Tuesday, August 5, 2014

வைரஸ் அட்டாக்! தமிழ் பதிவுலகம் சாகிறது! தமிழும் விரைவில் சாகும்!

தமிழ்மணத்திற்குள் நுழைந்தால் , "கல்லாப்பட்டி" "ஐ கிறுக்கன்" " அஞ்சனா, எம்" "சேகர் எஸ்" "ஈசன் ஈ" என்கிற வைரஸ்களின்   நூறு குப்பைகள்தான் நிறைந்து வழிகிறது. கமர்ஷியல் தளம் நடத்தும்  இந்த குப்பைப் பதிவர்கள் கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல்  சுத்தமான வியாபார நோக்கில் எழுதும் குப்பைகளை ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை அள்ளிக்கொட்டுகிறார்கள்.

திரைமணம் பற்றிக் கேக்கவே வேண்டாம்!

தமிழ் பதிவுலகில் நுழைந்த வைரஸ்களான  இவர்கள் ஆக்கிரமிப்பால் சமீபத்தில் தமிழ்மணம் திரட்டியின் தரம் பல மடங்கு குறைந்துள்ளது.

தமிழ்மண நிர்வாகிகளுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை,  இதுபோல் பதிவர்களை கொஞ்சம்கூட வடிகட்டுவதே இல்லை!

எந்தவித கட்டுப்பாடுமில்லாமல் மேற்படியார்கள் பதிவெழுதுகிறேன் என்று சொல்லி குப்பைகளை அள்ளிக் கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

நிறைந்து வழியும் இப்பதிவர்களின் குப்பைப் பதிவுகளைப் பார்த்து தமிழ்மணத்திற்குள் நுழையவே பயம்மாக இருக்கிறது.

* தமிழ்மணம் இந்த வைரஸ்கள் தாக்குதலால் மிகவும் தரம் தாழ்ந்துள்ளது.

* பொறுப்பற்ற நிர்வாகத்தால் தமிழ்ப் பதிவுலகம் இப்போதே வேகமாகச் சாவதுபோல் ஒரு பிரமை உண்டாகிறது.

* பாவம், தமிழ்  இன்னும் கோடானுகோடி ஆண்டுகள் வாழும் என்று ஒரு சிலர் கனவு கண்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இதேபோல்,  தமிழ்த் திரட்டி நடத்துபவர்கள்  பொறுப்பின்மை தொடர்ந்தால், இந்த வைரஸ்களின் அட்டாக்கினால் தமிழ் நம் கண் முன்னாலேயே சாவதை நாம் பார்க்க முடியும்.

தமிழைக் கொன்ற பாவம் பொறுப்பற்ற தமிழ்மண நிர்வாகிகளையும் நிச்சயம் சேரும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கா?


9 comments:

sunaa said...

intha list-la neeyum irukka...onnayum serththukko...

வருண் said...

வாடா சுனா!!

நீ இன்னும் உயிரோடதான் இருக்கியா? :)))

செத்து அழுகிப்போயி பாக்டீரியா உன்னை திண்ணுடுச்சுனு நெனச்சேன்!

முண்டமா வந்து நிக்கிற!!! :)))

பால கணேஷ் said...

எந்த சந்தேகமும் இல்லை. நீங்க சொன்னது மாதிரி சமீபகாலமா எரிச்சலூட்டும் விதமான குப்பைகளை தமிழ்மணத்தில் நிறையக் காண முடிகிறது.

Yarlpavanan said...

சிறந்த கருத்துப் பதிவு
தொடருங்கள்

Anonymous said...

தமிழ்மணம் பாவம் சுமக்காது என்று நம்புவோம்.

Amudhavan said...

ஒரு ஆறேழு மாதங்களாகவே இம்மாதிரியான பதிவுகள் தொடர்ந்து வந்து எரிச்சலையே தருகின்றன. தமிழ்மணம் நிர்வாகிகள் எத்தனையோ விஷயங்களில் கவனமாக இருந்தவர்கள் இப்போதெல்லாம் எதுநடந்தாலும் 'ஆட்டோமேடிக்காக' நடந்துகொண்டு போகட்டும் என்று எல்லாவற்றையும் கணிணி இயந்திரத்திடம் விட்டுவிட்டு வாளாவிருந்துவிடுகிறார்கள் போலும்.
மறுபடியும் அவர்களுடைய அவசரமான மேற்பார்வை அவசியமாகப்படுகிறது.

Mahesh said...

ninga sonnathu 100% unmai sir.

nanum ithai patri pala murai yosichu irukken.
aanal yaarum antha virus kal patri kandukkurathu pola illa,
tamil manam povathaiye niruthi konden
ini achum tamilmanam ethavathu nadavadikkai edukkuma parkalam.

saamaaniyan said...

வருண்,

நான் வலைப்பூவில் தீவிரமாக இருப்பது ஒரு ஆரேழு மாதங்களாக தான் !

திரட்டிகளை பற்றிய என் எண்ணத்தை மிக சரியாக பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது உங்கள் பதிவு. நீங்கள் குறிப்பிட்ட வைரஸ்கள் மட்டுமல்லாது ஒரு சிலர் மட்டுமே தங்கள் பதிவுகளை தாங்களாகவே பல முறை பதிந்தும், " லைக்ஸ் " ஏற்றியும் முன் வரிசையில் நின்று கொண்டு மற்ற வலைப்பூக்களை பின்னுக்கு தள்ளும் குறுக்கு வழிகளிலும் ஈடுபடுகிறார்கள் !

இது போன்ற திரட்டிகளின் நிர்வாகத்தினர் தங்களின் தளங்களை உண்மையிலேயே கண்காணிக்கிறார்களா இல்லை அனைத்துமே தானியங்கி முறைகளா என்பது புரியவில்லை !

நன்றி

bandhu said...

your observation is absolutely correct! bulls eye!

சில web crawler மூலமாக ஆட்டோ ஜெனெரேட் செய்யப்படும் குப்பைகள் இவை. கூகிள் ஆட்சென்ஸ் மூலம் பணம் பண்ணும் விதமே இவை. முழுக்க முழுக்க தமிழ் மணத்தில் இவையே நிறைந்திருக்கிறது!