமாக்களில் கூட அந்த பட இயக்குனரை தாண்டி சுஜாதா டச் இருப்பதை நாம் உணரலாம்.

அத்தகைய ஆளுமையை பற்றி அவர் மனைவி அளித்த பேட்டி இந்த வாரம் வெளியாக உள்ளது..

’அவரை விட்டு பிரியணும்னுதான் நினைச்சேன்… அம்மா மடில படுத்து பல நேரம் அழுதிருக்கேன்… அவரோட வாழ பிடிக்கலைனு கதறியிருக்கேன்… ஆனா, குழந்தைகளோட ஒரு பொண்ணு தனியா வாழறது நல்லதுக்கில்லைனு அம்மா தடுத்துட்டாங்க… அவங்களை சொல்லி குற்றமில்லை. அந்தக் காலம் அப்படி. இந்தக் காலம் மாதிரி சமூக சூழல் இருந்திருந்தா நிச்சயம் அவரை விட்டு பிரிஞ்சிருப்பேன்…’’
———–
‘’அவரோட எழுத்துக்களை நான் படிச்சா திட்டுவாரு… சொல்லப் போனா புத்தகங்களை பெண்கள் படிக்கறதே அவருக்கு பிடிக்காது… சமையலறை, குடும்பத்தைத் தாண்டி பெண்கள் வெளிய வரக் கூடாதுங்கிறது அவர் கொள்கை…
———-
‘’அக்கிரகாரத்துல தன் பாட்டி வீட்லதான் அவர் வளர்ந்தாரு. அதனால அக்கிரகாரத்தை தாண்டி அவர் சிந்தனை வளரவேயில்லை. கடைசி காலம் வரைக்கும் அவருக்குள்ள இருந்தது அந்த அக்கிரகார சிறுவன்தான்…’’

இப்படி பல விஷயங்களை போட்டு உடைத்திருக்கிறார். தமிழகமே அந்த எழுத்தாளரின் நடைக்கு இன்றும் மயங்கியிருக்கிறது. அப்படிப்பட்டவரின் இன்னொரு முகத்தை முதல் முறையாக பதிவு செய்திருக்கிறார் அவர் மனைவி.
சுஜாதா குடும்பத்தின் நெருங்கிய நண்பர் விசாரித்ததில், திருமதி சுஜாதா “ஆப் தி ரெகார்ட்” பேசியதை எல்லாம் பேட்டி என்று எடுத்துக் கொண்டார்கள் என்பது தெரியவந்தது.. “எந்தப் பத்திரிகை, என்ன பேட்டின்னு கூட சரியா விசாரிக்காம சும்மா பேசிண்டிருந்தேன், கொஞ்சம் உளறவும் செஞ்சேன்” என்று கூறியுள்ளார்..

இதோ அந்த நண்பர் திருமதி சுஜாதாவிடம் கேட்டவை..
https://www.facebook.com/losangelesram/posts/10201180569656870
வரும் ஞாயிறன்று இந்த பேட்டி தினகரனில் வெளியாகிறது..
இது என்ன? ஒரு எழுத்தாளர்.. அதுவும் இறந்து ஐந்து ஆண்டு ஆனா பின் நொந்து பொய் கிடக்கும் அவர் மனைவியிடம் பேட்டி எடுத்து மக்கள் அவர் என கருதி வைத்துள்ள பிம்பத்தை உடைக்க ஏன் இந்த ஆசை? உங்கள் பதிவொன்றில் சுஜாதா மரணத்தை எதிர்கொண்ட விதம் பற்றி சொல்லி இருந்தீர்கள்.. அதை படித்து விட்டு தூங்க முயன்றும், முடியவில்லை,.. அவரது தீவிர ரசிகன், வாசகன் என்ற முறையில் நான் வைக்கும் விண்ணப்பம் இது.. சுஜாதா என்னும் ஆளுமை வரும் ஞாயிறன்று நொறுங்க போவதை நினைத்தால் மனம் கனக்கிறது..
இலக்கியவாதியோ இல்லையோ.. சுஜாதா ஒரு தலைமுறை நாயகன் அல்லவா? அவருக்கு இப்படி நம் கண் முன் ஒரு அவமானம் நிகழ வேண்டுமா? இதை சக எழுத்தாளர்கள் தடுக்க முடியுமா? சங்கங்கள் இதை கவனிக்குமா?
- ஸ்ரீகாந்த்

சுஜாதாவின் பரம விசிறி, ஸ்ரீகாந்த், உண்மையிலேயே ரொம்ப கவலையோட இதை எழுதி இருக்கிறார் இந்தக் கடிதத்தை. சுஜாதாவின் விசிறிகள் பலர் இதைப் படித்துவிட்டு இவரைப்போலவே அழுது ஒப்பாரி வைக்கப்போறாங்க என்பதென்னவோ உண்மைதான்.

* சரி, இதில் எதுவும் ஷாக்கிங்கா உங்களுக்கு இருக்கா?

