regular gas: $ 1.99 |
என்ன காரணம்?
அமெரிக்காவுக்கு தேவையான ஆயில், இங்கேயே புதிய தொழில் நுட்ப முறையில் தோண்டி எடுக்கப் படுகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து ஆயில் இறக்குமதி செய்வதை அமெரிக்கா குறைத்துள்ளது. விளைவு? ஒரு பக்கம் அமெரிக்க பொருளாதாரம் திடமாகி உள்ளது. அமெரிக்க டாலர் வால்யூ திடமாக ஆகியுள்ளது. அமெரிக்கா ஆயில் இறக்குமதியை குறைப்பதால் பாதிக்கப்படுவது யாருனு பார்த்தால்..ஆயில் ஏற்றுமதியையே நம்பி வாழும் ஈரான், ரஷ்யா, வெனிசூலா போன்ற நாடுகள். இந்நாடுகளில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
திடீர்னு எப்படி அமெரிக்காவில் ஆயில் அதிகமாக கிடைக்கிறது? பூமிக்கு கீழே பல ஆயிரம் அடிகளுக்கு கீழே உள்ள ஆயிலை தோண்டி எடுப்பது கடினமாக இருந்தது. இப்போது ஃப்ராக்கிங் னு ஒரு தொழிநுட்ப முறையில் பல ஆயிரக்கணக்கான அடிகளுக்கு கீழே உள்ள ஆயிலை மேலே கொண்டு வந்துவிடுகிறார்கள். சமீபத்தில் இந்தத் தொழில் நுட்பத்தில் அமெரிக்கா பெரிய முன்னேற்றமடைந்து உள்ளது. இந்த தொழில்நுட்ப முன்னேற்றம்தான் இதற்கு காரணம் என்கிறார்கள்.
அதென்ன ஃப்ராக்கிங்?
ஆங்கிலத்தில் சொல்லணும்னா Hydraulic Fracturing (fracking) என்பார்கள்.
ஆங்கிலத்தில் சொன்னால் மட்டும் புரிஞ்சிடப்போதாக்கும்? விளக்கத் தெரியலைனா தெரியலைனு சொல்லு வருண்! னு சொல்றீங்களா?
அதாவது பல ஆயிரக்கணக்கான அடிகள் (மைல் கணக்கில்) கீழே இருக்கும் எரிவாயு மற்றும் எண்ணெய்யை சாதாரண முறையில் தோண்டி எடுப்பது கஷ்டமாக இருந்தது. இப்போ இந்த ஃப்ராக்கிங் என்கிற புதிய முறையில் அதை மேலே கொண்டு வந்து விடுகிறார்களாம்.
மேலே உள்ள படத்தைப் பாருங்க |
இம்முறையை செயல்ப்படுத்துவதற்கு நெறையா தண்ணீர் தேவைப்படுகிறது என்கிறார்கள். முதலில் ஒரு சின்ன கிணறு கீழே பல ஆயிரக்கணக்கான அடிகளுக்கு செங்குத்தாக (vertically) தோண்டுவார்கள், அதன் பிறகு இதே கிணறை தொடர்ந்து கீழே கிடைமட்டமாக (horizontally) தோண்டுவார்கள். இப்படி தோண்டியவுடன் ஆயில் மேலே வந்துவிடாது. ஆயில் அதை சுத்தியுள்ள பாறைகளால் மறைக்கப்பட்டு இருக்கும். இப்போ அந்த கிணற்றின் மூலம் தண்ணீர், மணல் மற்றும் உப்புக்கள் கலந்த ஒரு கலவையை அதிகமான அழுத்தத்தில் செலுத்துவார்களாம். அப்படி அதிக அழுத்தத்தில் இந்தக் கலவையை செலுத்தி அடியில் உள்ள பாறைகளை வெடிக்கவைத்து லேசாக கீறல்கள் ஏற்படுத்தி உடைத்துவிடுவார்களாம். அப்படி பாறைகள் இடையில் ஏற்படுத்தப்பட்ட பெரிய பெரிய கீறல்கள் மூலமாக ஆயில் மற்றும் எரிவாயு மெதுவாக கசிந்து வந்து அப்படியே தண்ணீர் நிறைந்து உள்ள அந்த கிணற்றில் கலந்து, ஆயில் மற்றும் எரிவாயு டென்ஸிட்டி குறைவாக உள்ளதால் மேலே வந்துவிடுமாம்.
