Friday, August 8, 2014

வருணின் சுமாரான உளறல்கள் (1)

* நண்பர் கிரி, நரேந்திர மோடிக்கு ஓட்டுப் போடச் சொல்லி சிபாரிசு செய்த ஞாபகம் இன்னும் இருக்கு. தற்போது மோடி மேல் பல விமர்சனங்கள் வர ஆரம்பித்துவிட்டதும், அதை "சமாளிக்க" பொறுப்பாக ஒருபதிவு போட்டு இருந்தார். என்னடா சொல்றார் நண்பர் கிரினு னு போயிப் பார்த்தால்..

பொதுமக்கள் எவரும் தான் கெட்டுப் போக வேண்டும் என்று நினைத்து வாக்களிப்பதில்லை. அனைத்து மக்களின் எண்ணமும் நாடு முன்னேற வேண்டும், மக்கள் சந்தோசமாக இருக்க வேண்டும், அனைத்து மக்களும் அடிப்படை வசதிகளைப் பெற வேண்டும் என்பது மட்டுமே!

 கடந்த எலக்சன் நடந்து முடிந்த போது என் தந்தையிடம்  தொலைபேசியில் பேசும்போது ஓட்டுப் போடும் பொது மக்கள் மனநிலை பத்தி விசாரித்தேன். "வீட்டிற்கு வந்து ரூ 1000 கொடுத்து ஏழைகள் ஓட்டை வாங்கி விடுகிறார்கள்" என்றார். சரி, பணத்தை "வாங்கிட்டு வேற யாருக்காவது ஓட்டுப் போட்டால் எப்படித் தெரியும்?" னு நான் குதற்கமாகக் கேட்டேன். அதற்கு அவர், "அந்தமாதிரி காசு வாங்கியவர்கள் யாரும் வஞ்சகம் செய்வதில்லை! "என்றார். ஏழைகள் ஓட்டு இப்படித்தான்அவர்கள் சம்மதத்துடன் ஒரு விலை கொடுத்து  வாங்கப் படுகிறது.. இப்போ மேலே போயி கிரி சொல்றதை வாசிச்சுப் பாருங்க!

ஆமா நண்பர் கிரி, பொதுமக்கள் னு யாரைப்பற்றிச் சொல்லுகிறார்??? :))) 1000 ரூபாய் வாங்கிவிட்டு அதை வைத்து  யார் நல்லவர்கள்னு பகுத்தறிந்துதான் ஓட்டுப் போடுறாங்களே இவர்களையா??!!! :)))

BTW, I am not judging, Mr. Giri from this.  ஒரு சில விசயத்தை நியாயப்படுத்த முற்படும்போது, ஒரு சில முக்கியமான காரணிகளை "ஓவர் லுக்" செய்வதுதான் மனித இயல்பு போலும். அதைத்தான் கிரி இங்கே செய்கிறார்.

********************

* இது சொந்தக்கதை..எங்க வீட்டில் "பேக் யாட்"ல ஒரு "பறவைகளுக்கு இரை வைக்கும்"  bird feeder  ஒண்ணு வைத்து இருக்கோம். உடனே "உங்க அட்ரஸ் என்ன, வருண்? பசியால் வாடும் பறவைகளை அனுப்பி வைக்கிறேன்" னு சொல்லாதீங்க! :) மேலே படிங்க!

 




 


These photos are from the WEB!! Not mine!!!

மொதல்ல அதில் தானியங்களை போட்டு வைத்தால் ஒண்ணு ரெண்டு குருவிகள், ராபின், கார்டினல்ஸ் போன்றவை  வந்தன. பறவைகள் எங்கவீட்டு விருந்தினராக வந்து சாப்பிட்டுவிட்டு சென்றன. வாரம் ஒரு முறை சுமார் ஒரு 500 கிராம் எடையுள்ள தானியங்கள் நிறைத்து வைத்தால், வருகிற விருந்தினருக்கு  சரியா வருவது போலிருந்தது. எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு.

இப்போ திடீர்னு என்னடானா, இவைகள் போக, புதிதாக மணிப்புறாக்கள், மேலும் பல பலப் பறவைகளும் வருகின்றன. அழகழகான பறவைகளாக பார்க்க ரொம்ப நல்லா இருக்கும்.

இதற்கு இடையில், அணில்கள் எப்படியாவது ஏறிப் போயி அந்த "bird feeder" வைத்திருக்கும் தானியங்களை கொட்டிவிட்டு, கொட்டிக்கிடக்கும் தானியங்களை  அவைகளின் பங்குக்கு, சாப்பிடும். அப்படி கொட்டியதை முயல்கள் மற்றும்  புறாக்கள் போன்ற "பெரியவர்கள்" சாப்பிடுவாங்க.