ஆமாவா? நம்ம மக்களிடம் இதுதான் பெரிய பிரச்சினை. தனிப்பட்ட வாழ்க்கையில் சுஜாதா என்கிற ரங்கராஜன் ஒரு சாதாரண குறைகள் நிறைந்த மனிதந்தான். அவர் எழுத்தை வைத்து அவர் கொடுத்த பேட்டிகளை வைத்து அவர் "கடவுளுக்கு" சமம் என்பதுபோல் ஒருவர் நினைத்திருந்தால் அது யார் குற்றம்?

சுஜாதாவின் குற்றமா? இல்லை அவர் ரசிகர்களின் குற்றமா?

சுஜாதா பற்றி நான் பலவாறு எழுதி இருக்கேன். அதை எல்லாம் தோண்டி எடுக்க முடியவில்லை. இருந்தாலும் எழுதிய ஒரு சிலவற்றை இங்கே தர்ரேன். இதில் சுஜாதாவின் ரசிகர்களின் பின்னூட்டங்களை நீங்க கவனிக்கணும்!

 கமலஹாசன் நடிப்பும் சுஜாதா எழுத்தும் பிடிக்காது!

சுஜாதாவை சமன் செய்த இன்றைய ஆண்லைன் விக்கிபீடியா!

எனக்கு இந்த கடிதம்  படித்து எந்த ஆச்சர்யமும் இல்லை! சுஜாதாவை எப்போவுமே நான்  குறைகளும் நிறைந்த ஒரு சாதாரண ஆம்பளையாகத்தான் பார்த்ததுண்டு! அவர் ஒரு "எம் சி பி" என்பதை உணர்ந்து நான் பலமுறை பச்சையாக சொல்லியுள்ளேன். அவர் போய் சேர்ந்துவிட்டதால அவரை கடவுளா வணங்கணும்னு நான் நம்பவில்லை! அவர் மேலே அப்படி எதுவும் கண்ணா பிண்ணானு மரியாதை வைக்காததால எதுவும் ஆச்சர்யப்படும்படி ஒன்றுமே இல்லை!

எனக்கு என்ன ஆச்சர்யம்னா.. எப்படி அவர் மனைவி இதுபோல் ஒரு பேட்டி கொடுக்க ஒத்துக்கிட்டார் (it does not matter off the record or on the record!)  என்பதே!

3 comments:

வருண் said...

இப்போதான் இங்கே போயிப் பார்த்தேன்
https://www.facebook.com/losangelesram/posts/10201180569656870

சுஜாதா விசிறிகளெல்லாம் ஒண்ணு கூடி ஒப்பாரி வைக்கிறாங்கப்பா!

நீங்களும் அங்கே போயி ஒப்பாரியில் கலந்துக்கலாம்!

நல்லவேளை, சுஜாதாவின் பொய் முகத்தை க் காப்பாத்த, பேட்டி கொடுத்த அவர் மனைவிக்கு மனநிலை சரியில்லைனு சொல்லாமல் இருக்காணுக! அதுவரைக்கும், இவனுக நாகரிகமானவணுகதான் போங்கோ!

முகத்திரை எல்லாம் கிழிஞ்ச பிறகு, சரி தொலையுதுனு சும்மா தட்டிவிட்டுட்டுப் போவாணுகளா! ஒப்பாரி வச்சு, வச்சு இதை பெரிய எழவா இவணுகளே ஆக்கிப்புடுவாணுக போல!

What was the Buddha's quote I gave a week ago?

Yeah, three things can not be long hidden.. SUN, MOON and TRUTH! Seems like the TRUTH has come out finally after long-hidden!

And the interview was given by his wife to whomever. As they can not do anything against her, they blame the interviewer! It is fun to watch all these clowns! LOL

sunaa said...

எப்புடியோ ஒனக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு கவலை இல்ல...இத வச்சு ஓட்டிப்புடுவ ....அது எப்டி எங்கயாவது பிரச்னை , எவனோ எவனையோ திட்டுரான்னா நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு ஓடி வந்திர்ற ..பாவம் டா உன் பொண்டாட்டி புள்ளைங்க..

வருண் said...

****sunaa said...

எப்புடியோ ஒனக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு கவலை இல்ல...இத வச்சு ஓட்டிப்புடுவ ....அது எப்டி எங்கயாவது பிரச்னை , எவனோ எவனையோ திட்டுரான்னா நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு ஓடி வந்திர்ற ..பாவம் டா உன் பொண்டாட்டி புள்ளைங்க..

31 May 2013 10:20 pm***

வாடா "சு"னா! இதையெல்லாம் பின்னூட்டம்னு வந்து போட்டுட்டு, வந்து வந்து எட்டிப்பார்த்துட்டுப் போறியாக்கும்? பெரிய சாதனைதான் போ! போயி எங்கேயாவது சுஜாதாவுக்காக ஒப்பாரி வை!

வந்துட்டான் "சு"னா "பு"னானு ஒரு பொறம்போக்கு ஐ டி ல!