இன்னும் புரியலையா? அப்போ இந்த வீடியோவைப் பாருங்கப்பா! என்னை ஆள விடுங்க!
https://www.youtube.com/watch?v=VY34PQUiwOQ#at=287
குறைபாடுகள்:
இந்த முறையில் ஆயில் எடுப்பதால், மேல் மட்டத்தில் உள்ள தண்ணீரில் எரிவாயு மற்றும் ஆயில் கலந்து, தண்ணீரை "கண்டாமினேட்" பண்ணிவிடும் என்கிறார்கள். மேலும் நிலநடுக்கம், நில அதிர்வு போன்ற பிரச்சினைகள் அதிகமாகும் என்கிறார்கள். அதனால் இந்த ஃப்ராக்கிங் தொழில்நுட்பத்துக்கு எதிர்ப்புகளும் உண்டு.
27 comments:
நல்ல பகிர்வு வருண்..தொழில்நுட்ப வளர்ச்சிதான்..ஆனால் நீங்கள் சொல்லியுள்ளமாதிரி இயற்கை மற்ற்னகளும் உண்டாகும்..பார்ப்போம்..
இங்கு கேலனுக்கு @2.25. கேஸ் விலை குறைந்தது...கார் விலையெல்லாம் ஏறியுள்ளது...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் வருண் :)
மிகவும் பயனுள்ள பதிவு...
ஆனால் கேஸ் விலை குறைந்தத்ற்கு காரணம் மோடி அமெரிக்கா வந்து ஒபாமாவிற்கு ஐடியா தந்ததுதான் பாஸ். அந்த உண்மையை ஒத்துகாம நீங்க டெக்னாலாஜி அது இதுன்னு ஏதோ சொல்லுறீங்க
வருண்
நம்பமுடியாத அளவிற்கான விலை குறைப்பு. இந்த விலை இறக்கதினால் உலகின் மற்ற சில நாடுகளின் பொருளாதார வருண் புள்ளிவிவரம் பெரிதாக மாற கூடும். எது என்னமோ போங்க. ரொம்ப நாளா மனதில் இருந்த .. "ரெண்டு வாரம் லீவ் போட்டுட்டு குடும்பம் நண்பர்களோடு ஒரு RV எடுத்து கொண்டு ஊரை சுற்றி பார்க்கலாம் என்ற எண்ணம் நிறைவேறும் போல் இருக்கின்றது. பதிவிற்கு நன்றி.
இதே போன்ற தொழில் நுட்பத்தில் தமிழகத்தில் கூட ஏதோ எண்ணெய் கிணறு தோண்டப்போவதாக் படித்த ஞாபகம்! உண்மையா? இயற்கையை மாற்றினால் உபாதைதான்!
ஹலோ!! இங்க வருண் னு ஒருத்தர் பதிவெழுதிகிட்டு இருந்தாரே, யாராச்சும் பாத்தீங்களா?? திடீர்னு பழசெல்லாம் ஞாபகம் வந்துட்டுது போல அந்த சைன்டிஸ்ட் களம் இறங்கி இருக்கார்:))jk:)
----------------------
படிச்சுட்டு வரும்போது எனக்கு தோணின ரெண்டு சந்தேகத்தை இந்த பதிவின் இறுதியில் கொடுத்துருக்கீங்க... tats நீர் மாசுபாடு, நிலநடுக்க அபாயம்.
anyway கொஞ்சம் நாள் fuel பட்ஜெட் ல கொஞ்சன் மீதம் கிடைத்த new year celebrations சை இன்னும் vibrantஆ enjoy பண்ணுங்க...அட, நீங்க பண்ணலைனாலும் உங்க friendஅண்ட் family காக celebrate பண்ணுவீங்களா:)) wish u a happy and healthy new year:)
வருண், இதுல இருக்குற இன்னொரு நுண்ணரசியல், OPEC (Organization of the Petroleum Exporting Countries) நாடுகள் உற்பத்தியை குறைக்காததும் கூட
வருண், பெட்ரோலியத் தேவையே இல்லாமல் போகும் அளவுக்கு எலெக்ட்ரிக் கார்கள் தொழில் துறை பெரும் வளர்ச்சியடைந்து வருவதால் எதிர்காலத்தில் வாகனங்களுக்கு பெட்ரோல் தேவையே இருக்காது என்ற நிலையில், இருக்கும் ஆயிலை பணமாக்குவொம் என்ற காரணமாக இருக்குமோ?
***தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...
நல்ல பகிர்வு வருண்..தொழில்நுட்ப வளர்ச்சிதான்..ஆனால் நீங்கள் சொல்லியுள்ளமாதிரி இயற்கை மற்ற்னகளும் உண்டாகும்..பார்ப்போம்..
இங்கு கேலனுக்கு @2.25. கேஸ் விலை குறைந்தது...கார் விலையெல்லாம் ஏறியுள்ளது...***
அட்லாண்டாவில் கேஸ் விலை கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது. பொதுவாக கலிஃபோர்னியா, நியு யார்க், சிகாகோ போன்ற இடங்களில் எப்போவுமே கொஞ்சம் அதிகமாக இருக்கும். கொஞ்சம் வேற மாதிரிப் பார்த்தால் எல்லோருக்குமே ஒரே விழுக்காடுகள் அளவில் விலை குறைந்து இருக்கும்னு நினைக்கிறேன்.
------------
கார் விலை அதிகமாவதுக்கு காரணம் சேஃப்ட்டி ஃபீச்சர்ஸ் எல்லாம் ரொம்ப அதிகமாக்கிட்டாங்க கிரேஸ். சாதாரணமான பேசிக் மாடல் ஹாண்டா சிவிவ், அக்காட் ல கூட ரிவேர்ஸ் எடுக்கும்போது பார்க்க "கேமிரா" வைத்துள்ளார்கள். விலை அதிகம் கொடுப்பது சேஃப்ட்டிக்காகத்தான் என்று நம்புகிறேன். :)
***
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் வருண் :)***
நன்றி. உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் என் இனிய புதுவருட வாழ்த்துக்கள், கிரேஸ் :)
***Avargal Unmaigal said...
மிகவும் பயனுள்ள பதிவு...
---
Blogger Avargal Unmaigal said...
ஆனால் கேஸ் விலை குறைந்தத்ற்கு காரணம் மோடி அமெரிக்கா வந்து ஒபாமாவிற்கு ஐடியா தந்ததுதான் பாஸ். அந்த உண்மையை ஒத்துகாம நீங்க டெக்னாலாஜி அது இதுன்னு ஏதோ சொல்லுறீங்க***
வாங்க மதுரைத்தமிழரே. இதனால் பயனடையும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதென்னவோ உண்மைதான்.மோடி இதற்காக க்ரிடிட்டை எடுத்துக்கொண்டால் அது அநியாயம். :)
***விசுAWESOME said...
வருண்
நம்பமுடியாத அளவிற்கான விலை குறைப்பு. இந்த விலை இறக்கதினால் உலகின் மற்ற சில நாடுகளின் பொருளாதார வருண் புள்ளிவிவரம் பெரிதாக மாற கூடும். எது என்னமோ போங்க. ரொம்ப நாளா மனதில் இருந்த .. "ரெண்டு வாரம் லீவ் போட்டுட்டு குடும்பம் நண்பர்களோடு ஒரு RV எடுத்து கொண்டு ஊரை சுற்றி பார்க்கலாம் என்ற எண்ணம் நிறைவேறும் போல் இருக்கின்றது. பதிவிற்கு நன்றி.***
வாங்க விசு. நீங்அ சொல்வ்வதுபோல் கேஸ் விலை குறைவால் மக்கள் வேறு வழியில் நெறையா செலவழிப்பார்கள் என்கிறார்கள். அதனால் அமெரிக்க பொர்ளாதாரம் பலமடையுமாம்! :)
*** ‘தளிர்’ சுரேஷ் said...
இதே போன்ற தொழில் நுட்பத்தில் தமிழகத்தில் கூட ஏதோ எண்ணெய் கிணறு தோண்டப்போவதாக் படித்த ஞாபகம்! உண்மையா? இயற்கையை மாற்றினால் உபாதைதான்!***
வாங்க சுரேஷ்!