இப்படியே ஒரே அணில், முயல், புறா, குருவினு ஒரே கூட்டம் கூடிடுது!

கூட்டம் அதிகமாகிவிட்டதால் இப்போ ஒரு நாளைக்கு ஒரு கிலோ தானியம் வைத்தாலும் அவர்களுக்கு போதவில்லை! நெஜம்மாத்தான் சொல்றேங்க! :)
 


மேலே உள்ளது  தானியம் உள்ள பாக்கட்தான். $ 8 க்கு வாங்கலாம். (20 பவுண்ட்ஸ்)! இந்த "பேக்" ஒரு வாரத்துக்கு வர மாட்டேன்கிறது!! போற போக்கைப் பார்த்தால் இனிமேல் இந்த "பாக்"  ரெண்டு நாளைக்குக்கூட வராதோ என்னவோனு பயம்மா இருக்கு!

ஆக இந்த பறவைகளுக்கு இரை போட்டு "பேங்க்ரப்ட்" ஆன முதல் ஆள் நானாத்தான் இருப்பேன்னு நினைக்கிறேன். :=))))

இதிலே ஒரு நல்ல விசயம் என்னனா.

எங்க தக்காளி தோட்டத்தில் (ஏதோ நாலு ஏக்கர்ல தோட்டம் இருக்குனு நெஅன்ச்சுக்காதீங்க! சும்மா தொட்டியிலேதான் இருக்கும்) வருகிற தக்காளிகளை நம்ம அணிகள் எப்போவுமே விட்டு வைப்பதில்லை. இப்போ இந்த தானியங்களை சாப்பிட்டுவிடுவதால் எங்க வீட்டருகில் உள்ள அணில்கள் தக்காளிப் பழங்களை நாங்க பறிக்கிறதுக்கு முன்னாலயே தட்டிப் பறிப்பதில்லை!


 



 

 

 These photos are also from the WEB!! Not mine!!!


 எங்க வீட்டில் திரியும் அணில்கள் எல்லாம் இந்த பறவைகளுக்கு இடும் தானியங்களை சாப்பிட்டுவிட்டு  வயிறு ரொம்பி, தக்காளியை தொடாமல் விட்டு விட்டு போய் விடுகின்றன!!

Now, accidentally we have found a solution for protecting the tomatoes from our Squirrels!! :))) 

ஆக,  "வயிறு நெறைய எனக்கு சாப்பாடு போட்டால், நான் ஏன் உன் தக்காளியை திருடுறேன்?"  என்கிறார், அணிலார்! :))

18 comments:

Amudhavan said...

நீங்களும் சூடேறாமல் யாரையும் சூடேற்றாமல் ஒரு பதிவை எழுதிட்டீங்க போலிருக்கு. நீங்கள் சொன்ன அதே பிரச்சினையை (பறவைகள் வரத்து அதிகமாகப்போய் வாங்கவேண்டிய பறவைத்தீனி அதிகரித்துவிட்டது)அமெரிக்காவில் இருக்கும் என்னுடைய மகளும் சொல்லியிருக்கிறாள்.

மகிழ்நிறை said...

உங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ என்ன ஒரு கவிதை தனமான டச்சிங் பதிவு!!! :)
சாரி இப்போ தான் பார்த்தேன்:))
உளறல் நல்லாத்தான் இருக்கு:))
நட்பின் உரிமையில் ஒரு கேள்வி. இவ்ளோ அழகான கட்டுரையின் தொடக்கம் ஏன் இவ்ளோ டென்ஸா???
அதை வேறொரு பதிவில் வைசிருக்கலாமோ? பாருங்க அணில்பிள்ளைகளும், அழகு பறவைகளும் கீச்சிடும் இடத்தில் நாம மௌனமா இருக்கிறதே ஒரு தியானம் தான் இல்லையா?

மகிழ்நிறை said...

அப்புறம் வருண் சொல்ல மறந்துட்டேனே! கடைசி பஞ்ச் சிவப்பா இருந்தது!! got it? yes! I liked that!!

மகிழ்நிறை said...

உளறல் ஒன்னு! அப்போ தொடர்ந்து உளறப்போரீங்கனு அர்த்தம்:)) மைதிலி ஹாப்பி அண்ணாச்சி! பின்ன வாங்குன பல்பை எல்லாம் திருப்பிக்கொடுக்கவேண்டாம்:))

sekar said...

நீங்க எந்தக் கோணத்தில் எழுதினீர்கள் என்பது தெரியாது ஆனால் இதில் (ஒரு) பிரச்சனைக்கு அற்புதமான தீர்வு சொல்லி உள்ளீர்கள். நன்றி!

வருண் said...

****Amudhavan said...

நீங்களும் சூடேறாமல் யாரையும் சூடேற்றாமல் ஒரு பதிவை எழுதிட்டீங்க போலிருக்கு.***

:-)

*** நீங்கள் சொன்ன அதே பிரச்சினையை (பறவைகள் வரத்து அதிகமாகப்போய் வாங்கவேண்டிய பறவைத்தீனி அதிகரித்துவிட்டது)அமெரிக்காவில் இருக்கும் என்னுடைய மகளும் சொல்லியிருக்கிறாள்.***

உங்கள் மகள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி, சார். :)

வருண் said...

****Amudhavan said...

நீங்களும் சூடேறாமல் யாரையும் சூடேற்றாமல் ஒரு பதிவை எழுதிட்டீங்க போலிருக்கு.***

:-)

*** நீங்கள் சொன்ன அதே பிரச்சினையை (பறவைகள் வரத்து அதிகமாகப்போய் வாங்கவேண்டிய பறவைத்தீனி அதிகரித்துவிட்டது)அமெரிக்காவில் இருக்கும் என்னுடைய மகளும் சொல்லியிருக்கிறாள்.***

உங்கள் மகள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி, சார். :)

வருண் said...

***உங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ என்ன ஒரு கவிதை தனமான டச்சிங் பதிவு!!! :)***

வாங்க மைதிலி!

நீங்கள் சொல்வது உண்மைதான். பொதுவாக நான் பதிவெழுதினால் அதன் தாக்கத்தால் ஒரு சிலருக்கு தூக்கம் பாதிக்கப்படும்.

சரி, எல்லாரும் நிம்மதியா இருக்கட்டுமேனு ஒரு பெரிய மனதுடன், இப்படி ஒரு பதிவு..

இப்படி ஏதாவது "உளறினால்"த்தான் உங்களை மாதிரி பெரியவாளிடம் ஒரு பின்னூட்டம் வாங்க முடியும்னு ஒரு சின்ன முயற்சிதான். என் நம்பிக்கை வீண் போகவில்லை! :)

வருண் said...

****உளறல் ஒன்னு! அப்போ தொடர்ந்து உளறப்போரீங்கனு அர்த்தம்:))**

தரமா ஏதாவது கவிதை கட்டுரை எழுதுறதுனா கஷ்டம்.. பெரிய கம்மிட்மெண்ட் ஆயிடும்.. உளறுவது ஈஸிதானே? அதான்..

***மைதிலி ஹாப்பி அண்ணாச்சி! பின்ன வாங்குன பல்பை எல்லாம் திருப்பிக் கொடுக்கவேண்டாம்:)) ***

பல்பை எல்லாம் திருப்பிக் கொடுத்தால் மேலும் பல்பு கிடைக்கும்! நாங்கல்லாம் "பல்பு கர்ணன்" பரம்பரையாக்கும் :))))





வருண் said...

***நீங்க எந்தக் கோணத்தில் எழுதினீர்கள் என்பது தெரியாது ஆனால் இதில் (ஒரு) பிரச்சனைக்கு அற்புதமான தீர்வு சொல்லி உள்ளீர்கள். நன்றி!***

வாங்க சேகர்! உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு! :)

மகிழ்நிறை said...

**உங்களை மாதிரி பெரியவாளிடம் ஒரு பின்னூட்டம் வாங்க முடியும்னு ஒரு சின்ன முயற்சிதான்**
யாரப்பா அது எனக்கு பின்னாடி நின்னுகிட்டு படிக்கிறது! ஹா...ஹா...
பதிலுக்கு பதில் பல்ப் தர ரெடி தான்.
but though you ask us not analyze you with your works, i cant:(
it shows my lil brain tat BE CAREFUL WITH TAT GUY, HE SEEMS TO BE SHORT TEMPERED:) if I'm wrong I'm sorry:) ஒரு வாரமா பதிவு எழுதுறீங்க:)) but நான் இப்போ தான் பார்க்கிறேன். ரொம்ப guilty ஆ இருக்கு:( இப்போ தான் follow பண்ண தொடங்கிருக்கேன்:) மன்னிசூ!

வருண் said...

I think the whole blog-world will agree with your analyses and results!!!:-)))

They just don't say that to me as they don't consider me as a "good friend". But you are different and spoke what your mind cautioned you! :)) As you are a very "tolerant teacher" you can help me lengthen my temper from being so short- by being very nice to me! :)))

கிரி said...