இந்த தொழில் நுட்பம் பல ஆண்டுகளாக் இருக்கிறது சுரேஷ். இப்போது இதில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக சொல்றாங்க. ஃப்ரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் பக்கவிளைவை யோசித்து இம்முறையை பயன்படுத்த தயஙகுகிறார்கள் என்கிறார்கள். இந்தியாவில் அப்படியெல்லாம் யோசிக்க மாட்டாங்க. இந்த்த் தொழில்நுடப்த்தை பயன்படுத்த முற்படுவார்கள் என்றே தோன்றுகிறது, சுரேஷ். :)
***Mythily kasthuri rengan said...
ஹலோ!! இங்க வருண் னு ஒருத்தர் பதிவெழுதிகிட்டு இருந்தாரே, யாராச்சும் பாத்தீங்களா?? திடீர்னு பழசெல்லாம் ஞாபகம் வந்துட்டுது போல அந்த சைன்டிஸ்ட் களம் இறங்கி இருக்கார்:))jk:)
----------------------
படிச்சுட்டு வரும்போது எனக்கு தோணின ரெண்டு சந்தேகத்தை இந்த பதிவின் இறுதியில் கொடுத்துருக்கீங்க... tats நீர் மாசுபாடு, நிலநடுக்க அபாயம்.
anyway கொஞ்சம் நாள் fuel பட்ஜெட் ல கொஞ்சன் மீதம் கிடைத்த new year celebrations சை இன்னும் vibrantஆ enjoy பண்ணுங்க...அட, நீங்க பண்ணலைனாலும் உங்க friendஅண்ட் family காக celebrate பண்ணுவீங்களா:)) wish u a happy and healthy new year:) ***
வாங்க மைதிலி. அறிவியல் கட்டுரைகளிலெல்லாம் யாருக்கும் ஆர்வம் கிடையாது, மைதிலி. இப்போவும் "அமெரிக்கா ரகசியம்" என்று போட்டதால்தான் கூட்டம் கூடுகிறது. "ஃப்ராக்கிங்" ன்னு தலிப்பில் போட்டிருந்தால் யாரும் சீண்ட மாட்டாங்க. :) தொழில் நுட்பம் அல்லது அறிவியல் கற்றுக்கொள்ளவோ தெரிந்து கொள்ளவோ யாருக்கும் ஆர்வம் இல்லை என்பதே உண்மை. :)
---------------
உங்களுக்கும், மது, மகி, நிறை அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள், மைதிலி!
***Baskaran Siva said...
வருண், இதுல இருக்குற இன்னொரு நுண்ணரசியல், OPEC (Organization of the Petroleum Exporting Countries) நாடுகள் உற்பத்தியை குறைக்காததும் கூட**
வாங்க பாஸ்கரன் சிவா! :)
இதைப்பற்றி விசாரித்தேன். :) OPEC நாடுகள் உற்பத்தியை குறைத்தால் அவர்களுக்கு இன்னும் பொருளாதாரம் பாதிப்பு அடையும் என்கிறார்கள். வேறு வ்வழியில்லை அவர்களுக்கு. அதனால் விலை குறைத்து விற்கிறார்கள்.
***அமர பாரதி said...
வருண், பெட்ரோலியத் தேவையே இல்லாமல் போகும் அளவுக்கு எலெக்ட்ரிக் கார்கள் தொழில் துறை பெரும் வளர்ச்சியடைந்து வருவதால் எதிர்காலத்தில் வாகனங்களுக்கு பெட்ரோல் தேவையே இருக்காது என்ற நிலையில், இருக்கும் ஆயிலை பணமாக்குவொம் என்ற காரணமாக இருக்குமோ?***
வாங்க அமர பாரதி! :)
இன்றைய நிலையில் ஆல்டெர்னேடிவ் எரிபொருள், மற்றும் ஹைப்ரிட்/எலக்ட்ரிக் கார்களில் இன்னும் முழுமையான முன்ணேற்றம் அடையவில்லைங்க, அமர பாரதி.
நீண்ட தூரம் அடியில் சென்று, எரிவாயு/ஆயில் எடுத்தலில் (ஃப்ராக்கிங் முறையில்) ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றத்தால்தான் என்கிறார்கள்.
மிகவும் நல்ல தகவல் அடங்கிஉய பதிவு! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்புடனும் நட்புடனும்
துளசிதரன், கீதா
வாங்க துளசிதரன்! :)
தங்களுக்கும், கீதா அவர்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் வருண்...
என்ன வருனைக் காணலையா அம்மு தேடிகிட்டிருந்தாங்களே ஓ வந்தாச்சா சரி....சரி
\\\\ஒரு Gallon , அதாவது 3.78 லிட்டர்கள் பெட்ரோல் அல்லது கேஸோலீன் விலை இப்போ ரெண்டு டாலருக்கும் குறைவாக உள்ளது! இதுபோல் கேஸோலீன் விலை குறையும் என்று யாரும் கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை/////
அப்பாடா ரொம்ப சந்தோஷம் இந்த புதுவருடத்தில நல்ல செய்தி சொல்லியிருக்கீங்க வருண் அதனால தான் gold ம் குறைஞ்சு இருக்கிறது அப்போ ஜாலி தான்.என்ன சந்தோசப் பட வேண்டாமா ஏன்....