பதிவர்கள் பலரை விமர்சிக்கும் வருண் நம்மையும் "மதித்து" எழுதி இருக்கிறாரேன்னு படித்தால், அணில் தக்காளி திருடுன கதையெல்லாம் சொல்லிட்டு கடைசி வரை நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில் என்றே கூறவில்லை! :-)

"ஏழைகள்" மட்டுமே பணம் வாங்குவதில்லை வருண். பணம் வாங்காத ஏழைகளும் பணம் வாங்கும் வசதியானவர்களும் இருக்கிறார்கள்.

"பொதுமக்கள்" என்பது வேறு யாரும் அல்ல. உங்கள் ஊருக்கு ஃபோன் போட்டு பேசிய உங்க அப்பா போன்றவர்களை உள்ளடக்கியவர்கள் தான்.

நான் ஒன்றும் உங்களுக்கு புதியவன் அல்லவே.. இது போல தனியா பதிவு போட்டுக் கேட்க..! விவாதிக்க என்னுடைய தளத்திற்கே வாங்க. நன்றி

BTW Bird feeder சேவைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் கூறிய நிறையப் பறவைகள் வந்து சாப்பிடுகின்றன என்பதைப் படித்ததும் எனக்கு சென்னையில் ஒருவர் கிளிகளுக்கு இது போல கொடுப்பது நினைவிற்கு வந்தது. இது பற்றி செய்திகளில் கூட வந்தது. சொல்ல முடியாது.. உங்கள் சேவை தொடர்ந்தால் உங்களைப் பற்றியும் உங்கள் பகுதியில் உள்ள ஒரு செய்தியில் வந்தாலும் வரலாம். அப்ப என்னை நினைத்துக்குங்க :-)

கிரி said...

சொல்ல மறந்துட்டேன்! எல்லோரும் தனக்கு "தேவையானதை" மட்டும் எடுத்துக்கிட்டு விமர்சனம் செய்துடுவாங்க ஆனால், மற்றவர்களும் விமர்சிக்கப்படுபவர் சரியோ தவறோ அல்லது உளறலோ என்ன கூறினார் என்று தெரிந்து கொள்ள என்னுடைய தளத்திற்கு சுட்டி கொடுத்தீங்க பாருங்க.. நன்றி :-) I mean it.

மகிழ்நிறை said...

கோபம் பற்றிய என் கவிதை ஒன்று**http://makizhnirai.blogspot.com/2013/09/blog-post.html** கண்டிப்பா இது அட்வைஸ் கவிதை இல்ல:) என் நண்பனுக்கு எழுதியது:)))

வருண் said...

வாங்க கிரி :-)

எனக்கு நம் மக்கள்மேல் நம்பிக்கை கெடையாது. அவநம்பிக்கைதான் அதிகம்..காந்தியையே அகற்றியவர்கள் நம் அப்பாவி மக்கள். நான் மேற்கோள் காட்டிய மக்கள் மேல் வைத்துள்ள அபிமானம், உங்க ஆப்ட்டிமிஸத் தை காட்டுது. நான் ஒரு பெஸ்ஸிமிஸ்ட்..அதான் இங்கே கருத்து வேறுபாடு தலை தூக்குகிறது.

உங்க தளத்தில் இப்போ எல்லாம் என்னால் எளிதாக பின்னூட்டமிட முடிவதில்லை. "பார்ட் ஆஃப் த ப்ராப்ளம்" நாந்தான். அதான் இங்கே கொண்டுவந்தேன்.

மக்கள்மேல் நீங்க வைத்திருக்கும் நம்பிக்கையை, மதிப்பை பாராட்டத்தான் வேண்டும். ஆனால் அதே சமயத்தில் நம் மக்கள் "இன்றைய பொழைப்பு" ஓடினால் சரினு ஒரு குறுகிய பார்வை உள்ளவர்களாகத்தான் இருக்காங்க என்பதே என்னுடைய அனுமானம்.
அது உங்களுக்கும் தெரியும். நீங்க ந்ல்லதையே நினைக்கிறீங்க. நான் ப்ராக்டிகல் டிஃப்ஃபிக்கல்ட்டீஸ் பத்தி சொல்லி என் அவநம்பிக்கையைக் காட்டுகிறேன். டேக் இட் ஈஸி, கிரி.

வருண் said...

***கோபம் பற்றிய என் கவிதை ஒன்று**http://makizhnirai.blogspot.com/2013/09/blog-post.html** கண்டிப்பா இது அட்வைஸ் கவிதை இல்ல:) என் நண்பனுக்கு எழுதியது:)))**

நன்றி, மைதிலி!

படித்துவிட்டு கோபப்படாமல் என் கருத்தைச் சொல்லுகிறேன். சரியா?
டீல்!! :)

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்