\\\\\இந்த முறையில் ஆயில் எடுப்பதால், மேல் மட்டத்தில் உள்ள தண்ணீரில் எரிவாயு மற்றும் ஆயில் கலந்து, தண்ணீரை "கண்டாமினேட்" பண்ணிவிடும் என்கிறார்கள். மேலும் நிலநடுக்கம், நில அதிர்வு போன்ற பிரச்சினைகள் அதிகமாகும் என்கிறார்கள். அதனால் இந்த ஃப்ராக்கிங் தொழில்நுட்பத்துக்கு எதிர்ப்புகளும் உண்டு. //// .ஐயடா...
ச்சா,,, இப்ப நான் சந்தோஷப் படுகிறதா கவலைப் படுகிறதா....வருண் புதுவருடத்தில் இப்படி பயங்காட்டி புலம்ப வைத்து விட்டீர்களே.
சரி நீங்களாவது தெளிவாக கொண்டாடுங்கள் புது வருடத்தை .....! எல்லா நலன்களும் பெற்று இன்பமாய் வாழ்க...!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
GMB ஐயாவின் தளத்தில் உண்மையும் தெளிவும் கூடிய கருத்திற்கு வாழ்த்துக்கள் வருண்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
அன்புடன் DD...
நன்றி வருண் :)
சேப்டி பீச்சர்ஸ்காகவா என்பது சந்தேகமே..ஒரே மாடலும் முன்பை விட இப்பொழுது அதிகம் ..கேஸ் விலை குறைந்து நிறைய பேர் கார் வாங்குவதால் என்று சொல்கிறார்கள்..எப்படியோ... :)
நான் ஒடிசி டூரிங் வாங்கிவிட்டேன் :)
Thanks @ Kumar
@ inyaa
@ Mathu
@ Dhanabalan
@ Saam
and
@ Grace !
Wish you all a Happy New Year, friends! :)
புதிய தொழில் நுட்பம் ஒன்றை அறிந்து கொண்ட மகிழ்ச்சியுடன் சற்றே ஆழமாக சிந்தித்தால்...
புதிய தொழில்நுட்பங்களின் பின் விளைவுகளை பற்றி அதிகமாக கவலைப்படாமல் " கமர்சியல் " ஆக்கிவிடுவதில் அமெரிக்கர்கள் சமர்த்தர்கள்... ஒரு கட்டத்தில் அதன் பாதிப்பு தெரிந்தால் விற்பனையை வேறு நாடுகளுக்கு ( முக்கியமாய் இந்தியர்களுக்கு ) இலவசமாக கூட கொடுத்துவிடுவார்கள் !
ஆஸ்பெஸ்ட்டாஸ், மரபியல் மாற்றம் செய்யப்பட்ட விதைகள், உரங்கள், மருந்து என பட்டியல் நீளம்....
நன்றி
சாமானியன்
You still have the Deepaavali kavithai potti anouncement on your homepage Varun... That was long done...
Thanks for the update Visu. I will do the needful. :-)
***saamaaniyan saam said...
புதிய தொழில் நுட்பம் ஒன்றை அறிந்து கொண்ட மகிழ்ச்சியுடன் சற்றே ஆழமாக சிந்தித்தால்...
புதிய தொழில்நுட்பங்களின் பின் விளைவுகளை பற்றி அதிகமாக கவலைப்படாமல் " கமர்சியல் " ஆக்கிவிடுவதில் அமெரிக்கர்கள் சமர்த்தர்கள்... ஒரு கட்டத்தில் அதன் பாதிப்பு தெரிந்தால் விற்பனையை வேறு நாடுகளுக்கு ( முக்கியமாய் இந்தியர்களுக்கு ) இலவசமாக கூட கொடுத்துவிடுவார்கள் !
ஆஸ்பெஸ்ட்டாஸ், மரபியல் மாற்றம் செய்யப்பட்ட விதைகள், உரங்கள், மருந்து என பட்டியல் நீளம்....
நன்றி
சாமானியன்****
கருத்துரைக்கு நன்றி, சாம். :)
Post a Comment